பிட்காயின் - மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி

பிட்காயின் - மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நாணயம்! இது ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு நாட்டின் அடையாளமாக விளங்குகின்றது. எனவே நாம் அனைவரும் நாணயத்தைக் கட்டிக் காக்க போராடுகின்றோம் மற்றும் கட்டுப்படுத்துகின்றோம். இது தனிமனிதனுக்கும் ஏன் ஒரு நாட்டிற்குமே பொருந்தும். எந்த ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் யாரும் ஒழுங்கு படுத்தாமல் நாணயம் இயங்கி வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா. அது தான் மெய்நிகர் நாணயம்.

மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி

இந்தியாவில் மெய்நிகர் நாணயங்களில் மீதான முதலீடு கடந்த சில ஆண்டுகளில் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாகச் சமீப காலங்களில் இந்த நாணயங்களின் மதிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பிட்காயின் பயனர்கள் உள்ளனர்.

மெய்நிகர் நாணயங்களில் மீதான முதலீடு லாபகரமானதாக இருந்தாலும், அதனோடு இணைந்து சில பல பிரச்சனைகளும் உள்ளன. இந்த மெய்நிகர் நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில மிக முக்கியமான விஷயங்கள் இங்கே உள்ளன

மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை
பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்கள் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கூட "பிட்காயின் போன்ற அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படாத நாணயங்களின் புழக்கம் கவலையளிப்பதாக உள்ளது" என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"மெய்நிகர் நாணயங்களைக் கையாளும் எந்தவொரு பயனாளரும், வைத்திருப்பவரும், முதலீட்டாளரும் அல்லது வணிகரும் அவர்களுடைய சொந்த ஆபத்தில் அந்த நாணயங்களைக் கையாளுகின்றனர்" என்று ரிசர்வ் வங்கி இந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் தனது வலைத்தளத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களைப் பற்றி, இத்தகைய நாணயங்கள் நிதியியல், சட்ட, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அபாயங்களுக்கு வித்திடுகின்றன எனவும் தெரிவித்துள்ளது

பிட்காயின் பரிவர்த்தனைகளைத் திரும்பப் பெற இயலாது
மெய்நிகர் நாணய சேவை வழங்குநருடன் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கும்போது, உங்களுடைய பணம் டிஜிட்டல் வாலட்டில் சேமிக்கப்பட்டு அந்தப் பணத்திற்கு ஒரு பொது மற்றும் ஒரு தனிப்பட்ட கடவுச் சொல் வழங்கப்படுகின்றது. பொதுக் கடவுச் சொல் என்பது உங்களின் மொபைல் எண் போன்றது. தனிப்பட்ட கடவுச் சொல் என்பது உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகும். நீங்கள் இந்த இரண்டு கடவுச் சொற்களையும் மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

பிட்காயின் நாணயத்தின் கடவுச்சொல்லை மீட்க முடியாது. இதை நீங்கள் நன்கு உணர வேண்டும். எனவே நீங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டால் உங்களுடைய பணம் பயனற்றதாக மாறி விடும். இதேபோல், ஒரு பிட்காயின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மேற்கொள்ளப்படும் பரிமாற்றத்தையும் திரும்பப் பெற இயலாது. எனவே, உங்களுடைய பிட்காயின் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டால், அதைக் கண்டிப்பாக மீட்க இயலாது.

போலி மெய்நிகர் நாணயங்கள்

மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இதில் போலிக்கும், உண்மைக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே, எந்த ஒரு மெய்நிகர் நாணயத்திலும் வர்த்தகம் செய்வதற்கு முன், உங்களுடைய அடிப்படை திட்டம், சந்தை முதலீடு மற்றும் கடந்த காலச் செயல்திறன் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் முதலீடு செய்யப்போகும் மெய்நிகர் நாணயத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து முடிவு செய்யுங்கள்.

மோசடி முகவர்கள்

வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கான மெய்நிகர் நாணய பரிமாற்ற முகவர்கள் உள்ளனர். அத்தகைய போலி முகவர்கள் உங்களிடம் அதிக வருமானத்தை வழங்குவதற்கான போலி வாக்குறுதியுடன், போலி நாணயங்களை விற்பனை செய்வர். எனவே, உங்களுடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், www.bitcoin.org என்கிற வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்களிடம் மட்டுமே பரிவர்த்தனைகளில் ஈடுபடுங்கள்.