பஞ்சாட்சரம் என்றால் என்ன ?

பஞ்சாட்சரம் என்றால் என்ன ?

ஓம் நமசிவய பஞ்சாக்ஷர ரகசியம்

பஞ்சாட்சரம் என்றால் என்ன ?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஐந்து அட்சரம் (எழுத்துக்கள்) என்று பொருள்படும்.

பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும்.

தமிழர்களாகிய நாம் ஐந்தெழுத்து என்று சொல்கின்றோம்.

மேலும்
வறுமை,
பட்டினி,
நோய்,
விரக்தி,
சாவு
இவை ஐந்தும் ஒன்று  சேர்ந்து ஒரு நாட்டையோ மாநிலத்தையோ ஊரையோ வாட்டும்போது அதனை நாம் பஞ்சம் என்கின்றோம்.

சரி ஐந்தெழுத்து என்பது என்ன ?

*ந நிலம்*

*ம நீர்*

*சி நெருப்பு*

*வ காற்று*

*ய வானம்*

இது ஒரு அற்புதமான சேர்க்கை....

தமிழில் ஓர் அதிசயம் உண்டு

உயிர்மெய் எழுத்துக்களை *வல்லினம் , மெல்லினம் , இடையினம்* என பிரித்து சொல்வார்கள்.

கசடதபற வல்லினம்,

ஙஞணநமன மெல்லினம் ,

யரலவழள இடையினம்.

மேலே நாம் கண்ட ந ம சி வ ய எழுத்துக்கள்.

இதில் *முதல் இரண்டும் மெல்லினம்*

*மத்தியில் ஒரேழுத்து மட்டும் வல்லினம்*

*இறுதி இரண்டு எழுத்தும் இடையினம்.*

வல்லின எழுத்து அக்னியை குறிக்கும் *சி .*

வல்லின மெல்லின இடையின எழுத்துக்களில் உள்ள உயிர்த்தன்மையை கண்டு அதனை கொண்டே

*நமசிவய* எனும் திரு ஐந்தெழுத்து மந்த்ரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தற்செயலாக ஏற்பட்டது அல்ல ,

தேவர்களும்,

ஞானிகளும் ,

ரிஷிகளும்

மகா முனிவர்களும் இறைத்தன்மையை

உணர்ந்து ஏற்படுத்திய உன்னத சொல்.

இயற்கையெனும் இறைவனாரை ஒரே சொல்லில் அழைக்க இந்த திருவைந்தெழுத்து மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றது

இதனை கருத்தில் கொண்டே இந்த பஞ்சாட்சரம் உருவாக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்து த்யானித்து கவனித்தால் புரியும்.

நிலமும் நீரும் ஒருபுறமும் காற்றும் வெளியும் மறுபுறமும் இருக்க நெருப்பு மத்தியில் உள்ளதாக அமைந்துள்ளது.

*எவ்வளவு அற்புதமான அமைப்பு பாருங்கள்....*

நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும்

வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கும்.

*நெருப்பு தனித்தன்மை* வாய்ந்தது.

அதனால் அது மத்தியில் இரண்டையும் சமநிலையில் கொண்டு அமைந்துள்ளது.

இதனை மனிதனின் உடலில் உள்ள காற்று நீர் வெளி மண் நெருப்போடு இணைக்கும்போது மனிதன் அசாத்திய பலவான் ஆகின்றான்.

காற்று, மண், நீர், வெளி, நெருப்பு இவைகளின் சக்தியை அளவிட முடியாது.

இவைகள் தனித்தனியே இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை.

ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லக்கூடுமோ,

ஆகவே ரிஷிகளும், முனிவர்களும், முன்னோர்களும் இதனை பஞ்ச பூதங்கள் என்றனர். 

மனிதர்கள் எல்லோருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை.

ஒன்று கூட்டியும் ஒன்றை குறைத்தும் இறைவனார் படைத்துள்ளார்.

ஆகவேதான் ,

மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் இருப்பதில்லை.

சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.

சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள்.

சிலர் குணக்குன்றாக இருப்பார்கள்

சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள்.

சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள்.

காரணம் .....

இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான்.

அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது

அதனை வேறு பதிவில் பார்ப்போம்.

நமசிவய எனும் பஞ்சாட்சரம் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைவினை நீக்கி அவனை முழு பஞ்சபூத ஆதிக்கத்திற்கு கொண்டுவருகின்றது.

அதாவது மனிதனின் உடலில் பஞ்சபூதங்களில் எதனுடைய சக்தி குறைக்கப்பட்டு எதனுடைய சக்தி கூட்டப்பட்டுள்ளதோ அதனை சமமாக்கி அந்த மனிதனை முழுமையாக்குகின்றது.

காரணம்

அதில் உள்ள *பஞ்சபூத* சக்தியாகும்.

அவ்வாறு முழுமையை காணும் மனிதன் மிக அதிசயமான உணர்வுகளால் தூண்டப்பட்டு மனிதர்களில் மேன்மையை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான்.

அவனுக்கு உலகின் இயக்கமும்,
அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது.

