மந்திர ஜபம் செய்யும் முறை

மந்திர ஜபம் செய்யும் முறை 


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம்
செய்தால் பலன் இல்லை.

3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.

4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.

5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.

வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.

6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.

8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படு ம்

11. மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர்.

12. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

13. கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.

14. மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும்.

15. மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும்.

16. மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.

17. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.

18. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.

19. மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. மந்திர உச்சாடணம் செய்வதற்கு முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

20. முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.

21. மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.

முறைப்படி மந்திர உச்சாடணம் செய்து வாழ்வில் சகல வளமும், சகல நலமும் பெறுவோமாக.

உளுந்தங்கஞ்சி - அழகும் ஆரோக்கியமும்

உளுந்தங்கஞ்சி - அழகும் ஆரோக்கியமும்



உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு.

சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடு

அழகும் ஆரோக்கியமும் முக்கியம்

ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.

இதன் செய்முறையை பல பேர் கேட்டுக் கொண்டே இருந்ததனால் இந்தப் பதிவு.

இதன் பலன்கள்: முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.

ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.

மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.

பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி

தேவையான_பொருட்கள்

உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி அரை டம்ளர்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பூண்டு 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் ஒரு மூடி

செய்முறை:

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.

(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்)

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும்.

தேங்காய் துருவியும் போடலாம்.

(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.

Ayurvedic Weight Loss Remedies

மண்பானை தண்ணீர் - Clay Pot Water Benefits

சுறுசுறுப்பு தரும் சைக்கிள் பயிற்சி

சுறுசுறுப்பு தரும் சைக்கிள் பயிற்சி

சைக்கிள் ஓட்டுவதால் உடல் பெறும் நன்மைகள் ஏராளம். நமது உடலை கட்டுகோப்பாக வைக்க, உதவும் எளிய பயிற்சி சைக்கிள் ஓட்டுவதுதான்.

ஒவ்வொரு நாளும் விரல் நுனியில், அறிவியல் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் நம்மை ஏதாவது ஒரு நோய் தாக்கி கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம். முறையான உணவும், சரியான உடற்பயிற்சியும் இல்லாதது தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

நம் மூதாதையர் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய பழைய கருவிகள், பொருட்கள், அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு துணை புரிந்தது. ஆனால், இன்று பெரும்பாலான வேலைகளை எந்திரங்கள் செய்து முடித்துவிட, நமது உடல் உழைப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது நோய்கள் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அழைக்கப்படுகிறது.

மோட்டார் பைக்குகளின் மோகத்தால் இன்றைய தலைமுறையினர் பலரும் சைக்கிளின் பெருமையை உணர்வதில்லை. சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவதால் உடல் பெறும் நன்மைகள் ஏராளம்.

முதன் முதலாக 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமான சைக்கிள், ஆரம்பத்தில் வெளாசிபிட் என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. ஆரம்பத்தில் மரப்பலகையில் செய்யப்பட்ட சைக்கிள் பின்னர் ரப்பர் சக்கரம் கொண்டதாக மாற்றம் பெற்றது. சக்கரம், செயின், பெடல் என பல்வேறு மாற்றங்களை பெற்று இன்றைய நவீன சைக்கிள் கடந்த நூற்றாண்டில்தான் புதுவடிவம் பெற்றது.

நமது உடலை கட்டுகோப்பாக வைக்க, உதவும் எளிய பயிற்சி சைக்கிள் ஓட்டுவதுதான். சைக்கிள் ஓட்டுவதால் உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. உடலுக்கும், உள்ளத்துக்குமான தொடர்பினை வலுப்படுத்துகிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாக காரணமாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் மேம்படும்.

சைக்கிள் ஓட்டுவதால் இதயதுடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்துகிறது. தசைகளை வலிமையாக்குகிறது.

பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்றுகிறது.

தினமும் காலையில் 20 நிமிடம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். இதனால் கை, கால், தசை நரம்புகள் இறுக்கத்தை போக்கி மிருதுவான தேகத்தை தரும். உடலில் அனைத்து பாகங்களும் இயங்க சிறந்த உடற்பயிற்சி சைக்கிள் ஓட்டுவது தான். இதனால் சுறுசுறுப்புடன் அன்றைய நாளின் வேலைகளை முடிக்க உதவும்.

