Showing posts with label ஈரல் சம்பந்தமான நோய்கள் அகலும்.. Show all posts
Showing posts with label ஈரல் சம்பந்தமான நோய்கள் அகலும்.. Show all posts

ஈரல் சம்பந்தமான நோய்கள் அகலும்.

திராட்சைப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான நோய்கள் அகலும்.

வாழைத் தண்டை அடிக்கடி உணவுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
குடற்புண் உள்ளவர்கள் நாள்தோறும் சிறிதளவு அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக குடற்புண் குணமாகும்.
தினசரி இரண்டு, மூன்று பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
எலுமிச்சம் பழத்தை நறுக்கிப் பிழிந்து அத்துடன் சிறிது தேன் கலந்து பருகினால் நா வறட்சி குணமாகும்.
முள்ளங்கிக் கீரை
முள்ளங்கிக் கீரையில் புரதம், கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கி உள்ளன. தொடர்ந்து முள்ளங்கிக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும் வைட்டமின் பற்றாக்குறைகளும் அகலும்.
முருங்கைக்காய்
வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தி அடைகிறது. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. மேலும் காய்ச்சல் மூட்டுவலி ஆகியவற்றைத் தீர்க்கும் ஆற்றலும் முருங்கைக்காய்க்கு உண்டு.
"பொது அறிவுக் களஞ்சியம்' என்ற நூலிலிருந்து.