பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க

பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க!இய‌ற்கை வைத்தியம்!!

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும்.
ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம்.
பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.
பனை வெல்லம்
பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்..
குப்பைமேனி இலை
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.
குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.
ஊமத்தம் இலை
பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு
வைத்தியங்கள் !!!

lஅனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.
நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும்.
குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.
1.வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.
மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.
2.துளசி :
துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.
3.குளிர்ச்சியான பால் :
பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
4.சோம்பு :
இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
5.சீரகம் :
சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.
அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.
6.கிராம்பு :
இது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.
இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.
7.ஏலக்காய் :
சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.
இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
8.புதினா :
புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
9.இஞ்சி :
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.
வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.
10.நெல்லிக்காய் :
இதில் அதிகளவு வைட்டமின் `சி’ உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்

பொடுகினை அழிக்க

பொடுகினை அழிக்க.....!!!

*தேங்காய் பால் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி

வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

*பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

* 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.

*ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.

*பொடுகு பிரச்சனைக்கு பூண்டு, எலுமிச்சை சிறந்த பலனைத் தரும். எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

* வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்

இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம்

சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம்!!

சளி மருந்து

தேவையானவை:
கண்டங்கத்தரி பொடி - 100 கிராம்

தூதுவளை பொடி - 100 கிராம்

துளசி பொடி - 100 கிராம்
செய்முறை:

இந்த மூன்று பொடிகளையும் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்

இருமல் சளிக்கு தினம் காலை மாலையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1/2 ஸ்பூன் பொடியில் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும்
நாட்டு மருந்து கடைகளில் அல்லது சூப்பர் மார்கெட்டுகளில் கூட இந்த மூன்று பொடிகளும் கிடைக்கிறது..மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே இருமல், சளி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.

எங்க காலத்துல நாள் கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு ‘தூரத்துக்கு நாள்’ வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா?! இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது! இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

சி ல சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!

கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும்.

அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும். 

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
ஊளைச் சதையால் சங்கடப்படுகிறீர்களா?

கவலையை துரத்துங்கள்!


இ ப்பல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம்னா, அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு என்னால ஒரு வைத்தியம் சொல்ல முடியும்.

அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாள்லருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை யில வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.

இன்னொரு வைத்தியமும் இருக்கு! இப்ப பசும் மஞ்சள் கிடைக்கிற சீசன் இல்லையா?! அந்தப் பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்கள்ல காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.

உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாகறதுல பிரச்னை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாள்லயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்

பெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக்க

பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக்க....!

பாட்டி வைத்தியம்

பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை தாக்குப் பிடிப்பதற்கான பலத்தைக் கொடுக்குது. இந்த சமயத்துல முழு உளுந்துல செஞ்ச பலகாரங்களை நிறைய சாப்பிடக் கொடுக்கணும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக் காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி செஞ்சு கொடுப்பாங்க!

இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!
சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா?
ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு, வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும். அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும். ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே ‘எந்திரத்துல’ பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).
அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும். இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு, பாகு காய்ச்சிக்கணும்.

களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய் ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும். கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா, அவ்வளவு ருசியா இருக்கும்.

நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.
அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப் போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்!

பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா

பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா ?


பெ ரும்பாலும், இந்த காலத்துல பெண்குழந்தைங்க பத்து வயசிலயே ‘பெரியவ’ளாகிடுதுங்க. போஷாக்கான சாப்பாடுனு ஆரம்பிச்சு இதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதேநேரம், பதினாறு வயசு ஆகியும் ‘பெரியவ’ளாகாம இருக்கறவங்களும் உண்டு.

பதினாறு வயசை தாண்டியும் அந்தப் பொண்ணு வயசுக்கு வரலைன்னா, ஏதோ பிரச்னைனு அர்த்தம். கைவைத்தியமா சில விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, அதுக்கும் பலன் கிடைக்கலேன்னா உடனே மகப்பேறு டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறதுதான் உசிதம்.

