திதிகளின் தெய்வங்கள்

திதிகளின் தெய்வங்கள்
tithi-god-worship

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

சுக்லபட்சம் (வளர்பிறை)


1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை - பிரம்மா
3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
6. சஷ்டி - செவ்வாய்
7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி - காலபைரவர்
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - மகா விஷ்ணு
13. திரயோதசி - மன்மதன்
14. சதுர்த்தசி - காளி
15. பவுர்ணமி - லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

1. பிரதமை - துர்க்கை
2. துவதியை - வாயு
3. திரிதியை - அக்னி
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - நாகதேவதை
6. சஷ்டி - முருகன்
7. சப்தமி - சூரியன்
8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - சுக்ரன்
13. திரயோதசி - நந்தி
14. சதுர்த்தசி - ருத்ரர்
15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?
thiruvannamalai-arunachaleswarar-temple-girivalam


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

திருவண்ணாமலை கிரிவல வழிபாடு எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தர்களும் இதைத்தெரிந்து கொள்ள வேண்டும். இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பக்தர்களை பொறி வைத்து பிடித்து ஞானமும், முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. இந்த கிரிவலம் எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தர்களும் இதைத்தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார். இதன் பின்னணியில் அமைந்த புராண வரலாறு வருமாறு:


ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் கிரிவலம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மறைந்து போனது. சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் மட்டும் அங்கு அரூப வடிவில் கிரிவலம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற்று வந்தனர். இந்த நிலையில் மூவேந்தர்கள் ஆட்சியின்போது கிரிவலத்தின் மகிமையை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை இந்த உலகுக்கு பெற்று தந்த சிறப்பு ஒரு பாண்டிய மன்னனுக்கு கிடைத்தது.

அந்த பாண்டிய மன்னனின் பெயர் வஜ்ராங்கதன். ஒரு தடவை அவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். அப்போது அழகான புனுகுப் பூனையை கண்டான். வாசனையோடு திகழ்ந்த அந்த பூனையை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் அது அவனிடமிருந்து தப்பி ஓடியது. மன்னன் தனது குதிரையில் விடாமல் விரட்டினான். அந்த பூனையோ அருணாசலம் மலையை அடைந்தது.

என்றாலும் மன்னன் வஜ்ராங்கதன் தொடர்ந்து பூனையை விரட்டினான். அந்த பூனை திருவண்ணாமலை மலையை கிரிவலம் போல சுற்றி வந்தது. மலையை முழுமையாக சுற்றி முடித்ததும் அந்த பூனை ஒரு இடத்தில் கீழே விழுந்து இறந்தது. அந்த சமயத்தில் மன்னனை சுமந்து வந்த குதிரையும் கீழே விழுந்து உயிரை விட்டது. மன்னன் மட்டும் உயிர் தப்பினான். அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

குதிரையும், பூனையும் கந்தர்வர்களாக மாறி காட்சி அளித்தனர். அவர்கள் இருவரும் விண்ணுலகம் செல்ல தயார் ஆனார்கள். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் வஜ்ராங்கதன் அவர்கள் இருவரிடமும், “நீங்கள் யார்? எதற்காக இந்த திருவிளையாடல் நடக்கிறது” என்று கேட்டார். அப்போது அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தனர்....

“நாங்கள் இருவரும் வித்யாதரர்கள். ஒரு தடவை துர்வாச முனிவர் இருந்த வனத்துக்குள் சென்று அங்கிருந்த செடி-கொடிகளை நாங்கள் நாசமாக்கி விட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் இருவரையும் பூனையாகவும், குதிரையாகவும் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். பிறகு அவரே எங்களுக்கு சாப விமோசனத்திற்கான வழியையும் தெரிவித்தார்.

திருவண்ணாமலைக்கு சென்று வசியுங்கள். ஒரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் வருவான். அவன் மூலம் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நாங்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு வந்து வசித்து வந்தோம். நீங்கள் விரட்டியதால் நாங்கள் சிவபெருமானே மலையாக இருக்கும் இந்த புண்ணிய மலையை கிரிவலமாக வரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளோம்.

நீ இந்த மலையை நடந்து வராமல் குதிரையில் வந்ததால் உனக்கு இந்த கிரிவலத்திற்கான பலன் கிடைக்கவில்லை. உனக்கு அனைத்து செல்வமும் முக்தியும் வேண்டுமானால் இந்த மலையை நடந்து கிரிவலம் செய்ய வேண்டும். எங்களுக்கு முக்தி கிடைத்ததால் விடைபெறுகிறோம்” என்று கூறியபடி விண்ணுலகம் சென்று விட்டனர்.

