ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? இதில் உள்ள திட்டங்கள் என்னென்ன?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு(Equity Mutual Fund) என்றால் என்ன? இதில் உள்ள திட்டங்கள் ?               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்வது ஆகும். அது தானே பங்குச் சந்தை என்றால் அது தான் இல்லை. பங்குச் சந்தையில் தினமும் சந்தை நிலவரத்தைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். ஆனால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொருத்த வரையில் சிறந்த நிதி ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யும் போது அந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை நிர்வகிக்கும் நிறுவனம் பல தரப்பட்ட துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்து அதன் மூலம் வரும் லாபத்தினைப் பிரித்து அளிக்கும்

லார்ஜ்கேப் திட்டங்கள்

இந்தத் திட்டத்தினைப் பொருத்த வரையில் பிற ஈக்விட்டி திட்டங்களை விடக் குறைந்த ரிஸ்க் உள்ள பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். லார்ஜ்கேப் திட்டங்கள் பழமைவாத பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது ஆகும். இந்தத் திட்டங்கள் நிலையான ஒரு லாபத்தினை முதலீட்டாளர்களுக்கு அளிக்கும்.

ஸ்மால்கேப் திட்டங்கள்

ஸ்மால்கேப் திட்டம் என்பது சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வது ஆகும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் ஆகும், நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள் குறைந்த அளவில் தான் இணையதளத்தில் இருக்கும். ஆனால் இவை அதிகப்படியான லாபத்தினை அளிக்கும். அதிக ரிஸ்க் இருந்தாலும் அதனைச் சமாளிக்கும் அளவிற்குப் பின் பலம் இருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை இந்தத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

மிட்கேப் திட்டங்கள்

நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமே மிட்கேப் திட்டங்கள். இந்தத் திட்டங்களில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது ரிஸ்க்கும் இருக்கும், சில நேரங்களில் ரிஸ்க் இல்லாமலும் இருக்கும். ஆனால் இவர்களுக்கு லாபம் வரும் போது பெரிய நிறுவனங்களாக இவை வளரும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிக ரிஸ்க்கில் முதலீடு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS)

ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கை அளிக்கும். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கைப் பெறலாம். ஆனால் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது மூன்று வருடம் வரை லாக்-இன் காலம் ஆக முதலீடு செய்து இருக்க வெண்டும்.

பலவக்கைப்பட்ட ஈக்விட்டி திட்டங்கள்

நிதி மேலாளரின் சந்தை பார்வையினைப் பொருத்து சந்த மூலதனத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும் இது. பல சந்தை மூலதனங்களைப் பொருத்து இந்தத் திட்டங்கள் செயல்படுவதால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் திட்டங்களை விட இதில் ரிஸ் குறைவு. ஆனால் லார்ஜ்கேப் திட்டங்களை விட ரிஸ்க் அதிகம். மிதமான ரிஸ்க்கை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஈக்விட்டி சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள்

ஈக்விட்டி சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள் அல்லது பேலன்ஸ்டு திட்டங்களில் செய்யப்பட்ட 65 சதவீதம் முதலீடுகள் பங்கு சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இது கலவையான முதலீடு திட்டம் என்பதால் பங்கு சந்தை முதலீடுகளை விடக் குறைந்த அளவே ரிஸ்க் உள்ளது.

Arbitrage funds

ரொக்க மற்றும் டெரிவேடிவ் சந்தைகளுக்கு இடையேயான விலை வேறுபாட்டை வருவாயாக மாற்ற இந்தத் திட்டம் பயன்படுகின்றது. குறைந்த காலம் முதலீடு செய்து அதிக வரி விலக்கைப் பெறுவதற்கு ஏற்றதாக இந்த முதலீடு திட்டங்கள் உள்ளன.

துறை சார்ந்த திட்டங்கள்

இந்தத் திட்டம் குறிப்பிட்ட துறைகளில் முதலீடு செய்யும். ஒரு துறையில் இந்தத் திட்ட முதலீடுகள் செய்யப்படுவதினால் அதிக ரிஸ்க் இருக்கும். பொருளாதாரச் சுழற்சியைக் கண்டறிந்து முதலீடுகளை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டில் ஒரு சிறிய பங்கை மட்டும் துறை சார்ந்த முதலீடுகள் செய்வது நல்லது.