அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?

ஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா? - தெரிந்துகொள்வோம்

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.

இது மட்டுமா? பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இது போல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை குறித்து இனிக் காண்போம்...

நோய் தடுப்பு முறை :
ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும்.

குடல் இறக்க நோய் :

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

உடல் எடை :

உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

கருப்பு கயிறு :

ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்

அரைஞாண் கயிறு நீக்கம் :

சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கவிடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது.
அரைஞாண் பெயர் விளக்கம் :

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.

அஷ்ட வர்க்க உணவுப்பொடி

அஷ்ட வர்க்க உணவுப்பொடி

தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.

செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!

மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்...

கருப்பைக் கோளாறுகள் தீர - அசோக மரம் பட்டை

அசோக மரம்
மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்த சீதாதேவிக்கு, அந்த வனத்தில் இருந்த அசோக மரங்களே சோகத்தை விரட்ட தைரியம் அளித்தன.
அப்பேர்ப்பட்ட அசோக மரம், ஸ்ரீராம பிரான் - சீதாதேவியின் அருட்பார்வைக்கு உட்பட்டு, இன்று அகிலமெல்லாம் கன்னியரின் மனக்குறையைப் போக்கும் தேவ மருந்தாய் பயன்பட்டு வருகிறது.
கருப்பைக் கோளாறுகள் தீர...
ஒரு பெண்ணின் முழுமை நிலை என்பது அவள் கருத்தரித்து தாய்மையடைந்த பின்னரே உண்டாகிறது. பிள்ளைப் பேறில்லாப் பெண்களை சமூகம் எள்ளி நகையாடுகிறது. தாய்மையடையாத பெண்கள் மன உளைச்சல், வேதனைக்கு உட்பட்டு, நோய்வாய்ப்பட்டு, கடைசியில் மனம் பேதலித்து, வாழ்க்கையை வெறுத்து, யாருடனும் ஒட்டாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பேரமுதமாய் இறைவன் அளித்த மூலிகையே அசோக மரமாகும்.
அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம்- இரண்டையும் அரைத் துத் தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். இதனை காலை- மாலை இரு வேளையும் உண்டு வர வேண்டும்.
இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையை யும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத் தையும் ஓட விரட்டி, உங்கள் வயிற்றிலும் முத்தான பிள்ளைகள் அவதரிப்பார்கள்.நீங்கள் ஆயிரம் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோகினை வழிபட்டு வணங்குங்கள்.
மாதவிலக்குக் கோளாறுகள் சீராக...
ஒரு பெண் தாய்மையடைய இயற்கை சில நியதிகளை வைத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை முறையாக மாதாந் திர ருது சுழற்சியாக வந்து கொண்டிருந்தால், அதுவே அவளின் ஆரோக்கியத்தின் அறிகுறி.
பல்வேறு வகையான உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் போகலாம். அதற்கெல்லாம் கண் கண்ட மருந்து அசோகுவேயன்றி வேறில்லை.
கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங் கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை- மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.
மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி குணமாக...
100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும். இறையாய் பவனி வரும் இயற்கை மருந்தை விட்டொழித்து, நாகரீகம் என்ற பெயரில் கண்டதற்கெல்லாம் நவீன மருந்துகளைப் பயன்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மூலிகையும் இறையம்சம் கொண்டதே. நீங்கள்தான் உங்களின் நுண்ணறிவு கொண்டு, அவற்றின் தன்மையை உணர்ந்து மருந்தாக்கிக் கொள்ள வேண்டும்.
மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகிறதா?
கருப்பை புண்ணாகிப்போன நிலை, கருப்பையில் உண்டாகும் சில தொற்றுகள், கருப்பை சற்று கீழே இறங்கிவிடுதல், உடம்பில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய சத்துகள் குறைந்துவிடுதல், ரத்தப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.
ஒரு பெண் என்பவள் செழிப்பான பயிர் களை விளைவிக்கும் வளமையான மண்ணைப் போல் இருக்க வேண்டும். உப்புப் பூத்த நிலத்தில் ஒரு பயிரும் விளைவதில்லை. அதேபோல் இயல்பான உடலமைப்பில் இருந்து ஒரு பெண் மாறி உப்பிப் போயிருந்தால், அவளின் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைந்துவிடும்.
உடம்பு உப்புதல் என்பது, உடல் பருத்தல் என்பதாகும். உடல் பருத்தல் என்பது, உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் தன் நிலையில் இருந்து மாறுபட்ட தன்மையாகும். இத்தகைய உடல் மாறுபாடு குழந்தையின்மைக்கு மிக முக்கிய காரணம்.
அதிக ரத்தப்போக்கினை அலட்சியப்படுத் தாமல் அசோகினை சரணடையுங்கள். ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, ரத்தப்போக்கு உடனே நிற்கும்.
நீங்கள் ஒன்றை மட்டும் கவனியுங்கள். மாதவிலக்கை முறைப்படுத்துவதற்கும், மாத விலக்கில் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மருந்து அசோகப் பட்டைதான். இதேபோல் முரண்பட்ட இரு பிரச்சினைகளுக்கு ஒரே மருந்தை எந்த மருத்துவ முறையாலும் தர இயலாது.
இது தவிர, பல்வேறு நோய்களைக் குணமாக்கும் தன்மை அசோக மரத்திற்கு உண்டு.
ரத்தபேதி, சீதபேதி, வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் அதிசயமாய் குணமாக்கும்.
அசோகப் பட்டையைத் தனியாகச் சாப்பிடும்பொழுது, மலச்சிக்கல் உண்டாவ தாய் நீங்கள் உணர்ந்தால், அத்துடன் சம அளவு கடுக்காய் கலந்து சாப்பிட்டு வரவும்.
கன்னியரே! உங்கள் நோயால் உங்களுக்கு உண்டாகும் சோகத்தை விரட்ட அசோகம் காத்திருக்கிறது. உங்கள் கருப்பையை வள மாக்கி, உங்களுக்கும் லவ- குசர்கள்போல் பேரறிவு படைத்த பெருமக்களை வழங்க அசோகம் காத்திருக்கிறது. வரும் ராம நவமியில் பிள்ளைப்பேறு விழையும் கன்னியர் கள் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியையும் சீதா பிராட்டியாரையும் வழிபட்டு வணங்கி விரும்பியதைப் பெறலாம்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்