அதன் பிறகே வஜ்ராங்கதன் மன்னனுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் ஈசனின் அருளைப் பெற்று அத்தனை சிறப்புகளையும் பெற முடியும் என்ற உண்மை தெரிய வந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் உடனடியாக மன்னர் பதவியில் இருந்து விலகினான். ஆட்சி பொறுப்பை தனது மகன் ரத்னாங்கத பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்து தினமும் கிரிவலம் செய்ய ஆரம்பித்தான். அதோடு நாட்டு மக்களையும் கிரிவலம் செல்ல வைத்தான். அதன் பிறகே திருவண்ணாமலை கிரிவலம் பார் புகழும் வகையில் பரவியது.

இதற்கிடையே சித்தர் பெருமக்களும் கிரிவலத்தின் சிறப்பை மக்களுக்கு உணர்த்தினார்கள். திருவண்ணாமலை மலை ஜோதி லிங்க வடிவமாகி பிறகு ஸ்ரீ சக்கர வடிவத்தில் அமைந்துள்ள உலகின் உன்னதமான மலை என்பதையும் அதை சுற்றி வந்தால் பிறவி பிணிகள் அனைத்தும் தீரும் என்பதையும் சாதாரண மனிதர்களிடம் சித்தர்கள் தெரிய வைத்தனர். இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று அருணாசல புராணம் உள்பட பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையை சுற்றி நடந்து வந்த சிவந்த பாதங்களை கண்டாலே நாலாவித பாவங்களும் காணாமல் போய்விடும். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவரது உடலில் பட்டாலே அவரை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரவேண்டும் என்று சொன்னாலே போதும்.... பிரம்மஹத்தி தோஷம் தீர்ந்து விடும். ஒரு அடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜ பதவியை பெறக்கூடிய யாகம் செய்த பலன் வரும். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்கும். நான்குஅடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோக பலன்கள் கிடைக்கும்.

கிரிவலம் வந்து சிவபெருமானிடம் பார்வதிதேவி பலன் பெற்றது ஒரு பவுர்ணமி தினமாகும். எனவே பவுர்ணமியில் கிரிவலம் செல்வது கூடுதல் பலன்களை தருவதாக கருதப்படுகிறது. பொதுவாக திருவண்ணாமலையில் எந்த தினத்திலும் எப்போது வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம். நேரம்-காலம் கிடையாது. நள்ளிரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் கிரிவலத்துக்கும் திருவண்ணாமலை மலையானது ஒவ்வொரு விதமாக காட்சி தரும். அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஆதி காலத்தில் திருவண்ணாமலையில் வருட பிறப்பு, மாத பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். பின்னர் அமாவாசைக்கு கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் சந்திரனின் முழு சக்தியும் பவுர்ணமி தினத்தன்றுதான் வெளிப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்ட பிறகு பவுர்ணமியில் கிரிவலம் செல்வது அதிகரித்துள்ளது. ஆனால் திருவண்ணாமலையை பொறுத்தவரை 24 மணி நேரமும் கிரிவலம் நடக்கிறது. மலையைச் சுற்றி, எப்போதும், யாராவது ஒருவர் கிரிவலம் சென்று கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

கிரிவல பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கம் ஆலயங்கள் உள்பட அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்தபடி வந்தால் கிரிவலத்தை முடிப்பதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகலாம்.

கிரிவலப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் தவிர மடங்கள், ஆசிரமங்கள், தரிசனப் பகுதிகள், சித்தர்களின் ஜீவ சமாதிகள் என பல்வேறு இடங்கள் உள்ளன. அடி அண்ணாமலை, இடுக்குப் பிள்ளையாரும் இருக்கிறார்கள். இப்படி கிரிவலப்பாதையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதாக இருந்தால் குறைந்தது 5 மணி நேரமாகி விடும்.

அப்படி இல்லாமல் கிரிவலத்தை மட்டும் மேற்கொண்டால் 3 மணி நேரத்தில் கிரிவலத்தை நிறைவு செய்து விடலாம். ஆனால் அதற்காக வேக வேகமாக கிரிவலப் பாதையில் நடக்க கூடாது.

