கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது

கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது





ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!

நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!

விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!

இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!

லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!

இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???

அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!

அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...

அத்திப்பழம் - மலச்சிக்கலை குணமாக்கும்

அத்திப்பழம் - மலச்சிக்கலை குணமாக்கும்




அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.

5. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?



தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. இளஞ்சூடான நீர்

இளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

2. வெந்தயம் நீர்

வெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

3. தேன்

தேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

4. காய்கறிகள்

காய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

5.பழங்கள்

பழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள்,  தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

அரிசிக்கஞ்சி

அரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

7.உளுந்தங்களி

உளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

8.முளைக்கட்டிய பயறு

முளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை





1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"

2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர் படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூன் முதுகு விழுவதை தடுக்கிறது. கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்.

3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது, இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.

4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது. பாயில் தலையணை இல்லாமல் அல்லது லேசான தலையணை உடன் உறங்குவதே சிறந்தது.

6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக் கூடியது,

8; பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லாத ஒரு சீர்வரிசை கிடையாது,

9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

பிளாஸ்டிக் பாய் சூடு உண்டாகி ஆபத்து என்பதை உணரவும்.

வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்

வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்




வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை பற்றி சத்குரு அவர்கள் விரிவாக சொல்வதை தெரிந்து கொள்ளலாம்.

சத்குரு: வாஸ்து என்பது எளிமையான கட்டிடக்கலை வழிகாட்டி. நீங்கள் ஒரு வீடு கட்டினால், அது இந்த அளவுகளில், இத்தனை சதுர அடியில், இத்தனை ஜன்னல்களுடன் இருக்க வேண்டும் என்று கூறும் அடிப்படையான விதிமுறைகள் அடங்கியது.

கட்டிடக் கலைக்கும், கட்டிடங்களைக் கட்டுவதற்கு இருக்கும் அடிப்படை வழிகாட்டுதல்களைத்தான் நாம் வாஸ்து என்றுஅழைக்கிறோம். இந்த விதிமுறைகள் இடத்துக்கு இடம் மாறுபடும். வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வாஸ்துக்கள் இருக்கின்றன.

மலைப் பகுதிகளில் ஒரு விதமான வாஸ்துவும்,
நிலப்பகுதிகளில் வேறுவிதமான வாஸ்துவும்,
கடற்கரையோரப் பகுதிகளில் மற்றொரு விதமான வாஸ்துவும் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் குறிப்பிட்ட தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வகையான கட்டிடக்கலை வழிகாட்டிகளை உருவாக்கினார்கள்

கடந்த சில ஆண்டுகளில் யாரோ சிலர் இதை ஒரு மிகப் பெரிய வியாபாரமாக்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இந்த வியாபாரம் அளவிட முடியாத அளவு பெரிதாகி விட்டது. இது உங்கள் ஆரோக்கியத்தை, வர்த்தகத்தை எல்லாம் சரி செய்கிறது. விட்டால் உங்களை நிலாவுக்குக் கூட அழைத்துச் செல்லும் என்று சொல்கிறார்கள். இதில் அத்தனை முட்டாள்தனமான செயல்கள் நடைபெறுகின்றன.

அடிப்படையில், பயம்தான் மக்களைப் பிடித்து ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நீங்கள் பயத்தில் இருக்கும் போது, உங்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நம்ப வைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

என் வீட்டின் அளவும், வடிவமும் நான் யார் என்பதை முடிவு செய்யும் என்றால், அதை நினைத்து நான் வெட்கப்பட வேண்டும், இல்லையா? மனிதத் தன்மையின் தரத்தை உயிரற்ற பொருட்கள் நிர்ணயிக்க வேண்டுமா அல்லது நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை மனிதத் தன்மை நிர்ணயிக்க வேண்டுமா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

மனிதத் தன்மைதான் அதை நிர்ணயிக்க வேண்டும், இல்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் பொருட்களின் வடிவத்துக்காகவும் அளவுக்காகவும் உங்களுடைய தனிப்பட்ட பண்புகளை கைவிட்டு விட்டால், அது மிகவும் துரதிருஷ்டவசமானது.

வெறும் கற்களும் கண்ணாடிகளும் எல்லாவற்றையும் சரிசெய்து விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். தங்கள் சக்தியையும் அறிவையும் இது போன்றவற்றில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்!

மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை  தேடி வரும்!




கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் வரும் என்பது தெரியுமா?

அதுவும் குறிப்பிட்ட பொருட்களை கடனாக வாங்கினால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவோம். இங்கு மற்றவர்களிடம் எந்த பொருட்களை வாங்கினால், வறுமை தேடி வரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேனா

ஒருவரிடம் பேனாவை வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டால், அந்த பொருள் மிகவும் மோசமான வறுமை மற்றும் அவமானத்தை சந்திக்க வழிவகுக்கும்.

படுக்கை

வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களுடன் படுக்கும் படுக்கையை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையை வரவழைப்பதோடு, உறவை முறிவடைய செய்யும்.

கை கடிகாரம்

மற்றவர்களிடம் கை கடிகாரம் வாங்கி பயன்படுத்தி வந்தால், அது வறுமை மற்றும் வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்க வழிவகுக்கும். எனவே யாரிடமும் கைக்கடிகாரத்தை வாங்காதீர்கள்.

