அண்ணாமலையார் வரலாறு - விநாயகரின் முதல் படை வீடு
thiruvannamalai-arunachaleswarar-temple-history
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை சக்தி தலமாகவும் புகழ்கிறார்கள்.
தமிழ்க் கடவுள் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாகவும் சொல்கிறார்கள். அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை ஆலயம் திகழ்கிறது.
பொதுவாக முருகப்பெருமானுக்குதான் அறுபடை வீடுகள் இருப்பதை பார்த்துள்ளோம். விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பது சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. விநாயகரின் முதல் படை வீடான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நீங்கள் திரும்பிய திசையெல்லாம் விநாயகர் சிலைகளை பார்க்க முடியும். அந்த அளவுக்கு விநாயகர் திருவண்ணாமலை தலத்தில் நிறைந்துள்ளார்.
திருவண்ணாமலை ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தில் செல்வ கணபதி, கம்பத்து இளையனார் சந்நிதிக்குள் இருக்கும் ஸ்ரீகணபதி, சர்வசக்தி விநாயகர் சன்னதி, கோபுரத்து இளையனார் சன்னதிக்குள் இருக்கும் ஸ்ரீவிநாயகர், கல்யாணசுந்தரேசுவரர் சன்னதிக்குள் இருக்கும் விநாயகர், உச்சிபிள்ளையார், வன்னிமர விநாயகர், தனி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் கும்பாபிஷேக விநாயகர் என 8 விநாயகர்களை காணலாம்.
4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீகணபதி மற்றும் கிளிக்கோபுரம் அருகே யானைதிறைக்கொண்ட விநாயகர் என 2 விநாயகர்கள் உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே பொட்டுகட்டும் விநாயகர், மகிழமரத்தடி விநாயகர், கல்யாண மண்டப விநாயகர், பிடாரிகோவில் விநாயகர், கொடிமரம் அருகே சம்பந்த விநாயகர், கொடிமர மண்டபத்தில் ஸ்ரீஉண்டி விநாயகர் என 6 விநாயகர்கள் உள்ளனர்.
2-ம் பிரகாரத்தில் நாயன்மார்கள் வீற்றிருக்கும் வரிசையில் கணபதி, சேத்திரகணபதி, விநாயகர், விநாயகர் என 4 விநாயகர்கள் இருக்கிறார்கள். கருவறையை சுற்றி முதல் பிரகாரத்தில் கோஷ்டத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். உண்ணாமலை அம்மன் சன்னதி வாசலில் விஜயராகவ விநாயகர் உள்ளார். அடுத்து மண்டபத்தில் விநாயகர், விநாயகர், ஸ்ரீகணபதி, விநாயகர், விநாயகர், விநாயகர், விநாயகர் ஆகிய 7 பேர் உள்ளனர். அம்மன் கருவறை கோஷ்டத்தில் தனங்களுடன் ஸ்ரீகணேவி காணப்படுகிறார்.
இப்படி திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 30 விநாயகர்கள் இருக்கிறார்கள். மிகவும் சிறப்பு பெற்ற செல்வகணபதி, யானை திறைக்கொண்ட விநாயகர், சேத்திர விநாயகர், சம்பந்த விநாயகர் போன்ற விநாயகர்களின் சிறப்புகளை மட்டும் பார்க்கலாம்.
திருவண்ணாமலை கோவிலில் 30 விநாயகர்கள் இருந்தாலும் விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைக்குரிய விநாயகராக கருதப்படுபவர் ராஜகோபுரத்தில் இருக்கும் செல்வகணபதி ஆவார். பொதுவாக ஆலயங்களில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் எந்த சன்னதியும் இருப்பதில்லை. ஆனால் திருவண்ணாமலை ராஜகோபுர நுழைவு வாயிலில் செல்வகணபதி வீற்றிருக்கிறார். இது திருவண்ணாமலை ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று என ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார். ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் போலீசார் பக்தர்களை சோதனை செய்யும் பகுதி உள்ளது. அந்த பகுதியை கடந்ததும் இடது பக்கத்தில் பார்த்தால் செல்வகணபதியை காணலாம். இவர்தான் முதல் படைக்குரிய விநாயகர் ஆவார்.
இந்த விநாயகர் அவ்வையாரால் பாடல்பெற்ற சிறப்புக்குரியவர். இந்த விநாயகர் மீது அவ்வையார் பாடிய பாடல்.....
அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துக்குள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
இந்த பாடல் விவேக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் அவ்வையார் ஒரு உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார். நாம் முக்தி பாதைக்கு செல்ல வேண்டுமானால் வினைகளை அகற்ற வேண்டும். அந்த வினைகளை தீர்க்கும் முழு முதற்கடவுளாக செல்வகணபதி திகழ்கிறார். இவரை வழிபட்டால் எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை-தீமை போன்றவற்றால் உருவாகும் வினைகளும் நீங்கும்.