காலையில் எழுந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவது, 10 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கு சமம் ஆகும். உடம்பில் இருக்கும் அசுத்தங்களை வியர்வையாக வெளியேற்ற உதவும் சிறந்த உடற்பயிற்சியும் சைக்கிள் ஓட்டுவது தான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் அனுபவித்து செய்யக்கூடியது. இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கை காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும். சிறு வயது முதலே சைக்கிள் ஓட்டுவதால், உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவு பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.

நம்மால் முடிந்த அளவிலான தூரத்துக்கு செல்ல எப்போதும் சைக்கிளையே பயன்படுத்தினால், அது சுற்றுச்சூழலுக்கும் நன்மை தருவதாக அமையும். எனவே ஆரோக்கியமும், சுகாதாரமும் தந்திடும் சைக்கிளை போற்றுவோம். பயன்படுத்துவோம்.

பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்?

பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்?

ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன்படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த ஹரஹரா கோஷம் செய்யப்படுகிறது. கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.

ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.

பூஜையின் போது சாம்பிராணி ஏன்?

பூஜையின் போது சாம்பிராணி ஏன்?

கோவில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

கோவில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர்.

பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.

இன்று சாம்பிராணியை பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்த முடிவதில்லை. எனவே, பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது ஒரு சம்பவம்.

வைணவ ஆசார்யர் ஸ்ரீராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமைப் பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், தனது பிரபந்த உரை நிகழ்ச்சிகளின்போது மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை திருவாய்மொழிக்கான வியாக்கியானத்தை அளித்தபோது, பரிவதிலீசனைப் பாடி என்ற திருவாய்மொழிப் பாசுரத்துக்கு விளக்கமளித்தார்.

இறைவனுக்கு எந்தப் புகையும் பூவும் சமர்ப்பிக்கலாம். செதுகையிட்டுப் புகைக்கலாம், கண்டகாலிப் பூவும் சூட்டலாம் என்று உரை அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடரான நஞ்சீயருக்கு வருத்தம் ஏற்பட்டது. ""இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் வகுத்திருக்கும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?'' என்று கேட்டுவிட்டார்.

அதற்கு பட்டர், "இறைவன் ஒன்றும் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை... கண்டகாலிப்பூ சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையைப் பதம் பார்த்து விடும். எனவே அடியார்கள் மீது கருணை கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தானே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.

எலும்புகளை வலுவாக்கும் பலாப்பழம்

எலும்புகளை வலுவாக்கும் பலாப்பழம்

குழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

பலாச்சுளை பொதுவாக உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. உடல் வறட்சி, எரிச்சல், களைப்பை போக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு வலுசேர்க்கும். ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். பலாச்சுளை சாப்பிட்டால் இதய தாக்குதல் வராது. வைட்டமின் ஏ சத்து பலாவில் அதிகம் உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உடனடி தீர்வு பலாச்சுளை தான்.

பலாச்சுளையின் இனிப்புக்காக அதனை அதிகம் விரும்பி உண்டால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் வயிற்றுக் கோளாறை நீக்க பலாக்கொட்டையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் உப்பு, ஓமம் ஆகியவற்றை சேர்த்து வெந்நீரில் கலக்கி சாப்பிட வேண்டும்.

பலா இலைகளை ஒன்று சேர்த்து தைத்து அதில் விரத உணவுகளை சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. பலா இலையில் உணவுகளை சாப்பிட்டால் குன்ம நோய் நீங்கும். இலைகளை அரைத்து கட்டிகள் மீது தடவ அவை உடைந்து குணமாகும். இலைக்கொழுந்தை அரைத்து சிரங்குகளுக்கு பூசலாம்.

பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நல்ல எனர்ஜியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பலாமரத்துப் பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். வேரை பாலிட்டு அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூசலாம்.

பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

குழந்தைகள் இந்த பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் Jack-fruitவைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுவை அளிக்கும்

Temples for stars

நட்சத்திர கோவில்கள் - தமிழ்நாடு!

