பச்சை வாழைப்பழம்!

பச்சை வாழைப்பழம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…?

என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

நோய் எதிர்ப்பு!

உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட முடியும். இதனால் புற்று நோயாளிகளை கூட ரிக்கவர் ஆக்கலாம் என ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தின் ஆய்வில் அறியப்பட்டுள்ளது. தினமும் தியானம் செய்வது மார்பக புற்றுநோய் வளராமல் தடுக்கிறது. இது இயற்கையாக புற்றுநோய் கட்டியை உருவாக்கும் செல்களை அழிக்க பயனளிக்கிறது.

உணர்வு சமநிலை! எமோஷனலாக ஒருவரின் நிலையை சீராக வைத்துக் கொள்ள தியானம் பெருமளவு உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை இலகுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மனதில் ஆழ பதிந்திருக்கும் அழுக்கு, நிறைகுறைகள் போன்றவற்றில் இருந்து வெளிவர தியானம் ஒரு சிறந்த கருவி.

கருவளம்! மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைகழக ஆய்வு மட்டும் துருக்கியின் ட்ரக்கியா பல்கலைகழக ஆய்வுகளில் தியானம் செய்வது மூலமாக ஆண், பெண் இருவர் மத்தியிலும் கருவளம் அதிகரிக்க செய்யலாம் என அறியப்பட்டுள்ளது. ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு, விந்து நீந்துதல் போன்றைவை சரியாக, கருவளத்தை ஊக்குவிக்க தியானம் பயனளிக்கிறது.

குடல் எரிச்சல் நோய்! Irritable Bowel Syndrome எனப்படும் குடல் எரிச்சல் நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை தியானம் செய்து வந்தால் நல்ல மாற்றம் உணரலாம். இது உப்பசம், வயிற்றுப் போக்கு, செரிமான கோளாறுகள் போன்றவை சரியாக உதவுகிறது. இதை நியூயார்க் பல்கலைகழக ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

குறைந்த இரத்த அழுத்தம்! ஹார்வார்ட் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில், தியானம் செய்வதால் அழுத்தம் சார்ந்த ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, அவற்றின் மூலமாக குறைந்த இரத்த அழுத்தம் சீர் செய்யப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. அதே போல பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வறிக்கை பத்திரிக்கை ஒன்றில் குறைந்த இரத்த அழுத்தம் உடைய நோயாளிகளுக்கு தியான பயிற்சி அளிப்பதால் அதில் இருந்து விடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி! தியானம் செய்பவர்கள், தியானம் செய்யாதவர்கள் என பிரித்து நடத்திய ஆய்வில், தியானம் செய்பவர்கள் அதிகம் கோபப்படுவதில்லை, அதே போல அவர்கள் எல்லா சூழலையும் அமைதியான வழியில் கையாள்கிறார்கள். இதனால், அவர்களால் சிக்கலான சூழல்களையும் கூட எளிமையாக காண முடிகிறது என அறியப்பட்டுள்ளது.

இன்ஃப்ளமேஷன்! ஸ்ட்ரஸ் அதிகரிப்பது இன்ஃப்ளமேஷன் உண்டாக காரணியாக இருக்கிறது. இது இதய நோய், மூட்டு நோய், ஆஸ்துமா மற்றும் சரும பிரச்சனைகள் அதிகரிக்க செய்யும். அமெரிக்காவின் எமோரி பல்கலைகழக ஆய்வாளர்கள் ரிலாக்ஸ் செய்வதால் இதை தடுக்கலாம் என கூறியுள்ளனர். கனடாவின் மெக்கில் பல்கலைகழகம் தியானம் செய்வதால் சொரியாசிஸ் அறிகுறிகள் குறைகிறது என கண்டறிந்துள்ளனர்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!