What are the Different Types of ITR Forms?

*Who & Which ITR Form should file*

What are the Different Types of ITR Forms?



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

*There are nine types of forms which a taxpayer could use to file his Income tax return*

*ITR-1*
*ITR-2*
*ITR-2A*
*ITR-3*
*ITR-4*
*ITR-4S*

*The following income tax return forms are only applicable to companies and firms*

*ITR-5*
*ITR-6*
*ITR-7*


*WHO SHOULD FILE ITR_1*

This income tax return form is also called a Sahaj form. The ITR-1 form is to be filed solely by an individual taxpayer.
. This form is applicable to- Salaried Person or Pension holder, Income from single house property, for agriculture income less than 5000, Income from investments like FD, Investments, Share, etc.


*WHO SHOULD FILE ITR_2A*


The ITR-2A form was introduced for the assessment year 2015-16 and is a new income tax return form that can be used by a Hindu Undivided Family (HUF) or an individual taxpayer. The ITR-2A form is applicable to Salaried Person or Pension holder, Income from single house property, for agriculture income less than 5000, Income from investments like FD, Investments, Share, etc.


*WHO SHOULD FILE ITR_2*

The ITR-2 Form is generally used by individuals who have accrued income through the sale of assets or property as well as individuals who earn income from countries outside India. Individuals or Hindu Undivided Families (HUF) can avail of this form to file their returns. This form is applicable to Income from Salary or Pension, Capital gains, Income from more than one house property, Holding assets outside India, Agriculture income more than 5000, Income from lotteries or horse racing


*WHO SHOULD FILE ITR_3*

The ITR-3 Form is to be used by a taxpayer who is either an individual or a Hindu Undivided Family (HUF) who solely operate as a partner in a firm but who do not conduct any business under the firm or who do not earn any income from the business conducted by the firm. This form can be filed by those taxpayers whose taxable income earned from business is only in the form of the following received as a partner:
• Salary
• Commission
• Bonus
• Interest
• Remuneration

*WHO SHOULD FILE ITR_4*

The ITR-4 form is to be used by those individuals who conduct a business or who earn income through a profession. This form is applicable to any type of business, undertaking or profession, with no limit on the income earned. Along with the income earned from business, taxpayers can also club any income they receive from windfalls, speculation, salaries, lotteries, housing properties etc with their business income. Any individual ranging from shopkeepers, doctors, designers, agents, retailers, contractors etc is eligible to file their income tax returns using this form.

*WHO SHOULD FILE ITR_4S*

The ITR-4S form is also known as the Sugam form and can be used by any individual or Hindu Undivided Family (HUF) for filing their tax returns. This form is applicable to Income from any business, Income from Single house property, Agriculture income less than 5000
This income tax return form is used in special circumstances and applies to businesses where any income earned is based on a presumptive method of calculation.

*WHO SHOULD FILE ITR_5*

The ITR-5 form is to be used by only by the following entities for filing income tax returns:
• Firms
• Limited Liability Partnerships (LLPs)
• Body of Individuals (BOIs)
• Association of Persons (AOPs)
• Co-operative Societies
• Artificial Judicial Persons
• Local Authorities


*WHO SHOULD FILE ITR_6*

The ITR-6 form is to be used only by companies except those companies or organisations that claim tax exemption as per Section 11. Those organisations that claim tax exemptions as per Section 11 are organisations wherein the income received is accumulated from the property used for the purpose of religion or charity. This particular income tax return form can only be filed online.


*WHO SHOULD FILE ITR_7*

The ITR-7 income tax form is to be filed by individuals or companies that are required to submit their returns under the following sections:
• Section 139(4A) - Under this section, returns can be filed by those individuals who receive income from any property that is held for the purpose of charity or religion in the form of a trust or legal obligation
• Section 139(4B) - Under this section, returns are to be filed by political parties provided their total income earned is above the non-taxable limit
• Section 139(4C) - Under this section, returns are to filed by the following entities:
• Any institution or association mentioned under Section 10(23A)
• Any association involved with scientific research
• Any institution mentioned in Section 10(23B)
• Any news agency
• Any fund, medical institution or educational institution
• Section 139(4D) - Under this section, returns are to be filed by entities such as colleges, universities or any other such institution wherein income returns or loss are not required to be provided in accordance with other provisions outlined in this section.

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெருமாள்  கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து

 சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.

ஒரு குழந்தையை  தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.

நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.

உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.

ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.

இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.

மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார்
 தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே  தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.

பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.

அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.

சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.

சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.

ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.

எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.

சடாரி வைக்கும் பொழுது பணிந்து  புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி   குனிந்து  பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

பருவத மலையின் சிறப்பம்சம்

பருவத மலையின் சிறப்பம்சம்



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.

இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

சிறப்புகள்:

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு:

மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

போக்குவரத்து வசதி:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்

வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்

வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்.

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

முருகப்பெருமானின் கரத்தில் விளங்கும் வேலாயுதம் வடிவாலும், வனப்பாலும், அது செய்யப்பட்ட மூலப்பொருளாலும் புராணச் சிறப்பாலும் அது நிகழ்த்திய வீரச்செயலாலும் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது.

இவ்வகையில் அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கின்றன.

சில வேல்களின் இலைப்பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது.உயர்ந்த இரத்தினங்கள் இழைக்கப்பட்டுச் செய்யப்பட்ட வேல் நவரத்தின வேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல், மாணிக்கவேல் என்றும், வைரக்கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும் முத்துகள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும், அன்பர்கள்பால் அருள்புரியும் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பதால் குணரத்தின வேல் என்றும், மணிரத்தினவேல் என்றும், தங்கமாக எண்ணத்தில் திளைப்பதால் தங்கவேல் என்றும் எதிரிகளைச் சங்கரித்து அழிப்பதால் சத்ரு சங்காரவேல் என்றும் அழைக்கப்படுகிறது.

அவரவர் தகுதிக்கும் வளமைக்கும் செல்வச் செழுமைக்கும் ஏற்ப, வேல்களைப் பொன்னாலும் நவமணிகள் இழைத்தும் செய்து வழிபடுகின்றனர். என்றாலும், வீரர்கள் ஏந்தும் வேல்கள் யாவும் உறுதியான எஃகினால் செய்யப்படுவதாகும். அது கூர்மை மிக்கதாகவும் உறுதி மிக்கதாகவும் வீசி எறிவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

இப்படி அனேக வேல்கள் வழிபாட்டில் இருக்கின்றன.சக்திவேல்வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம் ஆகும். சக்தி என்னும் ஆயுதத்தின் வடிவம் என்பது மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்றதாகும்.

முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில், சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துகிறார். சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும்.

வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச்சிறப்புடன் போற்றப்படுகிறது. அன்பர்கள் சக்திவேல் என்றபெயரைச் சூட்டிக் கொள்கின்றனர். சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும். அதையொட்டியே அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.
தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை

ஏந்தியிருப்பதால், ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார்.
சிக்கல் சிங்காரவேலர், சுவாமிமலை சுவாமிநாதன், வைத்தீஸ்
வரன் கோயில் முத்துக்குமார சுவாமி போன்ற
முருகன் வடிவங்களுக்கு உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது. முருகன் மேற்கரங்களில் வஜ்ரம், சக்தி ஆகிய
இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும்

அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார்.முருகனைப் போலவே அவரது அணுக்கத் தொண்டரும், குகசண்டி என்று அழைக்கப்படுபவருமான சுமந்தரேசுவரர் சக்தியைத் தாங்கியுள்ளார்.

முருகன் ஆலயங்களில் அவனது படைக்கல வழிபாட்டிற்குச் சக்தி ஆயுதத்தையே வைத்துள்ளனர். வேலாயுதத்தை முருகப் பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர் என்பது பலரது கருத்தாகும்.

