பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்

பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பீர்க்கங்காய், சிறுநீரை பெருக்கும் அற்புத மருந்து. கண் நோய்களை தீர்க்கும். உடல் எடையை குறைக்க கூடியது. அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். நார்ச்சத்தை உடைய பீர்க்கங்காய் புற்றுநோயை தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும். பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பை லேசாக வறுக்கவும், பெருங்காயப்பொடி, பூண்டு, புளி, பீர்க்கங்காய் தோல், மிளகு பொடி, உப்பு சேர்த்து சட்னிபோல் தயார் செய்து சாப்பிடவும். இது மலச்சிக்கலை தடுக்கிறது
பீர்க்கங்காயை பயன்படுத்தி நீர்கடுப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். பீர்க்கங்காய் சாறு 50 மில்லி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இது சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும். தேங்கிய சிறுநீரை வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், வலியை போக்கும். சிறுநீரகத்தின் ஆயுட்காலம் கூடும்.

* ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும்.

* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் உடனடியாக ரத்தக் கசிவைப் போக்கிக் காயத்தை ஆறச் செய்யும் பணியைச் செய்கின்றது.

* பீர்க்கங்காய் ஒன்றைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர்விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு அன்றாடம் காலை, மாலை என இரு வேளை பருகி வருதலால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இருவேளை குடித்து வருதலால் ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் குணமாகும்.

* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து- சேர்த்து தொழு நோய் எனப்படும் தோல் நோயின் மேலே பூசி வருதலால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.

* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது- தடை செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வெருகடி அளவுக்கு எடுத்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். பீர்க்கங் கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர்விட்டு சுத்திகரித்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வருதலால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.

* பீர்க்கங் கொடியின் இலை யைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறிவிடும்.

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத் துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிகட்டிகள் குணமாகும்.

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.

* பீர்க்கங்காய்ச் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வருதலால் அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்னும் சத்தும் கிடைக்கப் பெற்று கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.

*பீர்க்கங்காயில் உள்ள ரத்தத்தைப் தூய்மை செய்யக் கூடிய வேதிப்பொருள்களால் தோலின் மேலுள்ள முகப் பருக்கள் ஆகியன விரைவில் குணமாக ஏதுவாகின்றது.

*உடலின் மேலுள்ள துர்நாற்றத் தையும் போக்க வல்ல மருத்துவ குணத்தைப் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. பீர்க்கங்காயை அன்றாடமோ அல்லது அடிக்கடியோ மற்ற காய்கறிகளோடு சமைத்து உணவாக உண்பதால் நோய் எதிர்ப்பு- சக்தியைத் தர வல்லதாக விளங்குகிறது.

*பீர்க்கங்காயில் புதைந்து இருக்கும் அதிக அளவிலான பீட்டா கெரோட்டின் என்னும் வேதிப்பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் புதிய சாற்றை ஓரிரு சொட்டுக்கள் கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் மண் கொட்டியது போன்ற உறுத்தல் ஆகிய குற்றங்கள் குணமாகும்.

* பீர்க்கங்காய் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும் மானுடர்க்கு உதவும் பல்வேறு மகத்தான மருத்துவ குணங்களைப் பெற்று கண்கள், ஈரல்கள், தோல், சிறுநீரகம், இரையறை ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது என்பதை அனைவரும் மனதில் இறுத்திப் பயன்பெறுவோம்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப அனைத்து தேவைகளுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று என்றால் அது தண்ணீர் தான்.

சமைக்க, விவசாயம் செய்ய, வீட்டு தேவைகளுக்கு என இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் மிக முக்கியமானது சுத்தமான தண்ணீர், அசுத்தமான தண்ணீர் பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுகின்றது.

சாதாரண தலைவலி, சோர்வு, மூட்டு வலி இவையெல்லாம் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். 3 நாளுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் ஒருவர் உயிரோடு இருக்க முடியாது.

நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உதாரணத்திற்கு, 12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சி விடும்.

நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

மனித உடலில் தண்ணீரின் பங்கு:

• மனித மூளையில் 70% நீர்தான்.

• நான் மூச்சு வெளிவிடுவதில் 1 கப் நீர் (250 மி.லி.) வெளியேறுகின்றது.

• ரத்தத்தின் 80% நீர்தான்.

• எலும்புகளில் 22% நீர்தான்.

• சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலில் திசுக்களுக்கு கொண்டு செல்வது நீர்தான்.

• தசைகளின் 75 % நீர்தான்.

• உணவை சக்தியாக மாற்ற உதவுவது நீர்தான்.

• ஆக்ஸிஜனை மூச்சுக்காக ஈரப்படுத்துவது நீர்தான்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

• அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும்.

• அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும்.

• தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.

• தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

• பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும், அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனை சரியாகும்.

• காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.

• வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

• எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

• குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.
* காலைச் சிறு நீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு    நல்லெண்ணையை விட்டு விட்டு உற்று கவனியுங்கள்.
* எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால், உடலில் வாதம்    
   மிகுந்துள்ளது என்ற அறிகுறி.
* மோதிரம் போல வட்டமாக இருந்தால், அது பித்த நோயின் அறிகுறி,
* முத்துப் போல நின்றால், கபநோயின் அறிகுறி,
* எண்ணெய்த் துளி வேகமாக பரவினால், நோய் விரைவில் குணமாகும்.
* எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால், நோய் குணமாக தாமதமாகும்.
* எண்ணெய்த்துளி சிதறினாலோ, அமிழ்ந்து விட்டாலோ, நோயை  
   குணப்படுத்த இயலாது.

எதை எப்போது உண்ண வேண்டும் ?

எதை எப்போது உண்ண வேண்டும் ?

பசி என்றால் என்ன ? எப்போது பசி வருகிறது ? உணவு உண்டவுடன் பசி போய் விடுகிறதே எப்படி ?

நமது இரத்தத்தில் சர்கரையின் அளவு குறைந்தால், பசி எடுக்கும். நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களும் வேலை செய்ய ஆதாரமாய் இருப்பது சர்க்கரை (glucose ). இந்த சர்க்கரையை உடம்பில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் கொண்டு செல்வது இரத்தம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், சர்க்கரை கொண்டுவா சர்க்கரை கொண்டுவா என்று சத்தம் போடும். அந்த சத்தம் தான் பசி.