பஸ்சை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்க பரக்க கிரிவலம் செல்லக்கூடாது. டி.வி. சீரியல் பற்றி பேசிக்கொண்டோ அல்லது ஊரில் யார் குடியைக் கெடுக்கலாம் என்று பேசிக் கொண்டோ அல்லது யார் பற்றியாவது புறம் பேசிக் கொண்டோ கிரிவலம் செல்லக்கூடாது. கிரிவலம் வருவது என்பது சூட்சுமமாக பல நன்மைகளை நமக்கு தரக்கூடியது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரிவல பாதையில் உள்ள நம் கண்களுக்கு தெரியாத சித்தர்கள் அனைவரும் நம்மை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நம்ப வேண்டும். இந்த பலன்களை எல்லாம் பெற வேண்டுமானால் மனம் ஒரே சிந்தனையில் ஈசனை மட்டும் நினைத்தபடி நமசிவாய என்று உதடுகள் உச்சரித்தபடி வேறு எந்த செயல்களிலும் ஈடுபடாமல் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, எந்த தினத்தில் நாம் கிரிவலம் செல்ல வேண்டும்? கிரிவலம் செல்லும் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்தெந்த இடங்களில் வணங்க வேண்டும்? எந்தெந்த இடங்களில் மலையை பார்த்து கும்பிட வேண்டும்? என்றெல்லாம் வரைமுறைகளும், ஐதீகங்களும் உள்ளன. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கிரிவலம் சென்று வந்தால்தான் நீங்கள் கிரிவலம் மேற்கொள்வதற்கான முழு பலன்களும் கிடைக்கும்.

திருவண்ணாமலை அஷ்டலிங்க வழிபாடுகள்

திருவண்ணாமலை அஷ்டலிங்க வழிபாடுகள்
thiruvannamalai-arunachaleswarar-temple-worship


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும்.

இந்திரலிங்கம் :

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும். கிரிவல பாதையை சுற்றி வரும்போது முதலில் இந்திரலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் தேவர்களின் தலைவன் இந்திரனால் வணங்கப்பட்டது. இந்திர லிங்கத்தை வழிபடுவதால் வீண் பழி வராது. அடிக்கடி தவறுகள் நடக்காமல் இருக்கும். இந்த லிங்கத்தை மனதார வணங்குவோருக்கு மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும். இக்கோவிலுக்கு அருகே இந்திர தீர்த்தம் உள்ளது.

 அக்னி லிங்கம் :

கிரிவல பாதையில் 2-வதாக அமைந்திருப்பது அக்னி லிங்க தலமாகும். பல யுகங்களாக திருவண்ணாமலையை அங்கபிரதட்சனம் செய்து வந்த மூன்று ருத்ர மூர்த்திகளின் திருமேனிகளும், ஒரு இடத்தில் வரும்போது குளுமை பெற்றனர். அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சுயம்புலிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தார். இந்த இடமே அக்னிலிங்க தலமாக விளங்கி வருகிறது. அக்னி லிங்கத்தை வழிபடுபவர்கள் கற்பு, சத்தியம், தர்மம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி வளமான வாழ்வை பெற இறைவன் அருள் புரிவார்.

எமலிங்கம் :

கிரிவல பாதையில் 3-வதாக இருப்பது எமலிங்க தலமாகும். முற்காலத்தில் எமதர்மன் அண்ணாமலையாரை வணங்கி அவரது அருள் பெறுவதற்காக திருவண்ணாமலையை அங்க பிரதட்சணம் செய்தார். அப்போது அவரது பாதம் பட்ட இடமெல்லாம் தாமரை பூக்கள் மலர்ந்தது. அந்த இடத்திலேயே இறைவன் ஜோதிமயமாய் லிங்க வடிவில் தோன்றி அருள் புரிந்தார். இதுவே எமலிங்கத்தின் வரலாறாகும். எமலிங்கத்தை வழிபட்டால் எமபயம் இன்றி நிம்மதியான வாழ்க்கையை பெறலாம். நீதி தவறாமல் நடக்கலாம்.