முருகன் ஆலயங்களில் சக்தி ஆயுதமே அஸ்திரதேவர் என்னும் படைக்கல தெய்வமாகப் போற்றப்படுகிறது. பெருந்திருவிழாவின் போது முருகனின் வீதியுலாவிற்கு முன்பாக சக்தி ஆயுதமே எடுத்துச் செல்லப்படுகிறது.

தீர்த்தவாரி விழாக்களிலும் சக்தி ஆயுதத்தையே நீராட்டி வழிபடுகின்றனர்.சக்ரவேல்இந்திய வழிபாட்டில் மந்திர பீஜங்களை வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவை இணைந்த கட்டங்களில் எழுதி வழிபடும் சக்கரவழிபாடு ஓர் அங்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு தேவதைக்கும் அதன் அருளாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சக்கரங்கள் பல உள்ளன.

இவ்வகையில் வேலாயுதத்தைப் போற்றும் வகையில் அமைந்த பல சக்கரங்கள் வழிபாட்டில் இருக்கின்றன. இவற்றில் சில சக்கரங்களை வேலின் இலை போன்ற பகுதியில் கீறி அமைத்துள்ளனர். சிலவற்றைச் சதுரமான தகட்டில் எழுதி உருட்டி வேலின் தண்டுப்பகுதியில் உள்ள இடைவெளியில் செலுத்தி மூடி விடுவதும் உண்டு.

பொதுவான நிலையில் வேலின் மையத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் அறுகோணத்தை இட்டு அதன் மையத்தில் ஓம் எனும் பிரணவத்தையும் சுற்றியுள்ள ஆறு முக்கோணங்களில் ச, ர, வ, ண, ப, வ எனும் ஆறு எழுத்துகளையும் எழுதி வழிபடுகின்றனர். மேலும், சடாட்சர சக்கரம், சத்ரு சம்ஹார சக்கரம், சக்தி நிலைய சக்கரம் போன்ற சிறப்பு நிலையில் அமைந்த சக்கரங்களையும் வேல் வழிபாட்டில் காண்கிறோம்.

இவற்றில் குறிப்பிடத்தக்கது அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் ஆலயத்திலுள்ள ஆறுமுகவேலவரின் கையிலுள்ள வேலாயுதமாகும். இங்குள்ள ஆறுமுகநாத சுவாமி திருக்கரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் உள்ளது. இதில் பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பவர் இந்தச் சக்கர வேலாயுதத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் செங்குந்த குலத்தில் தோன்றி வாழ்ந்த அழகப்ப முதலியார் குமாரரான பழனிச்சாமி முதலியார் சிறந்த சித்த புருஷராவார். அவர் இந்த ஆலயத்தில் திருமதில், வாகனக் கிடங்கு, பிராகார மண்டபம் முதலியவற்றை முன்னிருந்தபடியே கட்டி குடமுழுக்கு செய்வித்தார் என்பதை இங்குள்ள ஒரு கல்வெட்டால் அறிகிறோம்.

அவர் அமைத்துள்ள இந்தச் சக்கரம் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. இதனை ‘‘சத்ருசங்கார வேல் சக்கரம்’’ என்றும் கூறுகின்றனர்.
மேலும், அருணகிரிநாதசுவாமிகள் அருளிய வேல் வகுப்பை வேல்மாறல் எனும் யந்திரமாக அமைத்தும் வழிபடுகின்றனர். வேல் வகுப்பான பதினாறு அடிகளைத் திரும்பத் திரும்ப மாற்றி மண்டலித்து வரும்படி அறுபத்துநான்கு அடிகளாக விரித்துப் பாராயணம் செய்யும் முறையை, திருப்புகழ் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உண்டாக்கினார்கள். இந்த அமைப்பு வேல்மாறல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வழிபாட்டில் சதுரத்தின் நடுவே அமைந்த வட்டத்தின் நடுவில் ஆறுவேல்களின் வடிவில் எழுதப்பட்ட இதழ்களின் வேல் வகுப்பை எழுதிச் சக்கரமாக அமைத்து வழிபடுகின்றனர். இதில் மூன்று வேல்கள் இலைவேல்களாகவும், மூன்று வேல்களைச் சக்தி வேல்களாகவும் மாறி மாறி வரும்படி அமைத்துள்ளனர். இது வள்ளிமலை சுவாமிகளின் பக்தர்களால் மிகவும் சிறப்புடன் இப்போதும் போற்றப்படுகிறது. இது வேல்மாறல் யந்திரம் ஆகும்.

மந்திரவேல்
*************

முருகன் ஏந்தும் வேலுக்கு உரிய பெயர்களில் மந்திரவேல் என்பதும் ஒன்றாகும். கல்லாடம் எனும் நூல் வேலாயுதத்தை ‘‘உள்ளத்திருளும் இடைபுகுந்து இருள் துடைத்த மந்திரத் திருவேல்’’ என்று போற்றுகிறது.மந்திரம் என்பதற்கு நீங்காது உடனிருந்து
காப்பது என்பது பொருளாகும். தன்னை வணங்கும் அன்பர்களை விட்டு நீங்காது காத்து அருள்புரிவதால் வேலுக்கு மந்திரவேல் என்பது பெயராயிற்று. ‘‘வேலும் மயிலும் துணை’’ என்பது மகாமந்திரம்.

கந்தர்சஷ்டி கவசத்தில் ‘‘மந்திர வடிவேல் வருக வருக’’ என்று பாலதேவராயர் வேலை அழைப்பதைக் காண்கிறோம்.சைவ சமயம் கூறும் மகாமந்திரம் ஐந்தெழுத்தாகிய நமசிவாய என்பதாகும். இதனை‘‘சிவமஞ்செழுத்து’’ எனவும் குறிப்பர். அருணகிரிநாதர் வேலாயுதத்தையே சிவமஞ்செழுத்து என்னும் சொல்லால் குறிக்கின்றார். சிதம்பரத்தில் அருளிச் செய்துள்ள திருப்புகழில் ‘‘வெங்களத்தில் அவுணன் தெரித்து மயங்க சிவமஞ்செழுத்தை முந்த விடுவோனே’’ என்று அவர் பாடுவதைக் காண்கிறோம்.

இங்கே வேல் என்பதற்கு இணையான சொல்லாகச் சிவமஞ்செழுத்து (பஞ்சாட்சரம்) என்று குறித்திருப்பதைக் காண்கிறோம். மணிமந்திர நூலான கந்தர் அனுபூதியின் ஐம்பத்தோரு பாடல்களில் இருபத்தைந்து பாடல்களில் அருணகிரிநாதர் வேலைப் புகழ்கின்றார்.மந்திரவேல் நமக்கு அறிவையும், ஆற்றலையும் நல்கும் அற்புத வேலாக இருக்கிறது.

ரத்தினவேல்
*************

ரத்தினவேல் என்பதற்கு ரத்தினம் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட வேல் என்றும், நவரத்தினங்கள் பதித்த வேல் என்றும் பொருள் கூறுகின்றனர். புகழ் பெற்ற ஆலயங்களில் நவரத்தினக் கற்கள் இழைத்த விலை மதிப்புமிக்க வேலாயுதம் முருகனுக்கு சாத்தப்படுகிறது.நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவ வீரர்கள் ஏந்துகின்றனர்.

இவர்கள் அன்னை பராசக்தி தேவியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய1.மாணிக்கவல்லி, 2.முத்துவல்லி, 3. புஷ்பராகவல்லி,4. கோமேதகவல்லி, 5. வைடூர்யவல்லி, 6. வைரவல்லி, 7. மரகதவல்லி, 8.பவளவல்லி, 9.நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர். அவர்கள், 1. வீரபாகுதேவர், 2. வீரகேசரி, 3. வீரமகேந்திரன், 4. வீரமகேஸ்வரன், 5. புரந்தரன், 6. வீரராட்சசன், 7. வீரமார்த்தாண்டன், 8. வீராந்தகன், 9. வீரதீரன் ஆவர்.

முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர். அவையே நவரத்தின வேல்களாகும். இவை முறையே 1. மாணிக்க வேல் 2. முத்து வேல் 3. புஷ்பராக வேல் 4. கோமேதக வேல் 5. வைடூர்ய வேல் 6. வைர வேல் 7. மரகத வேல் 8. பவள வேல் 9. நீல வேல் என்றழைக்கப்பட்டன.இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்வதை பழைய கால ஓவியங்களில் கண்டு களிக்கலாம். இவர்கள் பகைவர்கள் மீது வேலைச் செலுத்தி வெற்றியை விளைவிக்கும் வீரர்களாகத் திகழ்கின்றனர். மக்கள் முத்து வேல், மரகத வேல், மாணிக்கவேல், ரத்தினவேல் என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

வஜ்ரவேல்
***********

வஜ்ஜிரம் என்பது இந்திரனின் ஆயுதம். இது இரண்டு சூலங்கள் தம்முன் இணைந்தது போல் இருப்பது. இதனைக் குலிசம் என்றும் அழைப்பர். நடைமுறையில் அனேகருக்கு சக்தி, வஜ்ரம் ஆகியவற்றின் வடிவம் தெரியவில்லை. அனேக இந்திரன் வடிவங்களில் அவன் வஜ்ஜிரத்திற்குப் பதில் சக்தி ஆயுதம் தாங்கியவனாகவே காட்டப்படுகிறான். மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்ற வடிவம் கொண்டதே சக்தி ஆயுதம். இது பெண் சக்தியாகும்.

புராணங்களின்படி இந்திரன் சக்தி ஆயுதம் கொண்டவனில்லை. அவன் வஜ்ஜிரம் எனப்படும் குலிசாயுதன் என்றும் வைரப்படையான் என்றும் இலக்கியங்கள் போற்றுகின்றன.

வஜ்ஜிரம் என்பதற்கு அறுக்க முடியாதது, துளைக்க முடியாதது, உடைக்க முடியாதது, சுருக்கமாக எதனாலும் சேதப்படுத்த முடியாததற்கு உரிய பெயராகும். இதை ஒட்டியே வஜ்ர பஞ்ரசம் (வைரக்கூடு) வஜ்ரக்கோட்டை, வஜ்ரதேவன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. எளிதில் வெல்ல முடியாததும், அழிக்க முடியாததுமான உறுதிமிக்க ஆயுதமாக வேல் இருப்பதால் அது வஜ்ரவேல் எனப்பட்டது. மக்கள் வஜ்ரவேல் என்ற பெயரைச் சூடியுள்ளனர்.வஜ்ரவேல் என்பது உறுதி, திண்மை, திறமையின் காரணமாக வேலுக்கு அமைந்த பெயராகும். அது வடிவத்தால் வந்த பெயர் இல்லை.

புராணங்கள் முருகன் ஏந்தும் வேலாயுதத்தை அதன் மேன்மை காரணமாக வஜ்ரவேல் என்று அழைக்கின்றன. மக்கள் உயர்ந்த ஜாதிக்கற்களான வைரத்துடன் பதித்த தங்க வேலையே வஜ்ரவேல் என்றழைக்கின்றனர். அனேக ஆலயங்களில் வைரக் கற்கள் பதித்த வேல்கள் இருக்கின்றன. நடைமுறையில் சக்தி ஆயுதத்தைத் தலைப்பில் கொண்ட சக்திவேலைப் போல வஜ்ராயுதத்தை முகப்பில் கொண்ட வஜ்ராயுத வேல்கள் இல்லை.

தங்கவேல்
***********

தங்கவேல் என்பதற்கு அன்பர்கள் இருவிதமான பொருளைக் கூறுகின்றனர். முதற்பொருள் எளிமையானது. அது உயர்ந்த உலோகமாகிய தங்கத்தால் செய்தது என்னும் பொருளைத் தருவதாகும். இரண்டாவது பொருள், அன்பர்களின் வாழ்வில் செல்வநலன்கள், வளம், மேன்மை போன்றவற்றை எந்நாளும் தங்கி இருக்கும்படி அருள்புரிவதால் வேலுக்குத் தங்கவேல் என்ற பெயர் வழங்குவதாகக் கூறுகின்றனர்.

ஆலயங்களில் தங்கத்தால் வேலாயுதத்தை செய்து முருகனுக்கு சாத்தியுள்ளனர். அதில் மேலும் அழகூட்ட உயர்ந்த ஜாதி வண்ணக் கற்களைப் பொருத்தியுள்ளனர். வேல் வழிபாடு மனதில் மகிழ்ச்சியைத் தங்க வைக்கும் வழிபாடாக
இருக்கிறது.

வெள்ளிவேல்
***************

வெள்ளி தூய்மையான உலோகம். அதனால் அதைக் கொண்டு பூஜைப் பொருட்களைச் செய்து வைக்கின்றனர். வெள்ளியில் செய்த வேலாயுதத்தை முருகனுக்கு சாத்துகின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் வெள்ளியால் செய்த வேலாயுதமும் சேவற்கொடியும் முருகனுக்கு சாத்தப்படுகின்றன. அன்பர்கள் வெள்ளியால் வேலைச் செய்து வைத்து வழிபடுகின்றனர். அனேக அன்பர்கள் இல்லங்களில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் வழிபாட்டில் இருந்து வருகிறது.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை

வேல் முருகா வேல்

வருமானவரி தாக்கல் செய்யும் முன் முதல்ல இதப்படிங்க

வருமானவரி தாக்கல் செய்யும் முன் முதல்ல இதப்படிங்க
7 Things to Keep In Mind While Filing Tax Returns



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமானவரி தாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலானோருக்கு எதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரியாது மற்றும் சிலருக்கு இதைத் தவிர்த்துவிடலாம் என எளிதில் நினைத்துவிடுவர் இது இரண்டுமே ஆபத்து. அதிலும் குறிப்பாக, முதல்முறை வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஏராளமான தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரி தாக்கலின் போது கவனத்தில் கொள்ளவேண்டிய 7 முக்கியமான விசயங்கள் இதோ.

1) படிவம் 26AS-ஐ சரிபார்த்தல் இந்த வருடம் வருமானவரி தாக்கல் செய்யவேண்டும் எனத் தெரிந்த உடனேயே படிவம் 26AS-ஐ சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் வரி விவரங்கள் உங்கள் பான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யலாம். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் படிவம் 16 உங்களுக்கு வழங்கப்படும். உங்களிடம் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரி, உங்கள் வருமானத்திற்கு மீதான TDSஐ உள்ளடக்கிய வரி மற்றும் வட்டி விவரங்கள் படிவம் 26AS-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

2) வட்டி விவரங்களைக் குறிப்பிடுதல் நிரந்தர வைப்புநிதி மற்றும் இதர வரிச்சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் வரிவிலக்கு பெற்றவை என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிசெலுத்த வேண்டும். இந்தச் சேமிப்புத் திட்டங்களுக்குப் பிரிவு80cன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு அது பொருந்தாது.

