Showing posts with label வயிறு வலி பிரச்சனை எப்படி தெரிஞ்சுக்கலாம். Show all posts
Showing posts with label வயிறு வலி பிரச்சனை எப்படி தெரிஞ்சுக்கலாம். Show all posts

வயிறு வலி பிரச்சனை எப்படி தெரிஞ்சுக்கலாம்

வயிறு வலி பிரச்சனை எப்படி தெரிஞ்சுக்கலாம்


     பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம்  
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கணையம்,
சிறு நீர்பை, கர்ப்பப்பை, விந்துபை, சினைப்பை
என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கிறது.

வயிறு வலிக்கிறது என்று சொன்னால் எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு கஷ்டம். ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?

இதோ சிம்பிள் டிரிக். வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும், இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்.

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்.

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு டாக்டரை பாருங்க.