Birth Star (Nakshathiram) Temples - in TamilNadu

1. Ashwini Birth Star Temple Sri Bhava Oushadeeswara Temple Thiruthuraipoondi near Mannargudi in Nagapattinam District in Tamil Nadu

 2. Barani (Apa Bharani) Birth Star Temple Sri Agneeswara Temple Nallaadai on the Mayiladuthurai - Nagapattinam Road in Tamil Nadu about 20 km from Mayiladuturai and 3 km from Poraiyaar

3. Karthigai (Krittika) Birth Star Temple Sri Kaatra Sundareswara Temple Kanjanagaram on the Mayiladuthurai - Keezhaiyur - Poompuhar route in Tamil Nadu about 5 km from Mayiladuturai

4. Rohini Birth Star Temple Sri Pandava Dhoota Krishna Perumal Temple Kanchipuram (temple town) in Tamil Nadu. This temple is near Kumarakottam which is near the famous Kamakshi Temple

5. Mirugaseerisham (Mrigaseersha, Mrigasira) Birth Star Temple Sri Adi Narayana Temple EnKan on the Thanjavur - Koradacheri - Tiruvaruyr route in Tamil Nadu about 13 km from Koradacheri

6. ThiruAdhirai (Arudra) Birth Star Temple Sri Abhaya Varadeeswarar Temple AdiRamPattinam near Pattukottai in Thanjavur District in Tamil Nadu about 12 km from Pattukottai

7. Punarpoosam (Punarvasu) Birth Star Temple Sri Atiteeswarar Temple Vaniyambadi in North Arcot District on the Vellore - Aambut - Vaniyampadi - Tirupattur route in Tamil Nadu

8. Poosam (Pushya, Pubba) Birth Star Temple Sri Akshayapureeswarar Temple Vilangulam in Thanjavur District some 20 km from Peravurani in Tamil Nadu. First get to Peravurani from Pudukottai or Karaikudi or Pattukottai or Thanjavur. Then get to Vilankulam.

9. Aayilyam (Aslesha, Ayilyam) Birth Star Temple Sri Karkateswarar Temple (locally known as Nandaangovil) ThirundhuDevankudi some 11 km from Kumbakonam temple town in Tamil Nadu

10. Magham (Magha, Makam) Birth Star Temple Sri Mahalinga Swami Temple Thavasimadai on the Dindigul - Nattam route in Tamil Nadu some 25 km from Dindigul.

11. Pooram (Poorva Phalguni) Birth Star Temple Sri Hari Theertheswarar Temple Thiruvarangulam on the Pudukottai - Pattukottai route in Tamil Nadu some 10 km from Pudukottai

12. Uttiram (Uttara Phalguni) Birth Star Temple Sri Mangalyeswarar Temple Idaiyatrumangalam on the Trichy - Valadi - Pachampattu - Mandhurai - Lalgudi route in Tamil Nadu

13. Hastham (Hasta) Birth Star Temple Sri Krupakoopareswarar Temple Komal on the Kumbakonam - Mayiladuthurai route in Tamil Nadu some 6 km from Kuttalam

14. Chitirai (Chitra) Birth Star Temple Sri Chitra Ratha Vallabha Perumal Temple Kuruvithurai in Madurai District in Tamil Nadu some 8 km from Cholavandhan

15. Svaati (Swati) Birth Star Temple Mother Prasanna Kundhalambika and Sri Tantreeswarar Temple and Sri Sundararaja Perumal Temple Sittukadu some 10 km from Poonamallee (near Chennai) in Tamil Nadu on the Poonamallee - Pattabiram route

16. Visakam (Vishaka) Birth Star Temple Sri Muruga Temple Thirumalai some 7 km from Shencottah and 15 km from Tenkasi in Tirunelveli District in Tamil Nadu

17. Anusham (Anusha) Birth Star Temple Sri Lakhmsipureeswarar Temple Thirunindriyur some 7 km from Mayiladuthurai on the Mayiladuthurai - Sirkazhi route in Thanjavur District in Tamil Nadu

18. Kettai (Jyeshta, Jyestha) Birth Star Temple Sri Varadaraja Temple Pasupati Koil some 12 km from Thanjavur on the Thanjavur - Kumbakonam route in Thanjavur District in Tamil Nadu

19. Moolam (Mula, Moola) Birth Star Temple Sri Singeeswarar Temple Mappedu some 40 km from Chennai on the chennai - Thakkolam route in Tamil Nadu

20. Pooradam (Poorvashada, Purvashada, Puram) Birth Star Temple Sri Akasapureeswarar Temple Kaduveli near Thiruvaiyaru in Thanjavur District in Tamil Nadu

21. Uttiradam (Uttarashada, Uthiradam) Birth Star Temple Mother Meenakshi and Sri Sundareswarar Temple Keezhapoongudi on the Melur - Sivaganga route in Madurai District in Tamil Nadu

22. Thiruvonam (Sravana, Tiruvonam) Birth Star Temple Mother Alarmelmanga and Sri Prasanna Venkatesa PerumalTemple Thiruparkadal on the Chennai - Vellore route some 4 km from Kaveripakkam in Tamil Nadu

23. Avittam (Dhanista, Sravista) Birth Star Temple Mother Pushpavalli and Sri BrahmaGnanaPureeswarar Temple Korukkai near Kumbakonam on the Patteeswaram - Muzhaiyur route some 5 km from Kumbakonam bus stand in Tamil Nadu

24. Sadayam (Sathabhishak) Birth Star Temple Mother Karundharkuzhali and Sri Agneeswarar Temple Thirupugaloor some 10 km from Nannilam on the Kumbakonam - Nannilam - Nagapattinam route in Thanjavur District in Tamil Nadu

25. Pooratadhi (Poorvabhadra) Birth Star Temple Mother Kamakshi and Sri ThiruAneswarar Temple Renganathapuram some 10 km from Thirukattupalli on the Tirukattupalli - Koviladi route in Thanjavur District in Tamil Nadu

26. Uttiratadhi (Uttarabhadra) Birth Star Temple Sri Sahasra Lakshmeeswarar Temple Theeyathur some 15 km from Avudaiyar Kovil in Pudukottai District on the Avudaiyar Kovil - Thirupunnavasal route in Tamil Nadu

27. Revathi (Revati) Birth Star Temple Mother Karunakaravalli and Sri Kailasanathar Temple Kaarukudi some 2 km north of Tattayangarpettai and 1.5 km west of Mettupalayam in Musuri Taluk, Trichy District in Tamil Nadu


Lucky symbols for stars

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் !

 
ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.

வெற்றிக்கு தனி வழி

வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.

உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன விஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை

12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை

14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்

17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்

21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை

24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

சின்னங்களின் பயன்:

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.

அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான்.

இன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும்.

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.


Chennai pancha bootha sthalam

சென்னையில் பஞ்சபூத ஸ்தலங்கள் !

 கங்காதீஸ்வரர் திருக்கோவில் புரசைவாக்கம் (நீர்)

அருணாசலேஸ்வரர்  திருக்கோவில் பாரிஸ் பள்ளியப்பன்தெரு (நெருப்பு)

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் பாரிஸ் மின்ட்தெரு (பூமி)

சிதம்பரநாதர் திருக்கோவில் சூளை (ஆகாயம்)

காளஹதீஸ்வரர் திருக்கோவில் பாரிஸ் பவளக்கார தெரு (காற்று)

நோய்கள் குணமாகும் இடங்கள்

நோய்கள் குணமாகும் இடங்கள்

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது
                                                 

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

நோய்கள் உருவாகும் இடங்கள்

நோய்கள் உருவாகும் இடங்கள் -


*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*



*3 - காபி*



*4 - வெள்ளை சர்க்கரை*



*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*



*6 - பாக்கெட் பால்.*



*7 - பாக்கெட் தயிர்*



*8 - பாட்டில் நெய்*



*9 - சீமை மாட்டு பால்*



*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*



*11 - பொடி உப்பு*



*12 - ஐயோடின் உப்பு*



*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*



*14 - பிராய்லர் கோழி*



*15 - பிராய்லர் கோழி முட்டை*



*16 - பட்டை தீட்டிய அரிசி*



*17 - குக்கர் சோறு*



*18 - பில்டர் தண்ணீர்*



*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*



*20 - மினரல் வாட்டர்*



*21 - RO தண்ணீர்*



*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*



*23 - Non Stick பாத்திரங்கள்*



*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*



*25 - மின் அடுப்பு*



*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*



*27 - சோப்பு*



*28 - ஷாம்பு*



*29 - பற்பசை*



*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*



*31 - குளிர்பானங்கள்*



*32 - ஜஸ் கீரீம்கள்*



*33 - அனைத்து மைதா பொருட்கள்*



*34 - பேக்கரி பொருட்கள்*



*35 - சாக்லேட்*



*36 - Branded மசாலா பொருட்கள்*



*37 - இரசாயன கொசு விரட்டி*



*38 - Ac*



*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*



*40 - பிஸ்கட்டுகள்*



*41 - பன்னாட்டு சிப்ஸ்*



*42 - புகைப்பழக்கம்*



*43 - மதுப்பழக்கம்*



*44 - சுடு நீரில் குளிப்பது*



*45 - தலைக்கு டை*



*46 - துரித உணவுகள்*



*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*



*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*



*49 - ஆங்கில மருந்துகள்*



*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*



*51 - உடல் உழைப்பு இல்லாமை*



*52 - பசிக்காமல் உண்பது*



*53 - அவசரமாக உண்பது*



*54 - மெல்லாமல் உண்பது*



*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*



*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*



*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*



*58 - அறியாமை*



*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*



*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*



*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*



*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*



*உயிர் பிழைக்க ஒரே வழி*



*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*



முடக்கத்தான் கீரையின் பயன்கள்

முடக்கத்தான் கீரையின் பயன்கள்:-

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

முடக்கத்தான் இலை

தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.

நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
தயாரிக்க வேண்டும்.

மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுபற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகைஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டுஅடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டிவிடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்

ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
சாதம்மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .

ஏழு நாட்களில் உங்கள் எடையைக் குறைக்க எளிதான வழிகள்

ஏழு நாட்களில் உங்கள் எடையைக் குறைக்க எளிதான வழிகள்








Ice therapy

"ஐஸ் தெரபி"
**************

வெறும் பத்தே பத்து நிமிஷங்கள் மட்டும் இந்த ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க!

"வெளியூருக்கு, ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்! வந்ததில் இருந்து, ஒரே சளி, இருமல், ஹ்ம்ம், தண்ணீர் ஒத்துக்கலே!" ஒரே தாகமா இருந்துச்சுன்னு, கடையில, ஜூஸ் குடிச்சேன்! என்ன தண்ணியிலேபோட்டானோ? ஒரே தும்மல், தொண்டை வலி, ஜலதோஷம் வந்துடுச்சு!"

இதுபோன்ற, பல அங்கலாய்ப்புகளை, நாம் பலமுறை கேட்டிருப்போம். நம் உடலின்நோயெதிர்ப்புத் தன்மையின் பலவீனத்தினால், இதுபோன்ற இன்னல்கள் ஏற்படுகின்றன எனும் உண்மையை அறியாமல், பழியை, சூழ்நிலைகள் அல்லது மற்றவர்களின் மேல், திணிக்கும் இதுபோன்ற செயல்களை நாம் அறிந்திருந்தாலும், அந்த நேரத்தில்,எதுவும் கூறாமல், ஒரு மௌனப்புன்னகையுடன் அவர்களைக் கடந்துவிடுவோம். இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடிக்கடி சளி மற்றும் ஜுரம் வந்து, அவதிப்படுவார்கள். ஒருமுறை மருந்துகள் சாப்பிட்டு குணமானாலும், மீண்டும் திரும்ப வரும் ஜலதோஷ சுவாச பாதிப்புகளால், அவர்கள் சிரமப்படுவது மட்டுமன்றி, குடும்பத்தாரையும் சிரமப்படுத்தி, தும்மல், மூக்கில் நீர்வடிதல் மற்றும் சளி பாதிப்புடன் தொண்டையும் கட்டிக்கொண்டு, கரகரப்பான குரலில் புரியாமல் பேசி, அலுவலகத்தில் உள்ளோரையும் சிரமப்படுத்திவிடுவார்கள்.

இதற்கெல்லாம், முதல் காரணம் என்ன தெரியுமா? உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி வலுவிழந்து இருப்பதுதான். அதனால்தான், இவர்களுக்கு இதுபோன்ற சுவாச தொற்று பாதிப்புகள், அடிக்கடி ஏற்படுகின்றன.

சித்த மூலிகை மருத்துவத்தில் ஒரு புகழ்பெற்ற சொல்லாடலை, வைத்தியர்கள் அடிக்கடி கூறுவார்கள். கழிவுகளின் தேக்கம், வியாதி! கழிவுகளின் வெளியேற்றம், ஆரோக்கியம்! இதை நாம் முழுமையாக உணர்ந்தால், ஜலதோஷம், காய்ச்சலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல், அவை தானாகவே, குணமாகிவிடும் என்று இருப்போம்.

ஜலதோஷம், வைத்தியம் செய்தால், ஒரே வாரத்தில் குணமாகிவிடும், இல்லாவிட்டால், குணமாக ஏழு நாட்கள் வரை, ஆகிவிடும் என்று, நகைச்சுவையாகக் கூறுவது, இதனால்தான்.

நமது உடலில் இயற்கையாக உள்ள ஆற்றல், சுவாசப் பாதைகளில் தேங்கிய நச்சுக்கிருமிகளை அழித்து வெளியேற்றும் நிகழ்வே, சளி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் என்பார்கள், சித்த மூலிகை மருத்துவர்கள். உடலில் தேங்கிய கழிவுகளை, சளியின் மூலம், உடலின் ஆற்றல் வெளியேற்றும் நிகழ்வை நாம், ஜலதோஷம், தும்மல் எனும் உடல்நல பாதிப்புகளாக எண்ணிக்கொண்டு, அதற்கு சிகிச்சை மேற்கொண்டு, நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வை தடுத்து, அவற்றை உடலில் தேங்கவிட்டு, வேறுபல வியாதிகளுக்கு வழிவகுக்கிறோம் என்பதே, உண்மை.

மனிதர்கள் எல்லோருக்கும், நோயெதிர்ப்பு ஆற்றல் உண்டு, சிலருக்கு, உடலில் ஏற்படும் பாதிப்புகளால், அதன் அளவு குறைந்திருக்கும். இந்த நிலையிலேயே, உடலில் நச்சுக்கிருமிகள் சேர்ந்து, அவற்றை வெளியேற்ற உடலின் ஆற்றல் முயன்று, போதுமான சக்தியின்மையால், ஏற்படும் தொற்று பாதிப்புகள் அடிக்கடிஉடலை பாதிக்கிறது. இதுபோன்ற, நிலைகளில், வேதிச்சத்துள்ள மேலை மருந்துகளை உடலில் செலுத்தி, உடல் நல பாதிப்புகளை மேலும் அதிகரிக்காமல், இயற்கை வழிகளில், இழந்த உடலின் நோயெதிர்ப்பு சக்தியை, வினாடிகளில் மீண்டும் அடையும் வழிமுறைகளை, மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலொன்றுதான், புகழ்பெற்ற இரஷ்ய மருத்துவர் Dr.செர்ஜி புப்நோவ்கி கண்டுபிடித்த, ஜில் தண்ணீர் ஐஸ் வைத்தியம்.

மிகவும் குளிர்ந்த நீரில், ஐஸ் கட்டிகளை அதிக அளவில் இட்டு, அந்த நீரில், கால்களை சற்றுநேரம் நனைப்பதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் இழப்பை, உடனே மீட்டெடுக்க முடியும், என்கிறார், Dr.செர்ஜி புப்நோவ்கி.

வாயகன்ற, இரு கால் பாதங்கள் வைக்கும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் முக்கால் பங்கு குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஐஸ் கட்டிகளை இட்டு வைக்கவேண்டும்.

உறைபனி நிலையில் உள்ள இந்த நீரில், இரு கால்களையும், பாதங்கள் நன்கு நீரில் படியும் வகையில், நீரில் அழுத்தி, எண்ணி பதினைந்தே வினாடிகளில், கால்களை, நீரிலிருந்து வெளியே, எடுத்துவிட வேண்டும்.

