ஜபம் செய்வது எப்படி ?

ஜபம் செய்வது எப்படி ?

பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


பொதுவாக ஒரு குரு தனது சீடனைத் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம் செய்யும்படி உபதேசிக்கிறார். ஜபத்தை எண்ணிக் கணக்கிடுவதை விரல்களின் மூலமாகச் செய்யலாம்: அல்லது ஒரு ஜப மாலையைக் கொண்டு செய்யலாம்: அல்லது மனதிற்குள்ளேயே செய்யலாம். ஜபமாலை சாதகனின் மனதை ஒரு முகப்படுத்துவதற்கு உதவி செய்கிறது.

ருத்ராக்ஷம், சந்தனம், இலந்தை தாமரைக்கிழங்கு, ஸ்படிகம், பவழம், தாமரை மணி, துளசிமாலை போன்றவற்றால் ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.

 ஒரு சிலர் மனித அல்லது விலங்குகளின் எழும்புகளான ஜபமாலைகளையும் உபயோகிக்கிறார்கள். {அமானுஷ்ய சக்தி விரும்புகிறவர்களுக்கு மனித அல்லது விலங்குகளின் எழும்புகளை உபயோகிப்பார்கள்.}

ஜபிக்கும் மந்திரத்தைப் பொருத்தே உபயோகிக்கும் ஜபமாலையும் அமைகிறது. ஜபமாலை 108, அல்லது 54 மணிகளைக் கொண்டதாகும்.
ஒருவர் உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்க கூடாது.

மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தையே ஒரு மாலையின் மூலம் ஜபிக்க வேண்டும். ஒரே மாலையில் மூலம் வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்க கூடாது.

ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாக {உயிருள்ளதாக} ஆகிவிடுகிறது. ஜபம் செய்த மந்திரத்தை 10. ஒரு பங்கு யாகமாகவும், அர்க்யமாகவும் செய்ய அந்த குறிப்பிட்ட மந்திரம் முழு பலத்தை பெற்று விடும்
.
நல்ல ஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தை சரியான உச்சரிப்பில் ஒரு முறை ஜபித்தாலும் அவனது மனம் தூய்மையடைந்துவிடுகிறது என்று ஜப விதானம் என்ற நூல் கூறுகிறது.

இதை பற்றிய பல விஷயங்களை முன்பே கூறிவிட்டபடியால் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

இடங்கள்..

* இறைவனைப் பற்றி நினைக்க விரும்பாதவர்கள் இருக்கும்     இடங்கள்,
* எங்கு புனிதமான மனிதர்கள் கௌரவிக்கப்படுவதில்லையோ,
* எந்த இடத்தில் மனிதர்கள் ஈகையிலும் எளிய வாழ்க்கையிலும் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்களோ,

அந்த இடங்கள் ஜபம் பழகுவதற்கு ஏற்றவையல்ல. மாறாக, அவை பிரதிகூலமான பலனை தருபவை.

நேரம்

தினந்தோரும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன. நமது மனதுக்கும், உடலுக்குமிடையே ஒரு சரியான நல்ல இணைப்பு ஏற்படுகிறது.

அது எது போன்றதென்றால், நாம் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவே தோன்றுகிறதல்லவா? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தூங்கச் செல்கிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குத் தூக்கமும் வந்துவிடுகிறதல்லவா? அது போன்றுதான் நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம் செய்வதென்பதுமாகும். அந்த நேரம் வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்ய நம்மைத் தூண்டும்.

இவ்விதம் குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால் – நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்து வலுப்பெற்று – நாம் நல்ல ஆன்மீக முன்னேற்றமும் காண முடிகிறது.

விடியற்காலை, நண்பகல், மாலை சந்தியாகாலம், நடு இரவு ஆகியவை ஜபம் செய்வதற்குரிய மிகவும் விசேஷமான காலங்கள்.

இவற்றைத் தவிர பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதிகளோடு கூடிய நாட்கள், மற்ற விஷேச பூஜை தினங்கள் மற்றும் கிரஹண காலங்கள், ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும் சிறந்தவையாகும்.

உச்சரிப்பு

புனித மந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஒரு எழுத்து மாறினாலும் அல்லது த்வனியில் {சத்தம்} ஏற்றம்,குறைவு இருந்தாலும் பிரதினுகூலம் {எதிர்மறை} பலன்கள் தந்துவிடும்.

நாம் ஜபம் செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா, நினைவு முழுவதும் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.
பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம் செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில் ஈடுபாடில்லாமல் தனித்து நிற்கிறது. அவை இரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மா {நினைவு முழுவதும்} அதில் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும் இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதை நாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனித மந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள் நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்த நிலையை நமக்குள் தோற்றுவிக்கும். வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்ப நிலை நமக்கு கிடைக்கும்.

வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?



பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link

தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :

கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்

தின்ணைகளில் : நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்

நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்

நடைகளில் : இரண்டு விளக்குகள்

முற்றத்தில் : நான்கு விளக்குகள்

பூஜையறையில் :

இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் :

ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :

எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

தீபத்தின் வகைகள் :

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகைகள் உண்டு. அவை

சித்ர தீபம் :

வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

மாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

ஆகாச தீபம் :

வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம் :

தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

படகு தீபம் :

கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.

சர்வ தீபம் :

வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம் :

முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

சர்வாலய தீபம் :

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

அகண்ட தீபம் :

மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

லட்ச தீபம் :

ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.

மாவிளக்கு தீபம் :

அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?

பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link

விநாயகரின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.

செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.

வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

கடன் தீர கணபதி மந்திரம்

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.

மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வா

சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்

சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால்  கிடைக்கும் நன்மைகள்

பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


 சனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில்
சனி நீராடு என குறிப்பிட்டிருக்கிறார்.

நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர்.

இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர்.

ஒருசிலர் அசனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். அசனி எனும் சொல்லுக்கு சாம்பிராணி இலை என்று பொருள் கூறுகின்றனர். அந்த சாம்பிரானி இலையை நீரில் ஊரவைத்து நீராடுவது பலவித உடல் மற்றும் சரும கோளாருகளுக்கு நல்லது என்றும் எனவே சாம்பிராணி இலை குளியலைதான் அவ்வாறு கூறப்படுகின்றது என்கின்றனர்.

இன்னும் ஒருசாரர் ஜனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். தினமும் புதிதாக உற்பத்தியாகும் ஊற்றுநீரைதான் ஜனி நீர் என்றும் ஊற்று நீரில் குளிப்பது உடலுக்கும் ஆரோக்கிய்த்திற்க்கும் நல்லது என்கின்றனர்.

சரி. மருத்துவம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போமே.

நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம். நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள்.

வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பதாகும். மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

கட்டுரையின் முடிப்பதற்கு முன் ஜோதிட ரீதியான விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

முதலில் சனி நீராடு என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான? எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியளைதான் குறிக்கிறது.

அது ஏன் நல்லெண்ணை? அனைத்து என்னைகளுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியள் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

அது ஏன் வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க
ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகின்றது?

சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம்.

மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.

நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள்:

1. சனி தோஷம் விலகும்.
2. சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்
3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.
5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள்.🙏

சிறுநீரகக் கோளாறுகள் சரியாக.

சிறுநீரகக் கோளாறுகள் சரியாக.


