Showing posts with label துளசி - மஞ்சள் மகிமை. Show all posts
Showing posts with label துளசி - மஞ்சள் மகிமை. Show all posts

துளசி - மஞ்சள் மகிமை

துளசி - மஞ்சள்  மகிமை



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

தயாரிக்கும் முறை...

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி

அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.