வருமானவரி தாக்கல் செய்யும் முன் முதல்ல இதப்படிங்க

வருமானவரி தாக்கல் செய்யும் முன் முதல்ல இதப்படிங்க

7 Things to Keep In Mind While Filing Tax Returnsவருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமானவரி தாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலானோருக்கு எதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரியாது மற்றும் சிலருக்கு இதைத் தவிர்த்துவிடலாம் என எளிதில் நினைத்துவிடுவர் இது இரண்டுமே ஆபத்து. அதிலும் குறிப்பாக, முதல்முறை வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஏராளமான தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரி தாக்கலின் போது கவனத்தில் கொள்ளவேண்டிய 7 முக்கியமான விசயங்கள் இதோ.

1) படிவம் 26AS-ஐ சரிபார்த்தல் இந்த வருடம் வருமானவரி தாக்கல் செய்யவேண்டும் எனத் தெரிந்த உடனேயே படிவம் 26AS-ஐ சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் வரி விவரங்கள் உங்கள் பான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யலாம். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் படிவம் 16 உங்களுக்கு வழங்கப்படும். உங்களிடம் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரி, உங்கள் வருமானத்திற்கு மீதான TDSஐ உள்ளடக்கிய வரி மற்றும் வட்டி விவரங்கள் படிவம் 26AS-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

2) வட்டி விவரங்களைக் குறிப்பிடுதல் நிரந்தர வைப்புநிதி மற்றும் இதர வரிச்சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் வரிவிலக்கு பெற்றவை என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிசெலுத்த வேண்டும். இந்தச் சேமிப்புத் திட்டங்களுக்குப் பிரிவு80cன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு அது பொருந்தாது.

3) ஆதார் விவரங்கள் குறிப்பிடுதல் சில விசயங்களில் ஆதார் விவரங்கள் தேவையா வேண்டாமா என விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வருமானவரி தாக்கலின் போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் ஆதார் இல்லாதவர்களுக்கு இது கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை இருப்பவர்கள் கண்டிப்பாக அதன் விவரங்களைக் குறிப்பிடவேண்டும். இல்லையெனில் வருமான வரித் துறையின் நோட்டீசை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

4) முன்பு பணியாற்றிய நிறுவனங்களைக் குறிப்பிடுதல் ஒரு நிதியாண்டில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், முந்தைய நிறுவனத்தின் விவரங்களைக் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். தற்போதைய நிறுவனங்கள் அந்த நிதியாண்டில் மீதியுள்ள மாதங்களுக்கு மட்டுமே வரி கணக்கிடப்பட்டுப் பிடித்தம் செய்யப்படும். எனவே பணியாற்றிய அனைத்து நிறுவனங்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் சலுகைகளை இருமுறை அனுபவிக்க வாய்ப்பிருந்தாலும், அப்படிச் செய்யமுடியாது. ஏனெனில் முந்தைய நிறுவனம் செலுத்திய வரிவிவரங்கள் படிவம் 26AS ல் தெரிந்துவிடும் என்பதால், கண்டிப்பாக மாட்டிக்கொள்ள நேரிடும்.

5) வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களைத் தெரியப்படுத்துதல் உங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் தெரியப்படுத்துதல் மிக முக்கியம். உங்கள் வங்கி கணக்குகள், துவங்கிய தேதி, வட்டி வருவாய் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்

6) அனைத்து சொத்துவிவரங்களையும் தெரியப்படுத்துதல் ஆண்டு வருமானம் ரூ50 லட்சத்தைத் தாண்டும் போது உங்களின் ஒவ்வொரு சொத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வருமான வரம்பிற்குள் வருகிறவர்கள் தங்களின் அனைத்து அசையா சொத்துகள் மற்றும் பணம், நகை, பங்குகள், பத்திரங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் பெற்ற கடனுக்கு விலக்கு உண்டு. இவற்றுடன் முக்கியமாக இந்தச் சொத்துகளின் மதிப்பைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.

7) குறித்த நேரத்திற்குள் வருமானவரி தாக்கலை செய்தல் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதிகளையும் கடைபிடித்துவிட்டுக் கடைசியாக இந்த ஒன்றில் கோட்டை விட்டுவிடக்கூடாது. கடைசி நாளான ஜூலை 31க்குள் வருமானவரியைத் தாக்கல் செய்யவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு எவ்வித அபராதமும் இல்லை மற்றும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி முந்தைய ஆண்டிற்குக் கூடத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது விதிகள் கடினமாக்கப்பட்டு ரூ5000 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான வரியைத் தாக்கல் செய்யத் தயாரா? இந்த விதிகளை நீங்கள் புரிந்துகொண்டாலே வருமானவரி தாக்கலை சுலபமாகச் செய்துவிடலாம். எப்படியிருந்தாலும் துவக்கத்தில் சில விதிகளைப் புறக்கணித்தல், சில சொத்து விவரங்களைத் தவறவிடுதல், விதிகளைத் தெரியாதிருத்தல், சரியான நேரத்தில் தாக்கல் செய்யாதிருத்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பர். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே வருமானவரி தாக்கல் செய்தவர்களின் உதவியை நாடலாம்.