தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்

தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்!!!

ஒரு நமைச்சல்,உண்மையில் சில எரிச்சலூட்டும் விரும்பத்தகாத பொருளுடன் தொடர்புக்கு எதிரான உடலின் பாதுகாப்பு யுக்தியாகும். ஆனால் அரிக்கும் தோல் என்பது மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினைகளில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு சொரிகிறீர்களோ அவ்வளவு அதிகமாக அரிப்பு ஏற்படும்.
நீங்கள்அரிப்பதைத்தொடர்ந்தால், அது தோலில் இடைவெளி ஏற்படுத்துவதுடன் பிறகு தொற்றுக்கும் வழி வகுக்க்கலாம்.இங்கே சில எளிதாக வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்கள், உங்கள் அரிப்ப் ஆரம்பிக்கும் போது அதை குறைப்பதற்க்காக சொல்லப் பட்டுள்ளன,

#தேங்காய் எண்ணை

அது உலர் சருமத்தாலோ அல்லது பூச்சி கடியினாலோ, அரிப்பிற்கு என்ன காரணமாக இருந்தாலும், தேங்காய் எண்ணை அற்புதங்களைச் செய்ய முடியும்.அதை உபயோகிக்க சிறந்த வழி, நேரடியாக அதை கைகளில் தேய்த்துக் கொண்டு பாதிக்கப் பட்ட பகுதிகளில் பூசுவது தான். பரவலான் அரிப்பு உணர்வை உடல் முழுவது உணர்ந்தால், குறிப்பாக குளிர் காலங்களில், ஒரு குளியல் தொட்டியில் மிதமான நீரில் ஊறி, பின்னர் உங்களை தட்டி உலர்த்தி பின்னர் உடல் முழுவதும் தடவவும். தேங்காய் எண்ணையின் பலன்களைப் பற்றி மேலும் படியுங்கள்

#பெட்ரோலியம் ஜெல்லி

உங்கள் தோல் மிகவும் உணர்ச்சியுள்ளதாக இருந்தால், மிகச் சிறந்த வழி பெட்ரோலியம் ஜெல்லி. அதில் எந்த தீங்கு விளைக்கும் ரசாயனங்களும் இல்லை, இயற்கையான குணத்திலேயே தோலை மென்மையாகும் செய்கை உள்ளது. அதனால், அது உங்கள் நமைச்சல் விடுவிப்பதுமட்டும் இல்லாமல்,தோல் எரிச்சலைக்குறைவாக ஆககவும் உறுதி அளிக்கிறது..எல்லாவற்றையும் விட சிறந்தது, பாதுகாப்பானது மட்டுமல்லாமல் செலவும் இல்லாததால், எவ்வளவ் தடவை அதைத் தடவுகிறோம் என்று கவலைப் பட வேண்டாம். பெட்ரோலியம் ஜெல்லியை நல்ல சருமத்திற்கும் முடிக்கும் உபயோகிக்க 8 வழிகள் இங்கே.

#எலுமிச்சை
வைட்டமின் சி மற்றும் வெளுக்கும் பண்புகள் நிறைய உள்ளடக்கியஎலுமிச்சை, நமைச்சலுக்கு சிறந்த வைத்தியங்களில் ஒன்று.எலுமிச்சையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உணர்ச்சியில்லாமல் திறன் உள்ளது மற்றும் வீக்கம் எதிராகவும் மற்றும் உணர்ச்சியில்லாமல் செய்யும் திறன் உள்ளது. ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதைப் பிழிந்து சிறிது சாறை எடுத்து அரிக்கும் இடத்தில் தவி, அதை காற்றில் உலர விட்டால் நீங்கள் விரைவில் நிவாரணத்தைப் பார்க்கலாம்

#சமையல் சோடா
ஒரு சிறிய பகுதியில் அரிப்பால பாதிக்கப் பட்டால் அதை சமையல் சோடாவுடன் சமாளிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பங்கு நீரை மூன்று பங்கு சமையல் சோடாவுடன் கலந்து பசை செய்து அதை அரிக்கும் பகுதியில் தடவவும். எனினும் இந்த மருந்தை உங்கள் சருமம் விரிசல் விட்டிருந்தால் உபயோகிக்க வேண்டாம். உடல் முழுவதும் அரிப்பு பரவியிருந்தால், ஒரு கப் சோடாவை ஒரு டப் மிதமான நீரில் அரை மணி நேரம் ஊறி, அதை காற்றில் உலர்த்தவும். இங்கே சமையல் சோடாவை அழகுப் பொருளாக உபயோகிக்க, உங்களுக்கு உதவும் விரைவான வழிகாட்டி

