வெற்றி தரும் ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி

வெற்றி தரும் ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி
bhairava-108-potri.

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

01. ஓம் பைரவனே போற்றி

 02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி

06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி

16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி

26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி

56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி

71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையளிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி

81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி

91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி

101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி! 

பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்

பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்
Bhairava-worship.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வைரவரை வழிபட எந்தெந்த கிழமைகள் சிறப்பானது, பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை: ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும்.

திங்கட்கிழமை: வில்வார்ச்சனை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.


புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும்.

சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர், ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகும்.

K.Karthik Raja - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

K.Karthik Raja  - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                         Click Here : Register for Free Training


K.Karthik Raja  - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

Accumulation Distribution Indicator - Share Market Training

Accumulation Distribution tracks the relationship between price and volume and acts as a leading indicator of price movements. It provides a measure of the commitment of bulls and bears to the market and is used to detect divergences between volume and price action - signs that a trend is weakening.

Accumulation Distribution is an enhancement of the On Balance Volume indicator. It first compares opening and closing prices to the trading range for the period, the result is then used to weight the volume traded.

The strongest signals on the Accumulation Distribution are divergences:

Go long when there is a bullish divergence.
Go short when there is a bearish divergence.
Stop-losses should be placed below the most recent low (when going long) and above the latest high (when going short).

செவ்வாய் தோஷ பரிகாரம் - செய்ய வேண்டியதும் கூடாததும்

செவ்வாய் தோஷ பரிகாரம் - செய்ய வேண்டியதும் கூடாததும்
chevvai-dosham-pariharam.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் " நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன" என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு.


சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.

துர்கா கவசம் - விபத்து - எதிரிகள் தொல்லை நீங்க

துர்கா கவசம் - விபத்து - எதிரிகள் தொல்லை நீங்க
durga-slokas.
விபத்து, எதிரிகள் தொல்லை நீங்க துர்கா கவசம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனம் கருடன்

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனம் கருடன்
maha-vishnu-garuda.
         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர் கருடன். இவர் மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர். மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார்.

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர்.

நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.


இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.

கைசிக ஏகாதசி விரத கதை

கைசிக ஏகாதசி விரத கதை
kaisika-ekadasi

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

எப்படிப்பட்ட பாவத்தையும் கைசிக ஏகாதசி விரதம் தொலைக்கும் என்பது ஐதீகம். கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதையை அறிந்து கொள்ளலாம்.

மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் என்னும் எளிய பக்தன். பெருமாளைப் பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன் நம்பாடுவான். வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள்.

இது நடந்த இடம் திருக்குருங்குடி என்ற திருத்தலம். அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. பிரபோதின ஏகாதசி என்று சொல்வார்கள். விரதமிருந்து பெருமாளைப் பாடக் கிளம்பினார் நம்பாடுவான். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் எனக்கு இன்று நீ உணவாக வேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.


நம்பாடுவான் சொன்னான், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.

பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவான், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி, பயங்கரமான சத்தியங்களைச் செய்கிறான். பிரம்ம ராட்சசன் விட்டு விட்டான்.

நம்பாடுவான் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று பாடுகிறான். அன்று மிக மிக உருக்கமாக ஒரு பண் பாடுகிறான். அது கைசிகப் பண். பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி இல்லை.எனவே நம்பாடுவானை உண்ணவில்லை. தன்னை சாபவிமோசனம் செய்ய வேண்டுகிறான். தான் பாடின கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்குகிறான் நம்பாடுவான்.

கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி. இந்தக் கதை வராகப் புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் இது இப்போதும் நாடகமாக நிகழ்த்தப் பெறுகிறது. மற்ற திவ்யதேசங்களில் பெருமாள் கோயிலில் கைசிக மகாத்மியம் படிக்கப்படுகிறது.

ஏகாதசி விரதம் - புராணக் கதை

ஏகாதசி விரதம் - புராணக் கதை
ekadasi-vratham-Story.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் ஒரு குகையில் ஓய்வெடுத்தார். ஓய்வெடுக்கும் வேளையில் மகாவிஷ்ணுவை கொல்ல வந்தான் முரன்.

அப்போது விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண்ணாக உருவெடுத்து, முரனை அழித்தது. கண்விழித்த மகாவிஷ்ணு அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டதாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. மேலும் ‘ஏகாதசியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நான் அளிப்பேன்’ என்றும் மகாவிஷ்ணு அருள்புரிந்தார்.

மன்னர் அம்பரிஷ், தீவிர விஷ்ணு பக்தர். அவர் நெடுங்காலமாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால் அம்பரிஷ் மன்னனின் உயிருக்கு ஆபத்து வந்தது. ஆனால் அவன் செய்த ஏகாதசி விரத பலனால், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் துர்வாசரை கொல்ல துரத்தியது. பயந்து போன துர்வாச முனிவர், அம்பரிஷ் மன்னனை சரணடைந்ததுடன், அவனுக்கு அளித்த சாபத்தையும் நீக்கினார். ஏகாதசி விரதத்தின் பலன் அப்படிப்பட்டது.

ராகுகால விரத பூஜையின் வகைகள்

ராகுகால விரத பூஜையின் வகைகள்
rahu-kala-viratham-pooja.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம்.

ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை,

1. திருமணத் தடையை நீக்குதல்

2. வழக்குகளில் வெற்றி பெறுதல்

3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.

1. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் - குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.

2. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.

3. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் - நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.

4. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் - திருமண நாணின் பலம் கூடும்.

5. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்) - சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.

6. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால் - பாம்பு தோசம் நீங்கும்.

7. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால் - வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.

சிவபெருமானின் இந்த அரிய வடிவங்கள்

சிவபெருமானின் இந்த அரிய வடிவங்கள்
Rare-forms-of-Lord-Shiva.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய வடிவங்கள்..! அந்த அரிய வடிவங்கள் என்னென்ன? அவர் எங்குக் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய வடிவங்கள்..! வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரம்பொருள் நம் ஈசன். அந்த அரிய வடிவங்கள் என்னென்ன? அவர் எங்குக் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம்.

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாகக் காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

* மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

* பொதுவாகப் பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள "அனுமன் காட்"டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார்.

1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் "ஜ்வரஹரேஸ்வரர்" என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல்கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

கொள்ளு புட்டு

 கொள்ளு புட்டு
kollu-puttu
உடல் எடையை குறைக்கும் கொள்ளு புட்டு


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளுவை வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கொள்ளு - 2 கப்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள், கடுகு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ப.மிளாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இரவு முழுவதும் கொள்ளுவை நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் நீரை வடிகட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

அதனை இட்லி தட்டில் கொட்டி வேக வைத்து உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து, புட்டு மீது ஊற்றி கிளறவும்.

பின்னர் தேங்காய் துருவலை தூவி பரிமாறலாம்.

சுக்கு சூப்

 சுக்கு சூப்
sukku-soup.
சளிக்கு இதமான சுக்கு சூப்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சுக்கு சூப் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுக்கு தூள் - 2 டீஸ்பூன்

 மிளகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
புதினா - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகு, சுக்கு தூள், சோம்பு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

குக்கர் விசிவ்ல போனவுடன் மூடியை திறந்து சூப் வடிகட்டி புதினா தூவி சூப்பை பரிமாறலாம்.

சூப்பரான சத்தான சுக்கு சூப் ரெடி.

மிளகுத் தட்டை

மிளகுத் தட்டை
milagu-thattai.
சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகுத் தட்டை


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்
உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
பொட்டு கடலை மாவு - கால் கப்
கடலை பருப்பு - கால் கப்

செய்முறை :

மிளகை இரவில் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து அதனுடன் உளுந்தம் பருப்பை சேர்த்து மாவாக்க வேண்டும்.

அதனுடன் வெண்ணெய், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு, மிளகு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் தட்டைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகு தட்டை ரெடி.

இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை நன்றாக இருக்கும்.

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் - அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் - அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்
Right-age-for-pregnancy.

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன. இது விரிவாக பார்க்கலாம்.

கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும். எனவே கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன.

வயது 20-24


இந்த காலக்கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 20% ஹைபர்டென்ஷன் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால நீரிழிவு அபாயம் வருவது குறையும். ஆனால் இந்த காலகட்டத்தில் உடம்பு ரீதியான பிரச்சினையால் கர்ப்பம் சிக்கலாக கூடும். இந்த வயதில் கல்யாணம், வாழ்க்கையில் செட்டில் ஆகுவது போன்ற கமிட்மெண்ட்க்கு முன்னாடி கர்ப்பம் தரிப்பது என்பது சிரமமான காரியம். இந்த காலத்தில் 9.5% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாட்டால்(1667 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (526 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது.

வயது 25-29

உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் உங்கள் கருத்தரித்தலை ஆரோக்கியமாக்கும். இந்த வயது தான் கருத்தரிக்க சரியான வயது. மார்பக மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் மற்றும் திருமண அழுத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதால் துணைகள் பெற்றோராக சரியான வயது. கருச்சிதைவு 10%வர ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி குறைபாட்டால்1250 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (476 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வயதில் பாதிப்பு குறைவு தான்.

வயது 30-34

வயது முப்பதை அடையும் போது கருவுறுதல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே இதற்கு சிகிச்சை எடுத்தால் கருவுறுதல் சாத்தியம். செயற்கை முறை கருத்தரிப்பு 25-28% ஆக இருப்பது 40 வயதை அடையும் போது 6-8 % ஆக குறைந்து விடும். இந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிசேரியன் பண்ணிக்கிற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகி விடுவதால் பெற்றோராக இருப்பதற்கு நேரம் கிடைக்கும். கருச்சிதைவு ஏற்பட 11.7%வரை வாய்ப்புள்ளது. கழுத்தை வளர்ச்சி குறைபாடு (952 ல் 1)குரோமோசோம் குறைபாடு (385 ல் 1)ஆக ஏற்பட வாய்ப்புள்ளது.

வயது 35-45

38 வயதில் மாதவிடாய் நிற்கும் நிலை உருவாகி விடும். இதனால் இந்த வயதில் குழந்தை பிறப்பு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இரத்த அழுத்தம் இரண்டு மடங்கு உயரும், ஹைபர்டென்ஷன் 10-20% வரை அதிகமாகும், கர்ப்ப கால நீரிழிவு நோய் 2-3 மடங்கு வர வாய்ப்புள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை வர வாய்ப்புள்ளது. இந்த வயதில் கருத்தரிப்பு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். எனவே ப்ரீநாட்டல் ஸ்கிரீனிங் மற்றும் அமினோசென்டஸிஸ் முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. கருச்சிதைவு ஏற்பட 18%வாய்ப்புள்ளது.

40 வயதிற்கு மேல்

இது கருவுற சிரமமான வயதாகும். 25% சிகச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்கும். அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் துணைக் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகி விடுவதால் எந்த வித மன அழுத்தமும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆனால் அவர்களின் உடல் ஆற்றல் குறைந்து காணப்படும்.

40 வயதில் 24%ம், 43 ல் 38%ம், 44 ல் 55% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு டைப் 1 டயாபெட்டீஸ் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுறுதல் திறன் (100 ல் 1 பேருக்கு) மட்டுமே இருக்கும். குழந்தை வளர்ச்சி குறைபாடு (40 ல் 1 பேருக்கும்), 45 வயதில் (30 ல் 1 பேருக்கும்) ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நவீன காலத்தில் தம்பதிகள் தங்களின் பொருளாதார நிலை, வேலை நிலையைக் கொண்டு கருவுறுதலை தீர்மானிக்கின்றனர். இருப்பினும் இதன் நன்மை தீமைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கருவுறுதலை திட்டம் போடுவது நல்லது. 

தேங்காய் எண்ணெய் கண்டிஷனரைவிட சிறந்தது

 தேங்காய் எண்ணெய் கண்டிஷனரைவிட சிறந்தது
coconut-oil-best-for-hair
கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய் சிறந்தது


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தலையில் தினசரி அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும்.

அடிக்கடி முடியை முரட்டுத்தனமாக சீவுவது அல்லது ஃப்ரெஷ் செய்வது முடியை சேதப்படுத்தும். ஆனால், முடியைப் பற்றி வரும் அழகு குறிப்புகள் பெரும்பாலானவற்றில், முடியை அடிக்கடி ஃப்ரெஷ் செய்தால் முடி நன்கு வளரும் என்று குறிப்பிடுவார்கள். உண்மை அதுவல்ல. மாறாக அப்படி செய்வது, முடியை சேதப்படுத்திவிடக் கூடும்.

காலம் காலமாக தேங்காய் எண்ணெயை முடியில் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு நீள கூந்தல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் ஆகச் சிறந்தது.

இப்போது மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படும் பாட்டில்கள் பலவற்றிலும் மற்ற லைட் வெயிட் ஆயில்களும் மினரல் ஆயில்களும் சேர்க்கப்பட்டவை. மினரல் ஆயில்கள் தேங்காய் எண்ணெயைவிட மலிவு என்பதே அதற்கு காரணம். மினரல் ஆயில் முடிக்குள் ஊடுருவி செல்ல முடியாது. தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றில் எது முடிக்கு நல்லது என்று ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால்,

இந்த மூவகை எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.

எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும். Leave on Conditioners தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு லேசாக தடவ வேண்டியவை. அவைகள் சூப்பராக முடியில் சிக்கை நீக்கி, முடியை சீவுவதற்கு எளிதாக இருக்கும். முடியின் பளபளப்பையும் அதிகப்படுத்தும். 

குழந்தைகளின் பேசும் திறனுக்கு தடையாக இருப்பவை

குழந்தைகளின் பேசும் திறனுக்கு தடையாக இருப்பவை
Children-speaking-skills.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சரியாக பேசாத குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.

ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.

பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற்தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடைபடும்.

நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.

அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.

புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.

குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்
Vitamins-that-need-children-to-grow


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.


* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

கர்ப்பிணிகளுக்கு மீன் அவசியம்

கர்ப்பிணிகளுக்கு மீன் அவசியம்
pregnancy-eating-fish-is-must.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொழுப்பு கலந்த மீன் வகைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்படும். இதனை பின்லாந்தில் உள்ள துர்க்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

‘‘கர்ப்பிணி பெண்களின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மீன் பயன் தருவதாக எங்கள் ஆய்வு முடிவு அமைந்துள்ளது’’ என்கிறார், பல்கலைக்கழக அதிகாரியான, ஹிர்சி லெய்டீனன். இந்த ஆய்வுக்காக கர்ப்பிணி பெண்களின் உணவு பழக்கமும், உணவு ஆரோக்கியமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. குழந்தையின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளப்பட்டது.


மீனில் இருக்கும் புரதம் குழந்தையின் சருமம், தசை, முடி, எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. அதனால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக 25 சதவீதம் புரதம் சாப்பிடுவது அவசியம். குழந்தைகளின் பற்கள், இதயம், நரம்புகள், தசைகளை வலுப்படுத்துவதில் வைட்டமின் டி-யின் பங்களிப்பும் இருக்கிறது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களின் எலும்புகள், பற்களை வலுப்படுத்தவும் மீன் உதவும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜனை ரத்தத்தின் வழியாக எடுத்து செல்வதில் இரும்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். அதனால் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உணவில் தவறாமல் மீனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இளநரையைக் கட்டுப்படுத்தும் வழிகள்

இளநரையைக் கட்டுப்படுத்தும் வழிகள்
Natural-ways-to-darken-gray-hair.
 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
இளம் வயதில் இளநரை வருவதற்கு முக்கிய காரணம் உணவுமுறை மற்றும் தரமற்ற கூந்தல் பொருட்களை பயன்படுத்துவது தான். இன்று இளநரையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம்.

இளமையிலேயே ஏற்படும் இளநரை தோன்றுவதற்கான காரணங்கள் என்னவென்றால், தாதுப்பொருள்களும் அடங்கிய  ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம்.

தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.


* வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.

* மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக வளரும்.

* மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும்.

* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.

* கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.