தாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பமடைந்தால் என்ன செய்வது

தாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பமடைந்தால் என்ன செய்வது
can-you-get-pregnant-while-breastfeeding


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பகாலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதில் தவறில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் `புரோலாக்டின்' (Prolactin) என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்' (ovulation) என்ற நிலையான சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாவதைத் தடைசெய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கருவுறுவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம்.


பிரசவத்துக்குப் பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.

சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்குக் கர்ப்பகால மசக்கை (Morning Sickness) என்னும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மிகத்தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

முகப்பரு தழும்பு - நீக்கும் குறிப்புகள் Pimples-Scars Natural Removing Tips

முகப்பரு தழும்பு - நீக்கும் குறிப்புகள் Pimples-Scars Natural Removing Tips
Natural-tips-for-removing-Pimples-scars


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது முகப்பருவையும், முகப்பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது முகப்பருவையும், முகப்பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். முகப்பருவையும், பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.


* சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

* ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

* கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.

* எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.

* உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.

வெங்காயம் - இதயத்தின் தோழன் - Onion-health-benefits.

வெங்காயம் - இதயத்தின் தோழன்  - Onion-health-benefits.



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படுகிறது. வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதையும் தாண்டி பாலுணர்வைத் தூண்டக் கூடிய பொருட்களும் வெங்காயத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளன. தேனீ மற்றும் குளவி கொட்டிவிட்டால் வலி உயிர் போகிறது, என்பார்கள். அதோடு அதில் இருக்கிற விஷம் சில நேரம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு. அப்படி தேனீ, குளவி ஏதேனும் கொட்டிவிட்டால் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாது.

ஆனால் பெரியோர்களோ விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் சில வெங்காயத்தை எடுத்து நசுக்கித் தேய்த்து விடுவார்கள். ஆக, வெங்காயத்தில் மிக அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பொருள் இருப்பது தெரிந்ததால் நம் முன்னோர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள். பொதுவாக நம்முடைய உடலில் அழற்சி உண்டாவதற்கு ப்ராஸ்டாகிளான்டின்ஸ் என்னும் வேதிப்பொருள்தான் காணமாக அமைகிறது. ஆனால் வெங்காயம் அந்த பொருளை சிதைத்துவிடுகிறது.


உடலில் விஷம் சேராமல் நச்சுத் தன்மையை வெளியேற்றி விடுகிறது. பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அதுபோலத் தான் வெங்காயமும். வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். வெங்காயத்தை மற்ற காய்கறிகள் போல் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அதை பச்சையாகவோ, சமைத்தோ, சூப்பாகவோ, சாலட்டாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படுகிறது. வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது. இயல்பாகவே வெங்காயத்திற்கு கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் இருக்கிறது. பொதுவாக ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களின் நிலை அப்படி அல்ல.

பெண்கள் சிறுநீரை அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அதிகமாகி நோயை உண்டாக்கும். இதன்மூலம் சிறுநீர்தாரை தொற்று ஏற்படும். அதனால் பெண்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கழிவுப் பொருட்களைக் கரைத்து அழற்சியை குறைக்கும். சிறுநீர்த்தாரை தொற்று குறையும். யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீர்ப் பையில் கற்கள் உண்டாகும்.

இதுபோன்று யூரிக் அமிலத்தால் மூட்டுவலி தொல்லை இருப்பவர்கள் உணவில் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயுடன் வெங்காயத்தை அரைத்தோ அல்லது அதன் சாறையோ கலந்து வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறைய ஆரம்பிக்கும். பொதுவாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகிற போது, அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். நுரையீரலில் சிலருக்கு அழற்சி உண்டாகும். மூக்கில் எரிச்சல் உண்டாகும். இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயச் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். நுரையீரலில் தேங்கியிருக்கிற நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகின்ற ஆற்றல் இதற்கு உண்டு.