கைவைத்தியம் என்னனு சொல்றேன், கேட்டுக்குங்க!
பெண்குழந்தை வளர்த்தியில்லாம போய், அதன் காரணமா பருவம் அடையாம இருந்தா, வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. உடனே கைமேல பலன் கிடைக்கும்.

வெந்தய லேகியம் எப்படி பண்றதுனு கேக்கறீங்களா?

ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, ராத்திரி கொஞ்சம் தண்ணில ஊறப் போட்டுடுங்க. மறுநாள் காலைல, ஊறின அந்த வெந்தயத்தை அம்மில (அம்மி இல்லேனா மிக்ஸில அரைச்சுக்கலாம். பாதகமில்லே. ஆனா, கூடுமானவரை மிக்ஸியை தவிர்க்கறது நல்லது. மருந்து இடிக்கற சின்ன சைஸ் கல்லுரலை இப்பல்லாம் வண்டில போட்டுக்கிட்டு வந்து விக்கறாங்களே... அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்களேன்) அரைச்சு, விழுதா எடுத்துக்கணும். இந்த விழுது எவ்வளவு இருக்கோ... அதே எடையளவுக்கு வெண்ணெயும், தித்திப்புக்கு தகுந்த மாதிரி கல்கண்டும் சேர்த்துப் போட்டு வாணலில வச்சு கிளறுங்க. இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் சேர்த்துக்கணும்.
வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்துல லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்க. லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தா, சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
வத்தலும் தொத்தலுமா இருக்கற பெரியவங்ககூட இந்த வெந்தய லேகியத்தை சாப்பிடலாம். உடம்பு பூரிக்கும்! 

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது..!!!

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
காலையில் முன் எழுந்திரு த்தல்.
எப்போதும் சிரித்த முகம்.
நேரம் பாராது உபசரித்தல்.
மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
அதிகாரம் பணணக் கூடாது.
குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
கணவனை சந்தேகப்படக் கூடாது.
குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலி ருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்த மான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

=========

க‌ணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது ...!!!

அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
மனது புண்படும்படி பேசக் கூடாது.
கோபப்படக்கூடாது.
சாப்பாட்டில் குறைசொல்லக் கூடாது
பலர் முன் திட்டக்கூடாது.
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
ஒளிவு மறைவு கூடாது.
மனைவியை நம்ப வேண்டும்.
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வேண்டியவைகள் எவை?

திருமணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வேண்டியவைகள் எவை?


திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும். சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது, நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது?

என்ன என்ன செய்ய வேண்டும்:-

* முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

* மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல, மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.

* வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள், புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.

* சமையல் செய்யும் போது, மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு, தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறுமருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.

* ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார் அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள் சம்மதிக்கலாம்.

* புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது நம்பிக்கை வரும்.

* கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள், திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய் தந்தையருக்கும் பகைமை வளரக் காரணமாகிவிடும்.

* புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.

* அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.

* பிறந்த வீட்டில் எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.

* ஆண்டுக்கு ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

* புகுந்த வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கும்.

* விட்டுக்கொடுக்கும் மனதுயாரிடம் உள்ளதோ அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.

பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ்

பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ்;!!!

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’

“வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் 

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம் !

கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்
திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும். மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும் தரிசனம் செய்யவும்.

பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும்.

சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும்.

இத்தகையோர் வியாழக்கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் சொல்லி பிஸ்தா பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளித்து வந்தால் அவசரமாக எடுத்த முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வழி பிறக்கும். 

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும்

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் !

உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் .

பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் .

திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக்தர்கள் உரக்க பேசாமலும் ,யாருக்கும் இடையூறு செய்யாமலும் அமைதியாக "சிவாய நமஹ" என்று சொல்லி கிரிவலம் செல்ல நாம் கிரிவலம் செல்வதன் உண்மையான பலன் ஏற்படும் .

திருவண்ணாமலையை( thiruvannamalai) கிரிவலம் செல்லும் போது ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிர் நேரே கயிலாயத்திற்கு செல்லும். அப்படிச்செல்லும் போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிப்பார் என்றும் ,சூரியன் கையில் விளக்கேற்றி வருவார் இந்திரன் மலர் தூவுவார் ,குபேரன் பணிந்து வரவேற்பார் என்று அருணாசலீஸ்வரர் ஸ்தல புராணம் இயம்புகிறது.

திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள் :

ஞாயிறுக்கிழமே - சிவபதம்
திங்கள் கிழமை உலகாளும் வல்லமைகிட்டும்
செவ்வாய்கிழமை - கடன் ,ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில்
இருந்து விடுதலை கிட்டும்

புதன் - கலைகளில் தேர்ச்சி
வியாழக்கிழமை- ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும்
வெள்ளிக்கிழமை - விஷ்ணுபதம் கிட்டும்
சனிக்கிழமை - நவகிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும் .

தீபத் திருவிழா திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.7 அடி உயரமுடைய செப்புக்கொப்பரையில் 3000 கிலோ நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் காடா துணியால் 10நாட்களுக்கு தொடர்ந்து கார்த்திகை தீபம் எரிந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும் .
மலையே சிவனாக ,நினைத்தாலே முக்தி தருகின்ற அரிய சிறப்புகளை உடைய சிவபெருமானை கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தையும் தரிசித்து எல்லா நலமும் வளமும் பெறுங்கள் .

ஓம் சிவாய நமஹ

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்..!!!


கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக… இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

ஹேர் ஆயில் தயாரிப்பு

காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு



‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களைபயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை பத்மாவதி.

ஹேர்ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். . வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்றதொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது. எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்துவிடலாம். 

அருகம்புல் - தீராத நோய்களை தீர்க்கும்

தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல் - இயற்கை மருத்துவம்

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம்.

அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு  மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.

அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.🍁🍃🍂🌾🍁🍂🌾🍁🍃🍂🌾

மூட்டுவலி போக்கும் இயற்கை வைத்தியம்

மூட்டுவலி போக்கும் இயற்கை வைத்தியம் :-

• சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.

• கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.

• முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

• வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

• நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

• நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

• கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

• அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

• வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.

• கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.

• பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

• புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம் .....!!!

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஸ்ரீ சக்கரம் தான் அவர் பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஸ்ரீ சக்கரம் என்றே தெரியும். UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்

கொடி மர தத்துவம்.!

கொடி மர தத்துவம்.!

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.
அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.
கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.
அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.
அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.
கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.
ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?
அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
எப்படி தெரியுமா?
கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.
இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.
நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.
கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.
அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?


மலையத்துவஜன் மகளாகப் பிறந்து பட்டத்தரசியான மீனாட்சி, ஒரே குடையின் கீழ்உலகத்தைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டாள். சாதாரண அரசர்களே தங்களைச் சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடும் போது, சர்வலோக நாயகியான மீனாட்சி, மூவுலகங்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சித்ததில் வியப்பேதும் இல்லையே! அவள் என்ன சாதாரண ராஜாக்களைப் போல் நாடுபிடித்து, தான் சம்பாதிக்கவா போருக்கு சென்றாள்? உலக உயிர்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம்
அவர்களின் ஆணவத்தை அடக்கி நெறிப்படுத்தவே திக்விஜயம் சென்றாள். இந்த உலகம் தன்னுடையது என்பது போல் ஆட்டம் போடும் ஆணவக்காரர்களின் கொட்டத்தையும் அடக்க சென்றாள்.

மீனாட்சியம்மை பிறந்தபோது அவளுக்கு மூன்று மார்புகள் இருந்தன. பெற்றவர்கள் வருத்தம் அடைந்தனர். இயல்புக்கு மாறாக பிறந்துள்ள இவளை யார் திருமணம் செய்வார்கள் என்று யோசித்தார்கள். ஆனால் அம்பிகையோ காரிய காரணத்துடன் தனக்கு மூன்று தனங்களை வருவித்துக் கொண்டாள். சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே! அது ஒரு காரணம். அவர் வழக்கமான கண்களுடன்
நெற்றியிலுள்ள கண்ணாலும் ஜீவன்களை கண்காணிக்கிறார். கோபம் வரும் போது வெப்பத்தை உமிழ்கிறார். இதனால் ஜீவன்கள் நடுங்குகின்றன. தந்தை கண்டிப்புக்காரராக இருந்தாலும், தாயார் அனுசரணையாக இருப்பாள் அல்லவா? அப்படி தந்தையின் கண்டிப்பில் தவிக்கும் உயிர்களை அம்பிகை முப்பால் ஊட்டி தாலாட்டுகிறாள்.