உடைகள்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடைகளை பகிர்ந்து கொள்வது என்பது நல்ல ஐடியாவாக இருக்கலாம். ஆனால் அப்படி உடைகளை பகிர்ந்து கொண்டால், அது நிதி பிரச்சனைகளை உண்டாக்கும்.

கைக்குட்டை

கைக்குட்டையை மற்றவர்களிடம் வாங்கினால், அதனால் கிருமிகள் மட்டும் பரவுவதில்லை, மிகவும் மோசமான வறுமையும் தான் ஏற்படும்.

பணம்

மற்றவர்களிடம் கடனாக பணம் வாங்கினால், அதனால் அவர்களுடனான உறவு முறிவடைவது மட்டுமின்றி, பணம் வாங்கும் போது வாங்கியவரின் கையின் வழியே துரதிர்ஷ்டமும் தான் வரும். எனவே கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்ட நினைக்காதீர்கள்.


பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை

பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை



இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..
இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:

1.ராகி
2.சோளம்
3.நாட்டு கம்பு
4.பாசிப்பயறு
5.கொள்ளு
6.மக்காசோளம்
7.பொட்டுக்கடலை
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.தினை
11.வரகு
12.சாமை
13.கொண்டை கடலை
14.கருப்பு உளுந்து
15.சம்பா கோதுமை
16.பார்லி
17.நிலக்கடலை
18.மாப்பிள்ளை சம்பா
19.அவல்
20.ஜவ்வரிசி
21.வெள்ளை எள்
22.கசகசா
23.ஏலம்
24.முந்திரி
25.சாரப்பருப்பு
26.பாதாம்
27.ஓமம்
28.சுக்கு
29.பிஸ்தா
30.ஜாதிக்காய்
31.மாசிக்காய்

*31 வகையான தானியங்களை முளை கட்டி அரைத்த தரமான சத்துமாவு கிடைக்கும்*

செய்முறை

1. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

2.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

3.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

4.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

7.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

8.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

9.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:

6 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

குறிப்பு :

1. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

2.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

*பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்*

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக என்ன அடுக்கலாம்?

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக பட்டியல்

ஓர் ஆரோக்கியப் பட்டியல் இங்கே…




திங்கள்: நறுக்கியப் பழத்துண்டுகள், தேனில் ஊறிய பலாப்பழம், பேரீச்சை, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், மாதுளை முத்துக்கள், சப்போட்டாபழம், நெல்லி, சிவப்புக் கொய்யா, சீத்தாபழம், தேன் கலந்த நறுக்கிய பப்பாளி.

செவ்வாய்: அவல் லட்டு, பொரி உருண்டை, நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, தினை உருண்டை, அத்திப்பழ உருண்டை, சத்துமாவு உருண்டை, கேழ்வரகு அல்வா.

புதன்: புட்டு, இலை கொழுக்கட்டை, சுண்டல், சப்பாத்தி ரோல்,
பால் கொழுக்கட்டை, உப்பு உருண்டை, பொரிவிளாங்காய் உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை.

வியாழன்: காய்கறி சாலட் வகைகளை, எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து தரலாம். முளைகட்டிய தானியங்களின் கலவை.

வெள்ளி:மினி இட்லி, மினி அடை, மினி தோசை, கட்லட், மாப்பிள்ளைச் சம்பா முறுக்கு, தினை ரிப்பன் பக்கோடா, கவுனி அரிசி சீடை, அவல் உப்புமா, இனிப்பு அவல்.

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

மலேசியாவில் நடைபெற்ற தனித்  தமிழியக்க நுட்பவியல் கலைச் சொற்கள்





1. WhatsApp      -       புலனம்
2. youtube          -       வலையொளி
3. Instagram       -       படவரி
4. WeChat          -        அளாவி
5.Messanger     -        பற்றியம்
6.Twtter              -         கீச்சகம்
7.Telegram        -         தொலைவரி
8. skype             -          காயலை
9.Bluetooth       -          ஊடலை
10.WiFi             -          அருகலை
11.Hotspot        -          பகிரலை
12.Broadband  -         ஆலலை
13.Online           -         இயங்கலை
14.Offline            -        முடக்கலை
15.Thumbdrive   -        விரலி
16.Hard disk       -        வன்தட்டு
17.GPS                -        தடங்காட்டி
18.cctv                 -        மறைகாணி
19.OCR              -         எழுத்துணரி
 20 LED              -         ஒளிர்விமுனை
21.3D                  -        முத்திரட்சி
22.2D                 -         இருதிரட்சி
23.Projector       -        ஒளிவீச்சி
24.printer          -        அச்சுப்பொறி
25.scanner         -        வருடி
26.smart phone  -       திறன்பேசி
27.Simcard          -       செறிவட்டை
28.Charger          -        மின்னூக்கி
29.Digital             -         எண்மின்
30.Cyber            -          மின்வெளி
31.Router           -         திசைவி
32.Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail              சிறுபடம்
34.Meme           -         போன்மி
35.Print Screen -          திரைப் பிடிப்பு
36.Inkjet             -           மைவீச்சு
37.Laser            -          சீரொளி
நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .

- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்கும்
பகிரலாம் -

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்..!


குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்..!


அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

 வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.


சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.

பெண்கள் உதட்டின் மேல் மீசை - கவலை வேண்டாம்

பெண்கள் உதட்டின் மேல் மீசை - கவலை வேண்டாம்




உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;