Did You Know These Everyday Things Had Names?

Did You Know These Everyday Things Had Names?


*Glabella* - The space between your eyebrows is called a glabella.

*Petrichor* - The way it smells after the rain is called petrichor.

*Aglet* - The plastic or metallic coating at the end of your shoelaces is called an aglet.

*Barm* - The foam on beer is called a barm.

*Wamble* - The rumbling of stomach is actually called a wamble.

*Vagitus* - The cry of a new born baby is called a vagitus.

*Tines* - The prongs on a fork are called tines.

*Phosphenes* - The sheen or light that you see when you close your eyes and press your hands on them are called phosphenes.

*Box Tent* - The tiny plastic table placed in the middle of a pizza box is called a box tent.

*Overmorrow* - The day after tomorrow is called overmorrow.

*Minimus* - Your tiny toe or finger is called minimus.

*Agraffe* - The wired cage that holds the cork in a bottle of champagne is called an agraffe.

*Vocables* - The 'na na na' and 'la la la', which don't really have any meaning in the lyrics of any song, are called vocables.

*Interrobang* - When you combine an exclamation mark with a question mark (like this ?!), it is referred to as an interrobang.

*Columella Nasi* - The space between your nostrils is called columella nasi.

*Armscye* - The armhole in clothes, where the sleeves are sewn, is called armscye.

*Dysania* - The condition of finding it difficult to get out of the bed in the morning is called dysania.

*Griffonage* - Unreadable hand-writing is called griffonage (Are you reading this dear doctors?)

*Tittle* - The dot over an “i” or a “j” is called tittle.

*Crapulence* - That utterly sick feeling you get after eating or drinking too much is called crapulence.

*Brannock Device* - The metallic device used to measure your feet at the shoe store is called Brannock device.

வெட்டி வேரின் பயன்கள்

வெட்டி வேரின் பயன்கள்


வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்!

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் & 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது...

வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னை களுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் & 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் & 100 கிராம், வெந்தயம் & 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்.

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா
படிங்க இதை ...



⭐சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும்.

⭐இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

⭐புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

⭐நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்.

 ⭐வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

⭐அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே.

⭐ ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

⭐சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

⭐ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

⭐ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

⭐கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

⭐ வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

⭐ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

⭐தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது.

⭐ மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.

⭐ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.
தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

⭐ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.
வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

⭐ ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

⭐மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

⭐வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

⭐எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

🔅வாழ்க வளமுடன்!

தினமும்3 பேரிச்சம்பழம்சாப்பிடுவதால்பெறும்நன்மைகள்!

தினமும்3 பேரிச்சம்பழம்சாப்பிடுவதால்பெறும்நன்மைகள்!


தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.

 அதிலும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.

பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் 3 உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.

69 கர்ப்பிணிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், பிரசவம் நடைபெறுவதற்கு 4 வாரத்திற்கு முன்பிருந்து தினமும் 3 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்த பெண்களுக்கு பிரசவம் எளிமையாக நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும் பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்

முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம்.

யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..! (Ology)

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..! (Ology)


1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்

உங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்

உங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்!.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை?…

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.
juy
ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.
சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.
எலுமிச்சை, எலுமிச்சங்காய்:
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
புதினா:
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
இஞ்சி:
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.
தண்ணீர்:
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.
குறிப்பு:
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.
ஜூஸ் செய்யும் முறை:
1 வெள்ளரிக்காய், 5 எலுமிச்சை, 1 எலுமிச்சங்காய், 15 புதினா இலைகள், 2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி. 2.5 லிட்டர் தண்ணீர், வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.