Showing posts with label மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு. Show all posts
Showing posts with label மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு. Show all posts

மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு

மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது !!!



ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில்வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்