ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு .

 பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு .





பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.

பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு. அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிறம்பங்கள் உண்டு.

எனவேதான் அதன் சத்தத்திற்கும், அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்றபடி வரலாற்றுப் பதிவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது.
நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை

வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?






தீபத்தில்  மகாலெஷ்மி வாசம் செய்கிறாள்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம்_இருக்கா?

விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது என்று ஒரு பழமொழி உள்ளது.

நாம் வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி  உள்ள தேவையற்ற கதிர்களை

நெகடிவ் எனர்ஜி ஈர்க்கும் சக்தி உண்டு.  அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

நம் சுற்றுப்புறம் தெளிவாகவும்  பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும்
#நல்லெண்ணெய்_விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும்
#நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. இருவரையும் ஒருசேர பார்க்க முடிவதில்லை. அந்த தாய்க்கு ஒருவர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:- மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்

எல்லாவற்றையும் விட தீபத்தில்  மகாலெஷ்மி வாசம் செய்கிறாள் !!.

சூட்சும விஞ்ஞானம்

சூட்சும விஞ்ஞானம்




1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

மூலிகை ரகசியம் - மருந்தில்லா மருத்துவம்

மூலிகை ரகசியம் -  மருந்தில்லா மருத்துவம்



1.மார்புச் சளி
.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

2.சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

11.தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

12.வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

13.உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

14.அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

15.குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

16.வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

17.வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

18.மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

19.சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20.பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

21.மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

22.சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

23.தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

24.மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

25.தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

26.மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

27.வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்..