3) ஆதார் விவரங்கள் குறிப்பிடுதல் சில விசயங்களில் ஆதார் விவரங்கள் தேவையா வேண்டாமா என விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வருமானவரி தாக்கலின் போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் ஆதார் இல்லாதவர்களுக்கு இது கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை இருப்பவர்கள் கண்டிப்பாக அதன் விவரங்களைக் குறிப்பிடவேண்டும். இல்லையெனில் வருமான வரித் துறையின் நோட்டீசை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

4) முன்பு பணியாற்றிய நிறுவனங்களைக் குறிப்பிடுதல் ஒரு நிதியாண்டில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், முந்தைய நிறுவனத்தின் விவரங்களைக் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். தற்போதைய நிறுவனங்கள் அந்த நிதியாண்டில் மீதியுள்ள மாதங்களுக்கு மட்டுமே வரி கணக்கிடப்பட்டுப் பிடித்தம் செய்யப்படும். எனவே பணியாற்றிய அனைத்து நிறுவனங்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் சலுகைகளை இருமுறை அனுபவிக்க வாய்ப்பிருந்தாலும், அப்படிச் செய்யமுடியாது. ஏனெனில் முந்தைய நிறுவனம் செலுத்திய வரிவிவரங்கள் படிவம் 26AS ல் தெரிந்துவிடும் என்பதால், கண்டிப்பாக மாட்டிக்கொள்ள நேரிடும்.

5) வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களைத் தெரியப்படுத்துதல் உங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் தெரியப்படுத்துதல் மிக முக்கியம். உங்கள் வங்கி கணக்குகள், துவங்கிய தேதி, வட்டி வருவாய் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்

6) அனைத்து சொத்துவிவரங்களையும் தெரியப்படுத்துதல் ஆண்டு வருமானம் ரூ50 லட்சத்தைத் தாண்டும் போது உங்களின் ஒவ்வொரு சொத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வருமான வரம்பிற்குள் வருகிறவர்கள் தங்களின் அனைத்து அசையா சொத்துகள் மற்றும் பணம், நகை, பங்குகள், பத்திரங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் பெற்ற கடனுக்கு விலக்கு உண்டு. இவற்றுடன் முக்கியமாக இந்தச் சொத்துகளின் மதிப்பைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.

7) குறித்த நேரத்திற்குள் வருமானவரி தாக்கலை செய்தல் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதிகளையும் கடைபிடித்துவிட்டுக் கடைசியாக இந்த ஒன்றில் கோட்டை விட்டுவிடக்கூடாது. கடைசி நாளான ஜூலை 31க்குள் வருமானவரியைத் தாக்கல் செய்யவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு எவ்வித அபராதமும் இல்லை மற்றும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி முந்தைய ஆண்டிற்குக் கூடத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது விதிகள் கடினமாக்கப்பட்டு ரூ5000 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான வரியைத் தாக்கல் செய்யத் தயாரா? இந்த விதிகளை நீங்கள் புரிந்துகொண்டாலே வருமானவரி தாக்கலை சுலபமாகச் செய்துவிடலாம். எப்படியிருந்தாலும் துவக்கத்தில் சில விதிகளைப் புறக்கணித்தல், சில சொத்து விவரங்களைத் தவறவிடுதல், விதிகளைத் தெரியாதிருத்தல், சரியான நேரத்தில் தாக்கல் செய்யாதிருத்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பர். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே வருமானவரி தாக்கல் செய்தவர்களின் உதவியை நாடலாம்.



80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும் 7 சிறந்த வழிகள்

80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும் 7 சிறந்த வழிகள்
7 Best Tax Saving Options Other Than 80C



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வரிகளைப் பற்றித் திட்டமிடும் முன்பு, உங்களின் மொத்த வருமானம் மற்றும் வரிவிதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதன் மூலம் திறமையாக வரியை சேமிக்க முடியும். தனிநபர்கள் சிறப்பான முதலீடுகள் செய்வதுடன் அதன் மூலம் வரியையும் சேமிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தருகின்றது. பெரும்பாலும் வரி திட்டமிடலின் போது 80C பிரிவின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளைத் தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். சிறப்பாக வரியை சேமிக்க 80C பிரிவை தவிர 7 சிறந்த வரிச் சேமிப்புத் திட்டங்களை இங்கே காணலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்திய அரசு தனிநபர்களுக்காக மே2009ல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தது. இதன் கீழ், ஒவ்வொரு சந்தாதாரரும் நிரந்தர ஓய்வு கணக்கு எண் (Permanent Retirement Account Number -PRAN) மூலம் மத்திய பதிவாளர் அலுவலகத்தில் (Central Recordkeeping Agency) கணக்கு துவங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையிலான முதலீடுகளுக்குக் கூடுதல் வரிச்சலுகைகளை 80CCD (1B) பிரிவின் கீழ் பெறலாம். இதை வரிமானவரிச்சட்டம் 1961 ன் பிரிவு 80C ன் விலக்கு பெறும் ரூ1.5 லட்சத்திற்குப் பிறகு பெறலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் நீங்கள் தேர்வு செய்யும் முதலீட்டு வகையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக அதிக ஆபத்துள்ள பங்குகள் அல்லது பெருநிறுவன கடன் அல்லது அரசாங்க கடன் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

ராஜீவ்காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (பிரிவு 80CG) இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பங்குகளில் ரூ50,000 வரை முதலீடு செய்யலாம். இதற்காக வரிச்சலுகைகள் பிரிவு80GC ன் கீழ் வழங்கப்படும் நிலையில், முதல்முறை முதலீட்டாளர்கள் மட்டுமே வரிச்சலுகைக்காக இதில் முதலீடு செய்யமுடியும். இத்திட்டம் முந்தைய ஐ.மு.கூ அரசால் துவங்கப்பட்டது என்பதால் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. மறுசீரமைக்கப்பட்டுத் தொடக்க அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் இந்தத் திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்புடையது என்பதால் சற்று ஆபத்தானது.

கல்விக்கடன் மீதான வட்டி (பிரிவு 80E) கல்விக்கடனுக்கான வட்டியின் மீது மட்டுமே வரிச்சலுகைகள் தரப்படுகின்றன. கல்விக்கடனின் தவணைத்தொகைக்கு அல்ல. எனவே வரி தாக்கலின் போது கடனுக்காகச் செலுத்திய வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை கோரலாம். பிரிவு80c ன் கீழ் விலக்கு பெற்றதுக்கு மேலாக இந்தப் பிரிவில் விலக்குப் பெறலாம். மேலும் பிரிவு 80Eல் அதிகபட்சத்தொகை எதுவும் கிடையாது. பெரும்பாலும் இத்திட்டத்தைப் பற்றி யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதைப்பற்றியும் பலன்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

வீட்டுவாடகைப் படி (பிரிவு 80GG) நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வாடகைவீட்டில் வசித்து, வாடகை செலுத்திவருவதாக இருந்தால், வருமானவரிச் சட்டம் பிரிவு 80GGன் கீழ் வரிவிலக்குக் கோரலாம். நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து வரிவிலக்கு அளிக்கும் தொகை நிர்ணயிக்கப்படும். சில நகரங்களில் அதிகரித்துவரும் வாடகைக்கு ஏற்றவாறு இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றாலும், இன்னும் அது செய்யப்படவில்லை. இதைப்பற்றிய முழு விவரங்கள் உங்கள் நிறுவனத்திடம் பெறமுடியாது என்பதால், மனிதவளத்துறையை அணுகிப் பெறலாம்.

