கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?

கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?


வருமான வரி கூடுதலாகச் செலுத்தப்படும் நிகழ்வுகள் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டு விடுகின்றன. பணியாளர்கள் அலுவலகம் மூலம் வருமான வரி கணக்கிட்டுச் செலுத்தும்போது சில நேரங்களில் அரசால் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்போது நிகழ்கிறது. வர்த்தகர்கள் அரசால் நிர்ணயிக்கப்படும் வரியைக் கட்டியபின்பு அவர்களின் வியாபாரங்கள் மூலம் மேலும் கூடுதலாக வருமான வரி செலுத்தவேண்டி நிகழ்கிறது. இன்னும் இது போன்ற நிகழ்வுகளின்போது அதற்குரிய படிவங்களில் வருமான வரித்துறைக்கு ஆடிட்டர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ உரிய முறையில் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்ப்பிக்கும்போது அவர்கள் கூடுதலாகச் செலுத்திய வருமான வரித் தொகை செலுத்தியவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றித் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

* கூடுதல் தொகையைத் திரும்பப்பெறலாம் சில நேரங்களில் தனிநபர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கூடுதலாக வருமான வரி செலுத்திவிடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெற உரிமையுடையவராகிறார்கள். அரசு தனிநபர்கள் தங்களின் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போது கூடுதல் தொகையைத் திரும்பப்பெற அனுமதிக்கிறது.

* வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் தனிநபர்கள் திரும்பப் பெறுவதில் உள்ள முழு நடைமுறைகளையும் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான இறுதி நாள் ஜூலை 31, 2017 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

* சரியாக வரி தாக்கல் செய்துள்ளோமா என்று எப்படிச் சரிபார்ப்பது வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களைப் பூர்த்திச் செய்த பிறகு "Calculate Tax" பொத்தானை கிளிக் செய்யவும். நீங்கள் வழங்கிய தகவல்களிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வரியை உங்கள் கம்ப்யூட்டர் கணித்துவிடும். கூடுதல் வரியை திரும்பப் பெற நீங்கள் தகுதியானவராக இருந்தால் அது ‘Refund' வரிசையில் தோன்றும். அடுத்தபடியாக நீங்கள் வருமான வரிக் கணக்கினை e-file முறையில் தாக்கல் செய்ய வேண்டும்

* வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு என்ன ஆகும்? உங்கள் கணக்கினை தாக்கல் செய்து சரிபார்க்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்கும். அதனைத் தொடர்ந்து பிரிவு 143(1) ன் படி நடவடிக்கை குறித்துத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் தகவல் கீழ்குறிப்பிட்டவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்

* கணக்கு ஒத்துப்போதல் உங்கள் வரி கணக்கீடு வரித்துறையினரின் கணக்கோடு ஒத்துப் போனால் நீங்கள் மேற்கொண்டு வரி செலுத்த வேண்டியதில்லை, அவ்வாறு ஒத்துப்போகா விட்டால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியதிருக்கும். அல்லது உங்களின் திரும்பப் பெறும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். உங்கள் கணக்கீடு வரித்துறையினரின் கணக்கீட்டுடன் ஒத்துப்போனால் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுத் திருப்பப்படும் தொகை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

* தகவல் எப்படி அளிக்கப்படும் ஆன்லைன் மூலம் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும்.

* நிலைகள் குறித்துச் சர்பார்ப்பது எப்படி? இந்த நடைமுறைகளின் அவ்வப்போதைய நிலைகள் குறித்து வருமான வரித்துறையின் இணையதளத்தில் e-filing தளத்தில், ‘My Account' தலைப்பின் கீழ் ‘Refund / Demand Status' தலைப்பைச் சொடுக்கினால் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://tin.nsdl.com என்ற இணையதளத்திற்கும் செல்லலாம். உங்கள் PAN எண்ணையும் கணக்கு ஆண்டையும் பதிந்த உடன் உங்கள் நிலையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். திருப்பப்படும் தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் அல்லது காசோலையாக வழங்கப்படும்.

* பணத்தைத் திரும்பப்பெற சரியாகச் செய்ய வேண்டியவை இதற்காக நீங்கள் கீழ்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சரியான வங்கி தகவல்கள், IFSC எண், வங்கி கணக்கு எண், MICR எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். நிரந்தரக் கணக்கு எண் PAN எண்ணை உள்ளிடும்போது தவறேதும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

* அஞ்சல் முகவரி உங்களின் அஞ்சல் முகவரி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கான அறிவிக்கைகள், பிற தகவல்கள் அனைத்தும் உங்கள் முகவரிக்கு அஞ்சல் மூலமே அனுப்பப்படும். ஏற்படும் ஒரு சிறு தவறு கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர்வதில் காலதாமதத்தை ஏற்படுத்திவிடும் அல்லது உங்களுக்குக் கிடைக்காமலே கூடப் போய்விடக்கூடும்.