இதன் மூலம், உடலில் வலுவில்லாமல் இருந்த நோயெதிர்ப்பு ஆற்றல், உடனே, அதிகரித்து, உடலின் பல்வேறு பாதிப்புகளைப் போக்கும். இதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பால், அடிக்கடி வரும் ஜலதோசம், ஜுரம் போன்ற பாதிப்புகள் நீங்கி, உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும். மிகவும் பலகீனமான உடல் ஆற்றல் உள்ளவர்கள், இந்த சிகிச்சையை, தினமும் மூன்றிலிருந்து, நான்கு முறைகள் வரை செய்துவர, நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த சிகிச்சையை இரவில் உறங்குமுன் ஒருமுறை செய்துவர, உடல் சோர்வு நீங்கி, நல்ல உறக்கம் வரும்.

அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலை நடத்திய ஒரு ஆய்வில், உறையும் குளிர்நிலையிலுள்ள ஐஸ் தண்ணீர், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுவாக்கும் முக்கிய ஹார்மோனான, நோர்ஃபைன்ஃபிரின் உற்பத்தியை தூண்டுகிறது, என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடலுக்கு நன்மைகள் செய்யும் பல தீர்வுகளை, அவை தருகின்றன. அவற்றை இனி காண்போம்.

தசைகளில் ஏற்படும் இறுக்கத்தை, வலிகளைப் போக்கும். ஐஸ் கட்டிகள் நிரப்பிய குளிர் நீரில் கால்களை, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரை நனைத்துவர, கைகளின் தசைகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து,வலிகள் குறைந்துவிடும். கை தசைகளின் வலிகள் மட்டுமன்றி, கால் தசைகளில் உள்ள வலி, முதுகு, இடுப்புதோள்பட்டை மற்றும் கழுத்து தசைகளில் ஏற்படும் வலிகள், பிடிப்பு போன்றவை குணமாகிவிடும்.

மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகளையும் சரிசெய்யும் ஆற்றல் மிக்கது, இந்த ஐஸ் தண்ணீர் சிகிச்சை. அதிக குளிர் தன்மைகள், சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, அதிக குளிர்மிக்க ஐஸ் தண்ணீர் சிகிச்சை மூலம், கால்களை ஐஸ் நீரில் சில வினாடிகள் நனைத்து எடுக்கும்போது, உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பாதிப்புகள் விலகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, மனம் புத்துணர்வடைகிறது. சருமத்தை பாதிப்புகளில் இருந்து காக்கிறது. கால்களை சில வினாடிகள் ஐஸ் தண்ணீரில் நனைக்கும் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், சருமத்தில் உள்ள வியர்வை நாள அடைப்புகள் மற்றும் மேல்தோலின் தளர்வுகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து, இரத்தம் உறைதல் போன்ற பாதிப்பிலிருந்து காக்கிறது.

கால்களை ஐஸ் தண்ணீர் நிரப்பிய தொட்டியில் வைத்து, சில வினாடிகளில் எடுத்துவிடும் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், தலைமுடிகள், பளபளப்பாகவும், மென்மையாகவும் விளங்கும். கால்களை நனைக்கும் ஐஸ் கட்டி தண்ணீர் சிகிச்சையின் மூலம், ஃபாலிசில்ஸ் எனும் தலைமுடிகளின் வேரை சூழ்ந்திருக்கும் செல்திசுக்களின் நுண்ணிய துளைகளை மூடச்செய்வதன் மூலம், முடிஉதிர்தல் கட்டுப்பட்டு, தலைமுடிகள் நன்கு செழித்து வளர்ந்து, பளபளப்பாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கின்றன. இதுபோல, உடலுக்கும், மனதுக்கும் அளவுகடந்த நன்மைகள் அளிக்கும், எளிய ஐஸ் தண்ணீர் சிகிச்சையை, நாம் வீடுகளிலேயே செய்து, நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, மூக்கடைப்பு, ஜலதோசம் உடல் தசை இறுக்கம் மற்றும் மன அழுத்த பாதிப்புகளைப் போக்கி, ஏராளமான நன்மைகளை அடைய முடியும்.