உலகின் முதல் இன்ஜினியர்:

ஒரு கட்டடமோ, வீடோ அமைக்க வேண்டுமெனில் அவை எப்படி அமைய வேண்டுமென இன்ஜினியர் வரைபடம் போட்டுத் தருவார். மதுரை நகரம் உருவாவதற்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் யார் தெரியுமா?

சொக்கநாதரே தான்! அவரே உலகின் முதல் இன்ஜினியர். குலசேகர பாண்டிய மன்னன், சொக்கநாதர் கோவிலைச் சுற்றி நகரம் அமைக்க எண்ணியபோது, எப்படி அமைப்பது எனத் தெரியவில்லை. குழம்பிய மன்னன் தீர்வு வேண்டி சொக்கநாதரை வேண்டினான். அப்போது சித்தர் வடிவில் மன்னரிடம் வந்த சொக்கநாதர், கோவிலை தாமரை மொட்டாகவும், அதைச் சுற்றி அமையும் வீதிகளை இதழ்களாகவும் கருதி நகர் அமைக்கும்படி கூறினார். இவ்வாறு மதுரை நகரம் எவ்வாறு அமைய வேண்டுமென்று வரைபடம் போட்ட சொக்கநாதர் நம் வாழ்க்கைப் பாதைக்கும் வரைபடம் போட்டுத் தருவார் என்பதில் சந்தேகமில்லை.

கிளி ரகசியம்:

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு
கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது

சாப்பிடவும் சாஸ்திரம் இருக்குது!

சாப்பிடவும் சாஸ்திரம் இருக்குது!

சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தர்மசாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்ப்பது கூடாது.
* தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.
* கருக்கல் வேளையிலும் (மாலை 6.00-7.00 மணி) நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும். பச்சைக் காய்கறி, பழம், வடை தவிர மற்ற பொருட்களை கையால் பரிமாறக் கூடாது.
* இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

குபேரர் பற்றிய குறிப்பு!

குபேரர் பற்றிய குறிப்பு!



* சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம்.
* குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியைத் தாங்கியிருக்கிறார்.
* புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு போன்றவற்றை குபேர ஹோமத்தின் போது இடுவர். புதனே கல்விக்குரிய கிரகம். குபேரரை வணங்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
* குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைக்கலாம். குபேரரின் அருளால் தொழிலில் லாபம், செல்வம் பெருகும்.

வில்வம், துளசி சிறப்பு

வில்வம், துளசி சிறப்பு...!

சிவபெருமானுக்கு வில்வ மாலையே மிகவும் உகந்தது. இதை அவர் அணிவதற்கு ஒரு காரணம் உண்டு.
மனிதன் நிமிர்ந்து நிற்கக்காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மைஉடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம்” என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும் வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.
துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். மேலும் 12 ஆதித்யர்கள் (சூரியன் போன்ற பெரிய கிரகங்களின் சக்தி), 11 ருத்திரர்கள்(சிவாம்ச சக்தி), 8 வசுக்கள் (பீஷ்மருக்கு முன்னதாக பிறந்த கங்கா புத்திரர்கள்), 2 அசுவினி தேவர்களும் (தேவலோக மருத்துவர்கள்) வாசம் செய்வதாக ஐதீகம். துளசி இலை போட்ட நீர் கங்கை நதிக்கு சமமானது என்பதால் பெருமாள் வழிபாட்டில் துளசி முக்கிய இடம் பெறுகிறது.

காகத்திற்கு சோறு வைக்க பலி மந்திரம் சொல்லுங்க!

காகத்திற்கு சோறு வைக்க பலி மந்திரம் சொல்லுங்க!


தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த 'பலி மந்திரம்' சொல்வது சிறப்பு.

பெருமாள் பக்தர்கள்,
“பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!”
என்று சொல்லி சோறு இட வேண்டும்.
இதை சொல்ல முடியாதவர்கள் 'மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனர் முதலிய விஷ்ணு பக்தர்கள் இந்த விஷ்ணு பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும்' என்று சொல்லி வழிபடலாம்.