வீட்டுக்கடன்கள் கடந்த மத்திய நிதிநிலை அறிக்கையின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரிவு 24 ன் கீழ் வீட்டுகடன் வட்டிக்கான வரிவிலக்கை ரூ1.5 லட்சத்திலிருந்து 2லட்சமாக உயர்த்தினார். 2016-17 நிதியாண்டில் இருந்து கூடுதலாக ரூ50,000க்குப் பிரிவு 80EE ன் கீழ் வரிச்சலுகை கோரலாம். ஆனாலும் இதற்குக் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்திருக்க வேண்டும். வீட்டுக்கடன் முதலின் தவணைத்தொகைக்கான பலன்கள் எப்போதும் போல் பிரிவு 80Cன் கீழ் கிடைக்கும். இது 1லடசத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு (பிரிவு 80D) தனிநபர்கள் மருத்துவகாப்பீடு எடுப்பதன் மூலம் ரூ25,000 வரிவிலக்குப் பெறமுடியும். இதுவே மூத்தகுடி மக்களுக்கு ரூ30,000. மருத்துவகாப்பீடு எடுக்கும் இதுவும் பிரிவு 80C கீழ் தான் வருகிறது. ஆனால் 80Cன் கீழ் கிடைக்கும் பலன்கள் மூலம் உடல்நல பரிசோதனைகள் கூடச் செய்துகொள்ளமுடியும்.

நன்கொடைகள் (பிரிவு 80G) வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80G ன் கீழ் என்.ஐ.ஓக்களுக்கு வழங்குப்படும் நன்கொடைகளுக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். ஆனால் அத்தொகையைப் பணமாக அல்லது வரைவோலையாகத் தரும்போது மட்டுமே விலக்கு கோர முடியும். 50% அல்லது 100% நன்கொடைக்கு விலக்கு அளிக்கப்படும். வருமானவரி தாக்கலின் போது நன்கொடை பெற்ற நிறுவனத்தின் ஃபான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம். நீங்கள் நன்கொடை வழங்கத்தக்க அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் முழுப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைகள் (பிரிவு 80DDB) வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 80DDB ன் கீழ், குறிப்பிட்ட சில நோய்களின் மருத்துவத்திற்குச் செலவிடும் தொகைக்கு வரிச்சலுகைகள் கிடைக்கும். வரித்தாக்கல் செய்யும் தனிநபர்களுக்கு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்துள்ளவர்களின் மருத்துவச் செலவுகளுக்கும் வரிவிலக்குக் கோரலாம். ஆனால் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் இந்த வரிவிலக்கை பெற இயலாது. ஒரு வேளை இந்து கூட்டுக்குடும்பமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வரிவிலக்குக் கோரலாம்.

பிரிவு 80C என்றால் என்ன? வருமானவரிச் சட்டம்1961 ன் இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள பிரிவுகள்/ முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் வரிவிலக்குப் பெறமுடியும். இதில் அதிகபட்சமாக ரூ1,50,000 வரை வரிவிலக்குப் பெறலாம். 80C பிரிவின் கீழ் பங்குகளுடன் இணைந்த முதலீட்டுத் திட்டம், பொது வருங்கால வைப்புநிதி எனப் பல திட்டங்கள் உள்ளன. 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறும் முதலீட்டுத் திட்டங்களை அனைவரும் அறிவர் என்பதால், அதைத் தவிர்த்து பிற சிறந்த முதலீட்டுத் திட்டங்களை இங்கே வழங்கியுள்ளோம்.


உங்க சம்பளத்தில் எதற்கு வரி உண்டு - எதற்கு வரி இல்லை

உங்க சம்பளத்தில் எதற்கு வரி உண்டு - எதற்கு வரி இல்லை
Knowledge  What Is Taxed And What is Not From Your Total Salary



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மாதச் சம்பளதாரராக, நீங்கள் சம்பாதிக்கும் மொத்த தொகையை (CTC- Cost To Company) தெரிந்த வைத்திருப்பீர்கள். ஆனால் வருமான வரித்துறை மொத்த ஊதியத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு மொத்த வரி விதிப்பிற்குட்பட்ட வருவாயைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வரியை நிர்ணயிக்கும்.

ஆனால் சிடிசி என்பது பெரிய மதிப்பாக இருப்பதால், அதன் கீழ் வரும் எந்தெந்த பிரிவுகள் வருமானவரிக்கு உட்பட்டவை என இங்கே காணலாம்

சிடிசி என்றால் என்ன..?
சிடிசி (CTC-Cost To Company) என்பது, நிறுவனம் தனது பணியாளருக்குச் செய்யும் நேரடி செலவினம் ஆகும். அடிப்படை சம்பளம், வீட்டுவாடகைப் படி,சிறப்பு ஊதியம், போனஸ், தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு, பணிக்கொடை, பயணப்படி, மருத்துவச் செலவுகள், உணவு கூப்பன்கள் போன்றவை சிடிசி-ல் அடங்கும்.

உங்கள் மொத்த சம்பளத்தில் எந்தெந்த பிரிவிற்கு வரிவிலக்கு உண்டு, எவற்றிற்கு வரிப் பிடித்தம் செய்யப்படும் என்பதை இங்கே காணலாம்.

வரிவிலக்குப் பெற்ற பிரிவுகள்
1. தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு
2. பணிக்கொடையின் பணியாளர் பங்கு
3. வீட்டுவாடகைப் படி
4. உணவு கூப்பன் (ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ26,400)

வருமானவரி தாக்கலின் போதும், வரியினங்களைக் கணக்கிடும் போதும் உங்கள் சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில், வரிபிடித்தம் செய்யக்கூடிய இனங்கள் பின்வருமாறு.

1. அடிப்படை சம்பளம்
இதன் 100% ம் வரிக்கு உட்பட்டவை மற்றும் இது மொத்த சம்பளத்தில் 30-50% வரை இருக்கும். சம்பளத்தின் மற்ற அனைத்து இனங்களும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

2. வீட்டு வாடகைப்படி
பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் உறைவிடத்திற்கு ஏற்படும் செலவை வீட்டு வாடகைப்படி என வழங்குகின்றன. பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படும்.

i) சம்பள சான்றிதழில் குறிப்பிட்டுள்ள தொகை வரை
ii) அடிப்படை சம்பளத்தின் 40%
iii)10% அடிப்படை சம்பளத்திற்குக் குறைவாக உள்ள உண்மையான வாடகை

3. போனஸ் மற்றும் சிறப்பு ஊதியங்கள்
பணியாளர்களின் செயல்திறனை ஊக்குவிக்க வழங்கப்படும் சம்பள இனமான இது 100% வரிகளுக்கு உட்பட்டது.

4. விடுமுறை பயண ஊதியம் (Leave Travel allowance)
4 ஆண்டுகளில் 2 முறை இந்தச் சம்பள இனத்திற்கு வரிவிலக்குக் கோரலாம். பயணத்தில் ஏற்படும் செலவுகளுக்கு உரிய ஆதாரங்கள்/ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே வரிவிலக்கு கோர முடியும்.

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை.

அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.

வெற்றிக்கு தனி வழி

வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.   

உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன வி‌ஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

நட்சத்திர குறியீடுகள்:

1.    அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2.    பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3.    கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4.    ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5.    மிருகசீரி‌ஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6.    திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7.    புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8.    பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9.    ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10.    மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11.    பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு   மற்றும் மெத்தை

12.    உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13.    ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை

14.    சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15.    சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16.    விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்

17.    அனு‌ஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18.    கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19.    மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20.    பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்

21.    உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22.    திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23.    அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை

24.    சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25.    பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26.    உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27.    ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

சின்னங்களின் பயன்:

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.

அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த வி‌ஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான்.

இன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும். 

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வி‌ஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.

கிரகங்களுக்கான வாகனங்கள்

கிரகங்களுக்கான  வாகனங்கள்



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நவக்கிரகங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வாகனங்கள் இருப்பதை கவனித்திருப்போம். அந்த வாகனங்களும் ஒரு வகையில் நன்மை தரும் குறியீடுகளாக அமைகின்றன. அதாவது, சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை குறைக்கக்கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்கள் அல்லது சிறிய சிலைகளாக, உரிய திக்குகளில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

பயன்படுத்தும் முறை:

*    சூரிய தசா அல்லது புத்தி காலகட்டமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப்பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம்.