நிருதி லிங்கம் :

கிரிவல பாதையில் 4-வதாக அமைந்திருப்பது நிருதி லிங்க தலமாகும். நிருதீஸ்வரர் பல யுகங்களாக அண்ணாமலையாரின் அருள் வேண்டி வணங்கி வந்தார். அவர் கிரிவலமும் சுற்றி வந்தார். ஒருநாள் நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் சத்தமும், சலங்கை ஒலியின் சத்தமும் கேட்டது. இதைத் தொடர்ந்து சத்தம் வந்த இடத்தை நிருதீஸ்வரர் தேடி சென்றார். அந்த இடத்திலிருந்து அருணகிரியை வணங்கினார். அப்போது அவர் எதிரே பிரதிரூபலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை நிருதீஸ்வரர் வணங்கி வழிபட்டார். இதுவே நிருதிலிங்கமாகும். நிருதீஸ்வரர் லிங்கத்தை பூஜித்து அனாதை குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி ஆகியவை அளித்தல் குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

வருண லிங்கம் :

இது வருண பகவான் வழிபட்டதால் உருவான லிங்கமாகும். கிரிவல பாதையில் 5-வதாக அமைந்திருப்பது வருணலிங்க தலமாகும். அண்ணாமலையாரின் அருளை பெறுவதற்காக வருண பகவான் தனது கால் முட்டியால் மலையை பிரதட்சணம் செய்தார். ஒற்றை காலால் தத்தியவாறு கிரிவலம் வந்தார். அப்போது சூரியலிங்கத்தின் அருகே மிகப்பெரிய நீருற்று காணப்பட்டது. புண்ணியம் தரும் அந்த நீரை தனது உடலில் தெளித்துக் கொண்ட வருணபகவான் அண்ணாமலையாரை வணங்கினார். அப்போது அவரின் அருகில் ஒளிமயமான அழகிய லிங்கம் ஒன்று தோன்றியது. இதுவே வருணலிங்கமாக வழிபடப்பட்டு வருகிறது. வருணலிங்கத்தை வழிபடுவோருக்கு தண்ணீரால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சிறுநீரக வியாதிகள், சர்க்கரை மற்றும் நீர் சம்பந்தப்பட்ட நோய்களும் இந்த லிங்கத்தை பூஜிப்பவருக்கு நீங்கி விடும்.

வாயு லிங்கம் :

திருவண்ணாமலை கிரிவல பாதையில் 6-வதாக அமைந்திருப்பது வாயுலிங்க தலமாகும். வாயு பகவான் கழுகுமலையில் சுவாசத்தை நிலை நிறுத்தி கிரிவலம் வந்தபோது அடி அண்ணாமலை அருகே மிகவுத் சுகந்தமான நறுமணம் வீசுவதை கண்டார். அந்த இடத்திற்கு சென்றபோது பஞ்சகிருத்திகா பூக்களின் நடுவில் சுயம்பு லிங்கமாய் சிவபெருமான் தோன்றி அருள்புரிந்தார். அவரை வாயு பகவான் வழிபட்டு பூஜைகள் நடத்தினார். இதுவே வாயு லிங்கத்தின் வரலாறாகும். வாயு லிங்கத்தை தரிசிப்பவருக்கு சுவாசம் இருதய நோய் போன்றவை அண்டாது.

குபேர லிங்கம் :

குபேர பகவான் தியானத்தில் ஆழ்ந்த நிலையில் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய வண்ணம் குதிகால் நடையுடன் திருவண்ணாமலையை வலம் வந்தார். பல யுகங்களாக கிரிவலம் வந்தபின் அவருக்கு அருணாசலேஸ்வரர் காட்சி அளித்து அருள் புரிந்ததார். அந்த இடத்தில் தோன்றிய லிங்கத்தை குபேரன் வழிபட்டார். இது குபேர லிங்கமாகும். குபேர லிங்கத்தை வழிபடுவோருக்கு செல்வம் கொழிக்கும். மேலும் முறையற்ற வழிகளில் பணத்தை சம்பாதித்தவர்களுக்கு பாவங்கள் நீங்கும்.

ஈசான்ய லிங்கம் :

திருவண்ணாமலை கிரிவல பாதையில் 8-வதாக அமைந்திருப்பது ஈசான்ய லிங்க தலமாகும். பினுகியருத்திரர் என்ற தேவர் கண்களை மூடியவாறு பல யுகங்களாக திருவண்ணா மலையை வலம் வந்தார். அப்படி ஒருநாள் அவர் கிரிவலம் வந்தபோது ஓர் இடத்தில் யாரோ ஒருவர் குலுங்கி குலுங்கி ஆடும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். அங்கு அதிகார நந்தீஸ்வரர் அருணா சலேஸ்வரரை வலம் வந்து ஆனந்த கூத்தாடும் காட்சியைக் கண்டார். இந்த இடத்தின் அருகே அவுஷத தீர்த்தீஸ்வரராக லிங்க வடிவில் சிவபெருமான் தோன்றினார். இதுவே ஈசான்ய லிங்கமாகும். இத்தலத்தை பினுகியருத்திரர் பூஜித்து வழிபட்டு வந்தார்.