தாமரைத் தண்டின் சத்துக்கள்

தாமரைத் தண்டின் சத்துக்கள் :
நிறைய தாமரைத் தண்டு தின்றால் நீண்டகாலம் வாழலாம்.
பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம்.
66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன.
நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது.
மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.
பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.
குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது . ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்.

மகிழம் பூ (MIMUSOPS ELENGI)

மகிழம் பூ (MIMUSOPS ELENGI)

மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.

பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.

10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்ட் வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எழிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது

பிடித்திருந்தால் பக்கத்தை share & Like செய்யுங்கள்.. மட்றவர்களுக்கு பயனுறும்...!

கிராம்பு என்ன சத்து?

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு -

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

கராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் வாந்திபேதி குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கராம்பு மிகச் சிறந்தது. கராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் உள்ளிச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு...

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு...

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிக்குச் செல்லும் நிலை வந்துள்ளது.

போதிய கல்வியறிவு, எத்தகைய செயல் களையும் திறம்பட முடிக்கும் தன்மை பெண்களுக்கும் உண்டு என்பதை தற்போதுதான் ஆணாதிக்க சமூகம் உணரத் தொடங்கியுள்ளது.

பொருளாதார சூழ்நிலையில் இன்று ஆண், பெண் இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் தற்போது உள்ளது..

இத்தகைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.

பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக் குறைபாடுகள் உண்டாகிறது. இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது.

இதனால்தான் நம் முன்னோர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்கவைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து வந்தனர். மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின்போதே உண்கின்றனர் , அல்லது பட்டினி கிடக்கின்றனர். போதிய உணவு உண்ண நேரமின்மை, காலந்தவறிய உணவு, அவசர அவசரமாக உண்ணும் நிலை இவற்றால் பெண்களுக்கு குடலில் புண் உண்டாகிறது.

இதனால் பித்தம் அதிகரித்து அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.

இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியத் தேவையாகும். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை.

இவர்கள் உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த சூப் செய்து அருந்தலாம்.

மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
ஆரைக்கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கொத்து
கறிவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 துண்டு
காரட் - 1
புதினா - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 5
சோம்பு - 1 1/2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1

இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து வாரம் இருமுறை சூப் செய்து அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நெல்லிக்கனி மரணத்தைத் தள்ளிப்போடும்

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

நெல்லிக்கனி மரணத்தைத் தள்ளிப்போடும்

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-தேரையர்.

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

மூலிகை காபி செய்முறை

மூலிகை காபி செய்முறை..! ( Preparation of herbal coffee )

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன்
காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல்
உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..

தேவையான மூலிகை பொருட்கள்...

1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

சிறியா நங்கை

சிறியா நங்கை...

சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி

- மூலிகை குணபாடம்.

இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும், இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும், அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும். (பற்பமாகும்)

நச்சுக்கடி முறிவு மருத்துவம்

நச்சுக்கடி முறிவு மருத்துவம்..!

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்

கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவ.

சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ..!

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.

பொன்னாவாரை பூ - 10 கிராம்
மிளகு - 5
திப்பிலி - 3
சுக்கு - 1 துண்டு
சிற்றரத்தை - 1 துண்டு

இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.

பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும்.

பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும்.

உடல் எரிச்சல் தீரும்.

பொன்னாவாரைப் பூவை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு டீ.. காஃபிக்கு பதிலாக இதனை கஷாயம் செய்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பொன்னாவாவாரம் பூ ஆயுளை மட்டுமல்ல, அழகையும் காக்க வல்லது.

Junior Ambani weight loss - DIET Chart

Rujuta Diwekar is highest paid dietician in India. She is the one who took care of junior Ambani to lose 70 kgs. Please read her advice to diabetics . . .



1. Eat LOCAL fruits. Like Banana, Grapes, Chikoo, Mangoes. All fruits have FRUCTOSE so it doesn matter that u r eating a mango over an Apple. A Mango comes from Konkan n Apple from Kashmir. So Mango is more local to u.

Eat all d abv fruits in DIABETES as d FRUCTOSE will eventually manage ur SUGAR

2 . Choose Seed oils than Veggie oils. Like choose ground nut, mustard, coconut n til. Don't choose chakachak packing oils, like olive,  rice bran etc
Go for kachchi ghani oils than refined oils

3. Rujuta spends max time in her talks talking about GHEE n its benefits.
Eat GHEE daily. How much GHEE we shud eat depends on food. Few foods need more GHEE then eat more n vice versa. Eat ample GHEE. It REDUCES cholesterol.

3. Include COCONUT. Either scraped coconut over food like poha, khandvi or chutney with idli n dosa

Coconut has ZERO CHOLESTEROL and it makes ur WAIST SLIM

3. Don't eat oats, cereals for breakfast. They r packaged food n we dont need them.  Also they r tasteless n boring n our day shouldn't start with boring stuff.
Breakfast should be poha, UPMA, idli, dosa, paratha

4 . Farhaan akhtars New ad of biscuits - fibre in every bite... Even ghar ka kachara has fibre, likewise oats have fibre. Don't chose them for fibre. Instead of oats, eat poha, upma, idli, dosa

5. No JUICES till u hv teeth in ur mouth to chew veggies n fruits

6 . SUGARCANE is d real DETOX . Drink d juice fresh or eat d SUGARCANE

7 . For pcos, thyroid - do strength training and weight training and avoid all packaged food

8. RICE - eat regular WHITE RICE. NO NEED of Brown rice. Brown rice needs 5-6 whistles to cook n when it tires ur pressure cooker, then why do u want to tire ur tummy.
A white rice is hand pounded simple rice

Rice is not high is GI INDEX.  Rice has mediun GI index n by eating it with daal / dahi / kadhi we bring its gi index further down
If we take ghee over this daal chawal then d GI INDEX is brought further down
Rice has some rich minerals n u can eat it even three times a day

9. How much should we eat - eat more if u r more hungry, let ur stomach be ur guide n vice versa

10. We can eat rice n chapati together or only rice if u wish. It depends on ur hunger. Eat RICE in ALL THREE MEALS without any fear.

11. Food shudnt make u scared like eating rice n ghee. Food should make u FEEL GOOD

12 . NEVER look at CALORIES. Look at NUTRIENTS

13 . No bread, biscuits, cakes, pizza, pasta

14. Ask urself is this the food my Nani n Dadi ate?  If yes then eat without fear.

15. Eat as per ur season. Eat pakoda, fafda, jalebi in monsoon. Ur hunger is as per season. Few seasons we need fried food so eat them.

16 . When not to have chai - tea - dont drink tea as d first thing in morning or when u r hungry. Rest you can have it 2-3 times a day n with sugar

17 . NO GREEN tea plz. No green, yellow, purple, blue tea.

18 . Eat ALL of your TRADITIONAL foods

19. Strictly NO to packaged foods/drinks.

20. Exercise/Walk more to digest & stay healthy.


பசலைக்கீரை - ரத்தசோகை தீர்க்கும்

ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை!


பசலைக்கீரை - ரத்தசோகை தீர்க்கும்

கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், டானிக் எதுவும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.

பசலைக்கீரையின் இளந்தளிரை சாறு எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்து

வந்தால், உடல் ஆரோக்கியம் பெறும். மேலும், எந்த வகையிலாவது பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால்... வாந்தி, ஈரல் உபாதைகள்,

நீரடைப்பு, மூத்திரக்கடுப்பு நோய்கள் குணமாகும்.

பசுவெண்ணெயுடன் பசலைக்கீரை சேர்த்து அரைத்து தடவினால், அக்கி சரியாகும். பசலைக்கீரையுடன் பூண்டு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.

புகை பழக்கத்தை விட வேண்டுமா..?

புகை பழக்கத்தை விட வேண்டுமா..?


உலர் திராட்சையின் மகிமைதினமும்ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது.

புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர் திராட்சைகரைத்து விடுகிறது,

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளைசாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது,

இதுசைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூடஇந்த உண்மையை சொல்வதில்லை,

இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.

சிவபெருமானின் அங்க ஆபரணமும்

சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும்


1. திருமுடி:
திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் ( யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.
2. திருமுகம்:
உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே ( உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.
3. இருதயம்:
முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை ( உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும்.
4. திருவடி:
யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு ( அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர்.
5. தேகம் {வித்யா}:
ஆன்மாக்கள் ( உயிர்கள்) செய்யும் கன்மத்திற்கு ( நல்வினை, தீவினை, செய்வதற்கு ஏற்ப) ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் ( திருவைந்தெழுத்து) ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும்.
6. திரிநேத்ரம்:
சூரியன்,சந்திரன்,அக்கினி ( முக்கண் உடையவன்) என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர்தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன.
7. திரிசூலம்:
ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை ( ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது.
8. மழு:
லய சிவமாக இருப்பவர் தாம் என்பதைக் குறிக்க லயஸ்தானமாகவுள்ள மழுவை ஏந்தியுள்ளார்.
9. வாள் :
பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய ( அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார்.
10.குலிசம் :
ஒருவராலும் கெடுத்தற்கு ( துன்பம் தர) இயலாத சுத்தமாயை ஆளும் பேத குண்த்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் ( கெட்ட குணத்தை உடையவர்கள்) பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார்.
11. அபயகரம்:
உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் ( திருவருள் தரும் குணத்தை) செய்யும் குணத்தைக் குறிக்கிறது.
12. வரத கரம் :
ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் {வரமளிப்பவர்} தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்ட்து வரத கரம்.
13. அக்கினி:
ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார்.
14. அங்குசம்:
மறைப்பினை {திரோபாவம்} செய்பவர் என்பதை அறிவிப்பது.
15. மணி:
நாதத் தத்துவத்திற்குத் ( 36 தத்துவம் கடந்தவர்) தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது.
16. ஸர்ப்பம் {பாம்பு}:
பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.
17. பாசம்:
ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.
18. மான்:
மானினது நாங்கு கால்களும் நான்கு ( ரிக்,யசூர், சாமம்,அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.
19. புன்முறுவல் :
சஞ்சிதம் முதலான மூவகைத் ( ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.
20. உபவீதம் {பூணூல்}:
சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது.
21. சிகை {தலைக்குடுமி}:
ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.
22. சிலம்பு மற்றும் மெட்டி:
பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது.
23. வீரக்கழல்:
ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது.
24. கங்கை:
உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார்
25. காதில் குழை ( தோடு):
அசுரர்களை அழித்து ( ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்

மனித உடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

 " மனித உடல் பற்றிய சுவாரஸ்யமான
            தகவல்கள் "


🔰" மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் .

🔰"இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும் .

🔰" நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும் .

🔰" நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும் .

🔰" ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .

🔰"மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் .

🔰"மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும் .

🔰" மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும். .

🔰" நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம் .

🔰" கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் .

🔰" மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன .

🔰"காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும் .

🔰" கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும் .

🔰" மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும் .

🔰" நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு .

🔰" மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன .

🔰" நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது .

🔰" நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும் .

🔰 " மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் ,

🔰கண்கள் - 31 நிமிடங்கள் ,
🔰மூளை.   - 10 நிமிடங்கள் ,
🔰கால்கள் - 4 மணிநேரம் ,
🔰தசைகள் - 5 நாட்கள்
🔰இதயம்.  - சில நிமிடங்கள் , , ✔✔✔

கண்திருஷ்டி

கண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட
சக்திகள் இருப்பது உண்மைதானா?

உலகில் இருவேறு சக்திகள்
இருக்கின்றன. நல்ல,
தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு
நேர் எதிரான அசுரர்களும்
இருந்ததை புராணங்களில்
படித்திருப்பீர்கள். அதுபோல,
அருட்சக்திக்கு எதிரான
இருட்சக்தி உலகில் இருக்கத் தான்
இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம்
போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும்
கிருமிகள் போல அவை கெடுபலன்களை
உண்டாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க
தெய்வசக்தியைத் தான்
பிடித்துகொள்ள வேண்டும்..

யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு
பயன்தரும். நரசிம்ம துதியான
மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம்
செய்வது நல்லது. முடியாவிட்டால்
இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம்
சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை
ஜெபித்து வாருங்கள்.

குண்டு பொம்மை குபேரன்!

குபேர பொம்மை என்ற
பெயரில், வீடுகளில் பலரும்
கையை உயர்த்தி சிரிக்கின்ற
பொம்மைகளை வீட்டில்
வைத்துள்ளனர். இதைப் பற்றிய
குறிப்புகள் புத்தமத
இலக்கியங்களில் இடம்
பெற்றுள்ளன. சீனா, மலேசியா,
சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான்
நாடுகளில் சிரிக்கும் நிலையில் உள்ள குண்டு
குபேரன் சிலையை, கண்திருஷ்டி போவதற்காக
வழிபடுகின்றனர். குள்ளஉருவம்,
கள்ளமில்லாத சிரிப்பு, கனத்த
தொப்பை,கையில் பொன்மூட்டை,
ஆபரணங்கள் என பொன் நிறத்தில்
இவர் காட்சியளிக்கிறார். இந்த
பொம்மை இருக்கும் இடத்தில்
செல்வவளம் நிறைந்திருக்கும் என்ற
சீனமக்கள் நம்புகின்றனர்.

