ஓட்டிப்போன கன்னமா இருக்கா குண்டு கன்னங்கள் வேண்டுமா..?

ஓட்டிப்போன கன்னமா இருக்கா குண்டு கன்னங்கள் வேண்டுமா..?



  கன்னங்களை புஸ் புஸ் ஆக்குகிறது தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழை பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர, குஷ்பு கன்னங்கள் கிடைக்கும்.

நாற்பது வயதை நெங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்து விடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.

தக்காளி விழுது, பாதாம் விழுது… தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது
 கரை செல்வன்  

வாத நாசக முத்திரை !!!

வாத நாசக முத்திரை !!!




வாத நாடி  கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும். மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை,ரத்த ஓட்ட குறைவால்  உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றிர்க்கு நிவாரணம் தருவது இந்த முத்திரை.

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும். இதுவே வாத நாசக முத்திரை.காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.


செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்?

செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்?



பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்.

சரியான திசை முக்கியம் மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரின் திசை தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.

செல்வம் பெருக காரணங்கள் தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைக்கக் கூடாத திசை எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

குருவின் ஆதிக்கம் வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வடகிழக்கில் வைக்க வேண்டிய செடி துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது தான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.


 செல்வம் பெருகும் மணி பிளான்ட் மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.


அகல் விளக்கை ஏற்றினால்- என்னென்ன பயன்கள் கிடைக்கும்

அகல் விளக்கை ஏற்றினால்- என்னென்ன பயன்கள் கிடைக்கும்



அகல் விளக்கை இந்த திசையில் ஏற்றுவதால் கடன் சுமை மற்றும் கஷ்டங்கள் அதிகரிக்குமாம்! எந்தெந்த திசையில் அகல் விளக்கை ஏற்றினால், என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

கோவில்களில் மட்டுமிண்டி, வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பண்பு பெரும்பாலானவர்களது வீடுகளில் நாம் காண முடியும். விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று இல்லாமல், தினமும் அகல் விளக்கு ஏற்றும் பழக்கத்தை பல வீடுகளில் காண முடியும். ஆனால், அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மை மற்றும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து இங்கு காணலாம்..

கிழக்கு! அகல் விளக்கை கிழக்கு திசையில் ஏற்றினால் உங்களை பின்தொடரும் துன்பங்கள் நீங்கும், சமூகத்தில் நல்ல மதிப்பும், பெயரும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேற்கு! மேற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால், உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விளகம்.

வடக்கு! வடக்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.

தெற்கு! தெற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் எதிர்பாராத தொல்லைகள், கடன் சுமை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் வீட்டில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பஞ்சு திரி! பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் சுபம் கூடும்

தாமரை தண்டு திரி! தாமரை தண்டு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் முன் பிறவி பாவங்கள் அகலும், செல்வம் பெருகும்.

வாழை தண்டு திரி! வாழை தண்டி திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளெருக்கு பட்டை திரி வெள்ளெருக்கு பட்டை திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் செய்வினை விலகும், ஆயுள் அதிகரிக்கும்.


அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள் ...

அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்




1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது.
3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
4. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
5. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
6. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
7. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
8. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
9. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
10. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
11. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
12. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், "கனகதாரை'' நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
13. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
14. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
15. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
16. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
17. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதிபரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
18. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
19.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
20. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள்.
கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
21. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
22. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை பிதர்மகடம்` எனப்போற்றுவர்.
23. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
24. அட்சய திருதியை நாளில் பிவசந்த் மாதவாய நம' என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.
25. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
26. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
27. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
28. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
29. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
30. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

வாசலில் எலுமிச்சை மிளகாய், கரி சேர்த்து கட்டு - அறிவியல்

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டு - அறிவியல்




இது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க!

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது மூட நம்பிக்கை அல்ல. அதற்கு பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.
வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.
ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன?

அலக்ஷ்மி!
எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார். என்ற கதை ஒன்றை கூறுவார்.