ஈசான்ய லிங்கத்தை வழிபடுவதால் ஏழரை நாட்டு சனீஸ்வரரின் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும். 

ப்ரோக்கோலி சூப்

ப்ரோக்கோலி சூப்
Broccoli-Soup.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இன்று ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - ஒரு கப்,

 காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப்,
வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - ஒன்று,
தைம் இலை (Thyme leaf) - சிறிதளவு,
கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு,
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,


செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப்ரோக்கோலி நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.

கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

இதனுடன் தைம் இலை (Thyme leaf) சேர்த்து, நன்கு வதங்கியவுடன் சோள மாவு சேர்த்து வறுக்கவும்.

பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.

பிறகு ப்ரோக்கோலி சேர்த்து வேகவிடவும்.

மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும்.

வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.

சத்து நிறைந்த ப்ரோக்கோலி சூப் ரெடி.


பன்னீர் உருண்டை

பன்னீர் உருண்டை
Paneer-balls.
குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பன்னீர் உருண்டை


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இந்த பன்னீர் உருண்டை செய்து கொடுத்து அசத்துங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 1 கப்

 பிரட்தூள் - 1/2கப்
உருளைக்கிழங்கு - 1 சிறியது
பெரிய வெங்காயம்  - 1 சிறியது
புதினா இலை  - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள்  - 3/4 தேக்கரண்டி
சாட் மசாலா  - 1/4 தேக்கரண்டி
மாங்காய் தூள்  - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு  - 2 தேக்கரண்டி
சோள  மாவு  - 1மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

பன்னீரை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம். ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.

அதனுடன் துருவிய பன்னீர், கொத்துமல்லி, புதினா, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகாய் தூள், சாட் மசாலா, பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுற்றிலும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொரித்து எடுக்கவும்.

சுவையான பன்னீர் உருண்டை தயார்.

குறிப்பு : உருளைக்கிழங்கை நிறைய வேண்டாம், அது சுவையை மாற்றிவிடும்.

பள்ளிக்கு செல்ல குழந்தைகளுக்கு பயம் வரக்காரணம்

பள்ளிக்கு செல்ல குழந்தைகளுக்கு பயம் வரக்காரணம்
Children-are-afraid-to-go-to-school.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தையும், அதை சரிசெய்யும் வழிமுறையையும் பார்க்கலாம்.

பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.


பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.

சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குழந்தைகளை பண்புடன் வளர்க்க பெற்றோர்களுக்கான ஆலோசனை

குழந்தைகளை பண்புடன் வளர்க்க பெற்றோர்களுக்கான ஆலோசனை
        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளைப் பண்புடனும் அறத்துடனும் வளர்த்தெடுக்க, பெற்றோர்களுக்கு அவசியமான சில ஆலோசனைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

* குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்துவைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.

* குழந்தைகளின் ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்ஸில் எக்ஸ்ட்ரா இரண்டு பிஸ்கட்கள், சாக்லேட்கள் வைத்துவிட்டு, ‘உன் ஃப்ரெண்டு யாராச்சும் கேட்டா ஷேர் பண்ணு’ என்று சொல்லி அனுப்புங்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப்பண்புடன் விளங்க, இந்தச் சிறு தொடக்கம் நிச்சயம் கைகொடுக்கும்.

* மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன் அவர்களுடைய சேமிப்புப் பணத்தை எடுத்தே செலவு செய்ய அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருள்களையெல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கித் தரச் சொல்லும் பழக்கம் அவர்களை அண்டாது.

* குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை நண்பர்களாக்குவது அவசியம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, ஒரு குட்டி ஜீனியஸ் உருவாக ஆரம்பிப்பான்/ஆரம்பிப்பாள்.

* இரண்டு வயதுக்குள், அவர்களுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது, இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என்று ஆரோக்கிய விஷயங்களையும் வளர வளரக் கற்றுக்கொடுங்கள்.

* 10 வயதுக் குழந்தைகளுக்கு, ‘ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்’ என்று வலியுறுத்துங்கள். அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத ஒரு விஷயம் பற்றிய பேச்சு வந்தால், ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களைக் கவனித்துக் கேட்க அறிவுறுத்துங்கள்.