*    சந்திர தசா அல்லது புத்தி நடக்கும் காலகட்டம் நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம்.

*    செவ்வாய் தசா அல்லது புத்தியில் பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலை வைக்கலாம்.

*    புதன் கிரகத்தின் தசா அல்லது புத்தி நடக்கும்போது நன்மைகள் ஏற்பட, வீட்டின் வடகிழக்கு பகுதியில் குதிரையின் படம் அல்லது சிறிய அளவிலான சிலை வைக்கலாம்.

*    குருவின் தசா அல்லது புத்தி காலங்கள் நன்மை தருவதற்கு, வீட்டின் வடக்கு பகுதியில் யானையின் படம் அல்லது உருவத்தை வைத்து பராமரித்து வரலாம்.

*    சுக்ரனின் தசா, புத்தி காலம் நன்மையாக அமைய, வீட்டின் கிழக்கு பக்கம் கருடன் படம் அல்லது சிலை வைக்கலாம்.

*    சனி கிரகத்தின் தசா, புத்தி காலம் நல்ல விதமாக அமைய, வீட்டின் மேற்கு பக்கத்தில் பறக்கும் நிலையில் உள்ள காகத்தின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம்.

*    ராகு தசா அல்லது புத்தி நடக்கும் காலம் நல்லவிதமாக இருக்க, வீட்டின் தென்மேற்கு பகுதியில் ஆட்டின் படம் அல்லது சிறிய சிலை வைக்கலாம்.

*    கேது தசாபுத்தி நடக்கும் சமயத்தில் நன்மைகள் நடக்க, வீட்டின் வடமேற்கு பகுதியில் சிங்கத்தின் படம் அல்லது சிலை வைக்கலாம்.

அபிஷேக திரவியங்கள் தரும் பலன்

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்

அபிஷேக திரவியங்கள் தரும் பலன் :
****************************************

சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும்,

மணம் உள்ள தைலம் - சுகம் தரும்,

பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும்,

பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும்,

நெய் - மோக்ஷம் அளிக்கும்,

பால் - வாழ்நாள் வளர்ச்சி,

தயிர் - மக்கட் செல்வம் தரும்,

மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும்,

தேன் - சுகம் தரும்,

பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும்,

வாழைப்பழம் - பயிர் செழிக்கும்,

பல்லவம் - உலகை வயப்படுத்தும்,

மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும்,

மாதுளை - கோபத்தை நீக்கும்,

கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும்,

நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,

எலுமிச்சை - மரணபயம் நீக்கும்,

சர்க்கரை - பகை களையும்,

இளநீர் - இன்பங்கள் நல்கும்,

அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,

சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் இரு வகை :

(1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.

(2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.

காலத்தை வென்று நிற்கும் கால காலேஸ்வரர் கோவில்

காலத்தை வென்று நிற்கும் கால காலேஸ்வரர் கோவில்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

புண்ணிய பூமியான தமிழகத்தின் பெருமை பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயி லையும், ஸ்ரீ அபிராமி அன்னையின் கருணையையும் தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது. குழந்தை மார்க்கண்டேயனின் பக்தியைக் கண்டு திருவுள்ளம் மகிழ்ந்த திருக்கயிலைபதி எம்பெருமான், காலதேவனிடமிருந்து குழந்தை மார்க்கண்டேயனை க் காப்பாற்றி, என்றும் 16 வயது சிரஞ்சீவி பாலகனாக அனுக்ரஹம் செய்த பரம பவித்திரமான, தன்னிகரற்ற திருத்தலம் இந்தத் திருக்கடையூர்.

ஆயுட்காலம் என்பது நமது முற்பிறவி புண்ணிய, பாவங்களின் அடிப்படையில்தான் அமைகின்றது. இத்தகைய ஆயுட்காலத்தை மாற்றுவதற்கு இந்திராதி தேவர்களாலும் முடியாது. பகவான் ஒருவனால் மட்டும்தான் ஆயுட்காலத்தைக் குறைப்பதற்கோ அல்லது கூட்டுவதற்கோ முடியும்.

ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்குச் சக்தி கொண்டவர் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அமிர்தகடே ஸ்வரர் பெருமான். இதேபோன்று வைணவ திருத்தல ங்களில், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்கால த்தை அதிகரிப்பதற்குச் சக்தியுள்ள திருத்தலம், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீ அஹோபிலம் ஆகும்.

இத்தகைய தனி தெய்வீகப் பெருமை வாய்ந்த திருக்கடையூர் திருத்தலத்திற்கு இணையான ஓர் அற்புத சக்திவாய்ந்த திருக்கோயில் கொங்கு மண்டலத்திலுள்ள கோவில்பாளையம் என்னும் திருத்தலத்தில் தெய்வீக சுடரொளி வீசிப் பிரகாசிக்கு ம் ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோயிலாகும். விலைமதிப்பிட முடியாத கலைப்பொக்கிஷமான இத்திருக்கோயில், கோவை மாநகரத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் விளங்குகிறது.

தலத்தின் புராதனப்பெருமை!
********************************

ஒருகாலத்தில் பாரத புண்ணிய பூமியை ஆண்டுவந்த மன்னர் கௌசிகன். என்னதான் சக்ரவர்த்தியாகவே இருந்தாலும், மாமுனிவர்களுக்கு உள்ள தெய்வீகப் பெருமை, மரியாதை, மதிப்பு ஆகியவை மாமன்னர்க ளுக்குக் கிடைக்காது என்பதை அறிந்த மன்னன் கௌசிகன், தன் ராஜ்ஜிய போகங்களைத் துறந்து, கடும்தவம் புரிந்து விஸ்வாமித்திரர் என்ற கீர்த்திவா ய்ந்த மகரிஷியாக ஆனார். அவர் மிகப் பெரிய யாகம் ஒன்றை இவ்வூரில் செய்ததால் இத்திருத்தலத்திற்கு கௌசிகபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

விஸ்வாமித்திர மகரிஷி யாகம் நடத்திய இடம் இன்றும் திருநீற்றுமேடு என்று வழங்கப்பட்டு வருகிறது. அதனை இன்றும் கோவில்பாளையத்தில் தரிசிக்கலாம்.

திருக்கடையூரில் பரமபக்தனான சிறுவன் மார்க்கண்டேயனையும், அகிலாண்டநாயகனான ஸ்ரீ பரமேஸ்வரனையும் அவமதித்ததால் மனம் வருந்திய யமதர்மராஜன், சிவபெருமானைச் சரணடைந்து தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்து, அப்பாவத்திலிருந்து விடுபட வழி கூறி அருளுமாறு பிரார்த்தித்தான். தர்மராஜன் மீது இரக்கம் கொண்ட பெருமானும், கொங்கு நாட்டிலுள்ள பேரூர் அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்று தன்னைப் பூஜிக்கும்படியும், அதன் பலனாகத் தன்னை அவமதித்த தோஷத்திலிருந்து விடுபட்டு விடமுடியும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.

அக்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. பரமனின் கோவில்பாளையம் கானகத்தை அடைந்த யமதர்மன், தன் கையிலுள்ள தண்டத்தினால் பூமியை அழுத்த, அதிலிருந்து ஜலம் பிரவகித்தது. காலனுடைய தண்டத்தினால் தோன்றியதால் இந்தப் புனித தீர்த்தம் தண்டி தீர்த்தம் எனவும், காலப்பொய்கை எனவும் பூஜிக்கப்படுகிறது. ஆயுளை அபிவிருத்தி செய்யும் சக்தி கொண்ட தீர்த்தம் இது.

அந்தப் புனித தீர்த்தத்தைக் கொண்டு, அங்கிருந்த மண்ணைக் குழைத்து சிவலிங்கத் திருமேனியை வடிவமைத்த காலதேவன், பலகாலம் அப்பெருமானை ப் பூஜித்து, திருக்கடையூரில்தான் செய்த பாவத்திலிரு ந்து விடுதலை அடைந்தார்.