மூடநம்பிக்கை!
அலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.

அறிவியல் என்ன கூறுகிறது?
எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

ஆரோக்கியம்!
இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

என்ன லாஜிக் இது?
சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.

வேறு கருவிகள்!
இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மருவியது!
ஏதோ காரணத்திற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு செயல்பாடு. பிற்காலத்தில். மூட நம்பிக்கை, ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என மருவிவிட்டது என்பது தான் உண்மை!

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்…!!!

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்…!!!





விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெயில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் – கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பணம் கொட்டுமா?

பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும்



ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூற கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா?

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  1

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  2

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 ஆக இருந்தால், வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  3

3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.


நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  4

4 எனில், அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும்.


நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  5

5  எனில், அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.


நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  6

எண்ணிக்கை 6 ஆக இருக்கும் போது, வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.


நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  7

கூட்டு எண்ணிக்கை 7 எனில், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.


நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  8

8 ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இது கெட்ட ஆற்றலை வெளியேற்றி நல்ல ஆற்றலை வீடு முழுவதும் உலாவச் செய்கிறது.


நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  9

9.பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது நல்லது. 

பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் !

பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் !




1.மோதிரம் ..

மோதிர விரலில் பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்படுகிறது. நம்மைச் சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு கட்டை விரல் மோதிரங்கள் உதவுகின்றன. பெரும்பாலானவர்கள் நடு விரல்களில் மோதிரம் அணிவதில்லை. அவ்வாறு அணிந்தால், முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் கூட தங்கள் விரல்களில் மோதிரம் அணிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

2.தோடு ..

சிறு வயதில் காது குத்தி, தோடு போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. பெண்களுக்கு காது நரம்புகளுடன் கண்கள் மற்றும் உயிர் உற்பத்தி செய்யும் உறுப்புக்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், நல்ல கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன.

3.மூக்குத்தி ..

மூக்குத்தி பெண் குழந்தைகளுக்குக் காது குத்தும் சடங்கு நடக்கும் போது, மூக்குக் குத்தும் படலமும் அரங்கேறுவது வழக்கம். வயதுக்கு வந்ததும், மாதவிடாயினால் தோன்றும் வலிகளைக் குறைப்பதற்காகவே அவர்களுக்கு மூக்குத்தி அணியப்படுகிறது. இடது மூக்கில் மூக்குத்தி அணிந்து கொள்வதால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நரம்பு உயிர் உற்பத்தில் செய்யும் உறுப்புக்களைத் தூண்டுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் எளிதாவதாகக் கூறப்படுகிறது.

4.தாலி (அ) நெக்லஸ் ..

தாலி (அ) நெக்லஸ் பெண்கள் தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. குறிப்பாக, தாலிகளில் அணிந்து கொள்ளும் ஒவ்வொரு சிறு அணிகலனும் பெண்களின் உடம்பையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.

5.வளையல் ..

வளையல் சீரான இரத்த ஓட்டத்திற்கு, தங்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களும் பெண்களுக்குக் கை கொடுக்கின்றன. அவை வட்ட வடிவில் இருப்பதால், வளையல்கள் மூலம் தூண்டப்படும் மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல் உடலுக்குள்ளேயே செலுத்தப்படுகிறது. இதனால் அவர்களுடைய எனர்ஜி அதிகரித்து, உள்ளங்கைகளும் வலுவாகின்றன.

6.நெற்றிச் சுட்டி ..

 நெற்றிச் சுட்டி தலையிலிருந்து தவழ்ந்து வந்து நெற்றியில் அழகாகக் குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.

7.இடுப்பணி ..

இடுப்பணி பெண்கள் தங்கள் இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் அல்லது அரைஞான் கயிறை அணிந்து கொள்வது வழக்கம். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்குமாம்! வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.

8.கொலுசு ..

கொலுசு பூமியுடன் பெரும்பாலும் தொடர்பிலிருக்கும் கால்களில் பெண்கள் அணியும் கொலுசு, அது தரும் ஒலியின் மூலம் அவர்களிடம் பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம்! மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும் கொலுசு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

9.மெட்டி ..

மெட்டி இரு கால்களிலும் உள்ள கட்டை விரலுக்கு அருகிலிருக்கும் விரலில் மெட்டி அணியப்படுவது வழக்கம். பெண்களின் கருப்பையையும் இதயத்தையும் இணைக்கும் நரம்பு, இந்த விரல் வழியாகப் பாய்வதால், அவர்களுடைய மாதவிடாய் கால இரத்த இழப்பை சீராக்குவதோடு, பிரசவ காலத்திலும் உதவுகிறது. பொதுவாகவே, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

தமிழக உள்ள நதிகள்

தமிழக உள்ள நதிகள்




1. கடலூர் மாவட்டம்

a)தென்பெண்ணை,
b)கெடிலம்,
c)வராகநதி,
d)மலட்டாறு,
e)பரவனாறு,                              
f)வெள்ளாறு,
g)கோமுகி ஆறு,
h)மணிமுக்தாறு,
i)ஓங்கூர்

2. விழுப்புரம் மாவட்டம்

a)கோமுகி ஆறு,
b)மலட்டாறு,
c)மணிமுத்தாறு

3. காஞ்சிபுரம் மாவட்டம்

a)அடையாறு,
b)செய்யாறு,
c)பாலாறு,
d)வராகநதி,
e)தென்பெண்ணை,                
f)பரவனாறு

4. திருவண்ணாமலை மாவட்டம்

a)தென்பெண்ணை,
b)செய்யாறு,
c)வராகநதி,
e)வெள்ளாறு

5. திருவள்ளூர் மாவட்டம்

a)கூவம்,
b)கொஸ்தலையாறு,
c)ஆரணியாறு,
d)பாலாறு

6. கரூர் மாவட்டம்

a)அமராவதி,
b)பொன்னை

7. திருச்சி மாவட்டம்

a)காவிரி,
b)கொள்ளிடம்,
c)பொன்னை,
d)பாம்பாறு

8. பெரம்பலூர் மாவட்டம்

a)கொள்ளிடம்

9. தஞ்சாவூர் மாவட்டம்

a)காவிரி,
b)வெட்டாறு,
c)வெண்ணாறு,
d)கொள்ளிடம்,
e)அக்கினி ஆறு

10. சிவகங்கை மாவட்டம்

a)வைகையாறு,
b)பாம்பாறு,
c)குண்டாறு,
d)கிருதமல் ஆறு,

11. திருவாரூர் மாவட்டம்

a)காவிரி,
b)வெண்ணாறு,
c)பாமணியாறு,
d)குடமுருட்டி

12. நாகப்பட்டினம் மாவட்டம்

a)காவிரி,
b)வெண்ணாறு

13. தூத்துக்குடி மாவட்டம்

a)ஜம்பு நதி,
b)மணிமுத்தாறு,
c)தாமிரபரணி,
d)குண்டாறு,                                
e)கிருதமல் ஆறு,
d)கல்லாறு,
e)கோராம்பள்ளம் ஆறு

14. தேனி மாவட்டம்

a)வைகையாறு,
b)சுருளியாறு,
c)தேனி ஆறு,
d)வரட்டாறு,
e)வைரவனாறு

15. கோயம்புத்தூர் மாவட்டம்

a)சிறுவாணி,
b)அமராவதி,
c)பவானி,
d)நொய்யலாறு,
e)பம்பாறு
f)கெளசிகா நதி

16. திருநெல்வேலி மாவட்டம்

a)தாமிரபரணி,
b)கடனா நதி,
c)சிற்றாறு,
d)இராமநதி,
e)மணிமுத்தாறு,
f)பச்சை ஆறு,
g)கறுப்பா நதி,
h)குண்டாறு,
i)நம்பியாறு,
k)கொடுமுடிஆறு,
l)அனுமாநதி,
m)கருமேனியாறு,
n)கரமணை ஆறு

(சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு.குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )

17. மதுரை மாவட்டம்

a)பெரியாறு,
b)வைகையாறு,
d)குண்டாறு,
e)கிருதமல் ஆறு,
f)சுள்ளி ஆறு,
g)வைரவனாறு,
h)தேனியாறு,
i)வாட்டாறு,
j)நாகலாறு,
k)வராகநதி,
l)மஞ்சள் ஆறு,
m)மருதாநதி,
n)சிறுமலையாறு,
o)சுத்தி ஆறு,
p)உப்பு ஆறு

18. திண்டுக்கல் மாவட்டம்

a)பரப்பலாறு,
b)வரதம்மா நதி,
c)மருதா நதி,
d)சண்முகாநதி,                                          e)நங்கட்சியாறு,
f)குடகனாறு,
g)குதிரையாறு,
h)பாலாறு,
i)புராந்தளையாறு,                      
j)பொன்னை,
k)பாம்பாறு,
l)மஞ்சள் ஆறு

19. கன்னியாகுமரி மாவட்டம்

a)கோதையாறு,
b)பறளியாறு,
c)பழையாறு,
d)நெய்யாறு,
e)வள்ளியாறு

20. இராமநாதபுரம் மாவட்டம்

a)குண்டாறு,
c)கிருதமல் ஆறு,
d)வைகை,
e)பாம்பாறு,                                                           f)கோட்டகரையாறு,
g)உத்திரகோசம் மங்கை ஆறு

21. தருமபுரி மாவட்டம்

a)காவிரி,
b)தொப்பையாறு,
c)தென்பெண்ணை

22. சேலம் மாவட்டம்

a)காவிரி,
b)வசிட்டாநதி,
c)வெள்ளாறு

23. விருதுநகர் மாவட்டம்

a)கௌசிகாறு,
b)வைப்பாறு,
c)குண்டாறு,
d)அர்ஜுனா நதி,
e)கிருதமல் ஆறு

24. நாமக்கல் மாவட்டம்

a)காவிரி,
b)உப்பாறு,
c)நொய்யலாறு

25. ஈரோடு மாவட்டம்

a)காவிரி,
b)பவானி,
c)உப்பாறு

26. திருப்பூர் மாவட்டம்

a)நொய்யலாறு,
b)அமராவதி,
c)குதிரையாறு

27. புதுக்கோட்டை மாவட்டம்

a)அக்கினி ஆறு,
b)அம்பூலி ஆறு,
c)தெற்கு வெள்ளாறு,
d)பம்பாறு,                          
e)கோட்டகரையாறு

இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.

தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்:

நீர்த் தேக்கத்தின் பெயர்
***********************

வராக நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி

3. சாத்தனூர்

4. தும்பஹள்ளி

5. பாம்பார்

6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்

8. மணிமுக்தா நதி

9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்

11. சின்னாறு

12. சேகரி குளிஹல்லா

13. நாகவதி

14. தொப்பையாறு

15. பவானி சாகர்

16. குண்டேரி பள்ளம்

17. வரட்டுப் பள்ளம்

18. அமராவதி

19. பாலாறு, பெருந்தலாறு

20. வரதமா நதி

21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)

22. வட்டமலைக் கரை ஓடை

23. பரப்பலாறு

24. பொன்னையாறு

25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை

27. மஞ்சளாறு

28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)

30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)

31. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

32. குள்ளுர் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணிமுத்தாறு

34. கடனா

35. ராம நதி

36. கருப்பா நதி

37. குண்டாறு

கோதையாறு நதிப

் படுகை

38. பேச்சிப் பாறை

39. பெருஞ்சாணி

40. சித்தாறு - i

41. சித்தாறு - ii

மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்

பெரியாறு நதிப் படுகை

42. பெரியாறு

43. மேல் நீராறு அணைக்கட்டு

44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப்படுகை

45. சோலையாறு

46. பரம்பிக்குளம்

47. தூனக்கடவு

48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு

50. திருமூர்த்தி

இப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.

தமிழக நீர்நிலைகள்

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய்விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்துவிட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் ஆட்சியாளர்களால்தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம் இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை வணங்குவதைபோல நதிதீரங்களை வணங்கி பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.

நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்:!!!

நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்





1.சூரியபகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
2.சந்திரபகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
3.செவ்வாய்பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
5.குருபகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து
குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள்
குறையும்.
6.சுக்ரபகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து
முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
7.சனிபகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் ச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான
கெடுபலன்கள் குறையும்.
9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று
செய்யவும்.

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?





நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன் - 10 சுற்றுகள்
சுக்கிரன் - 6 சுற்றுகள்
சந்திரன் - 11 சுற்றுகள்
சனி - 8 சுற்றுகள்
செவ்வாய் - 9 சுற்றுகள்
ராகு - 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் - 5, 12, 23 சுற்றுகள்
கேது - 9 சுற்றுகள்
வியாழன் - 3, 12, 21 சுற்றுகள்
------------------------
யோகம் தரும் நவக்கிரகங்கள்
1. சூரியன் - ஆரோக்கியம்
2. சந்திரன் - புகழ்
3. செவ்வாய் - செல்வச் செழிப்பு
4. புதன் - அறிவு வளர்ச்சி
5. வியாழன் - மதிப்பு
6. சுக்கிரன் - வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் - மகிழ்வான வாழ்க்கை
8. ராகு - தைரியம்
9. கேது - பாரம்பரியப் பெருமை

பெண்களே உங்களுக்கு மார்பில் மச்சம் இருக்குதா?அப்போஅட்ரா சக்கை !

பெண்களே உங்களுக்கு  மச்சம் இருக்குதா?




நம் உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம்.

பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள்.

பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.

இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும்.

இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.

புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.

காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.

மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.

உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாட்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.

தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.

கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பத்து, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.

பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.

இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.

பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.

சனி நீராடு… எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன கிடைக்கும்



சனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.
அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில்
சனி நீராடு என குறிப்பிட்டிருக்கிறார்.
நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர்.

ஒருசிலர் அசனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். அசனி எனும் சொல்லுக்கு சாம்பிராணி இலை என்று பொருள் கூறுகின்றனர். அந்த சாம்பிரானி இலையை நீரில் ஊரவைத்து நீராடுவது பலவித உடல் மற்றும் சரும கோளாருகளுக்கு நல்லது என்றும் எனவே சாம்பிராணி இலை குளியலைதான் அவ்வாறு கூறப்படுகின்றது என்கின்றனர்.
இன்னும் ஒருசாரர் ஜனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். தினமும் புதிதாக உற்பத்தியாகும் ஊற்றுநீரைதான் ஜனி நீர் என்றும் ஊற்று நீரில் குளிப்பது உடலுக்கும் ஆரோக்கிய்த்திற்க்கும் நல்லது என்கின்றனர்.
சரி. மருத்துவம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போமே.
நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம். நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள்.
வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பதாகும். மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.
எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்

கட்டுரையின் முடிப்பதற்கு முன் ஜோதிட ரீதியான விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.
முதலில் சனி நீராடு என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான? எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியளைதான் குறிக்கிறது.
அது ஏன் நல்லெண்ணை? அனைத்து என்னைகளுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியள் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
அது ஏன் வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க
ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகின்றது?
சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம்.
மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.
1. சனி தோஷம் விலகும்.
2. சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்
3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.
5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள்.
எது எப்படியோ! சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு மிளகு ரசம் சாப்பிட்டு ஓய்வு எடுப்பது கூட சுகம்தானே. பிறகென்ன? குளித்துதான் வைப்போமே. என்ன நான் சொல்றது?

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும்

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும் !!!




1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்

2.ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

3.மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

4.கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

5.சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

6.கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

7.துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

8.விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.

9.தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

10மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

11.கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

12.மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)




காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்

"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.