Showing posts with label குழந்தைகளை அடிக்காமலே நல்வழிபடுத்தலாம் !!!. Show all posts
Showing posts with label குழந்தைகளை அடிக்காமலே நல்வழிபடுத்தலாம் !!!. Show all posts

குழந்தைகளை அடிக்காமலே நல்வழிபடுத்தலாம் !!!

குழந்தைகளை அடிக்காமலே நல்வழிபடுத்தலாம் !!!

குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை...!
1. குழந்தை தவறை திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
2. தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
3. தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
4. தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக் காட்டலாம்.
5. தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதை குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
6. குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
7. குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
8. குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.
9. குழந்தையைத் தண்டிக்கும் முன், செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
10. தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிட மன ரீதியான அணுகு முறையே சிறந்தது