ஆடி மாதம் கூழ் (koozh) ஊற்றுவது ஏன்?
aadi-masam-amman-koozh
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி, துக்கம் தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் தன்னுடைய உயிரையும் விட முடிவு செய்த ரேணுகாதேவி, தீயை மூட்டி அதில் இறங்கினார். அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து தீயை அணைத்தான். இருப்பினும் தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். பின்னர் பசியைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார்.
அங்குள்ள மக்கள், அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுத்தனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார், ரேணுகாதேவி. அப்போது அவர் முன்பாக தோன்றி சிவபெருமான், “உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்” என்று வரம் அளித்தார்.
இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில்தான், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ‘ஆடிக்கஞ்சி’ என்பர்.
aadi-masam-amman-koozh
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
https://share-market-training-rupeedesk.business.site/One to One Share Market Training - 9841986753