* உணவு உண்ணும்போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்துங்கள். பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், ஃபோர்க், டவல் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ‘டேபிள் நாகரிகம்’ பற்றிக் கற்றுக்கொடுங்கள்.

* மற்றவர்களின் அறைக்குச் செல்லும் முன்பும், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியைக் கேட்க வேண்டும் என்ற நாகரிகத்தைச் சொல்லிக்கொடுங்கள்.

* மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் விதையுங்கள். அழகு, அறிவு, பொருளாதாரம் என எதன் அடிப்படையிலும் அடுத்தவர்களின் மனது புண்படும்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவது தவறு என்பதைச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்
Home-for-children-development

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.

தற்போதைய காலகட்ட வாழ்க்கை முறைகளில் பணியிட மாற்றம், வாடகை மற்றும் சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலரும் குடியிருக்கும் வீடுகளை மாற்றம் செய்வதுண்டு. அந்த நிலையில், வளரும் குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிம்மதியான வீட்டு சூழல்


அதாவது, ஒரே இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு நிம்மதியான வீட்டு சூழலில் பெற்றோருடன் இணைந்து வசிப்பதால் திடமானவர்களாக வளர்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. அந்த நிலையில் படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.

குழந்தைகள் மன நலம்

நல்ல நட்பு உள்ளிட்ட சுற்றுப்புற தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதிலும் குழந்தைகள் தடுமாறுகிறார்கள். அதன் காரணமாக வீடு மாறுவது அல்லது புதியதாக வீடு வாங்கி குடியேறுவது போன்ற நிலைகளில் சிறு குழந்தைகளின் மன நலனுக்கு ஏற்ற சூழலை கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது.

சூழல் அறிமுகம்

வாடகை வீட்டிலிருந்து புதுவீடு வாங்க முடிவு செய்யும் நிலையில் குழந்தைகளின் படிப்பு, நட்பு வட்டம், செயல்திறன் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் கொள்வது பெற்றோர்களுக்கு அவசியமானது. அவ்வாறு வீடு வாங்கும் நிலையில் குழந்தைகளின் மனதில் புது வீடு பற்றிய ஆவலை ஏற்படுத்தி, அங்குள்ள சூழலுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பழக்கம் ஏற்படுத்தி பின்னர் குடியேறுவதும் ஒரு வகையில் நல்லது.

படிப்பு மற்றும் விளையாட்டு

வாடகை வீடு அல்லது சொந்த வீட்டில் குடியேறும்போது அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களது விளையாட்டு மற்றும் வீட்டுக்கு அருகில் பள்ளி ஆகிய விஷயங்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.



அமரும் சேர்கள்

குறிப்பாக, வீடுகளில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலி, மேசை, ஊஞ்சல் போன்றவற்றை வாங்குவது அவசியமானது. வழக்கமான பர்னிச்சர் வகைகளை விடவும் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமாக பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

குழந்தைகள் ‘டைனிங்’

பொதுவாக, வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் பெரியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனால், குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்களை பயன்படுத்தலாம். அவை, உயரம் கூடுதலாகவும், அதன் பகுதி குறுகலாகவும் இருப்பதால் அதில் உட்கார்ந்து சாப்பிடும் குழந்தைகள் டேபிளில் வசதியாக சாப்பிடுவார்கள்.

படிப்பு மேசை

பொதுவாக, குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக படிப்பு மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை, சேரில் ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்து கொள்வது போன்ற எளிய மாடல்கள் அவர்களுக்கு ஏற்றது.

குட்டி ஊஞ்சல்

சிறு ஊஞ்சல் அல்லது சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டியான சைஸ் கொண்ட பீன் பேக், பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு குஷியாக இருக்கும். குழந்தைகள் உறங்க வசதியான பங்கர் கட்டில்களும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்

கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்
Foods-that-prevent-cervical-cancer.

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க உதவும்.

* உலகில் ஆயிரக்கணக்கான காளான் வகைகள் உள்ளது. பொதுவாகவே காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் குறிப்பாக ஷைடிக் காளான்கள் பல நன்மைகளை வழங்கக்கூடியது. இதில் உள்ள பீட்டா க்ளுக்கோன் பொருளான லென்டினான் குறிப்பிட்ட சில புற்றுநோய்களை தடுக்கக்கூடும். ஜப்பானில் ஷைடிக் காளான்களை கர்ப்பப்பை புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மீதான ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

* சோயா மில்கையும், சோயா பொருட்களையும் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கான அடுத்த நிலையாகும். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சோயா பொருட்களை பயன்படுத்துவது அதன் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க பயன்படும். ஐசோபவோன்கள் என்னும் சோயாபொருட்களில் உள்ள மூலப்பொருளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், செல்கள் பரவுவதையும் தடுக்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க சோயாபொருட்கள் பயன்படும்.


* பொதுவாக புற்றுநோய்கள் உங்கள் குடல், புரோஸ்ட்ரேட், மற்றும் அனைத்து உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடும். கர்ப்பபை புற்றுநோயால் ஏற்படும் முக்கியமான கோளாறுகள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும். இந்த இரண்டு நிலைகளுமே மிகவும் ஆபத்தனதாகும், இதனை சரிசெய்ய அதிக நீர் குடிக்க வேண்டியது அவசியம். அதிக நீர் குடிப்பது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.



* வெங்காயம் என்பது மிகவும் பொதுவான அதேசமயம் மிகவும் உபயோகமான காய்கறியாகும். உண்மையில் வெங்காயத்தில் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய பொருட்கள் நிறைய உள்ளது, கார்செடின், அப்பிஜெனின் மற்றும் ஆந்தோசியயின்கள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்க இயலும். சிவப்பு வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும்.

* இஞ்சி பழங்காலம் முதலே பல இயற்கை வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. பல மோசமான நோய்களுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக செயல்படக்கூடும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஷோகள் போன்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இஞ்சி நீண்ட காலமாக புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவது ஒமேகா 3 அமிலங்களை பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஒமேகா 3 அமிலம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த ஒமேகா -3 அமிலம் அதிலுள்ள ஆண்டி-ஆன்ஜியோஜெனிக் பண்புகளால் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது. இதன் மூலம் ஒமேகா 3 அமிலம் புற்றுநோய் செல்களுக்கு கிடைக்கும் இரத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

* கிரீன் டீயில் அதிகளவு ஆன்டிஆக்சிடண்ட்கள் உள்ளது, இதிலுள்ள கேட்டச்சினின் மற்றும் எபிகேட்டச்சின்கள் இதனை புற்றுநோயை தடுக்கவும், அதற்கு எதிராக செயல்படவும் சிறந்த பொருளாக மாற்றியுள்ளது. கேட்டச்சினின் புற்றுநோய் செல்கள் உங்கள் உடலில் பரவுவதை தடுக்கும், எனவே உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் இதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

பொடுகு தொல்லையை எளிதில் விரட்டும்

பொடுகு தொல்லையை எளிதில் விரட்டும் குறிப்புகள்


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பொடுகு தொல்லை நிரந்தரமாக நீங்க வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எளிய வழிமுறைகள் பின்பற்றி வந்தால் படிப்படியாக நல்ல பலனை காணலாம்.

கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.


துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது. வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.

காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.

வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.  

பந்து நாற்காலி

பந்து நாற்காலி
Ball-chair-for-health.
ஆரோக்கியத்திற்கு பந்து நாற்காலி


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம்.

அலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க வேலைக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலையை விரைவாக செய்து முடிக்கவும் தூண்டுகோலாக அமையும். நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.

அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். அது சமநிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு பலத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் பந்து நாற்காலிக்கு பங்கு இருக்கிறது. ஒரு மணி நேரம் அதில் அமர்ந்திருந்தால் 112 முதல் 165 கலோரிகள் செலவாகும்.


அதுபோல் நின்று கொண்டு வேலை பார்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். அதன் மூலம் அதிக கலோரிகள் செலவாக வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அத்துடன் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் 200 படிக்கட்டுகள் ஏறி இறங்குவது நல்லது.

அதன் மூலம் 100 கலோரி செலவாகும். அலுவலக வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது சில நிமிடங்கள் தியானம் செய்தும் வரலாம். சுவாச பயிற்சிகள் மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். யோகாசனமும் செய்து வரலாம். அது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கி மனதை இலகுவாக்கும். சில நிமிடங்கள் செலவிட்டாலே உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும். அதன் மூலம் பார்க்கும் வேலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்
kovakkai-Health-benefits.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.

கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும். கோவைக்காயை மலிவான விலைக்கு கிடைக்கும். கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.


கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. மேலும் இரத்த சர்க்கரையை குணப்படுத்த வல்லது.

கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.

கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.

சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

நிறையப் பேர் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகும்.

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்குமே.

ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரவையில் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்ககூடாது. 

