செவிலியின் வலிகள்(Nurses)

செவிலியின் வலிகள்(Nurses)
.
செவிலி என்றால் உங்கள் அதிகம் பேருக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் இருக்கும்
.
நர்ஸ் அம்மா வை தான் செவிலி என்று தமிழ் மொழியில்  அழைக்கிறோம்
.
நர்சிஸ் என்றாலே அவர்களை கேவலமாக பார்க்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
.
ஆனால் அவர்களை நினைத்து பார்ப்பது இல்லை
.
நீங்கள் ரோட்டில் அடிப்பட்டு கிடக்கும் போது 108 க்கு  போன் செய்வீர்கள் அந்த ஊர்தியில் தெய்வம் போல் வந்து உங்களுக்கு உதவுவது செவிலி தான்
.
ஆனால் நம் நாட்டு செவிலி க்கு சம்பளம் குறைவாக தான் இருக்கிறது
.
மருத்துவமனையில் நீங்கள் நோயுற்று நடக்க கூட முடியாமல் நோயால் அவதி பட்டு கொண்டு இருப்பீர்கள்
.
உங்களின மலம் ஜலம் கழிக்க கைதாங்கலாக கூட்டி கொண்டு போவாள் செவிலி
.
நீங்கள் ஜ சி யு இருக்கும் போது ஒரு குழந்தையை போன்று உங்களுக்கு உணவு அழித்து உங்களுக்கு முடி வெட்டி உங்களின் கழிவுகளை அகற்றி நீங்கள் வலியால் கதறும் போது உங்கள் கைகளை பற்றி கொண்டு உங்களுக்கு சேவை செய்தாள் செவிலி
.
ஆனால் அவளின் சொந்த வாழ்க்கை கான ஒரு துணையை தேடும் போது அவளை இந்த சமுதாயம் ஒரு கேவலமான பார்வை பார்க்கும்
.
நான் உங்களை தான் சொல்கிறேன்
.
நமக்கேல்லாம் பகல் பகலாககவும் இரவு இருளாகவும் இருக்கும்
.
பல செவிலி களுக்கு பகல் இரவாகவும் இரவு பகலாகவும் இருக்கும்
.
தனக்கு சாப்பிட நேரம் இல்லாமல் நோயாளிக்கு சாப்பிட கொடுக்கும் செவிலிகளும் உண்டு
.
உன் உடல் உறுப்புகளை ஒரு வயதிற்க்கு பிறகு உன் தாயையோ உன் காதலியை கூட தீண்ட விட மாட்டாய் ஆனால் உன்னை குணபடுத்த செவிலி தீண்ட வேண்டும்
.
நீ அவர்களிடம் சிரித்து பேசாவிட்டாலும் பறவா இல்லை கேவலமாக எண்ணாதே
.
அதிகம் இரவு வேலை செய்வதால் அதவாத உறங்காமல் இருப்பதால் அவர்களின் உடல் மெலிந்து தான் காணப்படும்
.
இனிமேலாவது நீங்கள் மருத்துவமனைக்கு போகும் போது அவர்களை உங்கள் சகோதரியாகவும் உங்கள் பிள்ளைகள் போன்றும் நினையுங்கள் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்
.
மருத்துவரால் என்னேரமும் நெருக்கடி வந்து கொண்டு இருக்கும் போது நீங்களும் அவர்களை நெருக்கடி செய்யாதீர்கள்
.
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கலாம் ஆனால் சேவை செய்ய ஒரு சில நல்ல மனமே உள்ளன
.

.
நல்ல குணம்
.
நல்ல பொறுமை
.
சேவை மனப்பான்மை
.
அடுத்தவரின் வலியை புரிந்து கொள்ளும்
.
இப்படி பட்ட அன்னை தெராசாக்கள் எல்லா மருத்துவமனையிலும் பணி செய்கிறார்கள்
.
இனிமேலாவது அதை புரிந்து கொண்டு அவர்களை உற்சாக படுத்துங்கள்
.