பித்தப் பிரச்சனைகள் தீர எளிய வழிகள் !!!
பித்தம் என்பது என்ன?
உணவு செரிமானம் ஆன பின் உடலில் சிறிது பித்தம் தங்குகிறது.
இது இரைப்பபயிலும், சிறு கூடலிலும் ஒட்டி கொள்கிறது.
இந்த பித்த நீர் வீரியம் உள்ள புளிப்பு தன்மை (Like HYDRO CHOLORIC ACID) உடையது.
இது உடலில் தங்கி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, வயிற்று புண் போன்ற வியாதிகள் ஏற்பட்டு , பித்தபையும் , கல்லீரலும் பாதிக்கப்படுகிறது.
மேலும் எஞ்சிய பித்த நீர் உடலில் இரத்ததில் கலந்து உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது .
எனவே , எஞ்சிய பித்த நீர் , நமது பல நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது.
கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்
* வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
* இதுபோல கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் போன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா?, வேண்டாமா? என்பன போன்ற அச்சம். அதிகம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் ஜீரணமாகுமா? நெஞ்சு கறிக்குமா? எதுக்கிக்கொண்டே இருக்குமா? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.
இந்த பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும், அதனை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்போம்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர பித்தக் கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
இந்த எஞ்சிய பித்த நீரை வெளி தள்ளும் மூலிகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது நமது கரிசலாங்கண்ணி கீரையாகும்.