பிறவி எடுக்கக் காரணமாக உள்ள அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் விலகும். சகல வினைகளும் தீர்ந்து போகும். ஞானம் கைமேல் கனியாக வரும் என்று அவ்வையார் கூறியுள்ளார். அதனால்தான் இந்த விநாயகரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடு விநாயகராக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
இவரை வழிபட்டு தான் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆத்ம ஞானம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலைக்கு முக்தியை தேடி வருபவர்களுக்கு அதற்கான பாதையை இந்த விநாயகர் தான் அமைத்து கொடுக்கிறார் என்பது ஐதீகம். எனவே இந்த செல்வ கணபதி மிக மிக முக்கியமானவர். ஆனால் திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் இவரது சிறப்பை அறியாமல் உணராமல் உள்ளது வேதனையாகும்.
நமது முன்னோர்கள் இந்த கணபதியை சிறப்பு செய்து இருந்தாலும் திருவண்ணாமலை ஆலய நிர்வாகம் இந்த விநாயகருக்கு ஏனோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திருவண்ணாமலை தலத்தின் அதிகாரப்பூர்வ பிரதானமான விநாயகர் என்ற அந்தஸ்து சம்பந்த விநாயகருக்கே வழங்கப்பட்டுள்ளது. சம்பந்த விநாயகர், கொடி மரம் அருகே தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.
மூலிகை பொருட்களால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் சிவந்த நிறத்தில் இருப்பதாக ஒரு கருத்து உண்டு. 1262-ம் ஆண்டு வீரவல்லாள மன்னன் காலத்து கல்வெட்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சம்பந்தாண்டார் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர் இந்த விநாயகர் சன்னதியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் பெயரால் சம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான். பலரையும் கொடுமை செய்தான்.
இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.
சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். அதுபோல திருவண்ணாமலை தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் இந்த சம்பந்த விநாயகரை பூஜித்த பிறகுதான் விழா தொடங்கும்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இரவு 7.30 மணிக்கு விநாயகர் புறப்பாடு இந்த சன்னதியில் இருந்துதான் புறப்படும். இந்த சன்னதி அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி முன்பு நின்றுதான் அந்த கால மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு உள்ளது.
திருவண்ணாமலை யில் அண்ணாமலையார் முன்பு நின்று எந்த அரசரும் பதவி ஏற்றது இல்லை. அதுபோல இந்த தலத்தில் பூரண கும்ப மரியாதையோ, பரிவட்டம் கட்டுவதோ நல்லதல்ல என்ற கருத்து உள்ளது. காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான பயம் இருப்பதால் சம்பந்த விநாயகர் முன்பு வந்து அனைத்தையும் செய்து கொள்வார்கள்.
அந்த காலத்தில் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் சம்பந்த விநாயகர் முன்புதான் சத்தியம் வாங்குவார்களாம். இதனால்தான் இன்றளவும் சம்பந்த விநாயகர் தனித்துவத்துடன் திகழ்கிறார். இவரை போலவே யானைதிறைக் கொண்ட விநாயகருக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. கிளிக்கோபுரம் அருகே சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் இந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.
சிவகங்கை தீர்த்தம் அருகில் உள்ள சர்வசக்தி விநாயகருக்கும் தனி சிறப்பு உள்ளது. இவரை நகரத்தார்கள் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆலயத்தின் 2-ம் பிரகாரத்தில் மேற்கு திசையில் தென்மேற்கு மூலையில் உள்ள சேத்திர விநாயகரும் குறிப்பிடத்தக்கவர். கண்டராதித்த சோழ மன்னனின் மனைவி செம்பியன் மாதேவியால் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டார்.
ஒரு தடவை கும்பாபிஷேகத்தின்போது அண்ணாமலையாருக்கு அடுத்தப்படியாக இந்த விநாயகருக்குதான் முதலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விநாயகர் பலகை கல்லில் செய்யப்பட்டவர் ஆவார். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே உள்ள பொட்டுக்கட்டும் விநாயகரும் வரலாற்று சிறப்புடையவர். அந்த காலத்தில் இவர் முன்னிலையில் தேவதாசிகள் தங்களை கோவில் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொள்வார்கள். இந்த அர்ப்பணிப்புக்கு பொட்டுக்கட்டுதல் என்று பெயர். எனவே இந்த விநாயகருக்கு பொட்டுக்கட்டும் விநாயகர் என்ற பெயர் நிலைத்து விட்டது.
திருவண்ணாமலை ஆலயத்துக்குள் மட்டுமின்றி ஊருக்குள்ளேயும், மலை சுற்றும் பாதையிலும் ஏராளமான விநாயகர்கள் உள்ளனர். ஊருக்குள் தேரடி வீதிக்கும் கொசமட தெருவுக்கும் இடையே ரேடியோகிரவுண்டு பகுதியில் முத்தம்மை விநாயகர் உள்ளார். அருணகிரிநாதர் தாயார் முத்தம்மை இந்த விநாயகரை வணங்கியதால் இதற்கு முத்தம்மை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
அதுபோல கிரிவல பாதையில் தலைதிருக தனம் கொடுக்கும் விநாயகர், இடுக்கு பிள்ளையார் என்று நிறைய விநாயகர்கள் இருக்கிறார்கள். இப்படி திருவண்ணாமலை தலத்தின் பிரிக்க முடியாத அம்சமாக விநாயகர் திகழ்கிறார். அவரைப் போன்றே திருவண்ணாமலை முழுக்க லிங்கங்களும் நிறைந்துள்ளன.
thiruvannamalai-arunachaleswarar-temple-history
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி