பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்றால் என்ன?



வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம் 


Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



பிட்காயின் குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

பிட்காயின் என்று வார்த்தை அன்மை காலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இதில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருக்கும்.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி முதலீடுகளை அரசு ஆதரிக்கவில்லை என்றாலும் பலரும் அதில் முதலீடு செய்து வருவதை நாம் அன்றாடும் கேட்டு வருகின்றோம். எனவே பிட்காயின் குறித்த உங்களுக்கு உள்ள கேள்விகளுக்கான பதிலை இங்குப் பார்க்கலாம்.

பிட்காயின் என்றால் என்ன?
இது நாணயம் அல்ல, ஆனால் விரிச்சுவல் நாணம் எனப்படும். கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமானது பிட்காயின் ஆகும். இதனை வைத்து பரிவர்த்தனையும் செய்ய முடியும், இந்த நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பு வசதியுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பிட் காயின் எங்குக் கிடைக்கும்?
இந்தியாவில் 11 தளங்கள் பிட்காயினை முதலீட்டைப் பெற்று நிர்வகிக்கின்றன. அவை யூனோகாயின், ஸெப்பே, காயின்மாமா, லொக்கல் பைட்கின்ஸ், பிட்காயின் ஏடிஎம்கள் ஆகும்.

அதிக விலையா?
உலகளவில் பிட்காயினின் மதிப்பு பல மடங்கு உஅர்ந்து 11,000 டாலரை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பில் 1 பிட்காயின் 8.6 லட்சம் ரூபாயாகும்.

பிட்காயினைப் பணக்காரர்களுக்கான நாணயமா?
இல்லை பிட்காயினை நீங்கள் 1,000 ரூபாய்க்கும் வாஙலாம். எப்படி 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என இந்திய நாணயங்கள் உள்ளதோ அதேப்போன்று பிட்காயினும் குறைந்த மதிப்பில் கிடைக்கிறது.

இந்தியாவில் பிட்காயினை எங்கு எல்லாம பயன்படுத்த முடியும்?
தற்போது வரை பிட்காயினைப் பரிய அளவில் பயன்படுத்த கடைகள் இல்லை. ஆனால் இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மற்றும் மேக் மை டிரிப் நிறுவனங்கள் பிட்காயினைப் பரிவர்த்தனைக்காக ஏற்கின்றனர்.

இந்தியாவில் தற்போது வரை எவ்வளவு பிட்காயின் வாங்கப்பட்டுள்ளது?
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 200 முதல் 250 கோஇ வரை பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர்.

பிட்காயின் போன்று வேறு கிரிப்டோ கரன்சிகள் உள்ளனவா?
Ethereum, Litecoin, Dash மற்றும் Rippl போன்றவையும் பிட்காயின் பொன்ற பிரபல கிரிப்டோ கரன்சிகள் ஆகும். விலையில் மாற்றங்கள் உண்டு.

உலகளவில் எவ்வளவு பேர் பிட்காயினைப் பயன்படுத்துகிறார்கள்?
உலகம் முழுவதும் பிட்காயினில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் முதலீடு செய்துள்ளார்கள்.

எந்த அளவில் பிட்காயினிக்கு மதிப்பு உள்ளது?
2013-ம் ஆண்டுப் பிகாயினில் முதலீடு செய்த ஒருவர் டெஸ்லா எஸ் மாடல் காரை 92 பிட்காயின் கொடுத்து வாங்கியுள்ளார் என்றால் பாருங்கள். டெஸ்லா எஸ் மாடல் கார் ஒன்று 1,00,000 டாலர் விலை ஆகும்.