Showing posts with label புரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும். Show all posts
Showing posts with label புரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும். Show all posts

புரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும்

புரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும்
pournami-viratham.


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் (அக்டோபர்-5 வியாழக்கிழமை), வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான்.  அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.

புரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.