#துளசி இலை
துளசி இலைகள் நிறைய தைமால், யூஜினால் மற்றும் கற்பூரம் நிறைந்தத்தால், தோல் எரிச்சலைக் குறைக்கும் திறன் கொண்டுள்ளது..சில துளசி இலைகளை எடுத்து கழுவி, அதை பாதிக்கப் பட்ட பகுதியில் தேய்க்கவும். அல்லது சில இலைகளை நீரில் மூடிய பாத்திரத்தில் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து, பின் அதில் ஒரு ப்ருத்து பந்தையோ அல்லது துணியையோ அழுத்தி, அதை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கவும்.

#ஆப்பிள் சாறு காடி
பலர் வினிகரை உச்சந்தலையில் பொடுகுகிற்காக உபயோகிக்கிறார்கள். அதே தர்க்கத்தில் தான் இது அரிக்கும் தோலிலும் வேலை செய்கிறது. இது ஒரு நல்ல கிருமி நாசினிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு நடவடிக்கை உள்ளது, அதனால் இத் ஒரு ந்ல்ல அரிப்பு எதிர்ப்பு முகவராக இருக்கிறது. ஒரு சிறிய பருத்தி பந்து அல்லது துணியை சிறிது ஆப்பிள் சாறு வினிகரில் தோய்த்து அதை அரிப்புள்ள பகுதியில் தட்டவும். அல்லது உடல் முழுவதும் ஒரு பொதுவான அரிப்பை உணர்ந்தால், ஒரு கப் ஆப்பிள் சாறு வினிகரை உங்கள் குளிக்கும் நீரில் சேருங்கள். ஆப்பின் சாறு வினிகரின் வியக்கும் ஆரோக்கிய பலன்கள் இங்கே

#கற்றாழை
அதன் அனைத்துஈரப்பதச்செயலால்,கற்றாழைமிகவும் பயனுள்ளதோலை மென்மையாக்கும் முகவர்களில் ஒன்றாகும்.நீங்கள்அரிக்கும்இடத்தின் மேல்ஜெல் தேய்க்கும் போது, அது அந்தப் பகுதியில் எரிச்சலைக் குறைத்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஒரு செடியிலிருந்து ஒரு கற்றாழை இலையை உடைத்து, அதை நீள்வாட்டில் கத்தியை உபயோகித்து வெட்டி ஒரு ஸ்பூனை உபயோகித்து உள்ளேஜெல்லிபோன்ற பொருளை வெளியே கரண்டி எடுக்கவும். இதில் சிறிதளவு ஜெல்லை அரிக்கும் பகுதிகளில் தடை அதை சில நிமிடங்கள் விட்டு விடவும். உங்கள் தோலுக்கும் முடிக்கும் கற்றாழை எப்படி சிறந்தது என்று படிக்கவும்.
நீங்கள் அரிப்பான தோலால் அவதிப் பட்டால், உங்களை சொரிந்து கொள்வதற்கு பதிலாக இந்த வீட்டு வைத்தியங்களை முயலவும்.அந்த அரிப்பு தானாகவே குறைவதை நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்த பொருட்கள் பயன்படுத்தியும் உங்களுக்கு நிவாரணம் இல்லையென்றால், எதனால் இந்த அரிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். செயற்கை பொருளால் செய்யப்பட்ட சில ஆடை ஒவ்வாமை, அல்லது ஒரு உணவு ஒவ்வாமை சில நேரங்களில் அரிப்பு அறிகுறிகளை அமைக்கலாம். ஆனால் இந்த அரிப்பு பகுதிகளில் நிற மாற்றம் அல்லது வ்டுக்கள் ஏற்படுதல் அல்லது அந்த பரப்பு பளபளப்பாதல் அல்லது அரிப்பு கடுமையாக உங்கள் தூக்கத்தை தொல்லை செய்வதாக இருந்தால், சரியான் சிகிச்சைக்கு ஒரு மருத்துவரை தொழில்முறை கருக்த்து கேட கண்டிப்பாக பார்ப்பதை உறுதி செய்யவும்.