சிவ பக்தர்கள்,
“பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய!
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா”
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். 'பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி முனிவர் முதலிய சிவனடியார்கள் இங்கு வைத்திருக்கும் சிவ பிரசாதத்தை அன்புடன் ஏற்க வேண்டும்' என்பது இதன் பொருள்.

இரண்டையும் சேர்த்தும் சொல்லலாம்

விபூதி இடும் முறை!

விபூதி இடும் முறை!

சிவபெருமானுக்குரிய மங்கலச் சின்னங்களில் விபூதி பிரதான இடம் பெற்றுள்ளது. விபூதியை நெற்றியில் இடுவதற்கு சில முறைகள் உள்ளன. விபூதி இடும்போது, சிவ மந்திரங்களான 'நமசிவாய', 'சிவசிவ' என்றோ, 'சரவணபவ' என்றோ சொல்ல வேண்டும்.

வலக்கையின் பெருவிரலையும், இரண்டு நடுவிரல்களையும் இணைத்து விபூதியை எடுக்க வேண்டும். இதை ரிஷப முத்திரை என்பர். எடுத்த விபூதியை ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிர விரல்
மூன்றிலும் தோய்த்து மூன்று பட்டையாக இட வேண்டும். ஆட்காட்டி விரலால் மட்டும் விபூதி, குங்குமம் இடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்னும் சைவப் பெருந்தகை இந்த தகவலை சொல்லியுள்ளார்

சொர்க்கம் - நான்கு வகை இருக்கிறது

சொர்க்கம் - நான்கு வகை இருக்கிறது


சொர்க்கத்திலும் இத்தனையா?

சொர்க்கம் என்றால் ஒன்று தானே என நினைக்கலாம். ஆனால், அங்கும் நான்கு வகை இருக்கிறது. சொர்க்கத்தின் வாசலில் நுழைவதை 'ஸாலோக்ய மோட்சம்' என்பர். பின்னர் தெய்வம் குடியிருக்கும் வீட்டுக்குள் சென்று தெய்வத்தின் அருகில் போய் நிற்பது 'ஸாமீப்ய மோட்சம். இதையடுத்து அத்தெய்வத்தை கண்கொட்டாமல் பார்த்து அப்படியே உருகி, அந்த உருவமாகவே மாறிவிடுவது 'ஸாரூப்ய மோட்சம்'. அந்த தெய்வத்துடன் ஒன்றி அதனுடன் கலந்து விடுவது 'ஸாயுஜ்ய மோட்சம்'. இவற்றையெல்லாம் பார்க்க வேண்டுமானால், இங்கே கொஞ்சமாவது புண்ணியம் செய்ய வேண்டும். நல்லதை மட்டுமே மனதில் நினைக்க வேண்டும்.

தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!

தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!

பெருமாள் கோவில் தரிசனத்தின் போது பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், சடாரி வழங்கப்படும். இதில் தீர்த்தம் உத்தரணியில் (கரண்டி) மூன்றுமுறை தரப்படும். இதற்குரிய காரணத்தை 'த்ரி பிபேத் த்ரிவிதம் பாபம் தஸ்யேஹாஸு விநச்யதி' என்று 'ஸ்மிருதி வாக்யம்' விவரிக்கிறது.

'எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவர் செய்த பாவம் நீங்கி தூய்மை பெற வேண்டும்' என்பது இதன் பொருள்.

வைதீக முறைப்படி வீட்டிலோ, கோவிலிலோ கலசம் (குடம்) வைத்து பூஜித்து வழங்கப்படும் தீர்த்தத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

சுவாமிகளை வணங்கும் திசை!

சுவாமிகளை வணங்கும் திசை!

பூஜையறையில் சுவாமி விக்ரஹம் அல்லது படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். சுவாமி கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்தும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது
சாஸ்திரம்.

பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. அதாவது பராசக்தி மற்றும் மகாலட்சுமி படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால் மேற்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் தெற்கு நோக்கி அமர்ந்தும் வழிபாடு செய்யலாம். அவ்வாறு அமரும் போது அம்மன் படங்களின் முன் நேருக்கு நேராகவும் அமரலாம்.