சேலம் தட்டு வடை செட் - salem-thattu-vadai-set

சேலம் தட்டு வடை செட் - salem-thattu-vadai-set




           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/



மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேலம் தட்டு வடை செட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தட்டை - 12

 கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
காரச் சட்னி - 6 டீஸ்பூன்
புதினா சட்னி - 6 டீஸ்பூன்
மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் (விரும்பினால்)
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சேலம் தட்டு வடை செட்

செய்முறை

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

ஆறு தட்டைகளின் மீது காரச் சட்னி தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்கவும்.

அதன் மேலே சிறிது சிறிதாக கேரட் - பீட்ரூட் கலவையை வைக்கவும்.

பிறகு அதன் மீது வெங்காயம், கொத்தமல்லித்தழை, மாங்காய்த் துருவல், சாட் மசாலாத்தூள் தூவவும்.

மீதமுள்ள ஆறு தட்டைகளின் மீது புதினா சட்னி தடவி, காய்கறி கலவையின் மீது வைத்துப் பரிமாறவும்.

சேலம் தட்டு வடை செட் ரெடி

What is Pull Back Trade - K Karthik Raja Share Market Training Chennai

What is Pull Back Trade - K Karthik Raja Share Market Training Chennai
#sharemarket #stockmarket #sharemarkettraining #stockmarkettraining #chennaitraining #training #sharetraining #kkarthikraja #besttrainer #trainer #kkarthikrajatraining #stockrecommendations #ipo #chennai #tamilnadu #sharetrading #usdinr #nifty #crudeoil #currency #commodity #fundamentals #technicals #stockanalysis

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


What is Pull Back Trade - K Karthik Raja Share Market Training Chennai

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai ,sharemarket ,stockmarket ,sharemarkettraining ,stockmarkettraining , chennai ,chennaitraining ,training ,sharetraining ,kkarthikraja ,besttrainer ,trainer ,kkarthikrajatraining ,stockrecommendations ,ipo ,chennai ,tamilnadu ,sharetrading ,usdinr ,nifty ,crudeoil ,currency ,commodity ,fundamentals ,technicals ,stockanalysis

https://kkarthikrajasharemarkettraining.business.site/
https://share-market-training.business.site/

What are the various options available for investments - K Karthik Raja Share Market Training

What are the various options available for investments  - K Karthik Raja Share Market Training
#investments #sharemarket #stockmarket #sharemarketindia #kkarthikraja

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


What are the various options available for investments  - K Karthik Raja Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

https://kkarthikrajasharemarkettraining.business.site/
https://share-market-training.business.site/

பார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள் -Designer-sarees

பார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள் -Designer-sarees
Designer-sarees-suitable-for-parties
#designersarees #parties #saree


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

பெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.

பெண்கள் எவ்வளவு நவ நாகரீகமான ஆடைகளை அணிந்தாலும், சேலைகளை அணிந்து கொண்டு செல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள். சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.

ஃபிரில் ரெடிமேட் சேலைகள்


அதாவது இந்த சேலைகளின் கீழ்ப்பகுதியில் ஃபிரில்லானது ஒரு முனையிலிருந்து துவங்கி மறு முனையில் முடியும். சேலையின் மேல்ப்பகுதியில் அழகிய மணிகள் தொங்குவது போல் இடுப்பிலிருந்து துவங்கி முந்தியில் முடிவது போல் டிசைன் செய்யப்பட்டிருக்கும். தோள் பட்டையிலிருந்து முந்திவரை சேலையானது மடிப்பு வைத்து நாம் அணிந்து கொள்வது போல் அவர்களாகவே ஒரு பேடுடன் இணைத்துத் தைத்திருக்கிறார்கள். அந்தப் பேட் பகுதியை அப்படியே எடுத்த தோள் பட்டையில் வைத்து பின் போட்டுக்கொள்ளலாம்.

இந்தச் சேலையின் மற்றொரு சிறப்பம்சம் இந்தத் துணியானது எவ்வளவு கசக்கினாலும் கசங்காது. இறக்குமதி செய்யப்பட்ட துணியினால் தயார் படுத்தப்பட்டுள்ள இந்தச் சேலை செல்ஃப் டிசைன்களுடன் பளபளப்பாகவும், மினுமினுப்புடனும் பார்ப்பதற்கு பிளெயின் கலரில் இருக்கின்றது. இதே துணியில் டபுள் ஃபிரில் வைத்த சேலைகளும் உள்ளன. இது போன்ற சேலைகளுக்கு அடர்ந்த வண்ணங்களில் உள்ள வெல்வெட் துணிகளில் மிக அழகிய மணி வேலைகள், சம்க்கி வேலைகள் செய்யப்பட்ட ரெடிமேட் பிளவுஸ்கள் தரப்படுகின்றன. இந்தச் சேலைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

நெட்டட் சேலைகள்

வலை போன்ற துணிகளில் இவ்வளவு கலை நயத்துடன் செய்ய முடியுமா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றும் அளவுக்கு ஆச்சரியமான வேலைப்பாடுகளை அந்தச் சேலைகளில் பார்க்கலாம். சேலை முழுவதும் ரேஷம் வேலைப்பாடு அதன் மேல் அழகிய கற்கள் பதித்தும், பார்டர்களில் வேறு வண்ணத்தில் ரேஷம் வேலைப்பாடு செய்தும் வரும் நெட்டட் சேலைகளை காணக் கண் கோடி வேண்டும்.

கடிசில்க் பிரிண்டட் (டிஜிட்டல்) சேலைகள்

இவ்வகைச் சேலைகளை அணியும் பொழுது நம்மைப் பாராட்டாதவர்கள் இருக்கவே முடியாது. இவை ஒரு திகைப்பான கம்பீரத் தோற்றத்தைத் தருகின்றன. உடலில் கட்டங்கள் இருந்தால் பார்டர்கள் பிளெயினாகவோ, பார்டர்களில் கட்டங்கள் இருந்தால் உடல் முழுவதும் கட்டங்களாக பிரிண்ட் செய்யப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் வண்ண மயமாகவும், விலையும் நயமாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.

லெஹங்கா சேலைகள்

பெரும்பாலும் வேலைப்பாட்டுடன் கூடிய ஜ்யார்ஜெட் துணிகளிலேயே இவ்வகை லெஹங்கா சேலைகள் வருகின்றன. ஒரே சேலையில் பாவாடை போன்று தைக்கப்பட்ட பகுதியும் அதன் தொடர்ச்சியாக சேலையும் இருக்கும். இதனை சரியாக அணிந்தோமென்றால் பார்ப்பதற்கு தனியாக லெஹங்கா போன்றே இருக்கும். இந்த சேலைகளில் உடல் கலரும் பார்டரும் மிகவும் கான்ட்ராஸ்டாகவும், அழகாவும் அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒன்மினிட் ரெடிமேட் ப்ளேடட் சேலைகள்:-

இவ்வகைச் சேலைகள் ஒரு நிமிடத்திலேயே அணிந்து கொள்ளும் விதமாக முன்பக்க கொசுவம் மற்றும் முந்தி ரெடிமேடாக தைக்கப்பட்டு இருக்கும். பேன்ட் அணிந்தவர்கள் கூட இந்த சேலைகளை எளிதாக அணிந்து கொள்வதற்கு ஏதுவாக இடுப்பில் கொக்கி அல்லது வெல் க்ரோ வைத்துத் தைக்கப்பட்டு இருக்கும் விதத்தில் இவை சேலை அணியத் தெரியாதவர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலைகளாகும் சோளிகள் மிகவும் வேலைப்பாட்டுடனும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பனாரஸ் சேலைகள்

பழைய காலம் தொட்டு இன்றுவரை பனாரஸ் சேலைகளுக்கே தனி மவுசுதான். கான்ட்ராஸ்ட் கலர்களில் உடல் மற்றும் பார்டர்கள் இருக்க அதிலிருக்கும் ஜரி வேலைப்பாடுகள் அதன் அழகை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக உள்ளது. சில்வர் நிற ஜரிகைகளில் இருக்கும் டிசைன்களை உடல் முழுவதும் நெய்து பார்டர் டிசைன்களை வேறுபடுத்திக் காண்பிப்பது போல் வடிவமைத்திருப்பது இச்சேலைகளில் சிறப்பம்சமாகும்.

40 வயதை கடந்த பெண்களுக்கான உடற்பயிற்சிகள்

40 வயதை கடந்த பெண்களுக்கான உடற்பயிற்சிகள்
Exercises-for-Women-Over-40
#fitness #womenfitness #40agefitness


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

40 வயது கடந்த பெண்கள் தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம்.

40 வயதை கடந்த பெண்களுக்கான உடற்பயிற்சிகள்
பர்பீஸ்
40 வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஸ்குவாட்


நின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.

ப்ளாங்க்

தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

லெக் ரைஸ்

நேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.

40 வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.   ஸ்குவாட்  நின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.  ப்ளாங்க்  தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.  லெக் ரைஸ்  நேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.    லஞ்செஸ்  நின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.  பர்பீஸ்  நேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.  மறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.

லஞ்செஸ்

நின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.

பர்பீஸ்

நேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.

மறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். 

சொந்த வீடு வாங்குபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்

சொந்த வீடு வாங்குபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்
Financial-Ideas-for-new-Home-Buyers
#newhomebuyeridea #financialideas #newhomes


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் பற்றி நிதியியல் ஆலோசகர்கள் மற்றும் கட்டுனர்கள் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

* எதிர்காலத்தில் கூடுதலாக வாய்ப்புள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டிட விரிவாக்கம் ஆகிய விஷயங்களை மனதில் கொண்டு வீட்டின் வடிவமைப்பை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். மேலும், கச்சிதமான அளவு என்பது சொந்த வீடு விஷயத்தில் மிகவும் அவசியமானது.

* இரண்டு படுக்கையறை வீடே போதுமானது என்ற நிலையில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்க முடிவெடுப்பது கடன் சுமையை அதிகரிக்கும். சிறிய வீடாக இருப்பின், திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் வசதிகள் கொண்டதாகவும், அடிப்படை வசதிகள் உள்ள பகுதியிலும் எளிதாக வாங்க முடியும். பெரிய வீடு என்றால் திட்டமிட்ட அதே பட்ஜெட்டில் புற நகர் பகுதிகளில்தான் வாங்க இயலும்.

* வீட்டு உரிமையாளரது ஆண்டு வருமானத்தில் 3 மடங்கு அளவுக்கும் மேல் சொத்து மதிப்பு உள்ள வீடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சத்திற்குள் இருப்பதே நல்லது.

* வீட்டு உரிமையாளர் பெறக்கூடிய மாத வருமானத்தில் 25 சதவிகித அளவுக்கும் அதிகமாக மாதாந்திர கடன் தொகை இருப்பது கூடாது. அதாவது, மாத வருமானம் ரூ.50 ஆயிரம் என்றால் ரூ.12,500-க்கும் மேல் மாதாந்திர தவணைத்தொகை செலுத்தும்படி இருத்தல் கூடாது.

* கடன் வாங்காமல் வீடு கட்டுவது அல்லது வாங்குவதே நல்லது என்றாலும் அனைவருக்கும் அது சாத்தியமாக இருப்பதில்லை. அதனால், இயன்றவரை பொருளாதார சேமிப்புகளை திட்டமிட்டு பயன்படுத்தி கடன் சுமையை குறைக்க முயற்சிப்பதே எதிர்கால நலன்களுக்கு ஏற்றதாகும். உதாரணமாக, வீட்டின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம் என்ற நிலையில், சேமிப்பாக கைகளில் ரூ.10 லட்சம் இருப்பின், மீதமுள்ள ரூ.20 லட்சம் மட்டுமே கடன் தொகையாக இருக்கும். அதற்கான மாதாந்திர தவணை என்பது பெரிய நெருக்கடியாக இருக்காது.

* கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்த வருடங்கள் கொண்ட கடன் திட்டத்தை தேர்ந்தெடுப்பது நிதி மேலாண்மைக்கு உகந்தது. கடன் தொகை திருப்பி செலுத்தப்படுவதற்கான காலகட்டம் அதிகப்படியான வருடங்கள் கொண்டதாக இருப்பது கூடுதல் நிதிச்சுமையாக அமையும்.

* மாதாந்திர தவணைக்கான கடன் வட்டி என்பது மாறாத வட்டி விகிதமாக இருப்பதே நல்லது. மாறுபடும் வட்டி விகிதம் கொண்ட கடன் தொகை கூடுதல் நிதிச்சுமையாக அமையக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளித்தல் - Oil Bath benefits

எண்ணெய் தேய்த்து குளித்தல் - Oil Bath benefits
உடலுக்கு என்ன பலன் கிடைக்கும்?
#oilbathbenefits #kkrhealthcare #healthtips


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று.

நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று. நாம் வாழும் தென்னிந்திய பகுதி அதிக வெப்பம் நிறைந்தது. அதனால் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் நலத்திற்கு ஏற்றது. நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வந்த இந்த பழக்கம் பின்பு வழக்கத்தில் இருந்து மறைந்திருந்தாலும்,  தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு சனிநீராடலுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஆனாலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.

- எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன்?


- எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பொழுது எண்ணெய் தோல் அடுக்கு களுக்கு உள் செல்லுமா?

- உடல் சூடு குறையுமா?

- சருமத்திற்கு பளபளப்பு கிடைக்குமா?

என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கான விடையை ஒவ்வொரு வரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எதற்காக?

சருமம், நம் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, மாறி வரும் பருவ காலங்களுக்கு ஏற்ப தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைகளால் சருமம் பாதிக்கப்படுகிறது.

நமது சருமத்தில் படியும் எல்லாவிதமான அழுக்குகளும் நீரில் கரையும் தன்மை வாய்ந்தவை இல்லை, சில வகை அழுக்குகள் கொழுப்பில்தான் கரையும். அப்படிப்பட்ட அழுக்குகள் எண்ணெய் தேய்க்கும்போது அகற்றப்பட்டு விடும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கண், காது, மூக்கு, சருமம் போன்ற புலன் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.

எண்ணெய்யை உடலில் தேய்க்கும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும். இதனால் உடலுக்குள் பத்து முதல் பதினைந்து சதவீதம் பிராணவாயு கூடுதல் செல்வதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கிறது. இது உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

தசைகளில் தேங்கியுள்ள கழிவு, நிணநீர் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து சுத்தி கரிக்கப்பட்டு கழிவாய் வெளியேற்றப் படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

உட்கார்ந்தபடியே கம்ப்யூட்டரை இயக்கி வேலை செய்பவர்கள் பலருக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் தசை பிடிப்பு ஏற்படும். அது ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி வலியை உருவாக்கும். எலும்பு தேய்மானமும் ஏற்படும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எலும்புகள் பலம் பெறும். கை, கால், மூட்டுகளிலும் எலும்பு தேய்மானம், எலும்பு சிதைவு போன்றவை ஏற்படாது. தலை முடியும் உதிராது.

எண்ணெய் தேய்த்து குளித்தல்

எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை

50 மி.லி. நல்லெண்ணெய்யில் 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிதளவு மிளகு இட்டு சூடு செய்து, ஆறவைத்து தலைமுதல் பாதம் வரை கீழ் நோக்கி தேய்க்க வேண்டும்.

தலையின் மயிர்கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். காது மற்றும் மூக்கில் இரண்டு சொட்டு இட்டு அழுக்குகளை நீக்க வேண்டும். கழுத்து தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் அழுத்தி தேய்த்து தசைப்பிடிப்புகளை போக்க வேண்டும்.

அக்குள், தொடையிடுக்கு பகுதியில் வியர்வை உண்டாவதால் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அந்த இடங்களில் எண்ணெய் தேய்ப்பதால் சருமம் ஆரோக்கியமாகும்.

பாதங்களில் சிறப்பு கவனம்கொடுத்து தேய்க்க வேண்டும். சிலருக்கு கால் மரத்து போகுதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஆகியவை நரம்பு இழைகள் பாதிப்பால் உண்டாகும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நரம்புகள் தூண்டப்பட்டு நன்கு செயல்படும்.

பாதத்தின் பின்புறம் சிலருக்கு வெடிப்பு ஏற்பட்டு குதிகால் வலியுண்டாகும். அங்கு எண்ணெய் தேய்க்கும்போது பாதம் மிருதுவாகும். வெடிப்புகள் மறையும். விரல் இடுக்குகளிலும், விரல் நகக்கண்களிலும் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் அங்கு ஏற்படும் பூஞ்சை தொற்றுக்களை தவிர்க்கலாம்.

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல்சூடு நீங்கும். கண் எரிச்சல் தீரும். நல்லெண்ணெய் தேய்க்கும் பொழுது அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தோல் அடுக்குகளை தாண்டி எலும்பு மஜ்ஜை வரை செல்வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய், பூவந்திக்கொட்டை, அரப்புதூள், உதிலப்பொடி போன்றவற்றை கொண்டு தலை மற்றும் உடலை சுத்தம் செய்வது சிறந்தது. கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. சூரியன் உதித்த இரண்டு மணிநேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இளம் வெயிலில் உடல்படுமாறு இருந்து, பத்து முதல் இருபது நிமிடம் கழித்து குளிப்பது சிறந்தது.

உணவு உண்ட பின் குளிப்பது தவறானது. அப்படி குளித்தால் அது ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அஜீரணத்தை உண்டாக்கும்.

சிலருக்கு சைனஸ், தலைவலி, மூக்கடைப்பு போன்ற தொந்தரவு இருக்கும். அவர்கள் சுக்குத் தைலம், பீனிச தைலம், நொச்சித் தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி குளிக்கலாம். உடல் சூடு இருந்தால் சந்தனாதி தைலம் பயன்படுத்தலாம். பொடுகு இருப்பவர்கள் பொடுதலை தைலம் பயன்படுத்தலாம். தேவைப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். இளநீர், சில்லென்ற பானங்கள் பருகுவதை தவிர்த்து விட வேண்டும். அன்று மட்டும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் ஓய்வை நாடும். எனவே அன்று கடினமான வேலைகளை செய்வதையும், வெயிலில் அலைவதையும் தவிர்க்கலாம். அன்று பகலில் உறங்க கூடாது. உடலுறவு கூடாது. வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. இயலாதவர்கள் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற் படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இளமையையும், அழகையும் பாதுகாக்கலாம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாதவர்கள்

கண்நோய், வயிற்றுப்போக்கு, வாந்தி, அஜீரணம், காய்ச்சல், காதில் சீழ் வடிதல், நீடித்த நுரையீரல் நோய்கள், தொடர் இருமல் போன்ற பாதிப்புகொண்டவர்கள், எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

பார்லி வெஜிடபிள் சூப் - barley-vegetable-soup

பார்லி  வெஜிடபிள் சூப் - barley-vegetable-soup
#barleyvegetablesoup #soup #tamilfoods


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

பார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பார்லி - அரை கப்,

 கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி - ஒரு கப்,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு,
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்,
உப்பு - தேவையான அளவு,
எலுமிச்சைப்பழம் - அரை மூடி

பார்லி - வெஜிடபிள் சூப்

செய்முறை :

கொத்தமல்லி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காய்கறிகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பார்லியை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

குக்கரில் பார்லியுடன் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும்.

ஆறியதும் மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.

சூப்பரான பார்லி - வெஜிடபிள் சூப் ரெடி.

சைனீஸ் டிராகன் சிக்கன் - Chinese Dragon chicken

சைனீஸ் டிராகன் சிக்கன் -  Chinese Dragon chicken
#Dragonchicken #chinesedishes #chicken #tamilfoods
சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன்


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன். இத்தகைய டிராகன் சிக்கனை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ

 இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
வெங்காயம் - 1
வெங்காயத் தாள் - சிறிதளவு
வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

டிராகன் சிக்கன்

செய்முறை

இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!

இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

ஸ்நாக்ஸ் பன்னீர் - 65(Paneer-65)

ஸ்நாக்ஸ் பன்னீர் - 65(Paneer-65)
#paneer65 #tastyfoods #indianfoods
குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பன்னீர் - 65


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் 65 செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் - கால் கிலோ

 மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு

பன்னீர் - 65

செய்முறை:

பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

அவற்றுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

இறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பன்னீர் 65 ரெடி.

#paneer65 #tastyfoods #indianfoods