108 divya desam

108 divya desam 

1. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்
திருக்கோயில், திருச்சி
2. உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில்,
திருச்சி
3. உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி
4. திருவெள்ளறை புண்டரீகாட்சன்
திருக்கோயில், திருச்சி
5. அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள்
திருக்கோயில், திருச்சி
6. கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில்,
தஞ்சாவூர்
7. கண்டியூர் ஹரசாப விமோசன
பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
8. திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள்
திருக்கோயில், தஞ்சாவூர்
9. கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில்,
தஞ்சாவூர்
10. திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன்
திருக்கோயில், தஞ்சாவூர்
11. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்,
தஞ்சாவூர்
12. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில்,
தஞ்சாவூர்
13. திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்
திருக்கோயில், தஞ்சாவூர்
14. நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி
திருக்கோயில், தஞ்சாவூர்
15. திருச்சேறை சாரநாதப்பெருமாள்
திருக்கோயில், தஞ்சாவூர்
16. திருக்கண்ண மங்கை பக்தவத்சல
பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
17. திருக்கண்ணபுரம்
சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
18. திருக்கண்ணங்குடி
லோகநாதப்பெருமாள் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
19. நாகப்பட்டினம்
சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
20. தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள்
( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்
21. நாதன்கோயில் ஜெகநாதன்
திருக்கோயில், தஞ்சாவூர்
22. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்
திருக்கோயில், தஞ்சாவூர்
23. தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
24. திருச்சிறுபுலியூர்
கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில்,
திருவாரூர்
25. தலச்சங்காடு
நாண்மதியப்பெருமாள் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
26. திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர்
திருக்கோயில், நாகப்பட்டினம்
27. காவளம்பாடி கோபாலகிருஷ்ணன்
திருக்கோயில், நாகப்பட்டினம்
28. சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
29. திருநாங்கூர் குடமாடு கூத்தன் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
30. திருவண்புருசோத்தமம் புருஷோத்தமர்
திருக்கோயில், நாகப்பட்டினம்
31. செம்பொன்செய்கோயில்
பேரருளாளன் திருக்கோயில், நாகப்பட்டினம்
32. திருமணிமாடக்கோயில் பத்ரிநாராயணர்
திருக்கோயில், நாகப்பட்டினம்
33. வைகுண்ட விண்ணகரம் வைகுண்டநாதர்
திருக்கோயில், நாகப்பட்டினம்
34. திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
35. திருநகரி வேதராஜன் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
36. திருத்தேவனார்த்தொகை
தெய்வநாயகர் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
37. திருத்தெற்றியம்பலம்
செங்கண்மால் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
38. திருமணிக்கூடம்
வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,
நாகப்பட்டினம்
39. திருவெள்ளக்குளம் அண்ணன்
பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
40. பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன்
திருக்கோயில், நாகப்பட்டினம்
41. சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள்
திருக்கோயில், கடலூர்
42. திருவகிந்திபுரம் தேவநாத பெருமாள்
திருக்கோயில், கடலூர்
43. திருக்கோவிலூர் திருவிக்கிரமசுவாமி
(உலகளந்த பெருமாள்) திருக்கோயில்,
விழுப்புரம்
44. காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
45. காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
46. தூப்புல் விளக்கொளி
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
47. காஞ்சிபுரம் அழகிய சிங்க
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
48. திருநீரகம் உலகளந்த பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
49. திருப்பாடகம் பாண்டவதூதப்
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
50. நிலாதிங்கள்துண்டம்
நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்,
காஞ்சிபுரம்
51. திரு ஊரகம் உலகளந்த பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
52. திருவெக்கா சொன்ன
வண்ணம்செய்த பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
53. திருகாரகம் உலகளந்த பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
54. திருக்கார்வானம் உலகளந்த
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
55. திருக்கள்வனூர் கள்வப்பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
56. திருபவளவண்ணம்
பவளவண்ணபெருமாள் திருக்கோயில்,
காஞ்சிபுரம்
