குழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....

குழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....
Parents-need-to-follow-the-rules-to-protect-children


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....
இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்….

* ஆண் /பெண் என்கிற பாகுபாட்டினை அவர்களிடம் காட்டாதீர்கள், இருவரும் சமம் என செயல்படுங்கள்.


* உங்களது குழந்தை ஆணோ/பெண்ணோ எத்தனை வயதானாலும் அது நமக்கு குழந்தை தான், ஆனால் அடுத்தவர் பார்வைக்கு அப்படியல்ல, பிறரது கவனம் நம் குழந்தையின் செயல்பாட்டினை குறைத்துவிடும்.

* வீட்டிற்கு யார் வந்தாலும் திறந்த மேனியாக அவர்களை நிற்கவிடாதீர்கள். வெளியாட்கள் வந்தால் உடையின்றி அவர்கள் முன் வரக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* பள்ளிக்கு செல்லும் குழந்தையாக இருப்பின் அதனுடைய உடைகளை தானாக உடுத்த ஐந்து வயதில் இருந்து பழக்கப்படுத்துங்கள்.

* பள்ளிக்கு அனுப்பும் ஆட்டோ, வேன் மற்றும் கார் அல்லது பள்ளியின் பேருந்து இவற்றின் ஓட்டுனர்களை பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ளுங்கள் அவர்களது செல்பேசி முதல் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் முகவரி வரை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

* குழந்தையிடம் பள்ளியின் ஐடென்டிடி கார்டு இருந்தாலும் தனியாக ஒரு நோட்டில் வீட்டின் முகவரி, பெற்றோரின் செல்பேசி எண்களை முழுதுமாக அதில் குறித்து வையுங்கள்.

* பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் குழந்தைகளை பெற்றோரில் ஒருவர் வாசலில் வரவேற்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் பலநேரம் லிஃப்ட் ஆபரேட்டர்கள் மதிய நேரத்தில் வேலையில் இருக்கமாட்டார்கள். ஆகவே லிஃப்ட்களில் குழந்தைகளை தனியாக வர அனுமதிக்காதீர்கள்.

* அப்பா இல்லாத நேரத்தில் நன்கு அறிமுகமில்லாத ஆண்கள் யார் வந்தாலும் அவர்களை வீட்டில் அனுமதித்துவிட வேண்டாம்…அம்மாவை அழைத்து அவர்களிடம் விபரம் கூற வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

* காலிங்பெல் அழைத்த உடன் ஓடிச்சென்று கதவை திறக்கும் குழந்தைகளை அவ்வாறு செய்யகூடாது என அறிவுறுத்துங்கள். லென்ஸ் வழியாக வெளியே நிற்பவர் யார் என தெளிவாக கண்டபிறகு கதவை திறக்க வேண்டும். விளையாட்டிற்காக லென்சில் விரலை வைத்து மூடும் நபர்…விரலை எடுக்கும் வரை கதவை திறக்கவே கூடாது.

* பள்ளிவிட்டு வரும் குழந்தையை வரவேற்று அன்றாடம் பள்ளியிலும் வாகனத்திலும் நிகழ்ந்தவற்றை கேட்டறிந்துகொள்ளுங்கள்.

* தினமும் அவர்களது பள்ளி பைகளை திறந்து பார்த்து பரிசோதனை செய்யுங்கள், அவர்களிடமில்லாத பொருட்கள் அல்லது புதிய பொருட்களை கண்டால் அதை எடுத்து குழந்தைகளிடம் கேளுங்கள். இது யாருடையது, யார் கொடுத்தது என தெரிந்துகொள்ளுங்கள் அப்படி யாரிடமும் எந்த பொருளும் வாங்கியிருந்தால் இனிமேல் அதுபோல வாங்க வேண்டாம் என கூறிவிடுங்கள்.

* பெற்றோர் தவிர யார் என்ன பொருள் வாங்கி கொடுத்தாலும் அதனை பெற்றோரின் அனுமதியின்றி பெற கூடாது என கூறி வையுங்கள்.

* பல வீடுகளில் வேலைக்கு செல்லும் பெற்றோர் பக்கத்து வீடுகளில் சாவியை கொடுத்துவிட்டு மகன்/மகள் வந்தால் கொடுங்கள் என கூறி அலுவலக பணிகளில் இருக்கிறார்கள். பள்ளிவிட்டு வந்த குழந்தை தானாக சாவி வாங்கி திறந்து பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. முடிந்தவரை இதனை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகள் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் அவர்களை பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது.