Showing posts with label இரத்தம் அதிகரிக்க வேண்டுமா?. Show all posts
Showing posts with label இரத்தம் அதிகரிக்க வேண்டுமா?. Show all posts

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா?

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? பீட்ரூட் சாப்பிடுங்கள்

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா பீட்ரூட் சாப்பிடுங்கள்பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
அல்சர்
அல்சர் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.
சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.
மூலநோய்
மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.
கல்லீரல் கோளாறு
கல்லீரல் கோளாறுகளுக்கும்பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
இரத்த சோகை
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.
புற்றுநோய்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொலஸ்ட்ரால்
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
செரிமான பிரச்சனை
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.
சிவப்பணுக்கள் அதிகரிக்கும்
பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
மறதி
பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சரும அரிப்பு
சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.
#தீப்புண்
கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.
#பொடுகு
பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்,