Showing posts with label காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம். Show all posts
Showing posts with label காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம். Show all posts

காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம்

காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம்


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


காதுக்குரும்பி... இதை காதில் சேரும் அழுக்கு என்கிறார்கள். இது, வெறும் அழுக்கு அல்ல. நமது காதுகளுக்குள் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்துவிடாமல் அவற்றை உடல் இயற்கையாக வெளித்தள்ளுவதுதான் காதுக்குரும்பியாக வெளிவருகிறது. இது `செருமென்’ (Cerumen) என்றும் அழைக்கப்படுகிறது. காதைச் சுத்தமாக்குவதோடு, காது அரிப்பிலிருந்தும் இது நம்மைக் காக்கும். வியர்வை வெளியேற்றம், மனஅழுத்தம் போன்றவை காதில் உள்ள அழுக்கில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை வெளியேறும்போது, பெரும்பாலும் நாம் அதன் நிறத்தை கவனிப்பதில்லை. ஒருவிதமான அருவருப்போடு புறக்கணித்துவிடுவோம். ஆனால், நிறத்தை கவனிக்கவேண்டியது அவசியம். காது அழுக்கின் நிறங்கள் வைத்து உடலில் என்ன பிரச்னை, காது சம்பந்தமான நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது என்பதை காது, மூக்கு, தொண்டை மருத்துவர்  விவரிக்கிறார்.

ஈரமான மஞ்சள்

இது பொதுவாக அனைவரிடமும் காணப்படுகிற நிறம். இதனால் பாதிப்புகள் ஒன்றுமில்லை. இது, வறண்டுவிடாமலும், அரிப்பு ஏற்படாமலும் இருக்க உதவும்.

சாம்பல்

காது தன்னைச் சுத்தம் செய்துகொள்ளும்போது இது சாம்பல் நிறத்தில் இருக்கும். இதனால் பாதிப்புகள் ஏதுமில்லை. ஆனால் இது வறண்டுமருத்துவர் சூரியகுமார்  காணப்பட்டு, அரிப்பும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அது `எக்ஸீமா’ (Eczema) என்ற தோல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வெளிர் மஞ்சள்

இந்த வகை குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படும். குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட அதிகமாக இது சேரும். அவர்கள் வளர வளர இதன் அளவு குறையும்.

பிசுபிசுப்பான அடர் மஞ்சள்

அடர் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாக இருந்தால், உங்கள் உடல் அதிகமாக வியர்ப்பதாகப் பொருள். இது உடல் துர்நாற்றத்துக்கும் காரணமாக அமையலாம். மற்றபடி எந்தப் பாதிப்புகளும் இல்லை.

தடித்த அடர் மஞ்சள்

இது அடர் மஞ்சள் நிறத்தில் தடித்துக் காணப்படும். ஒரு பரப்பரப்பான சூழலில் நாம் பயத்தோடு இருக்கும்போதும் இந்த வகைக் குரும்பி அதிகமாகச் சுரக்கும். இது தற்காலிக காது கேளாமை பாதிப்பை ஏற்படுத்தும். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

வறண்ட வெள்ளை

வறண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும் காதுக்குரும்பியால் ஒரு பிரச்னையும் இல்லை. இவர்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

கறுப்பு அல்லது அடர் பழுப்பு

இதில் அதிக நாள்கள் வெளியேறாமல் தங்கிவிடும்போது, இது கறுப்பு நிறமாக மாறிவிடும். இதனால் எந்த பாதிப்புகளும் இல்லை.

நீர்போல வழிதல்

செவி வழியாக நீர்போல வழிய ஆரம்பித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது செவிப்பறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறிக்கும்.

ரத்தத்துடன் கூடிய காதுக்குரும்பி

செவிப்பறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறிக்கும். உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

காதுக்குரும்பி சார்ந்த சில பிரச்னைகளை சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே தடுத்துவிட முடியும். அவை...காதில் அழுக்கின் நிறங்கள்

* குளிக்கும்போது தண்ணீர், சோப், ஷாம்பூ ஆகியவற்றை செவிப்பறைக்கு அருகே கொண்டுசெல்வதைத் தடுக்கவும்.

* எப்போதும் காதுகளை ஈரப்பதமின்றி வறண்டநிலையில் வைத்திருக்க வேண்டும்.

* குளித்து முடித்தவுடன் துண்டின் நுனிப்பகுதியால், காதில் படிந்திருக்கும் தண்ணீரை நீக்கவும்.

* காதிலுள்ள அழுக்கை நீக்கும் பஞ்சுக் குச்சிகளை (Ear cleaning buds) தேவையில்லாமல், அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காதுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு என்பதால்தான் மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.

செவிகளில் சீழ் வடிதல், ரத்தம் வருதல், வித்தியாசமாக சத்தம் எழுதல், காது அடைப்பது போன்ற உணர்வு ஆகியவை இருந்தால் பஞ்சுக் குச்சிகளைத் தேடிப் போகாமல், மருத்துவரை அணுகுவதுதான் காதுகளுக்கு நல்லது.

காதுகளில் உள்ள அழுக்குகளை அவ்வப்போது வெளியேற்றுவது நல்லது. அதற்காக காதில் பஞ்சுக் குச்சிகளை உபயோகப்படுத்திதான் அதை செய்யவேண்டும் என்பதில்லை. அதற்கு ஓர் எளிய வழி உள்ளது. காதுகளுக்குள் சுண்டு விரல்களை வைத்துக்கொண்டு, வெறும் வாயை மெல்வதுபோல் செய்தால் காதுகளிலில் இருந்து அழுக்குகள் தானாக வெளியேறும். எனவே, உணவை உண்ணும் போதும் நன்றாக மென்று சாப்பிட்டால் காதுகளில் இருந்து அழுக்குகள் தானாக வெளியாகுமாம்.