பெண்களுக்கு அழகை தரும் கொய்யா இலை - Guava Leaf Face pack
முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து அதன் பரவலை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர பருக்கள் மறையலாம்.
A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
கொய்யா இலை, சிட்டிகை மஞ்சள் மற்றும் கற்றாழை மூன்றையும் சேர்த்து மைய அரைத்து அதை முகம் கழுத்து என தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் 2 முறை செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இருக்கும் பெரிய தொல்லை எண்ணெய் பிசுபிசுப்புதான். அதை அகற்ற கொய்யா இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து என தடவி 30 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடுங்கள் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.
கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.
கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.