தான் யார் என அறிகின்றான் ,

தான் யார் என அறிந்தவன் இறைவனாரை அறிந்தவனாகின்றான்.

இறைவனாரை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை,

ஆகவே அவன் தான் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான்.

அவர்களைத்தான் சாதாரண மக்களாகிய நாம்

ஞானிகள் என்கின்றோம்,

ரிஷிகள் என்கின்றோம்,

முனிவர்கள் என்கின்றோம்,

சித்தர்கள் என்கின்றோம் , .

புத்தர்கள் என்கின்றோம்.

எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது?

பஞ்சபூத சம நிலையை கண்டதால் இந்த அசாத்தியமான மாற்றம் நேர்கின்றது.

பஞ்சாட்சரம் சொல்வதால் மனிதனின் அந்தராத்மா தூண்டப்பட்டு

அதுவரை அவன் கண்ட,

கேட்ட,

அனுபவித்த அனைத்தையும்

பொய்யென படம் போட்டு காட்டி

அவனை

அவனது எண்ணங்களை

செயல்களை

கர்மாவை

தூய்மையாக்கி

அந்த  மனிதனை மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்கின்றது.

இவ்வாறான பஞ்சாட்சரம் யாருக்காக உருவாக்கப்பட்டது ?

ஏன் உருவாக்கப்பட்டது ?

மனிதன் பேசத்துவங்கிய காலம்தொட்டே இந்த மகாமந்த்ரம் சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகின்றோம்.

எம்பெருமானாராகிய சிவபெருமானை குறிக்கும் சொல்லாக இந்த ஐந்தெழுத்து கருதப்படுகின்றது.

விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து இவை மூன்றும் சிவபெருமானாரை குறிக்கும் கருவிகளாகும்.

கருவிகளா ?

ஆமாம் இவைகள் கருவிகள்தான்.

ஏனெனில் இவை தனித்தும் சேர்ந்தும் செயலாற்றும் வல்லமையை கொண்டவையாகும்.

விபூதியை கொஞ்சம் எடுத்து அதில் சில மந்த்ரங்களை சொல்லி இடும்போது சில தீய சக்திகள் மறைகின்றன.

ருத்ராக்கம் ஒரு மணியை கழுத்தில் அணிந்துகொண்டால் 108 சிவகணங்கள் அணிந்தவரை சுற்றி காவலாகின்றன.

திருவைந்தெழுத்தினை உள்ளார்ந்து ஒதுபவனை உலகஇயக்கம் அறிய செய்கின்றது.

இவ்வாறான செயல்களை விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து செய்வதால் அவைகளை கருவிகள் என்றே சொல்லல் வேண்டும்.

இவ்வாறாக இத்திருவைந்தெழித்தின் மகிமையை உணர்ந்த ஞானப்பெருந்தகையோர் இதில் உள்ள சக்திகளை பலவகையாக பிரித்து பல்வேறு வகைப்படுத்தினார்கள்.

அவை,

ஸ்தூல பஞ்சாட்சரம்

சூக்கும பஞ்சாட்சரம்

அதிசூக்கும பஞ்சாட்சரம்

ஸ்தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய இதனை எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குருவின் உதவியும் இன்றி சொல்லி வரலாம்.

சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவயநம இதனை மனதிற்குள் சொல்லவேண்டும் இறைவனாரை ஒளி உருவாக மனதில் சித்தரித்து உள்மனதில் உருவம் கொண்டு சொல்லி வரவேண்டும். இதனையும் குருவின் உதவியும் இன்றி சொல்லி வரலாம்.

அதிசூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவய சிவசிவ இதனை குருவின் மூலமாகவே அறிய வேண்டும் ,

குருவின் வழிகாட்டுதல்படி சொல்லி வருதல் வேண்டும்.

இன்னும் காரண பஞ்சாட்சரம், அதிகாரண பஞ்சாட்சரம் என்றெல்லாம் உள்ளது.

அவை முறையே சிவசிவ என்றும்,

சி என்றும் சொல்லப்படுவது

இதன் முறைகளையும் உத்தம குருவின் வழிகாட்டுதல் மூலமாகவே சொல்லி பழகுதல் வேண்டும்.

உள்ளத்தில் தூய்மை, செயலில் தர்மம், வாழ்வில் சத்யம் கொண்டவர்கள் மட்டுமே எல்லாவிதமான பஞ்சாட்சரங்களையும் சொல்லவேண்டும்.

எந்த பஞ்சாட்சரமாக இருந்தாலும் அதனை சத்யத்தின் மறுஉருவாகவே பார்க்கவேண்டும்.

மனத்தூய்மை , எண்ணங்களில் தூய்மை தனிமனித ஒழுக்கம் அற்றவர்கள் பஞ்சாட்சரம் சொல்லக்கூடாது.

அது பாபங்களை சேர்க்கும்.

தூயவர்களாக நின்று லோக க்ஷேமம் எண்ணி எல்லோரும் நம் மக்களே எல்லோரும் நலம் பெறவேண்டும் எனக்கருத்தில் கொண்டு,

நமசிவய சொல்லி வாருங்கள்.

உலகம் செழிக்க வாழ்த்துங்கள், வாழுங்கள்.