        -

ஸ்ராத்தம் 1008 வகையான காய்கறிகளுடன் செய்யவேண்டும


”ஸ்ராத்தம் 1008 வகையான காய்கறிகளுடன் செய்யவேண்டும்…”

காரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை. இதில் ஒன்றுதான் சிரார்த்தம் என்பது. சிரார்த்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும். சிரார்த்தம் என்பது முன்னொர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், வம்சத்திற்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் -- இதுவே சிரார்த்தம் என்பதற்கான வெளிப்படையான பொருள்.

தந்தையை நினைவுகூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான். இதை அவனுடைய மகன் பார்க்கிறான். ஓ... நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார். அப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்த அளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றும். இதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் - அது தவமாக இருந்தாலும் கூட - எந்தப் பயனும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிரார்த்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்….” பெரியவா.

ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு (திவஸம்) தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.

அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்” என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்? விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத்தெரியாதா என்ன ?. இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், “ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்” என்றார்.

வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்கவேண்டும். வஸிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.

ஸ்ராத்தச் சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.

விஸ்வாமித்திரர் கோபத்துடன் “என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?” என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ “நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, “இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!” என்றாள்.

விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப்போனார்.

அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம்:

காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்
பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
*पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते

"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008, ” என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே? ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்!*

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
#1 :
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses - Join whatsapp 9094047040

Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses - Join whatsapp 9094047040

Rupeedesk offers unique stock market training
Share Market courses in Chennai for people who are interested to trade independently and successfully.
              
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training


* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்  

* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி?

* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் 
   இருந்து பணம் சம்பாதியுங்கள்

* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!



* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

Stock Market Training - Chennai

Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Free Nifty Option Tips

Free Nifty Option Tips|Option Tips|Nifty Option Tips,Nifty Call Option,Nifty Put Option,Free Nifty Option tips ,Nifty Options Tips,Nifty Call Option and Nifty Put Option with 90% accuracy Free Stock and Nifty Tips, Live Option Market Quotes,Online Option Trading Tips,Stock,rupeedesk Option Tips, Prices,Nifty Option Quotes.(Contact: 9094047040/9841986753/ 044-24333577.

ருத்திராட்ச குளியல் !

ருத்திராட்ச குளியல் !


ருத்ராட்சக் குளியல் செய்து வருவதன் மூலமாகவும் ஈசனின் அருள் கடாட்சத்தை பெறலாம்.
தினமும் குளிக்கும் நீரில் இந்த ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, குளியலறைக்குள் புகுந்து கிழக்கு நோக்கி நிற்க வேண்டும். (நிற்க இயலாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்)
வாளி தண்ணீரில் புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும். சுருட்டியும் வைக்கலாம் . சுருட்டாமலும் வைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு வைத்துக் கொண்டு உங்களுக்குத் தெரிந்த சிவமந்திரம் ஒன்றை 12 முறை ஜபிக்க வேண்டும். ஜபித்துமுடித்தப் பின்னர் மீண்டும் தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்.
இதை பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும், துக்க வீடுகளுக்கு சென்று வந்த நாட்களிலும் கூட செய்யலாம்.
தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம்
தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை, சிவராத்திரி, திருவாதிரை, ப்ரதோஷ நாட்களிலும், அவரவர் ஜன்ம நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்.
ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்சக் குளியல் செய்யத் துவங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். (சில பல தடைகள் வந்தாலும் விட்டுவிட்டாவது 90 நாட்கள் நிறைவு செய்யலாம்)
இப்படிச் செய்து வருவதால், ஆத்ம பலம் அதிகரிக்கும். பிறர் நமக்கு எதிராக செய்த, செய்துவிட்ட, செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகளும் நம்மையும், நமது இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும்.
உணவு,உடை,இருப்பிடம்,காற்று,நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள் அதிகரித்துவருகின்றன. அதனால், நமது ஆன்மீக பலம் குறைந்துவருகின்றது. அதை ஈடுசெய்யக் கூடியதுதான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!
தினசரி வாழ்க்கையில் ப்ளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், நம் அனைவருக்கும் சராசரியைக் கடந்த சிற்றின்ப உணர்ச்சிகள் அதிகரித்துவிட்டன. அதைச் சமப்படுத்தும் செயல் தான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!