கம்ப்யூட்டர் கீபோர்டும் - கிருமிகளும்

கம்ப்யூட்டர் கீபோர்டும் - கிருமிகளும்
Computer-keyboards-germs

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்...?

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படி செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளை கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று நினைக்கலாம்.

ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணை கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன. தனிநபர் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே, கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதும் அமைகிறது.



பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும், தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரைப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் எளிதாக தொற்ற வாய்ப்பாகிவிடும்.

நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும், மவுசையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்புடன் வேலை செய்பவர்களும் உள்ளனர்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்கு களையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றை துடைத்தெடுக்கலாம்.

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.



‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.

‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.

‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.

‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.

கணுக்கால் - கால்களில் வீக்கம் உள்ளதா?

கணுக்கால் - கால்களில் வீக்கம் உள்ளதா?


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது பாதங்களிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படுகின்றது. இதற்கான சில பொது காரணங்களை இங்கு பார்ப்போம்.

கணுக்காலிலும், காலிலும் வீக்கம் என்பது அசவுகர்யமாக இருக்கும். கவலை அளிக்கும். இதற்கு பல முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆனால் சில சாதாரண காரணங்களும் இருக்கக் கூடும். வெகு நேரம் நிற்க நேர்ந்தால் கூட இந்த வீக்கம் ஏற்படும். பாதமும் கணுக்காலும் கீழ் கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது ஏற்படுகின்றது. அதில் சில பொதுவான காரணங்களை கீழே பார்ப்போம்.

* பலருக்கு அதிக நேரம் நின்று கொண்டே பார்க்க வேண்டிய வேலை இருக்கும். கால்களை நகர்த்தாது, அசைக்காது, நடக்காது தொடர்ந்து ஓரிடத்தில் நின்று கொண்டே வேலை பார்க்கும் பொழுது கால்களில் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகின்றது. இதனால் பாதம், கணுக்கால் இவற்றில் நீர் தேக்கம் ஏற்படுகின்றது.


அதே போன்று கால்களை வெகு நேரம் தொங்க போட்டவாறு உட்காருபவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. 30 நிமிடங்களுக்கொருமுறை 5 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும். இதனை முறையாக செய்யாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும்.

* இறுக்கமாக அணிவதால் கால்களில் கொப்பளம் ஆகுவது மட்டுமல்ல கணுக்காலில் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இறுக்கமான ஷீக்களை அணிவதனை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

* அதிகம் உப்பு உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நீர்தேக்கம் இருக்கும். இது பாதம் கணுக்கால் மட்டுமல்ல, உடல் முழுவதுமே வீக்கத்தினை உண்டாக்கும். இதுபோன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* அதிக எடை உடலில் கூடும் பொழுது உடல் இந்த எடையினைத் தாங்க கூடுதல் உழைப்பினைத் தர வேண்டும். கால், பாதங்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதால் காலில் வீக்கம் ஏற்படலாம். இத்தகையோர் தகுந்த உணவு முறை அறிவுறுத்தலின் படி முயற்சித்து எடையை குறைக்க வேண்டும். முறையான உடல் பயிற்சியினையும் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்திலும் கால், பாதத்தில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் மருத்துவ ஆலோசனையை முறையாய் பின்பற்ற வேண்டும்.

* கணுக்கால், கால் வீக்கம் என்பது இருதய பாதிப்பினாலும், வலுவிழந்த இருதய தசைகள் காரணமாகவும் ஏற்படலாம். சோர்வு, மூச்சிறைப்பு, இருமல், எடை கூடுதல், அடிக்கடி சிறுநீர் செல்லுதல் போன்ற அறிகுறிகளுடன் கணுக்கால், பாத வீக்கமும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* எலும்பு முறிவு, மூட்டு முறிவு போன்றவை ஏற்பட்டால் வீக்கம் இருக்கவே செய்யும். மருத்துவ சிகிச்சையே இதற்குத் தீர்வு.

* பாக்டீரியா, பூஞ்ஞை பாதிப்புகளும் கணுக்கால், பாதத்தில் இருந்தால் வீக்கம் இருக்கும். மருத்துவ சிகிச்சை அவசியம்.

* காரில், ரயிலில், விமானத்தில் வெகு நேரம் காலை தொங்க போட்டுக் கொண்டு செல்லும் பொழுது கால் சிறிது வீங்கலாம். இது பின்னர் எழுந்து நடக்கும் பொழுது தானே சரியாகி விடும். அப்படி இல்லையெனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.