வைகாசி விசாகம் - கந்தக் கடவுள்

வைகாசி விசாகம் - கந்தக் கடவுள்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



வேல் வகுப்பு ஒளஷதம் போன்றது. ஒரு மருந்து நோய்களை தீர்ப்பது போல இந்த வகுப்பு புற நோயை நீக்கும். பிறவிப் பிணியை போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள் ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து என்பார் .

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் ...... 1

பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் ...... 2

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் ...... 3

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் ...... 4

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் ...... 5

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் ...... 6

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் ...... 7

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் ...... 8

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் ...... 9

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் ...... 10

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் ...... 11

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் ...... 12

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் ...... 13

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் ...... 14

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் ...... 15

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே ...... 16

உலகங்கள் அனைத்திற்கும் ஒளி விளங்க, அமைதி நிலையமான திருத்தணியில் உதயமாகும் ஞான திவாகரன், உலகம் அனைத்தையும் தாங்கும் குறிஞ்சிக் கிழவன், அடியேன் உள்ளத்தில் தங்கி இருக்கும் கடவுள், மயில் எனப்படும் ஆவரண சக்தியை ஏறி நடத்தும் எம்மான், உயிர்களின் உள்ளமாம் குகையில் எப்போதும் உறைகின்ற ஒப்பற்றவன் ஆகிய குகப் பெருமான் திருக்கரத்தில் தாங்கி இருக்கும் ஞான சக்தியாகிய வேலாயுதம்,

1. வள்ளிப் பிராட்டியின் திருக்கண்களுக்கு ஒப்பாகும்,
2. இந்திரனின் கால் விலங்கின் முளை தெறிக்க அராவும் அரமாகும்,
3. குகையை இடித்து வழி தெரியும்படி செய்யும்,
4. பேய்களின் பசி அகல உபகரிக்கும்,
5. அனைவரையும் துன்பப்படுத்தும் வினைப் பெருக்கங்களை மோதி
அழிக்கும்
6. ஒளி எல்லாம் நாண பேரொளி வீசும்,
7. அடியவர்களுக்கு இடையூறு செய்பவர்களின் குலத்தையே நாசம் செய்யும்
8. எனக்கு எப்போதும் ஒப்பற்ற துணையாக வந்து உதவும்,
9. திருப்புகழ் பாடுவோருக்கு நேரும் பகைகளை அறுத்து எறிய
ஆக்ரமித்து புறப்படும்,
10. அறத்தை நிலை பெறச் செய்யும்,
11. எமன் பற்றவரின் மார்க்கண்டேயரைக் காக்க சிவபிரான் நீட்டிய
திருவடி போல் விரைந்து வந்து அந்த எமனை கண்டித்து
அடியாரைக் காக்கும்,
12. இறைவனின் திருக்கரங்கள் அசையும்போதெல்லாம் சிவ கணங்களை
அழுதுண்ண அழைப்பதுபோல் தானும் தனது திருமுடியை
வளைத்து காட்டும்,
13. தனி வழியில் வேறு துணையின்றி செல்லும்போதெல்லாம் இரவும்
பகலும் துணையாக வந்து அச்சம் அகற்றும்,
14. அரக்கர்களின் பெருங்குடல்களை எடுத்து மாலைபோல் விருப்பமுடன்
சூடிக்கொள்ளும்,
15. கடலை உடைத்து, புனலைக் குடித்து, உடைந்த உடைப்பை
அடைத்து அதில் அவுணரது குருதி நிறைத்து விளையாடும்,
16. சிறகுகளுடன் மலைகள் பறக்கின்றது என கண்டவர்கள்
கூறுமளவிற்கு விண்ணில் வேகமுடன் அதிர்ச்சி காட்டி ஓடும்,
17. போர்க்களத்தில் எதிர்த்த அவுணர்களின் தலைகளை அறுத்து,
பற்களை கடித்து, கண்ணை உருட்டி, வீறிட்டு அலற அவைகளை
மோதும்

... என்றெல்லாம் 'அறக்கருனை மறக்கருணை' இருப்பைப் பாடும் முறையில் வேலாயுதத்தின் பரத்துவத்தை பாடுகிறார் நம் அருணை முனிவர்.