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link
*கிரியாட்டினின் அளவு*
*மற்றும் யூரியா அளவு*
அதிகமாக இருந்தாலும்
*டயாலிசிஸ் செய்யும்*
நோயாளிகளும் குணமாக

*வைத்தியம்*

*மூக்கிரட்டைக் கீரைச் சாறு-----கால் தம்ளர்*
*துத்தி வேர் –   பத்துகிராம்*
*கருஞ்சீரகம் –   ஒரு விரற்கடை*

*அனைத்தையும் சேர்த்துத் தீநீராக்கி நாள்தோறும் காலை மாலை என  இரண்டு வேளை குடித்துவர சிறுநீரகம் செயல்பட ஆரம்பிக்கும் படிப் படியாகக் குணமாகி முழுமையான குணம் பெறலாம்
இது கைகண்ட எளிய அனுபவ வீட்டு மருந்து*👌

மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள்

மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது
செடி, வேர், கைப்புச் சுவையும் வெப்பத்தன்மையம் கொண்டவை. இவை கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை,நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

புட்பகம், மூக்குறட்டை, முக்கரைச் சாரணை, இரத்த புட்பிகா, சிறிய மூக்கிரட்டை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு
இரத்த சோகை குணமாக இலையைப் பொரியல் செய்து வாரம் இரு முறைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கண் பார்வை தெளிவடைய வேர்த்தூள் காலை மாலை வேளைகளில் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உட்கொள்ள வேண்டும்.

இலையை கீரையாக சமைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும். கண் பார்வை தெளிவடையும். உடல் வனப்பாகும்.

இதன் இலைகள், மலர்கள், வேர்கள் மூக்கிரட்டையை விட பெரியதாக இருக்கும். மலர்கள், ஊதா நிறமானவை. வளர் நிலங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும். வேர்கள் மருந்துவத்தில் பயன்படுகின்றன.

இவை, வாத நோய்களுக்குச் சிறப்பாக உபயோகமாகின்றன. மற்றபடி, மூக்கிரட்டையின் அனைத்து உபயோகங்களும் இதற்குப் பொருந்தும்.

தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள்

தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள்


இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1. முருகனின் திருவுருவங்கள்:

1, சக்திதரர்,

2. கந்த சுவாமி,

3. தேவசேனாதிபதி,

4. சுப்பிரமணியர்,

5. கஜவாகனர்,

6. சரவணபவர்,

7. கார்த்திகேயர்,

8. குமாரசுவாமி,

9. சண்முகர்,

10. தாரகாரி,

11. சேனாபதி,

12. பிரமசாத்தர்,

13. வள்ளி கல்யாண சுந்தரர்,

14. பாலசுவாமி,

15. கிரவுஞ்ச பேதனர்,

16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம்,மாற்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,

2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,

3. இந்த இருவரின்சகோதரனான சிங்க முகாசுரனை வதம்செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும்,

இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:

1. அகத்தியர்,

2. அருணகிரி நாதர்,

3. ஒளவையார்,

4. பாம்பன் சுவாமிகள்,

5. அப்பர் அடிகளார்,

6. நக்கீரர்,

7. முசுகுந்தர்,

8. சிகண்டி முனிவர்,

9. குணசீலர்,

10. முருகம்மையார்,

11. திருமுருககிருபானந்த வாரியார்,

12. வள்ளிமலைச் சுவாமிகள்,

13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.

10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்'' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாணசுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்'' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

21. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர்
பாடியுள்ளனர்.

27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.
இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

37. பல்லவ மன்னர்கள்முருகனைப்பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரமவைஷ்ணவன், பரம பிரம்மண்யன்என்று அழைத்தார்கள்என்று செப்பேடுகள் கூறுகின்றன.

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில்
சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ.
தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப்
பால் அபிஷேகம்செய்தால்வீட்டில்சகல  சவுபாக்கியங்களும்முருகனால் உண்டாகும்.

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல்
இழுக்கப்பட்டது.

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக்கூறுவார்கள்.

49. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

54. கந்தனுக்குரிய விரதங்கள்:

1. வார விரதம்,

2. நட்சத்திர விரதம்,

3. திதி விரதம்.

55. முருகனின் மூலமந்திரம்ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

56. வேலும் மயிலும்இல்லாத வேலவன்ஆண்டார்குப்பத்தில்உள்ளார்.