* டிடிஎஸ் உங்கள் வருமான வரிக் கணக்கில் பணம் உங்கள் அலுவலகத்தாலோ, பிற வர்த்தகர்களாலோ டிடிஎஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டாலோ சரியான டான் எண் குறிப்பிடப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும். படிவம் 16 ல் குறிப்பிடப்படும் தகவல்களும் படிவம் 26 AS ல் குறிப்பிடப்படும் தகவல்களும் ஒத்திருக்க வேண்டும். பிரிவு 80 C கீழ் மேற்கொள்ளப்படும் பிடித்தங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும், அப்போதுதான் உங்களுக்கான தொகை சரியாகத் திரும்பி வரும்.

* முன்கூடியே வரி செலுத்துவதால் கிடைக்கும் நன்மை நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கினை முன்கூடியே தாக்கல் செய்வதன் மூலம் உங்களுக்குத் திரும்பத் தொகை வருவதில் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு உரிய வட்டித் தொகையை நீங்கள் இழக்காமலிருக்க முடியும்.

* சிரமங்களைத் தவிர்ப்பது எப்படி? சரியான நேரத்தில் கணக்கு தாக்கல் செய்தல், சரியான தகவல்களை உள்ளீடு செய்தல் ஆகியவை தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்து உங்களின் தொடர்ந்த வாழ்க்கையில் நிம்மதியைத் தரக்கூடியவையாக இருக்கும் எனும்போது நல்ல விஷயம்தானே.

ஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க எளிய வழிகள்..!

ஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க எளிய வழிகள்..!

Strategies which companies may use to avoid paying taxes the gst india





சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் முடிந்துள்ளன. ஆனால் புதிது புதிதாக நிறுவனங்கள் வரியைக் குறைக்கப் பல வழிமுறைகளைக் கையாண்டு கொண்டு தான் இருக்கின்றன. எனவே ஜிஎஸ்டி-ன் கீழ் வரியைக் குறைக்க மற்றும் தவிர்க்க நிறுவனங்கள் கையாளும் உத்திகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.

1.சிறியதாகச் செயல்படவும் வருமான வரித் துறை வல்லுநர்கள் நிறுவனத்தின் அளவு 50 கோடிகளுக்கு இருக்கின்றது என்றால் டிராக் செய்ய மிகவும் சிரமம் என்று கூறுகின்றனர். எனவே சிறியதாகச் செயல்பட்டு வருவாயினைத் தனிநபர் கணக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

2.சிறிய வரி நிறுவனங்களுடன் இணைப்பு பெரிய கணக்கியல் நிறுவனங்கள் அவர்களுடன் பணியை அளிக்கும் வாடிக்கையாளர்களின் நற்பெயரினை பார்க்கின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிக்கச் சிறிய பட்டய கணக்காளர்களை வைத்து இருப்பார்கள்.

3.ரொக்கப் பணப் பரிவர்த்தனை பணப் பரிவர்த்தனை மூலம் வணிகம் செய்யும் போது பரிவர்த்தனையை டிராக் செய்ய ஆதாரங்கள் கிடைக்காமல் மறைக்கலாம், இதனால் வரியினைக் குறைக்க முடியும். இன்னும் ஜிஎஸ்டி முறைக்கு நிறுவனம் மாறாமல் இருக்கின்றது என்றால் அது வரை பணப் பரிவர்த்தனை செய்து வரியினைக் குறைக்கலாம்.

4.பில் மற்றும் பில் போடமல் நடக்கும் வணிகம் மருந்துக் கடைகள் போன்ற பல சிறிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பில் அளிக்காமல் பொருட்களை வழங்கி விட்டுப் பணப் பரிவத்தனை செய்துவிடுகின்றனர். பில் வேண்டும் என்று கேட்கும் போது மட்டுமே இவர்கள் ரசீதுகளை அளிக்கின்றனர். இதனால் வருவாயினை எளிதாக மறைக்க முடியும்

5.முன் தேதியிட்ட பரிவர்த்தனைகள் வரி செலுத்தாமல் தவிர்க்க முக்கியமான வழி என்றால் அது முன் தேதியிட்ட பரிவர்த்தனைகள் முறையாகும். நடப்புத் தேதியில் வாங்கும் ஒரு பொருளுக்கு முந்தைய மாத தேதியில் ரசீது அளிப்பதன் மூலம் வரியைத் தவிர்க்கலாம். பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்யாதது வரை இப்படிச் செய்து வரி ஏய்ப்புச் செய்ய முடியும்.

6.பொருட்களின் வகையினை மாற்றுதல் தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் வகையினை மாற்றி அமைப்பதன் மூலமாக வரியினைக் குறைக்க முடியும். 80,000 பொருட்கள் மீதான வரி விகிதம் ஜிஎஸ்டி-ன் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, அது அவை பயன்படுத்தும் தயார்ப்புப் பொருட்களைப் பொறுத்தது ஆகும். சாக்லேட்டினை இனிப்பு, கொக்கோ நிரப்பப்பட்ட மிட்டாய், சாக்லேட், பிஸ்கட் அல்லது செதில்-பூசப்பட்ட பிஸ்கட் வகையாக மாற்றி அமைக்கலாம்.

7.வரி விலக்கு வரம்பு 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு உண்டு. எனவே பெரிய நிறுவனங்களைச் சிறு நிறுவனங்களாகப் பிரித்துச் செயல்படலாம். இதனால் வரி விலக்கும் பெற முடியும்.

8.வரி விலக்குப் பொருட்கள் வணிகத்தைச் செய்தல் பூஜை பொருட்கள், காதி, விவசாய உபகரணங்கள், மண் பாத்திரங்கள் மற்றும் உள்ளூர் கைவினை போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. குறிப்பாகத் தென் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பூஜைக்குத் தேவையான பொருட்களினை மதம் சார்ந்த தயாரிப்புகள் வகையாகப் பதிவு செய்தார்கள் என்றால் அவற்றுக்கு வரி விலக்கு பெற முடியும்.

9.பதிவு இருப்பிடத்தை மாற்றுக வட கிழக்கு மாநிலங்களுக்கு வரி விலக்கு அதிகம் உண்டு. எனவே நிறுவனத்தினை அங்குப் பதிவு செய்து வணிகச் செய்வதன் மூலம் வரிகளைக் குறைக்க முடியும்.

10.இன்டர்-ஸ்டேட் இயக்கம் நிறுவனங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோறு மாநிலத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த உத்தியைக் கையாளுகின்றன. ஒரு மாநிலத்தில் விற்பனையாளர், நல்ல கோரிக்கைகளுடன் உள்ளீட்டுக் கடனைப் பெறுகையில், பிற மாநிலங்களில் விற்பனை செய்யும் பொது அதனை மறைத்து விற்க முடியும்.

சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம்

சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம்


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


நீங்கள் நினைத்ததையெ லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்...!!!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும்
செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

1.அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்து விடுகின்றனர்.

2.இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,
வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.
( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம்
செய்கிறார்கள்)

3.மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி  ண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த
இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.

சந்திரன் ஸ்தூல உடலையும்,
சூரியன் சூட்சும உடலையும்

பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும்,
தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள்
உள்ளன.

திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு
கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்,
துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என
வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின்
வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.

இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக
இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என
வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான்
திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை
சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும்
திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.

திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும்அறிந்திருந்ததால்
தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள்
டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20
வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.

அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே
அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது
மந்திர ஜபத்தில் இருக்கவேண்டும்.

இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி
வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),  சகல உயிரினங்களும்
( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை,
கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை,
காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோ வேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ),

ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும். அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது. ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம்செய்யும் போது சில மாதங்களில்
நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது.

மனவலிமையைப் பொறுத்தது.

திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

1. தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும்.
2. தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.
3. வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும்.
4. சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .
5.நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.
6.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது.
7.மனக்கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம்
மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன்தீர,எதிர்ப்புகள் விலக,
நிலத்தகராறுதீர, பதவி உயர்வுகிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவதுஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம்
கண்களை மூடி இருந்தால்போதும்.

தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம்பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப் பிறந்த எவரும் செய்யலாம்.

இம்முறை அமரர்.மிஸ்டிக்செல்வம் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !


ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ பலரும் வருவோம்.

இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஓர் காரணம் இருக்கும். நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும், எதையும் பின்பற்றமாட்டார்கள். எனவே நம் முன்னோர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள்.

துர்கை மற்றும் லட்சுமி தினம்

இப்பழத்திற்கு பின்னணியில் வேறு பல உண்மைகளும் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

செலவு கூடாது

செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.

வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்

எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

துரதிர்ஷ்டம்

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணம் செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஜோதிடத்தின் படி…

இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. ஒருசில லாஜிக்குகளைக் கொண்டு ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனராம். செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறாராம். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்

மற்றொரு ஜோதிடர் கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும்.

எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம். இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருகின்றனர்.

வாஸ்து முறை

வாஸ்து முறை

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள்.

முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்