ரகடா பட்டீஸ்

ரகடா பட்டீஸ்
சூப்பரான சாட் ரகடா பட்டீஸ்


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

        
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்புமாக அருமையாக இருக்கும்.

பேட்டீஸ்:

தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு - கால் கிலோ
பிரட்  - 3 ஸ்லைஸ்
பூண்டு - சிறிதளவு
சோள மாவு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள்  - அரை ஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

ரகடா :

தேவையான பொருட்கள் :

பட்டாணி - ஒரு கப்
வெங்காயம்   - ஒன்று (பெரியது)
கரம்மசாலா தூள்  - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ்   - தேவையான அளவு
லெமன் ஜூஸ்  - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
சர்க்கரை - அரை ஸ்பூன்
இஞ்சி  - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.

பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.