தர்மராஜரின் பக்தியினால் திருவுள்ளம் நெகிழ்ந்த ஸ்ரீ பரமேஸ்வரன், காலதேவனுக்குத் தரிசனமளித்து திருவருள்புரிந்தான். அப்போது இறைவனின் திருவடி களைப் பற்றிக்கொண்ட காலதேவன், ‘‘ஐயனே! திருக்கடையூரில் தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு எவ்விதம் தீர்க்கமான ஆயுளைத் தந்து அருளுகிறீர்களே... அதுபோன்றே இத்திருத்தல த்திலும் பக்தர்களுக்குத் தாங்கள் அருள்புரிந்து வர வேண்டும்...’’ என்று வேண்டினான். ஐயனும், ‘‘அவ்விதமே ஆகுக...’’ என்று அபயமளிக்க, அன்று முதல் திருக்கடையூருக்கு இணையாக இத்திருத்தலம் பூஜிக்கப்படுகிறது.

மன்னன் கரிகால் சோழன்!
*****************************

சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்திபெற்ற கரிகால் சோழன், ஒரு சமயம் எவ்வித காரணமுமில்லாமல் ஓர் இளம் பன்றியைக் கொன்றுவிட்டான். அந்த இளம்பன்றி துடிதுடித்து உயிரிழந்தது. அந்த விநாடியே கரிகால் சோழனை அந்தப் பாவம் பீடித்தது. முகம் பொலிவிழந்தது. இதனால் மனம் வருந்திய கரிகால் சோழன், நாரத மகரிஷியைக் குறித்து கடும் தவமியற்றினான். நாரத மகரிஷி அவனுக்குத் தரிசனமளித்து, உபதேசித்தபடி இத்திருத்தலம் வந்து ஸ்ரீ காலகாலேஸ்வரரைப் பூஜித்து, இளம் பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து மீண்டான். மீண்டும் அவன் முகம் மீண்டும் பொலிவுற்றது.

இத்திருக்கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்தான் கரிகாலன்.

வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்க த்தைப் பிரதிஷ்டை செய்து, அதன்பிறகு இத்திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தான் கரிகாலன். இந்த சிவலிங்கப் பெருமானை இத்திருத்தலத்தில் நாம் இன்றும் தரிசித்து மகிழ முடிகிறது.

அம்பிகை ஸ்ரீ கருணாகரவல்லி!
**********************************

ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னை ஸ்ரீ பார்வதி தாயல்லவா? அவள் கருணைக்கும், அன்புக்கும் அளவு இருக்க முடியுமா?

தனது குழந்தைகளான ஜீவகோடிகளின் மீது எல்லையற்ற கருணை கொண்டுள்ள இத்தல அம்பிகைக்கு கருணாகரவல்லி என்ற திருநாமம். அன்னையின் உதடுகளில் தவழும் புன்னகையும், இரு கண்களில் பிரகாசிக்கும் கனிவும், பக்தர்கள் மீது தாய் கொண்டுள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகி ன்றன. தாயின் திருமுகத்தில் பொங்கிவரும் அன்பையும், கருணையையும் தரிசிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

குரு தட்சிணாமூர்த்தி!
************************

கலையழகுப் பெட்டகமாய் அமர்ந்த திருக்கோலத்தில் இத்திருக்கோயிலில் தரிசனமளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அழகை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. சிலையா அது? இல்லை! இல்லை!! சிவபெருமானே தன் பக்தர்களுக்குத் திருவுள்ளம் உகந்து தட்சிணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறான் என்பதுதான் உண்மை. அழகென்றால் அழகு! அப்படியொரு பேரழகு!!

திருஞானசம்பந்தர் வழிபட்ட திருத்தலம்!
********************************************

கலைப்பொக்கிஷமான இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. முன்புறம் மூன்றுநிலை கோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. இறைவனின் சந்நிதானத்திற்கு முன் எழுந்தருளியிருக்கும் நந்தியெம்பெருமான் மரகத நிறத்தில் (பச்சை நிறம்) தரிசனமளிக்கிறார். இதுபோன்ற நந்தி மிகவும் அரிது. மரகத கற்கள் விசேஷ சக்தி பொருந்திய ஒரு தனி வகைப்பட்ட கல்லாகும்.

சிவபெருமான் யமதர்மனை காலால் எட்டி உதைக்கு ம் காட்சி அற்புத சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தின் தலவிருட்சம் வில்வ மரம் ஆகும். இத்தல முருகப் பெருமானின் திருமேனி வடிவழகு நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

பரிகார தலம்!
***************

மிகக் கொடிய நோய்களினால் ஏற்படும் வேதனைகள், வலி, உடல் உபாதைகள், ஆயுட்காலம் பற்றிய அச்சம் ஆகிய தோஷங்களுக்குப் பரிகாரமளி க்கும் தன்னிகரற்ற திருத்தலம் இந்த கோவில்பாளை யம் திருத்தலம். இங்கு ஆயுஷ்ஹோமம் செய்தால், ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். யமபயம் நீங்கும்.

கல்வெட்டுகள்!
****************

இத்திருக்கோயில் பற்றி ஏராளமான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து இத்திருக்கோயிலின் புராதனப் பெருமை தெரிய வருகிறது. இவற்றில் சோழர் காலத்து கல்வெட்டுகள் அதிகமாக உள்ளன. ஹோய்சலர் நாட்டினர் கல்வெட்டு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது. ஸ்ரீ முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் 12 திருக்கைகளுடன் தரிசனமளி ப்பது காணக் காணத் திகட்டாத அற்புத தரிசனமாகும்.

ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்!
********************************

சைவ - வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்குகின்றன கொங்கு நாட்டுத் திருக்கோயில்கள். ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோயிலிலும், அம்பிகை திருச்சந்நிதியின் மகா மண்டபத்திற்குள் அடியெடு த்து வைத்தவுடன் இடதுபுறம் அழகாக சேவை சாதிக்கிறான் ஸ்ரீகரிவரதராஜப் பெருமான். காணக் காணத் திகட்டாத பேரழகுடன் தரிசனமளிக்கும் இப்பெருமாளைக் காண பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்றால் அது மிகையாகாது. நவக்கிரக சந்நிதியும் இத்திருக்கோயிலில் உள்ளது.

அக்காலத்தில் சிற்பக்கலை வல்லுநர்களை ஆதரித்து வந்தனர் தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள். அதன் விளைவாகத்தான் நமக்குக் கிடைத்துள்ளன, கலை ப்பொக்கிஷங்களின் பெட்டகங்களாக விளங்கும் நம் திருக்கோயில்கள்! கோவில்பாளையம் திருக்கோயிலும் அத்தகைய விலை மதிக்கமுடியாத கலைப்பொக்கிஷங்களில் ஒன்றாகும்.

அதற்கு உதாரணமாகத் திகழ்கின்றன இத்தல ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருமேனி அழகும், ஸ்ரீநடராஜப் பெருமானின் கனகசபையும்!

தமிழகத்தின் ஒவ்வொரு திருக்கோயிலும் ஒவ்வொரு பிரத்யேக தெய்வீக சக்தியும், தனிப்பெருமையும் கொண்டதாகும். ஆதலால், எந்தக் கோயிலை விடுவது, எதைத் தரிசிப்பது, காலமோ குறுகியதாக உள்ளதே என்ற கவலை ஏற்படுகிறது. உடலிலும், உள்ளத்திலும் பலம் இருக்கும்போதே இத்திருத்தல ங்களை நாம் தரிசித்துவிட வேண்டும். வாய்ப்பு என்பது நினைத்தபோதெல்லாம் கிட்டாது. நாம்தான் கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். ‘இத்தருணம் இழந்தால் இனி எத்தருணம் வருமோ...?’ என்ற நிலைதான் மனிதப் பிறவிக்கு.