57. பரமேஸ்வர விண்ணகரம் பரமபதநாதர்
திருக்கோயில், காஞ்சிபுரம்
58. திருப்புட்குழி விஜயராகவப்
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
59. திருநின்றவூர்
பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்,
திருவள்ளூர்
60. திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில்,
திருவள்ளூர்
61. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
திருக்கோயில், சென்னை
62. திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள்
திருக்கோயில், காஞ்சிபுரம்
63. திருவிடந்தை
நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்,
காஞ்சிபுரம்
64. மகாபலிபுரம் ஸ்தலசயனப்
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
65. சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்,
வேலூர்
66. திருநாவாய் நாவாய் முகுந்தன்
திருக்கோயில், மலப்புரம்
67. திருவித்துவக்கோடு
உய்யவந்தபெருமாள் திருக்கோயில்,
பாலக்காடு
68. திருக்காக்கரை காட்கரையப்பன் திருக்கோயில்,
எர்ணாகுளம்
69. திருமூழிக்களம்
லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்,
எர்ணாகுளம்
70. திருவல்லவாழ் திருவாழ்மார்பன்
திருக்கோயில், பந்தனம் திட்டா
71. திருக்கடித்தானம் அற்புத
நாராயணன் திருக்கோயில், கோட்டயம்
72. திருச்சிற்றாறு இமையவரப்பன் திருக்கோயில்,
ஆலப்புழா
73. திருப்புலியூர் மாயப்பிரான் திருக்கோயில்,
ஆலப்புழா
74. திருவாறன் விளை திருக்குறளப்பன்
திருக்கோயில், பந்தனம் திட்டா
75. திருவண்வண்டூர் பாம்பணையப்பன்
திருக்கோயில், ஆலப்புழா
76. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்
திருக்கோயில், திருவனந்தபுரம்
77. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்
திருக்கோயில், கன்னியாகுமரி
78. திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்
திருக்கோயில், கன்னியாகுமரி
79. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர்
திருக்கோயில், திருநெல்வேலி
80. நாங்குனேரி தோத்தாத்ரிநாதன்
திருக்கோயில், திருநெல்வேலி
81. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர்
(நவதிருப்பதி-1) திருக்கோயில், தூத்துக்குடி
82. நத்தம் விஜயாஸனர் (நவதிருப்பதி-2)
திருக்கோயில், தூத்துக்குடி
83. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்
(நவதிருப்பதி- 3) திருக்கோயில், தூத்துக்குடி
84. திருப்புளியங்குடி பூமிபாலகர்
(நவதிருப்பதி-4) திருக்கோயில், தூத்துக்குடி
85. ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்
(நவதிருப்பதி- 5) திருக்கோயில், தூத்துக்குடி
86. தென்திருப்பேரை மகரநெடுங்
குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில்,
தூத்துக்குடி
87. பெருங்குளம் வேங்கட வாணன்
(நவதிருப்பதி- 7) திருக்கோயில், தூத்துக்குடி
88. தொலைவிலிமங்கலம் ஸ்ரீ
நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில்,
தூத்துக்குடி
89. தொலைவிலிமங்கலம்
அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்,
தூத்துக்குடி
90. திருத்தங்கல் நின்ற
நாராயணப்பெருமாள் திருக்கோயில்,
விருதுநகர்
91. ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி,
ஆண்டாள் திருக்கோயில், விருதுநகர்
92. மதுரை கூடலழகர் திருக்கோயில், மதுரை
93. அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில், மதுரை
94. திருமோகூர் காளமேகப்பெருமாள்
திருக்கோயில், மதுரை
95. திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர்
திருக்கோயில், சிவகங்கை
96. திருப்புல்லாணி ஆதிஜெகநாதர்
திருக்கோயில், ராமநாதபுரம்
97. திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள்
திருக்கோயில், புதுக்கோட்டை
98. சரயு, அயோத்தி ரகுநாயகன் (ராமர்)
திருக்கோயில், பைசாபாத்
99. பத்ரிநாத் தாம் பத்ரிநாராயணர்
திருக்கோயில், சாமோலி
100. மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில்,
மதுரா
101. துவாரகை கிருஷ்ணர்
(துவராகாநாதர்) திருக்கோயில்,
அகமதாபாத்
102. அஹோபிலம் பிரகலாத வரதன்
திருக்கோயில், கர்நூல்
103. மேல்திருப்பதி திருப்பதி
வெங்கடாசலபதி திருக்கோயில், சித்தூர

கொய்யாபழம் கட்டாயம் சாப்பிடுங்க..

 கொய்யாபழம் கட்டாயம் சாப்பிடுங்க..

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.....

K.Karthik Raja May 2016






























உறங்கும் முறை அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு

இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி !!!

உறங்கும் முறை அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு

பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.

விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.

இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.

இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.

இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.

அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.

இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்..
Thank இந்த முறைக்குப் பெயர், நாடி சுத்தி. இது நமது யோகா முறையிலேயே உள்ளது