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக்

கொண்டாடும் விழாவாகும்.

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6

அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி

கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்

நந்தி - 50 தகவல்கள்

நந்தி - 50 தகவல்கள்


இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.
14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*


நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு

நவக்கிரஹ  காயத்ரி மந்திரங்கள் வழிபாடு



மந்திரம்:-

                                     நவக்கிரஹங்களும் தெய்வங்களும் நாம் இந்த ஜன்மத்தில் கொண்டு வந்த வினைகளை (பிராரப்த கர்மா ) அனுபவிக்க சூழ்நிலையையும், எண்ணங்களையும் உண்டாக்குகின்றனர்.எனவே,நவக்கிரகங்களை, தெய்வங்களை பழிப்பது கூடாது. இருப்பினும்,அவர்களை வழிபட்டால் நன்மைகளை நிறைவாகவும்,தீமைகளின் கெடுபலன்களை குறைத்தும் அருள்செய்வார்கள்.

தற்சமயம் எந்த கிரகத்தின் தசா புத்தி நடைபெற்று வருகிறதோ அதற்கான மந்திரத்தை  ஜெபித்து வரலாம்.மேலும,அவற்றிற்கான கூடுதல் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.சூர்யபகவான் :-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||

வேலையில்,அரசியலில்,உடல்நலத்தில் குறிப்பாகத் தலை தொடர்பான வியாதிகளை  தீர்க்கும். தந்தைகள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தகப்பன் ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சூர்யன் அருள்வார்.

2.சந்திரபகவான் :-

ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|

மனக்குழப்பம்,வேதனைகள்,வயிறு,மற்றும் இரத்தம் தொடர்பான வியாதிகள் நீங்கும்.தாய்மார்கள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தாய்  ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சந்திரன் அருள்வார்.

3.செவ்வாய்பகவான்:-

ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ|

கணவன்,மனைவி உறவு மேம்படும்.வாகனங்கள் ,வீடு,சொத்து  வாங்க மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் தீரும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.

4.குருபகவான்:-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ ப்ரஹஸ்பதயே நமஹ||

வாழ்வில் எடுத்த காரியங்களில் வெற்றியும்,பாதுகாப்பும் ஏற்படும்.சமூகத்தில் மதிப்பும்,மரியாதையும் ஏற்படும்.தொழில்,வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

5.சனிபகவான்:-

ஓம் க்ஹ்ராம் க்ஹ்ரீம் க்ஹ்ரௌம் சஹ சனீஸ்வராய  நமஹ|

காரியத்தடை,கடன்,வறுமை,அவமானம்,வியாதிகள் நீங்கும்.

6.புதபகவான்:-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ|

புத்திக்கூர்மை,கலைகளில் தேர்ச்சி உண்டாகும்.தொழில் வெற்றி,வாக்குவன்மை உண்டாகும்.

7.சுக்ரபகவான்:-

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ|

பொன்,பொருள் சேர்க்கை,கலைகளில் சிறப்புத்தேர்ச்சி,பெண்களுடன் சிறப்பான தொடர்புகொள்ளும் திறன் உண்டாகும்.

8.ராகுபகவான் :-

ஓம் ப்ஹ்ராம் ப்ஹ்ரீம் ப்ஹ்ரௌம் சஹ ராகவே  நமஹ|

மனக்குழப்பம்,தீய சக்திகளால் தொல்லை,சட்டப்பபிரச்சனைகள் தீரும்.

9.கேதுபகவான் :-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ கேதவே நமஹ|

இழந்த புகழை  மீண்டும் பெறலாம்.தீய ஆவிகளின் தொல்லை ,ஏவல் தீரும்.
ஒவ்வாமை தொடர்பான வியாதிகள் நீங்கும்.திடீர் தீய நிகழ்வுகளில் இருந்து  பாதுகாப்பு கிட்டும்.

வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்|

உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள்

உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள்


1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
2.தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
3.பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
6.பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
.
7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
8.மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
9.மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
10.மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
11.கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
24.இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்

சிவனை வழிபடும்போது இதெல்லாம் செஞ்சிடவே கூடாது...

சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது?




எல்லா கடவுளையும் நாம் ஒரே மாதிரியாக வழிபடுவதில்லை. ஒவ்வொரு கடவுளுக்கு வழிபடுவதற்கான பிரத்யேக முறைகள் சில உண்டு. அதுபோல் சிவனை வழிபடுவதற்கும் நிறைய கட்டப்பாடுகள் உண்டு. அதைத் தெரிநது கொண்டு அதன்படி வழிபடுங்கள்.

சிவபெருமானை வழிபடும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது?


இந்து மதப் பாரம்பரியத்தின் படி, முறையான சடங்குகளுடன் சீரான வழிபாடு இல்லாத இடத்தில் சிவனை வைத்து வழிபடக்கூடாது. அது சிவனைக் கோபமடையச் செய்யுமாம்.

கண்ட இடங்களில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது. அது அவருடைய கோபத்துக்கு

வில்வ இலை, வில்வ பழம், குளிர்ந்த பால், சந்தனம் ஆகிய குளிர்ச்சியான பொருள்களை வைத்து வழிபடுவது சிவனுக்கு மிகவும் பிடிக்கும்.

தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது.

துளசியை சிவனுக்குப் படைத்து வழிபடக்கூடாது.

தேங்காய்த் தண்ணீரை சிவனுக்குப் படைக்கக் கூடாது.

மஞ்சள் புனிதமானது தான். ஆனால் மஞ்சளை சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது.

அதேபோல் குங்குமத்தையும் சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது.

நந்தியாவட்டை மலர்களை சிவனுக்குப் போடுதல் கூடாது.

வெந்நிற மலர்கள் தான் சிவனுக்கு விருப்பமானவை. அதனால் வெண்ணிற மலர்களை வைத்து வழிபடுங்கள்.

அரளியையும் வெள்ளைநிற அரளியை  மாலையாக அணிவது இன்னும் சிறப்பு.

சிவனுக்காக படைத்த உணவுகளை திரும்ப எடுத்து யாரும் உண்ணக்கூடாது.

இதுபோன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு சிவபெருமானை வணங்குங்கள்.

மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம்

மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம்

1. மச்ச சாஸ்த்திரம் : பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்
தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
ஆடம்பர வாழ்வு

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

அந்தஸ்து மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.


மார்பில் மச்சம்
பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்
கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை
இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.


2. ஆண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்

இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

 வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

 வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

 வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

 இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

 கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

 கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

 வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

 வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

உமீழ் நீர்- இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து

உமீழ் நீர்- இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து




* சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து

*சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?

*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!

*உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!

*வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!

*அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

*கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

*நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!

*உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!

*தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!

*நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!

*தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!

*அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!

*வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!

*உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!

*நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!

*உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!

*நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!

*சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!

*எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!

*நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!

*நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!

*இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் விடமாட்டார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!

நொறுங்கத் தின்னா நூறு வயசு..

உமீழ் நீர் : உயிர் நீர்



அருமையான பதிவு :
இயற்கை ஆரோக்கிய வாழ்வின் மிகவும் அடிப்படை ஆதாரமாக உள்ள பகிர்வு.

எந்த டிரஸ் போட்டாலும் குண்டா தெரியறீங்களா?... இத ட்ரை பண்ணீங்களா?

எந்த டிரஸ் போட்டாலும் குண்டா தெரியறீங்களா?... இத ட்ரை பண்ணீங்களா?



இலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

டயட் இருப்பதும் உடலைக் குறைக்க நினைப்பதுவும் ஆரோக்கியமானது தான். அப்படியே வயிற்றைக் கட்டி டயட் இருந்தாலும் அவ்வப்போது நண்பர்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் எதையாவது சாப்பிட்டு விட்டு பின்பு எந்த டிரஸ் போட்டாலும் செட்டாவதில்லை என்று புலம்புவது நம் எல்லோருக்குமே வாடிக்கையான ஒன்று தானே...

