நம்மிடமே இருக்கு மருந்து: பனங்கற்கண்டு!

நம்மிடமே இருக்கு மருந்து: பனங்கற்கண்டு!


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இந்தியாவில் பயன் படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருட்களுள் ஒன்று, பனங்கற்கண்டு. ஆங்கிலத்தில் இதை, 'ராக் கேண்டி' என்பர். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும்

 இது, சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத, சர்க்கரை படிகக் கற்கள். எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால், நம் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை பயன்படுத்தலாம்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால், ஆஸ்துமா, அம்னிஷியா, மூச்சுப் பிரச்னை, இருமல், சளி, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்னை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

இனி, இதை பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

* தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா... கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும், வாய் துர்நாற்றம் காணாமல் போகும்
* சோர்வாக இருக்கிறதா... அதற்கு, அரை மேஜை கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும், மிகவும் சுறுசுறுப்பாக மாறி விடலாம்
* தீராத சளி இருந்தால், இரண்டு பாதாம் பருப்பு, ஒரு மேஜை கரண்டி பனங்கற்கண்டு, அரை மேஜை கரண்டி மிளகு சேர்த்து, மிக்சியில் பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும்; ஜலதோஷம் போயே போயிந்தி!
* தொண்டைக் கட்டி பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா... அரை மேஜை கரண்டி மிளகுத்துாள், அரை மேஜை கரண்டி நெய் மற்றும் அரை மேஜை கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி குணமாகும்
* சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்; மேலும், கண்பார்வை கூர்மையாகும்
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் துாளுடன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும், எந்த நோயும் அண்டாது
* இரண்டு மேஜை கரண்டி வெங்காய ஜூஸ் மற்றும் ஒரு மேஜை கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால், சிறுநீரகக் கற்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
கற்கண்டை பயன்படுத்தி, உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.