Showing posts with label மஹா பெரியவா அருள்வாக்கு !!!. Show all posts
Showing posts with label மஹா பெரியவா அருள்வாக்கு !!!. Show all posts

மஹா பெரியவா அருள்வாக்கு !!!

மஹா பெரியவா அருள்வாக்கு !!!

அச்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா ? அச்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்து போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்.

எந்த வீட்டில், யார் இறக்கும் தறுவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.