Showing posts with label மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?. Show all posts
Showing posts with label மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?. Show all posts

மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
How to apply passport Through mobile app using mpassportseva app


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கலான நடைமுறையினை ஒழிக்கும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை mPassportSeva என்ற செயலியினை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலி மூலம் இந்தியாவின் எந்த ஒரு மூலையில் இருந்தும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். 2013-ம் ஆண்டே இந்த mPassportSeva செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் தேவையான பல முக்கிய அம்சங்கள் இல்லை. புதிய வெஷனில் பல முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய mPassportSeva செயலி 2018 ஜூன் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய mPassportSeva செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் கிடைக்கிறது. இன்னும் விண்டோஸ் போன் பயனர்களுக்கு இந்தச் செயலி தயாராகவில்லை. அதே நேரல் போலி செயலிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

புதிய mPassportSeva செயலியில் என்னவெல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன? 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட mPassportSeva செயலியில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை டிராக் செய்வது மற்றும் விண்ணப்பம் குறித்த விதிமுறைகளைப் பெறுவது போன்றவை மட்டுமே இருந்த வந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட mPassportSeva செயலி 3.0-ல் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது முக்கிய வசதியாகும். அதுமட்டும் இல்லாமல் செயலியில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கட்டணத்தினையும் செலுத்தலாம்.

ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான சேவைகள் ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் அதனைப் புதுப்பிக்க, தனிநபர் விவரங்களைத் திருத்த, தொலைந்து விட்டால் புதிய பாஸ்போர்ட் பெற கூடிய வசதிகள் எல்லாம் புதிய செயலியில் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனை வசதிகளும் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

mPassportSeva செயலி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி? mPassportSeva செயலியில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பதும், ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். கூடுதலாகவோ, குறைவாகவோ எந்த வசதியும் இருக்காது.

பதிவு செய்தல் mPassportSeva செயலியினை மொபைலில் பதிவிறக்கம் செய்த பிறகு புதிய பயனர் பதிவு என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

பாஸ்போர்ட் அலுவலகம் பின்னர்ப் பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் தேர்வு செய்ய வேண்டும். பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் தேர்வு செய்யும்போது உங்களிடம் உள்ள அரசு வழங்கிய ஆவணங்கள் எல்லாம் அந்த நகரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒருவேலை உங்களது நகரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லை என்றால் அதன் அருகில் எந்த நகரத்தில் உள்ளது என்பதைப் பார்த்துத் தேர்வு செய்யலாம்

முக்கியமான விவரங்கள் பேயர், மின்னஞ்சல் முகவர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களைப் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது சரியாக அளிக்க வேண்டும்

பயனர் பெயர் செயலிக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது எப்படித் தேர்வு செய்வோமோ அதே போன்று பயனர் பெயரை உருவாக்க வேண்டும். கடவுச்சொல்லும் உருவாக்க வேண்டும்.

பாதுகாப்புக் கேள்விகள் செயலியினைக் கடவுச்சொல் மறந்துவிட்டால் அதனைத் திரும்பப் பெற கூடிய வகையில் பாதுகாப்புக் கேள்விகள் மற்றும் அதற்கான பதிகளையும் அளிக்க வேண்டும்.

கேப்ட்சா குறியீடு நீங்கள் கணினி இல்லை, மனிதர் தான் என்பதை உறுதி செய்யக் கேப்ட்சா குறியீடு உள்ளிட்டு விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குச் சரிபார்ப்பு இணைப்பு ஒன்று அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்து பாஸ்போர்ட் இணையதளத்திற்குச் சென்று உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் இரண்டையும் அளித்து உள்நுழைய வேண்டும்.

சரிபார்ப்புப் பணிகள் சரிபார்ப்புப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் mPassportSeva செயலிக்குச் சென்று ஏற்கனவே பதிவு செய்த பயனர் என்பதைத் தேர்வு செய்து கேப்ட்சா குறியீட்டை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் பின்னர்ப் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் என்பதைத் தேர்வு செய்து,அ தார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை போன்ற தேவையான விவரங்களைப் பூர்த்திச் செய்து விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

டிராக்கிங் குறியீடு விண்ணப்பத்தினை வெற்றிகரமான சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையினை எளிதாக டிராக் செய்யலாம்.