நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...

நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...

தங்க நகைகள்
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் பதிக்கப் பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகை களை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
கற்கள் பதித்த நகைகள்
* கற்கள் பதித்த நகைகளை தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கு நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின், சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை வெளியேறி விடும்.
முத்து நகைகள்
* காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடை வில் மங்கி விடும். எனவே, ஒப் பனைகள் முடிந்த பின், முத்து நகை களை அணிய வேண்டும்.
வெள்ளி நகைகள்
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்து விட்டதா? கவலை வேண்டாம். கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.