Showing posts with label கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து. Show all posts
Showing posts with label கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து. Show all posts

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து!



கர்ப்பகாலத்தில் இளம் தாய்மார்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு. கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்புடன், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் சரியாவதுடன் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால்வீக்கம் தடுக்கப்படுகிறது.

சீரகம், சோம்பு ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும். பசியை தூண்டும்.