இதுபோன்று விஷயங்களை ஒரே நாளில் சரிப்படுத்தி உடல்எடையைக் குறைத்துவிட முடியாது தான். ஆனால் நாம் அணியும் ஆடைகள் எந்த சிரமமும் இல்லாமல் நம்முடைய எடையைக் குறைத்துக் காட்டினால் கசக்கிறதா என்ன?


பெண்களைப் பொருத்தவரையில் மிடி என்பது அவர்களுடைய அழகை மேலும் கூட்டிக் காட்டும் ஒரு ஆடையாகவே இருக்கிறது. அதிலும் சற்று எடை கூடிய பெண்கள் முழு நீள மிடியை அணியாமல் முழங்கால் வரை அணிவது மிகப்பொருத்தமாக இருக்கும்.

மிக இறுக்கமான ஓவர் கோட், ஜாக்கெட்டுகளை அணியக் கூடாது. அது உங்களுடைய முழு எடையையும் வெளிக்காட்டும். கொஞ்சம் லூசாக இருக்கும் ஜாக்கெட்டுகளை அணிவது நல்லது.

உங்களது டெனிம் ஆடைகளுக்கு ஏற்ற ஹீல்ஸ் அணிவது உங்களுடைய கூடுதல் எடையைக் குறைத்து, சிக்கெனக் காட்டும்.

சரியான அளவில் நீங்கள் அணியும் பிராக்கள் உங்களுடைய உடல்வாகை சிக்கெனக் காட்டும். சரியான அளவில் பிரா அணியும் போது, மார்பகங்கள் தளராமல், தேவையில்லாத இடங்களில் சதை வெளியே பிதுங்காமல் அழகாக இருக்கும்.

ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் கலர்கள் என இரண்டு கலர்கள் தான் உலக அளவில் நம்பப்படுகின்றன. அந்த இரண்டு கலர் கருப்பும் அடர்ந்த சிவப்பும் தான். அந்த இரண்டு கலர்களையும் உங்களின் நிறத்தையும் வடிவழகையும் மேம்படுத்திக் காட்டும்.

அதிக நீளமுள்ள, பேண்ட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல் தொப்புளுக்குக் கீழே பேண்ட் அணியுங்கள். இடுப்புக்கு மேலே பேண்ட் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

நீளவாக்கில் கோடுகள் (வெர்ட்டிக்கிள் ஸ்டிரைப்ஸ்) ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களுடைய உடல் எடையைக் குறைத்துக் காட்டும்.

இவை மட்டும் போதாது. இந்த ஆடைகளுக்குப் பொருத்தமான ஷூ அல்லது காலணிகள் அணிவது மிக முக்கியம்.

எப்பவுமே ஒல்லியாவே தெரியணுமா?... அப்போ ஸ்டைல ட்ரை பண்ணுங்க...

எப்பவுமே ஒல்லியாவே தெரியணுமா?... அப்போ ஸ்டைல ட்ரை பண்ணுங்க...



பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும்.

நம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.


என்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும் சில ஸ்டைல் டிப்ஸ்கள் இதோ...

மிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதேசமயம் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுங்கள். குட்டையான மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.

மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும்.

சரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். உயரமான ஹீல்ஸ் அணியும்போது,  உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாகக் காட்ட முடியும்.

உள்ளாடைகளைத் தேர்வு செய்வதும் முக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்குப் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். அது மற்றவர்களை ஈர்க்காது. முகம் சுளிக்கவே வைக்கும்.

நல்ல டார்க் ரெட், கருப்பு ஆகி நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

இடுப்புக்கு மேலே பேண்ட் அணியக்கூடாது. இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிய வேண்டும்.

கோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகளாக இருந்தால், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.