நாம் உணவு உண்ண ஆரம்பித்தவுடன் சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் சேர்கிறது. சர்க்கரையின் அளவு அதிக பட்ச்சத்தை அடைந்தவுடன் பசி உணர்வு நின்று போகிறது.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது , கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையின் அளவு இரத்தத்தில் கூடும். அது முழுவதும் சேர்வதற்குள் நாம் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.

நவீன அறிவியல் , சாப்பிட்டு முடிந்து 20 நிமிடம் கழித்துதான் அந்த திருப்தி உணர்வு வருகிறது என்கிறது.

நாம் என்ன செய்கிறோம், அந்த 20 நிமிட இடை வேளையில் இனிப்பு, ஐஸ் கிரீம் என்று மேலும் இனிப்பை உள்ளே தள்ளுகிறோம்.

இரத்தத்தில் ஏற்கனவே உச்ச பச்ச இனிப்பு இருக்கும் போது மேலும் இனிப்பு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேரும்.

எனவே, முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பு, இடையில் மற்ற சுவைகளை சேர்க்க வேண்டும்.

,முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பானவற்றை உண்ண வேண்டும். மற்றவற்றை இவை இரண்டுக்கும் இடையில் உண்ண வேண்டும் ?

பாடல்

கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
துய்க்க முறைவகையா லூண்.

பொருள்

கைப்பன = கசப்பது

வெல்லாங் = எல்லாம்

கடை = கடைசியில்

தலை = முதலில்

தித்திப்ப = இனிப்பு

மெச்சும் வகையா = புகழும் படியாக

ஒழிந்த = மற்றவைகள்

விடையாகத் = இடையில்

துய்க்க = உண்க

முறைவகையா லூண் = இது முறையாக உண்ணும் முறை

சளி தொல்லை

சளி தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற பூண்டு சாப்பிடுங்க - இயற்கை மருத்துவம்

பூண்டு சளி தொல்லையில் இருந்து மட்டுமின்றி, காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்ற வலி, பாம்பு கடி போன்றவற்றை குணமாக்கவும் உதவும். மேலும் ஆய்வு ஒன்றிலும் பூண்டில் உள்ள மருத்துவ குணத்தால் குடல், புரோஸ்டேட், நுரையீரல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும் என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் தன்மைகள் தான் காரணம். சரி, இப்போது சளி தொல்லையில் இருந்து நிவாரணம் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்பட பூண்டை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
பூண்டு :-
சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். மேலும் அக்காலத்தில் சளி பிரச்சனைக்கு இந்த பூண்டு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.
பூண்டு மற்றும் தேன் :-
பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்
பூண்டு மற்றும் தண்ணீர்:-
2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.
பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸ் :-
ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு டீ :-
சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
பூண்டு மற்றும் தக்காளி:-
2-3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். இச்செயலை சளி நீங்கும் வரை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
பூண்டு சூப் :-
மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 -3 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

மருத்துவ குறிப்புகள் !!!

மருத்துவ குறிப்புகள் !!!

பல்வேறு உபாதைகளுக்கு மனிதனின் உடல்கள் ஆளாகும் போது மருத்துவத்தை நாடிச் செல்கின்றோம்.
இந்த மருத்துவமும் மனிதர்களை நோய்களிலிருந்து காப்பாற்றி ஆரோக்கிய வாழ்க்கையை வழங்குகிறது. அந்த வகையில் சில பயனுள்ள மருத்து குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
* வெந்தயம், சுண்டைக்காய் வத்தல் மற்றும் மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
* முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2 மற்றும் வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
* வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
* வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
* வில்வ பழத்தின் தோலை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
* வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
* வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
* வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
* முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் சரியாகும்.
* மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பருக்கள் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் !!!

பருக்கள்  நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்


டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

சந்தன ஃபேஸ் பேக் :-

சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் :-

சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.

வெந்தய ஃபேஸ் பேக் :-

சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத&##3021;தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.

ஆலிவ் எண்ணெய் :-

ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் :-

கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தேன் மகத்துவம் :-

கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.

எலுமிச்சை மருத்துவம் :-

எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.

பன்னீர்/ரோஸ் வாட்டர் :-

சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு :-

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.

உடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள் :-

எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.

காய்கறி ஜூஸ் அருந்துங்கள்:-

ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.

க்ரீன் டீ :-

உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.

தக்காளி:-

ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.

ஐஸ் கட்டிகள்:-

சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.

டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil) :-

கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளையும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.

முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :-

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்

பெண்களைக் காக்கும் பெருங்காயம்!

பெண்களைக் காக்கும் பெருங்காயம்!

பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.

மாதவிடாய் சரியாக வராதவர்கள் அதிக ரத்தப்போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும் சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல் வருந்தும் பெண்களுக்கு வாலேந்திர போளம் பெருங்காயம் மிளகு சேர்த்து அரைத்து இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.

குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம் லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற காயத்தைப் பொரித்து வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது.

இந்த மூலிகை ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால் உடலும் குளிரும் கால்சியமும் பெருகும்.

வேப்ப எண்ணெய்.

வேப்ப எண்ணெயின் அதிசிய மருத்துவ பலன்கள்!!!

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய்.
வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது.
குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சிறந்த கிருமிநாசினியாகும்.
தயாரிப்பது எப்படி?
வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர்.
அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது.
பலன்கள்
* இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.
* வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
* வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* வேப்ப எண்ணெயை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணெய்யை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

online all books free download

online all books free download enjoy student

வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.
அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:
1. FreeBookSpot
FreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: FreeBookSpot
http://www.freebookspot.in/
2.4eBooks
இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: 4eBooks
http://4ebooks.org/
3.Free-eBooks
உயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இணையத்தளச்சுட்டி: Free-eBooks
http://www.free-ebooks.net/
4. GetFreeEBooks
கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks
http://www.getfreeebooks.com/
5. FreeComputerBooks
கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks
http://freecomputerbooks.com/
6. FreeTechBooks
கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeTechBooks
http://www.freetechbooks.com/
7. KnowFree
இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: KnowFree
http://knowfree.net/
8. OnlineFreeEBooks
பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks
http://www.onlinefreeebooks.net
9. The Online Books Page
30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.
இணையத்தளச்சுட்டி: The Online Books Page
http://digital.library.upenn.edu/books/
10. BookYards
பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: BookYards
http://www.bookyards.com/

சர்க்கரை நோய்க்கு( நீரிழிவு நோய்க்கு) பயப்பட தேவையில்லை!

சர்க்கரை நோய்க்கு( நீரிழிவு நோய்க்கு) பயப்பட தேவையில்லை!

சர்க்கரை நோய்க்கு( நீரிழிவு நோய்க்கு) பயப்பட தேவையில்லை! பொய்யான நோய்க்கு தயவுசெய்து மருந்து சாப்பிடாதீர்கள்.......சர்க்கரை நோய் பற்றி சிறு விளக்கத்துடன் கூடிய எளிய தீர்வு
நீரிழிவு ஒரு அறிமுகம்
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் பல பேருக்கு இருக்கிறது. சிலருக்கு இல்லை. அதற்காக, சர்க்கரை நோயில்லாதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென முடிவுக்கு வந்து விடாதீர்கள்! இப்பொழுது உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை. எப்படியும், எங்கேயாவது 'இலவசச் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்' ஒன்றைப் பார்க்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதில் சோதனை செய்து பார்க்கும் அன்று முதல் நீங்கள் சர்க்கரை நோயாளியாக்கப்படுவீர்கள். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களோ, இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை முழுவதுமாகப் படியுங்கள்!
நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து, உயிர்ச் சத்து, தாதுப் பொருட்கள் போன்றவை உள்ளன. இவற்றுள் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) சர்க்கரையாக மாறுகிறது.
நம் உடம்பிலுள்ள செல்கள் இரத்தத்திலுள்ள சத்துப் பொருட்களைத் தன் தேவைக்காக எடுத்துக் கொண்டு உடலைச் செயல்பட வைக்கின்றன. ஒரு செல் கால்சியம், இரும்பு, சோடியம், மக்னீசியம் போன்ற எல்லாப் பொருட்களையும் சுலபமாக உள்ளே எடுத்துக் கொள்ளும். ஆனால், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாது. செல்கள் சாக்கரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அது நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா என்று ஆராய்ச்சி செய்யும். உணவிலுள்ள மாவுச் சத்து வாயிலே, வயிற்றிலே, சிறுகுடலிலே ஒழுங்காக ஜீரணம் ஆனால் கிடைப்பது நல்ல சர்க்கரை. ஒழுங்காக ஜீரணமாகாமல் அரைகுறையாக ஜீரணமாகி வரும் சர்க்கரை கெட்ட சர்க்கரை. நல்ல சர்க்கரையென்பது வீரியம் அதிகமுள்ள சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்பது வீரியம் குறைந்த சர்க்கரையென்றும் எடுத்துக் கொள்ளலாம்.
செல் சர்க்கரையிடம் நீ நல்லவனா, கெட்டவனா என்று கேட்கும். சர்க்கரையோ, நாயகன் படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல, "தெரியலையேப்பா!" என்று கூறி விடும். செல்களுக்கு நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை எனப் பிரித்துப் பார்க்கும் அறிவு கிடையாது. எனவே, செல்கள் சர்க்கரையிடம், "நமது உடலில் கணையம் (Pancreas) என்ற உறுப்பு இருக்கிறது. அவரிடம் செல்! நீ நல்ல சர்க்கரையாக இருந்தால் அவர் உனக்கு இன்சுலின் (கணைய நீர்) கொடுப்பார்" என்று கூறி விடும். இரத்தத்திலுள்ள சர்க்கரை நேரடியாக எந்தச் செல்லுக்குள்ளேயும் போக முடியாது.
கணையம் இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கரையாக எடுத்து ஆராய்ச்சி செய்யும். நல்ல சர்க்கரையாக இருந்தால் அதற்கு இன்சுலின் என்கிற முத்திரை கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. ஆக, கணையம் சர்க்கரையின் தரத்தைச் சோதனை செய்யும் ஒரு தரக் கட்டுப்பாட்டு அலுவலர். எந்தச் சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகிறதோ அந்தச் சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் என்கிற முத்திரை கிடைக்கிறது. செல்கள் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையை எடுத்துப் பார்க்கும். அந்தச் சர்க்கரையில் இன்சுலின் என்கிற முத்திரை இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரையென்று முடிவு செய்து உள்ளே எடுக்கும். இதனால், தரம் குறைந்த சர்க்கரை செல்லுக்குள் செல்லமுடியாது. இப்படி, உடலிலுள்ள செல்கள் அனைத்தையும் நோயிலிருந்து காப்பாற்ற, ஆரோக்கியமாக வைத்திருக்க, கணையம் பேருதவியாக இருக்கிறது.
"என்ன இது புதுக் குழப்பமாக இருக்கிறது! நான் பத்து வருடமாகச் சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். இது வரை யாரும் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையென்று சொல்லவே இல்லையே? நீங்கள் என்ன புதிதாக உளறுகிறீர்கள்" என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உண்மையில், இதுவரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் 10 ஆண்டுகளாக உங்கள் நோய் குணமாகாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்ற வேறுபாட்டை எப்பொழுது தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்கள் சர்க்கரை நோய் குணப்படுத்தப்படும்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது. லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன
சர்க்கரை ஒரு ஐசோமர். உயிர்ம வேதியியல் (Bio – Chemistry ) படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும் என நினைக்கிறேன். ஒரே பொருளில் நிறைய வகைகள் (Type) இருந்தால் அதை ஐசோமர் என அழைக்கிறோம்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது.
லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு (STRUCTURE) உள்ளது.
இவற்றுள், ஒரு சில வகைச் சர்க்கரைகள் மட்டுமே மனித உடம்பிலுள்ள செல்களுக்குப் பொருந்தும். ஒரு சில சர்க்கரைகள் பொருந்தாது. எந்தெந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்குப் பொருந்துமோ அவை அனைத்தும் நல்ல சர்க்கரைகள்.
எவையெல்லாம் பொருந்தாதோ அவை அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். கணையம், எந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்கு ஒத்து வருமோ, அதற்கு மட்டுமே இன்சுலின் கொடுக்கும். மனித உடலுக்கு நோயை உண்டு பண்ணுகிற, ஒத்து வராத, தேவைப்படாத சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுக்காது.
நாம் மருத்துவமனைகளில் சென்று சர்க்கரைச் சோதனை செய்கிறோம். அதில் 100 இருக்கிறது, 200 இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த அளவில் எந்தெந்த சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளந்தது கிடையாது. இப்படி, மொத்தமாகச் சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் பார்க்கும் சர்க்கரையின் அளவில் எந்தெந்த வகைச் சர்க்கரை எந்த அளவு இருக்கின்றது எனப் பார்ப்பதற்குத் தனியாக ஒரு கருவி உள்ளது. அதன் பெயர் IR STUDY மற்றும் UV Spectrum Study. இந்த வசதி உள்ள கருவிகளில் மட்டுமே இரத்தத்திலுள்ள சர்க்கரை வகைகளைக் கண்டறிய முடியும். இந்தக் கருவிகள் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. பெரிய பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே உள்ளன. எனவே, சர்க்கரையைப் பொதுவாகச் சோதனை செய்து பார்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எந்தப் பயனும் கிடையாது.
மருத்துவமனையில் நீரிழிவுச் சோதனை முடிந்ததும் அறிக்கையில் (ரிசல்ட்) 'இரத்தத்தின் சர்க்கரை அளவு' (Blood Glucose Level) என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.உண்மையில், இரத்தத்தின் சர்க்கரை அளவை யாரும் பார்ப்பது கிடையாது. இப்பொழுது பார்க்கப்படும் அளவு Plasma Glucose Level ஆகும். Plasma Glucose Level என்பது வேறு. இரத்தத்தின் சர்க்கரை அளவு என்பது வேறு.
சொல்லப் போனால், சர்க்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகாததால் கணையம் இன்சுலின் கொடுக்க மறுக்கிறதே தவிர, கணையம் தவறு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எப்பொழுது உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறதோ நாம் உணவை ஒழுங்காக ஜீரணம் பண்ணவில்லை என்றுதான் அர்த்தமே தவிர, கணையத்தில் குறை கிடையாது. இதற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, உணவை எந்த முறையில் சாப்பிட்டால் அது இரத்தத்தில் நல்ல சர்க்கரையாகக் கலக்கும் என்கிற ஒரே ஒரு சுலபமான வித்தையைக் கற்றுக் கொள்வது மூலமாக நாம் இந்த நிமிடத்தில் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும். கணையம் இன்சுலின் வைத்துக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்குத் தராமல் வேறு யாருக்குக் கொடுக்கும்? முன்பே பார்த்தபடி, நாம் சாப்பிடுவது நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே கணையம் இன்சுலினைக் கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்பவை என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள மேற்கொண்டு சில எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் பார்க்கலாம்.

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
திருக்குறள் (அறிவுடைமை #0423)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

சொறி சிரங்கு குணமாக வசம்புத் தைலம் !!!

சொறி சிரங்கு குணமாக வசம்புத் தைலம் !!!

வசம்பு ........... பத்து கிராம்
குப்பை மேனி இலைச் சாறு .. இருபத்தி ஐந்து மில்லி
செக்கு தேங்காய் எண்ணெய் .......நூறு மில்லி
தேங்காய் எண்ணெயை நன்கு காய்ச்சி கொதிக்கும் எண்ணெயில் முதலில் வசம்புத் துண்டைப் போட்டுக் காய்ச்சி பின் குப்பை மேனி இலைச் சாறு ஊற்றிக் காய்ச்சி தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி பத்திரப் படுத்தவும்
சொறி சிரங்கு உள்ள இடங்களில் இரவில் இந்தத் தைலத்தைத் தேய்த்துக் காலையில் சீகைக் காய் போட்டுக் கழுவி வர சொறி சிரம்கு நமைச்சல் எரிச்சல் வலி நீங்கி குணமாகும்
நோய் நீங்கும் வரை கத்தரிக்காய் உணவில் சேர்க்கக் கூடாது
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

வறட்டு இருமல்

வறட்டு இருமல் சளியோடு இரத்தம் வருதல் தொண்டை வலி தொண்டை ரணம் ஆகிய நோய்கள் குணமாக!!!

வசம்பு ........... ஒரு துண்டு
துளசி இலைகள் ...... ஐந்து கிராம்
வெந்தயம் ................. கால் தேக்கரண்டி
கிராம்பு ............ ஐந்து கிராம்
மிளகு ..................... ஐந்து எண்ணம்

நூறு மில்லி கொதிக்கும் நீரில் தனித்தனியே ஒவ்வொரு பொருளாகப் போட்டு ஒவ்வொரு பொருளும் நன்கு கொதித்த பின் அடுத்த பொருளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து முப்பது மில்லித் தீநீராக்கி இறக்கி வடிகட்டி இரவு படுக்கப் போகுமுன் இளஞ்சூட்டில் குடித்து வர வறட்டு இருமல் சளியோடு இரத்தம் வருதல் தொண்டை வலி தொண்டை ரணம் ஆகிய நோய்கள் முழுமையாக குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும் 

உடல் பலவீனம் நீங்கி போசாக்குக் கிடைக்க...!!!

உடல் பலவீனம் நீங்கி போசாக்குக் கிடைக்க...!!!
எலும்புகளும் நரம்புகளும் வலுப் பெற...!!!

பொட்டுக் கடலை. தூள் ........ ஒரு தேக்கரண்டி
பனை வெல்லம் ......இருபத்தி ஐந்து கிராம் ... பாகு எடுக்கவும்
வறுத்த பாதாம் பருப்புத் தூள் ........... அரைத் தேக்கரண்டி
வறுத்த முந்திரிப் பருப்புத் தூள் ...... அரைத் தேக்கரண்டி
தேங்காய்ப் பால் ... ஐந்து தேக்கரண்டி
ஏலக்காய் தூள் ............... சிறிதளவு

நூறு மில்லி கொதிக்கும் நீரில் நீரில் தனித்தனியே ஒவ்வொரு பொருளாகப் போட்டு ஒவ்வொரு பொருளும் நன்கு கொதித்த பின் அடுத்த பொருளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் கஞ்சியாக வந்தவுடன் இறக்கி தினமும் காலை உணவாக இந்தக் காஞ்சியைச் சாப்பிடலாம்

இந்தக் கஞ்சி நல்ல உடல் தேற்றி பிரைமரி காம்ப்ளெக்ஸ் மையினால் பாதிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு இது
குழந்தைகள் பெரியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் உடல் பலம் பெற இந்தக் கஞ்சியைச் சாப்பிட்டு வருவது நல்லது உடல் போஷாக்கு அடையும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

மாதவிடாய் பிரச்சனையா?

மாதவிடாய் பிரச்சனையா?

 இதோ சூப்பரான சித்த மருத்துவம் !!!
தினசரி நாம் உண்ணும் உணவில் முறையான உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.
மாதவிடாய் பிரச்சனை நீங்க:
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சனை வயிற்று வலி குறையும். ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
பித்தம் குறைய:
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.
வாந்தி நிற்க:
கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும். துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
ஆரோக்கியமான் கல்லீரல்:
தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.
இதயத்திற்கு பலம்:
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல், இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
தூக்கமின்மையை போக்க:
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும். வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும்.
சிறுநீர் எரிச்சல் போக்க:
அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும். அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும். கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
குடல் புண் நீங்க:
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும். மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.
சீரான ரத்த அழுத்தம்:
டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
பித்த வெடிப்பு மறைய:
அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணம் கிடைக்கும். வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி சரியாகும். முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்.
பல் கூச்சம் நீங்க: \
துத்து இலை அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் சரியாகும். இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும்.
கர்ப்பிணிகளின் பேறுகால வலி குறைய:
முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும். தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும் ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.
கண்வலி போக்க:
அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும். எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி ஏற்படாது.

நாட்டுப்பசுக்களும்- நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும்!

நாட்டுப்பசுக்களும், நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும்!

சொந்த மண்ணில் வாழ்ந்து இயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் நம் நாட்டு பசுக்களையே ‘நாட்டுப்பசு’ என்கிறோம்.
சிலர் நம் நாட்டுப் பசுவின் மகத்துவம் அறியாமல் வெளி நாட்டு பசு மாடுகளை வளர்க்கிறார்கள்.
ஆனால், பிரேசில் உள்ளிட்ட ஏராளமான வெளி நாடுகளில் வெள்ளைக்காரர்களே நம் நாட்டுப் பசுக்களை இலட்சக்கணக்கில் வளர்க்கிறார்கள்.

“ நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை”
என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டுப்பசுக்களின் சிறப்பு சொல்லி மாளாது.
இதில் நாட்டுப்பசு இன்றைய விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் அவசியம் தேவை.
நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவைகள் என்னென்ன?
இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் இது.
நாட்டுப்பசுவின் குடலில் தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் (Antibiotic) உருவாகின்றன. இவை நாட்டுப்பசு வெளிப்படுத்தும் பால், சாணி, மூத்திரம், போன்றவைகளுக்கு வலிமை தரும் மிக முக்கிய பொருட்களாகும்.
இந்த நல்ல எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டீரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன.
லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டீரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லியுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பாக்டீரியாக்களாகும்.
நாட்டுப்பசுவின் குடலில் நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு, கல்லீரல், முன் சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகளும் குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன.
அது போன்றே நாட்டுப்பசுவின் குடல்களிலும் செயல்பாடுமிக்க நுண் உயிர் குடியிருப்புகள் பல்கி பெருகி உள்ளன. அவைகள் உடலில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை.
இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும்,லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவைகளாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் உயிர் துடிப்புடன் இருக்கும். இவைகள் நம் நாட்டுப் பசுவின் குடலின் இருக்கும் தனித்தன்மையாகும்.
நீங்கள் கேலண்டர்களில் அச்சிட்டு வருகின்ற நாட்டுப் பசுவின் படங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக காணப்படும்.
உண்மையில் அவர்கள் முப்பத்து முக்கோடி முயற்சி மிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களாகும்.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பைரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பாக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும் பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவைகளும், சல்பரை கரைக்கும் தைஆக்ஸிடண்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும் (எங்கும் கிடைக்காத முயற்சி மிக்க நுண்ணுயிர்) டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பூஞ்சான வகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளும் உள்ளன.
நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில் ஒரு கிராம் அளவில் 300 – லிருந்து 500 கோடி வரை நன்மை தரும், முயற்சிகள் கொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன. நாட்டுப்பசு மாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது.
மேலும் நாட்டுப்பசுமாட்டின் பால், சாணி, மூத்திரம் போன்றவைகள் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இதில் பஞ்சகவ்யம் எனும் பஞ்ச அமிர்தங்கள் மனிதனில் அனைத்து வகையான உயிர் கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்தாக பயன்பாட்டில் உள்ளது.
இதில் பால் மூலம் பெறப்படும் தயிர், நெய் போன்றவைகள் மற்றும் பால், சாணி, மூத்திரம் என இந்த ஐந்தும் பஞ்சகவ்யம் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை:
-------------------------------------------------
பால் – 7 லிட்டர், தயிர் – 4 லிட்டர், நெய் – 1 லிட்டர், கோஜலம் (பசு மூத்திரம்) – 1 லிட்டர், கோமயம் (சாணம்) – கை கட்டை விரல் அளவு, தர்பைப் புல் ஊற வைக்கப்பட்ட நீர் – 1லிட்டர் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.
வேத சாஸ்திரங்கள் கூறியுள்ள இந்த பஞ்சகவ்ய முறையை அனைத்து தர மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சகவ்யம் செய்து ஒரு மணி நேரத்தில் குடிக்கப்படவேண்டும், வைத்து சாப்பிட நினைப்பவர்கள் பஞ்சகவ்ய கிருதம் செய்தோ, வாங்கியோ சாப்பிடலாம்.
இந்த பஞ்சகவ்யம் சாத்வீக குண நலன்களை தந்து மனிதனை தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. என்பது சான்றோர் கருத்து.
அதுபோலவே “சாமியில்லையேல் சாணியைப் பார்!” என்ற பழமொழிக்கு ஏற்ப தெய்வப்படங்கள் இல்லாத சூழ் நிலையில் பசு மாட்டுச் சாணியை பிள்ளையார் போன்று பிடித்து வைத்து வழிபாடு செய்த வழக்கம் நம் நாட்டில் உண்டு.
இத்தகைய நாட்டுப் பசு மாட்டின் சாணிக்கே இந்த பெறுமை என்றால் அந்த நாட்டுப் பசுவின் பெறுமையை இனியும் சொல்லித் தெரிய வேண்டுமா?.
ஆனால் இந்த நாட்டுப் பசு மாடு இன்று நம் மக்களிடையே குறைந்து போனதற்கு காரணம், மக்களின் அறியாமைதான் ஆகும்.
இனியும் இதுபோன்ற உண்மைகளை அறியாமல் இருந்தால் நம் நாட்டுப் பசு இனத்தை நாமே முற்றிலும் ஒழித்துவிட்டு, சீமை பசு வின் பாலை குடித்து, குடித்து பல நோய்களை சேர்த்துக் கொண்டு, (டாஸ்மாக் சரக்கு குடிப்பதினால் வரும் நோய்கள் தனி) சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளின் வியாபாரத்தில் போட்டு விட்டு பல மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் உயிருக்கு ஊசலாடும் கூட்டத்தினை பார்த்தால் ?
பார்க்க... பார்க்க...
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கையிலே...

சீமை மாட்டுப்பால் மெல்லக் கொல்லும் விஷம்!

சீமை மாட்டுப்பால் மெல்லக் கொல்லும் விஷம்!

சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டுப் பாலும், நம் நாட்டுப் பசும்பாலும் பார்க்க ஒன்று போலவே இருந்தாலும், இரண்டிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protien) நாட்டுப் பசுவில் A2 Beta – Casein ஆகவும், சீமை மாடுகளில் A1 Beta – Casein ஆகவும் மாறுபடுகிறது.
இதில் A1 Beta – Casein புரதம் மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்பொழுது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். BCM7 என்னும் புரோட்டீன் மூலக்கூறு சீமை மாட்டுப் பாலில் பல வியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. மார்பின், ஓபியம் போதைப்பொருளோடு ஒப்பு நோக்கக்கூடிய ரசாயண மூலக்கூறுகளாகும்.
இதற்கு சரியான உதாரணம், நாட்டுப் பசுவின் கன்றுகள் பால் குடித்தவுடன் உற்சாகமாக துள்ளி விளையாடும். ஆனால் சீமை மாட்டுக் கன்றுகள் சோர்ந்து தூங்கும்.
இந்த சீமை மாட்டின் பாலை மனிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க கொடுக்க குழந்தையின் மூளை வளர்ச்சி மந்தத்தன்மையுடன் வளரும், மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்காது. குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றம் உண்டாகுகின்றது, மனித உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் சம நிலையை தடுமாற செய்கின்றது.
இதன் தாக்கம் பிட்டியூட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை என அனைத்தும் தடுமாறச் செய்கின்றது. இதன் மூலம் புதுப்புது வியாதிகள் பெருகிக்கொண்டே போகின்றது.
இத்துடன் A1 Beta Casein புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது.
இன்னும் ஒரு மோசமான, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்டிராத நோய் ஆட்டிசம் ( சதை பிறழ்வு நோய்) இந்த சீமை மாட்டுப் பாலை குழந்தைகளுக்கு தொடர்ந்து தருவதால் அவர்களது உடலையும், மூளையையும் ஒரு சேர தாக்குகின்ற கொடிய நோய் ஆகும்.
சீமை மாட்டுகளின் உடலில் ஆண், பெண் செக்ஸ் ஹார்மோன்கள் சம நிலையில் இல்லை. பெரும்பாலும் பெண் (கிடாரிகள்) மாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக ஊசிகள் மூலமே நடைபெறுவதினாலும், அவைகளில் ஆண் (காளை) மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மந்தமானதாகவும், பசு மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மிகுதியாகவும் உடையதாகவும் உள்ளது.
இது போன்ற குறைபாடுள்ள சிமை மாட்டுப் பாலை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய், கர்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.
சீமை மாட்டுப் பால் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் போல. அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டிற்கு வந்த புதிதில் சரிவிகிதமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டுப் பசுக்களின் தாக்கம் சரி விகிதமாக இருந்தது. அதனால் அன்றைய கால கட்டங்களில் தெரியவில்லை. தற்பொழுது நம் நாட்டு மாடுகள் பெரும்பாலும் ஒழிந்து, சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோய்களின் பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.
எனவே முடிந்தால் நாட்டுப் பசுவின் பாலை அருந்துங்கள், அல்லது தற்பொழுது கிடைத்து வரும் சீமை மாட்டுப் பால், பால் பொருட்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!

வெண்படை (Leucoderma)

வெண்படை (Leucoderma)

வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.

மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.

வெண்படைக்கு எளிய மருந்து
********************************

* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்

இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்

கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.

மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.

மேல்பூச்சுக்கான மருந்து
**************************
1.அவுரிச்செடி
2.குன்றிமணி

குன்றிமணி விதைகளை 50 கிராம் அளவு எடுத்து, ஊறவைத்து அதன் மேல் தோலை உரித்து எடுத்துவிடவேண்டும். நமக்கு தேவையானது அதன் பருப்புகள் மட்டுமே. அந்த பருப்புகளை 200 மி.லி அவுரி இலைச்சாறு விட்டு அரைக்க வேண்டும். அந்த விழுதை, குச்சி அல்லது பென்சில் போல நீளமாக உருட்டி காய வைக்க வேண்டும். கல்லில், சிறிது நீர் விட்டுஅதில் அந்த காய்ந்த மருந்து குச்சியை அரைத்தெடுத்து, வெண்படை உள்ள பகுதிகளில் பூசி வந்தால் குணம் பெறலாம்.

அவுரிச் செடி கிடைக்கவில்லையெனில் நாட்டுமருந்துக் கடையில் அவுரி இலைப்பொடி கிடைக்கும். அதை 100 கிராம் வாங்கி ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, 200 மி.லி.யாக சுண்டவைக்கவும். பின் அந்த சுண்டிய நீரில் குன்றிமணி பருப்புகளை அரைத்து, அந்த விழுதை குச்சி போல உருட்டி காய வைக்கவும். பின் அதை கொஞ்சம் நீர் விட்டு இழைத்து வெண்படை உள்ள இடங்களில் பூசவும்.

வாய் உள்ளே வெண்படை இருக்குமானால், உதாரணமாக கீழ் உதட்டின் உள்புறத்தில் வெண்படை இருக்குமானால், இந்த பூச்சை உள்ளே போடக்கூடாது. மாறாக கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் பூசிவிட்டால் போதுமானது. இந்த பூச்சு வாயில் படுவதை தவிர்க்கவும்.

2. வெண்படை தீர இன்னுமொரு மருந்து
******************************************

தேவையானவை:
1. கார்போக அரிசி-200கிராம்
2. இஞ்சிச்சாறு-50கிராம்
3. மஞ்சள் கரிசாலைச் சாறு-50கிராம்

இஞ்சிச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய இவ்விரண்டு சாறுகளை ஒன்றாகக் கலந்து, அதில் கார்போக அரிசியை ஊறவைக்கவும். கார்போக அரிசியின் மேல்தோல் கழலும் அளவுக்கு ஊறவைக்கவும்.

அந்த அளவுக்கு ஊறிய பின் நன்றாக பிசறினால், மேல்தோல் தனியாக வந்துவிடும். மேல்தோல் நீக்கப்பட்ட கார்போக அரிசியை மட்டும் தனியே எடுத்து, அதில் இஞ்சிச்சாறு, மஞ்சள் கரிசாலைச் சாறு விட்டு மைபோல அரைத்து, மிளகளவு இருக்கும்படியாக, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

காலை, மாலை என இரு வேளையும், வேளைக்கு ஒரு மாத்திரையாக,
உணவுக்கு முன் உண்டுவர வெண்புள்ளிப் படலம் பூரணமாக குணமாகும்.

மருந்து உண்ணும் போது பத்தியமாக காபி, அகத்திக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், பாவற்காய் மற்றும் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

குடற்புண் (அல்சர்)

குடற்புண் (அல்சர்)

பெரும்பான்மையான மக்கள் காலை எழுந்தவுடன் காபி, டீ போன்ற கொதி குடிநீர் பானம் அருந்துவதனை வழக்கமாக கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய பழக்கம். காரணம் காலை எழுந்தவுடன் குடல் பகுதியினை இத்தகைய தேனீர், காபி போன்ற சூடு செய்யப்பட்ட பானங்கள் அருந்துவதால் குடல் புண் உருவாக காரணமாகின்றன.

இதற்கு பதிலாக குளிர்ந்த குடிநீர் அல்லது மோர் அருந்துவது குடலுக்கு குளுமையை கொடுக்கும். ஆறவைத்த குடி நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.

மேலும் குடல்புண் உள்ளவர்கள் ஊறுகாய், எண்ணெயில் பொரித்த உணவுகள், புளி மற்றும் சீனி, சர்க்கரை இனிப்பு போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

இரவில் தயிர், பால் கண்டிப்பாக கூடாது. மேலும் நொதி ஏற்படும் படியான( அதாவது புளித்த மாவுகளில் செய்யப்பட்ட) இட்லி, தோசையை தவிர்க்க வேண்டும். படபடப்பு அடைதல், சரியாக தூங்காமல் கண் விழித்து இருத்தல் போன்றவை தவறு.

மணத்தக்காளி, முருங்கை, வெந்தயக்கீரை, பூசணிச்சாறு, நெல்லிக்காய், அருகம்புல் சாறு வெள்ளரி, வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, சீதாபழம், பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளை அதிகமாக உணவாக சேர்க்க வேண்டும்.

முருங்கை இலைப்பொடி, அருகம்புல் பொடி, முளைக்கட்டி காயவைத்து தயாரித்த வெந்தயப்பொடி போன்றவைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

குடற்புண்ணிற்கு தப்பான உணவே அடிப்படைக்காரணம். அதாவது அளவான சாப்பாடுதான் வளம் கூட்டும்.

இளநீர் மட்டும் அருந்த வேண்டும். (இளநீர் வழுக்கை சேர்க்கக் கூடாது). புதிய இளநீர் தான் சிறப்பு.

சீரகம்
*********

சீரகம் ஒரு அற்புதமான மருந்து. ஆம் அல்சர் என்னும் குடற்புண்ணை தடுப்பதே சீரகம்தான். இந்த சீரகம் இரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தும்.

தினமும் இரவில் ஒரு சொம்பு நீரை நன்றாக காய்ச்சி இறக்கி வைத்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு மூடி வைத்து விடுங்கள், மறு நாள் காலை எழுந்து பல் துலக்கி அதனை வடிகட்டி அந்த நீரை மட்டும் வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர குடற்புண் சீக்கிரம் ஆறும்.

நல்லெண்ணெயில் சீரகம் போட்டு காய்ச்சி எண்ணெய்க்குளியல் வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்வது உடலின் பித்தநிலையை குறைக்கும்.

வில்வம்
*************

வில்வ இலை, வில்வ மரப்பட்டை, வில்வ வேர் போன்றவைகளை சூரணமாகவோ, கஷாயமாகவோ உட்கொண்டுவர ஆறாத குடற்புண் ஆறிவிடும். அல்சரின் அருமருந்து வில்வம்.

குறிப்பு:-
--------------

அல்சருக்கு சீரகவில்வாதி லேகியம் மிகச்சிறந்த மருந்து.

அஜீரணம் சரியாக...!!!

அஜீரணம் சரியாக...!!!

அளவுக்கு அதிகமாக உண்பது, பசி எடுக்காமல் உண்பது போன்ற பழக்கத்தினால் வருவது அஜீரணம். இதனை எளிய முறையில் வீட்டு வைத்தியத்தினால் குணப்படுத்த முடியும்.

குப்பை மேனி இலையை கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதே அளவு உப்பையும் அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறிக் கொண்டேயிருந்தால் உப்பும் இலையும் கலந்து வெந்து சிவந்து கருகும். நன்றாகக் கருகி இலை தூளாகி விட்டபின் சட்டியை இறக்கி ஆறவைத்து, அம்மியில் வைத்துப்பட்டுப் போல தூள் பண்ணி ஒரு சீசாவில் போடு வைத்துக் கொள்ளவேண்டும். அஜீரணம் என்று தெரிந்தவுடன் காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு இதனை வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் மாறி நல்ல பசி உண்டாகும்.

பசி எடுக்க...

ஒரு வெற்றிலையைச் சுத்தம் பார்த்து அதில் ஏழு மிளகையும், சுண்டைக்காயளவு சீரகமும் சேர்த்து மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கச் செய்து சிறிதளவு வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், நல்ல பசி உண்டாகும்.

அஜீரணப் பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

50 கிராம் சீரகத்தை பொன்னிறமாக வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும்.

இதில் ஒரு மேசைக் கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.

இதற்குச் சமமாக ஒரு மேசைக் கரண்டி அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.

இவ்விரண்டையும் கலந்து, வாயில் போட்டு மென்று
நீர் அருந்த, அஜீரணப் பிரச்சினை போயே போச்சு.

கண் பார்வை

கண் பார்வை
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.
பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.
இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.
கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.
மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்

உலர் திராட்சை

அனைவருக்கும் உதவும் `உலர் திராட்சை’ !!!
`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
இந்த உலர் திராட்சையில் கருப்பு உலர் திராட்சை மிகவும் சிறந்தது.
இனி, உலர் திராட்சையின் பயன்கள்…
* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
*மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
*உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
*இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
*குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
*தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.
*மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
*கருப்பு உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.

நாக்கும் அதன் தன்மையும் !!

நாக்கும் அதன் தன்மையும் !!

நாக்கின் இந்த குறிப்பிட்ட பகுதி வாத, பித்த, கபத்தினை காட்டும்.
அது போல் நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும்.

நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன.

உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும்.

இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு.

உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும்.

இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள முக்குற்றங்கள் தோசம் நீங்கி விடும்.

உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது.

அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். சூரியன் எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது.

கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து விட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.

படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவு உண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாபப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம்.

உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது.

எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள்.

உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்

கர்ப்பிணிகளுக்குப் பயோ மருந்துகள் !!!

கர்ப்பிணிகளுக்குப் பயோ மருந்துகள் !!!

முதல் & இரண்டாம் மாதம் நேட்ரம் பாஸ் 6x :

அதிக உமிழ்நீர்சுரப்பு; குமட்டல்; வாந்தி, கர்ப்பகால மஞ்சள் காமாலை, வயிற்றுப் பூச்சிகள்; இடுப்பு. மூட்டு வலிகள், மலப்போக்கு ஏற்படாமல் தடுத்தல்.

மூன்றாம் & நான்காம் மாதம் பெர்ரம் பாஸ் 6x :

இரத்த சோகையை நீக்கும்; தாய்க்கும்,கருவிலுள்ள குழந்தைக்கும் தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்யும்; சோர்வை அகற்றும்; ரத்தக் கசிவுகள் ஏற்படாமல் தடுப்பு மருந்தாக செயல்படும்.

ஐந்தாம் & ஆறாம் மாதம் கல்கேரியா பாஸ் 6x :

குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; குழந்தையின் தலை வீங்காமல்; பெரியதாகாமல் தடுக்கும்; எல்லா உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

ஏழாம் & எட்டாம் மாதம் காலிபாஸ் 6x :

கர்ப்பிணித் தாய்க்கு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்; நன்கு சிறுநீர் வெறியேறும்; சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைக் குணமாக்கும்; கால் வீங்காது; பிரசவம் பற்றிய பய உணர்வை நீக்கும்.

பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் நிகழ உதவும். மேலும் பிறக்கும் குழந்தை மூளைத்திறன் உள்ள புத்திசாலி யாகப் பிறக்க, பிறந்தபின் தோல் நோய் வராதிருக்க, அடிக் கடி சளித்தொல்லைகள் ஏற்படாமலிருக்க KP 6x பயன் படும்.

ஒன்பதாம் & பத்தாம் மாதம் நேட்ரம் மூர் 6x :

பிரசவ காலத்தில் விட்டு விட்டு வரும் வலியை விரைவுபடுத்திச் சுகப்பிரசவம் ஏற்படச்செய்யும். பிறக்கும் குழந்தை குறித்த காலத்தில், பேசவும், நடக்கவும், போலியோ வராமல் தடுக்கவும் NM பயன்படும்.

இம்மருந்துகளை குறிப்பிட்ட மாதங்களில் தினமும் காலை இரவு இருவேளைகள் தவறாமல் கொடுத்து வந்தால் கர்ப்பிணிகளின் நலம் பாதுகாப்பாக அமையும். குழந்தை ஆரோக்கியமாக, நல்ல வளர்ச்சியுடன் பிறக்கும்.

சுகப் பிரசவம் ஏற்படும். இருப்பினும் பயோவிலுள்ள 12 மருந்துகள் அனைத்தையும் கர்ப்பகாலத்தில் தேவைக்கேற்ப இடையிடையே சில நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த பயோ மருந்தை எந்தெந்தக் குறிகளுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற விவரத்தைப் பார்க்கவும்.

கர்ப்பகால வாந்தி - காலிமூர் (KM)
புளிப்பு மிக்க வாந்தி - நேட்பாஸ் (NP)
கசப்பான பித்த வாந்தி - நேட்சல்ப் (NS)
நீர் போன்ற வாந்தி - நேட்மூர் (NM)

சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் வாந்தியாகுதல் - பெர்.பாஸ் (FP)

காலைநேரக் குமட்டல் - கல்-பாஸ், காலி-பாஸ், நேட்-மூர்.

வாய்க்கசப்பு - நேட்சல்ப் (NS)

அதிகளவு எச்சில் ஊறுதல் - நேட்மூர் (NM)

கர்ப்பகால மலச்சிக்கல் - நேட்மூர் (NM), சிலிகா (S)

அசுத்த ரத்தக் குழாய்வீக்கம் (பச்சை நரம்புப்புடைப்பு)- கல்.புளோர் (CF)

கால் வீங்குதல் - நேட்.சல்ப் (NS)

மார்பகம் வீங்குதல் - பெர்பாஸ் (FP), காலிமூர் (KM)

கர்ப்பகாலத்தில் பொதுவாக ஏற்படும் சோர்வு, பலவீனம்- காலி.பாஸ் (KP)

அஜீரணத் தொந்தரவுகள் - நேட்.பாஸ் (NP)

பல்வலி - கல்.பாஸ் (CP), கல்.புளோர். (CF)

பிரசவ வலி ஏற்பட்டதும் 10,15 நிமிடத்திற்கு ஒருமுறை

சில வேளைகள் தர வேண்டிய மருந்து - காலிபாஸ் (KP)

பிரசவ நேர வலி - மெக்.பாஸ் (MP),காலி பாஸ் (KP)

இரத்த ஒழுக்கு - கல்.புளோர் (CF), காலி பாஸ் (CP)

பிரசவத்திற்குப் பின்கர்ப்பப்பை சுருங்காமலிருத்தல் - கல்.புளோர் (CF)

பிரசவத்திற்குப் பின் சோர்வு - காலி பாஸ் (KP)

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எளிய வ‌ழிக‌ள் !!!

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எளிய வ‌ழிக‌ள் !!!
பித்தம் என்பது என்ன?
உணவு செரிமானம் ஆன பின் உடலில் சிறிது பித்தம் தங்குகிறது.
இது இரைப்பபயிலும், சிறு கூடலிலும் ஒட்டி கொள்கிறது.
இந்த பித்த நீர் வீரியம் உள்ள புளிப்பு தன்மை (Like HYDRO CHOLORIC ACID) உடையது.
இது உடலில் தங்கி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, வயிற்று புண் போன்ற வியாதிகள் ஏற்பட்டு , பித்தபையும் , கல்லீரலும் பாதிக்கப்படுகிறது.
மேலும் எஞ்சிய பித்த நீர் உடலில் இரத்ததில் கலந்து உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது .
எனவே , எஞ்சிய பித்த நீர் , நமது பல நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது.
கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்
* வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
* இதுபோல கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
‌விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா?, வே‌ண்டாமா? என்பன போன்ற அச்ச‌ம். அதிக‌ம் சா‌ப்‌பிடலாமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம்.
இந்த ‌பி‌த்த‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர பித்தக் கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
இந்த எஞ்சிய பித்த நீரை வெளி தள்ளும் மூலிகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது நமது கரிசலாங்கண்ணி கீரையாகும்.