ஆதலால் பிறவியில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒருமுறையாவது ஒப்புயர்வில்லாத இத்திருத்தலங்க ளைத் தரிசித்து புண்ணிய பலனைச் சேர்த்து வைத்து க்கொள்ள வேண்டும். இப்பிறவியில் மட்டுமல்ல; இனி எடுக்கப் போகும் அனைத்துப் பிறவிகளுக்கும் நமக்குத் துணை நிற்கப் போவது திருத்தல தரிசனங்க ளும், புண்ணியங்களும் மட்டுமே! எனவே, வசதியுள்ள அன்பர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளுடன் கோவில்பாளையம் ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருத்தலம் சென்று தரிசிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வைகாசி விசாகம் - கந்தக் கடவுள்

வைகாசி விசாகம் - கந்தக் கடவுள்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



வேல் வகுப்பு ஒளஷதம் போன்றது. ஒரு மருந்து நோய்களை தீர்ப்பது போல இந்த வகுப்பு புற நோயை நீக்கும். பிறவிப் பிணியை போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள் ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து என்பார் .

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் ...... 1

பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் ...... 2

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் ...... 3

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் ...... 4

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் ...... 5

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் ...... 6

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் ...... 7

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் ...... 8

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் ...... 9

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் ...... 10

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் ...... 11

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் ...... 12

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் ...... 13

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் ...... 14

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் ...... 15

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே ...... 16

உலகங்கள் அனைத்திற்கும் ஒளி விளங்க, அமைதி நிலையமான திருத்தணியில் உதயமாகும் ஞான திவாகரன், உலகம் அனைத்தையும் தாங்கும் குறிஞ்சிக் கிழவன், அடியேன் உள்ளத்தில் தங்கி இருக்கும் கடவுள், மயில் எனப்படும் ஆவரண சக்தியை ஏறி நடத்தும் எம்மான், உயிர்களின் உள்ளமாம் குகையில் எப்போதும் உறைகின்ற ஒப்பற்றவன் ஆகிய குகப் பெருமான் திருக்கரத்தில் தாங்கி இருக்கும் ஞான சக்தியாகிய வேலாயுதம்,

1. வள்ளிப் பிராட்டியின் திருக்கண்களுக்கு ஒப்பாகும்,
2. இந்திரனின் கால் விலங்கின் முளை தெறிக்க அராவும் அரமாகும்,
3. குகையை இடித்து வழி தெரியும்படி செய்யும்,
4. பேய்களின் பசி அகல உபகரிக்கும்,
5. அனைவரையும் துன்பப்படுத்தும் வினைப் பெருக்கங்களை மோதி
அழிக்கும்
6. ஒளி எல்லாம் நாண பேரொளி வீசும்,
7. அடியவர்களுக்கு இடையூறு செய்பவர்களின் குலத்தையே நாசம் செய்யும்
8. எனக்கு எப்போதும் ஒப்பற்ற துணையாக வந்து உதவும்,
9. திருப்புகழ் பாடுவோருக்கு நேரும் பகைகளை அறுத்து எறிய
ஆக்ரமித்து புறப்படும்,
10. அறத்தை நிலை பெறச் செய்யும்,
11. எமன் பற்றவரின் மார்க்கண்டேயரைக் காக்க சிவபிரான் நீட்டிய
திருவடி போல் விரைந்து வந்து அந்த எமனை கண்டித்து
அடியாரைக் காக்கும்,
12. இறைவனின் திருக்கரங்கள் அசையும்போதெல்லாம் சிவ கணங்களை
அழுதுண்ண அழைப்பதுபோல் தானும் தனது திருமுடியை
வளைத்து காட்டும்,
13. தனி வழியில் வேறு துணையின்றி செல்லும்போதெல்லாம் இரவும்
பகலும் துணையாக வந்து அச்சம் அகற்றும்,
14. அரக்கர்களின் பெருங்குடல்களை எடுத்து மாலைபோல் விருப்பமுடன்
சூடிக்கொள்ளும்,
15. கடலை உடைத்து, புனலைக் குடித்து, உடைந்த உடைப்பை
அடைத்து அதில் அவுணரது குருதி நிறைத்து விளையாடும்,
16. சிறகுகளுடன் மலைகள் பறக்கின்றது என கண்டவர்கள்
கூறுமளவிற்கு விண்ணில் வேகமுடன் அதிர்ச்சி காட்டி ஓடும்,
17. போர்க்களத்தில் எதிர்த்த அவுணர்களின் தலைகளை அறுத்து,
பற்களை கடித்து, கண்ணை உருட்டி, வீறிட்டு அலற அவைகளை
மோதும்

... என்றெல்லாம் 'அறக்கருனை மறக்கருணை' இருப்பைப் பாடும் முறையில் வேலாயுதத்தின் பரத்துவத்தை பாடுகிறார் நம் அருணை முனிவர்.

அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்

அண்ணாமலை கிரிவல மந்திரங்கள் !


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை;ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது;

அப்போ கேரளா,கர்னாடகா,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த ஆசிகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்;அவர்களது மொழியில் அண்ணாமலை கிரிவலம் பற்றிய செய்திகள் மிகவும் குறைவு;கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் அவர்களிடையே ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது; ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

விசிறிச்சாமியார் என்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்;இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்;இம்மகான்களின் உபதேசங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்;

அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?

அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!

சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை;ஆனால்,ஓலைச்சுவடிகள்,தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்;

மனிதனாக பிறந்த நாம் புண்ணிய ஆத்மாவாக இருந்தால் பணம் சம்பாதிக்கவும்,சொத்துக்கள் சேர்க்கவும்,சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவ ஆத்மாவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;

இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை;அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்லவே பிறவியை பரம்பொருள் நமக்கு கொடுத்துள்ளார்;

ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000 ஆலயங்கள் இருக்கின்றன;உலகம் முழுவதும் இருந்த ஆலயங்களின் மொத்த எண்ணிக்கை 1000 கோடி ஆகும்;அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப்பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா;பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்;முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து;

ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; அப்படி 14 கி மீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்;இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;

இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்;முறைப்படி தீட்சை பெற்றவர்கள்,உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள்,முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;

தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;

காலையில்,மதிய நேரத்தில்,மாலையில்,இரவில்,நள்ளிரவில்,பின்னிரவில்,
அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;
மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;

சிவனை அப்பாவாக,நண்பனாக,மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை உணருவார்கள்;

$$$ ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;

முதல் முறை கிரிவலம் செல்லும் போது:
*******************************************

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
($ நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே,குருவின் அருள் நமக்குத் தேவை;

$ 3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்)

இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
************************************************

ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா

(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)

மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
***********************************************

சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்
(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)

நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;
***********************************************

நமச்சிவாய

( $ நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)

ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
**********************************************

அருணாச்சல சிவ
($அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)

ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:
********************************************

ஓம் ஆம் ஹெளம் செள
($ அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)

ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:
********************************************

சிவையை நம
($ அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)

எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
*********************************************

ஓம் ரீங் சிவசிவ
($ சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)

ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:
************************************************

சிவாய நம
($ நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)

பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
*********************************************

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
($ ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)

பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;
**************************************************

சிவசிவ
($ இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)

பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
*****************************************************

சிவாய சிவாய
($ நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)

பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
***************************************************

சிவாய நம ஓம்
($ சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)

பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:
**************************************************

சிவயசிவ
($ இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது)

பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
****************************************************

அருணாச்சலாய சிவ நமஹ

16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;

மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய