பார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள் -Designer-sarees

பார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள் -Designer-sarees
Designer-sarees-suitable-for-parties
#designersarees #parties #saree


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

பெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.

பெண்கள் எவ்வளவு நவ நாகரீகமான ஆடைகளை அணிந்தாலும், சேலைகளை அணிந்து கொண்டு செல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள். சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.

ஃபிரில் ரெடிமேட் சேலைகள்


அதாவது இந்த சேலைகளின் கீழ்ப்பகுதியில் ஃபிரில்லானது ஒரு முனையிலிருந்து துவங்கி மறு முனையில் முடியும். சேலையின் மேல்ப்பகுதியில் அழகிய மணிகள் தொங்குவது போல் இடுப்பிலிருந்து துவங்கி முந்தியில் முடிவது போல் டிசைன் செய்யப்பட்டிருக்கும். தோள் பட்டையிலிருந்து முந்திவரை சேலையானது மடிப்பு வைத்து நாம் அணிந்து கொள்வது போல் அவர்களாகவே ஒரு பேடுடன் இணைத்துத் தைத்திருக்கிறார்கள். அந்தப் பேட் பகுதியை அப்படியே எடுத்த தோள் பட்டையில் வைத்து பின் போட்டுக்கொள்ளலாம்.

இந்தச் சேலையின் மற்றொரு சிறப்பம்சம் இந்தத் துணியானது எவ்வளவு கசக்கினாலும் கசங்காது. இறக்குமதி செய்யப்பட்ட துணியினால் தயார் படுத்தப்பட்டுள்ள இந்தச் சேலை செல்ஃப் டிசைன்களுடன் பளபளப்பாகவும், மினுமினுப்புடனும் பார்ப்பதற்கு பிளெயின் கலரில் இருக்கின்றது. இதே துணியில் டபுள் ஃபிரில் வைத்த சேலைகளும் உள்ளன. இது போன்ற சேலைகளுக்கு அடர்ந்த வண்ணங்களில் உள்ள வெல்வெட் துணிகளில் மிக அழகிய மணி வேலைகள், சம்க்கி வேலைகள் செய்யப்பட்ட ரெடிமேட் பிளவுஸ்கள் தரப்படுகின்றன. இந்தச் சேலைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

நெட்டட் சேலைகள்

வலை போன்ற துணிகளில் இவ்வளவு கலை நயத்துடன் செய்ய முடியுமா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றும் அளவுக்கு ஆச்சரியமான வேலைப்பாடுகளை அந்தச் சேலைகளில் பார்க்கலாம். சேலை முழுவதும் ரேஷம் வேலைப்பாடு அதன் மேல் அழகிய கற்கள் பதித்தும், பார்டர்களில் வேறு வண்ணத்தில் ரேஷம் வேலைப்பாடு செய்தும் வரும் நெட்டட் சேலைகளை காணக் கண் கோடி வேண்டும்.

கடிசில்க் பிரிண்டட் (டிஜிட்டல்) சேலைகள்

இவ்வகைச் சேலைகளை அணியும் பொழுது நம்மைப் பாராட்டாதவர்கள் இருக்கவே முடியாது. இவை ஒரு திகைப்பான கம்பீரத் தோற்றத்தைத் தருகின்றன. உடலில் கட்டங்கள் இருந்தால் பார்டர்கள் பிளெயினாகவோ, பார்டர்களில் கட்டங்கள் இருந்தால் உடல் முழுவதும் கட்டங்களாக பிரிண்ட் செய்யப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் வண்ண மயமாகவும், விலையும் நயமாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.

லெஹங்கா சேலைகள்

பெரும்பாலும் வேலைப்பாட்டுடன் கூடிய ஜ்யார்ஜெட் துணிகளிலேயே இவ்வகை லெஹங்கா சேலைகள் வருகின்றன. ஒரே சேலையில் பாவாடை போன்று தைக்கப்பட்ட பகுதியும் அதன் தொடர்ச்சியாக சேலையும் இருக்கும். இதனை சரியாக அணிந்தோமென்றால் பார்ப்பதற்கு தனியாக லெஹங்கா போன்றே இருக்கும். இந்த சேலைகளில் உடல் கலரும் பார்டரும் மிகவும் கான்ட்ராஸ்டாகவும், அழகாவும் அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒன்மினிட் ரெடிமேட் ப்ளேடட் சேலைகள்:-

இவ்வகைச் சேலைகள் ஒரு நிமிடத்திலேயே அணிந்து கொள்ளும் விதமாக முன்பக்க கொசுவம் மற்றும் முந்தி ரெடிமேடாக தைக்கப்பட்டு இருக்கும். பேன்ட் அணிந்தவர்கள் கூட இந்த சேலைகளை எளிதாக அணிந்து கொள்வதற்கு ஏதுவாக இடுப்பில் கொக்கி அல்லது வெல் க்ரோ வைத்துத் தைக்கப்பட்டு இருக்கும் விதத்தில் இவை சேலை அணியத் தெரியாதவர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலைகளாகும் சோளிகள் மிகவும் வேலைப்பாட்டுடனும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பனாரஸ் சேலைகள்

பழைய காலம் தொட்டு இன்றுவரை பனாரஸ் சேலைகளுக்கே தனி மவுசுதான். கான்ட்ராஸ்ட் கலர்களில் உடல் மற்றும் பார்டர்கள் இருக்க அதிலிருக்கும் ஜரி வேலைப்பாடுகள் அதன் அழகை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக உள்ளது. சில்வர் நிற ஜரிகைகளில் இருக்கும் டிசைன்களை உடல் முழுவதும் நெய்து பார்டர் டிசைன்களை வேறுபடுத்திக் காண்பிப்பது போல் வடிவமைத்திருப்பது இச்சேலைகளில் சிறப்பம்சமாகும்.