மசாலா பெசரட்டு செய்வது எப்படி?

மசாலா பெசரட்டு செய்வது எப்படி?
masala-pesarattu



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பச்சைப்பயறு வைத்து செய்யும் பெசரட்டு சத்து நிறைந்தது. இந்த சந்து நிறைந்த இந்த பெசரட்டுடன் மசாலா சேர்த்து செய்து எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

பச்சைப் பயறு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் - 1 (விரும்பினால்)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க:

எண்ணெய், சீரகம்.

காய்கறி :

வெங்காயம்,
கேரட்,
குடைமிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை.

செய்முறை :

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.

மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.

மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.

சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.

திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.

அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும். காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.