சைனஸ் பிரச்சினை ஏற்பட காரணம்

சைனஸ் பிரச்சினை ஏற்பட காரணம்
Sinus-problem-reasons

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் பாடாய் படுத்திவிடும். கேட்டால், ‘‘சைனஸ் பிரச்சினைங்க, தீரவே இல்லை‘‘ எனக் கவலையோடு சொல்வார்கள்.

நமது மூக்கை சுற்றி, நான்கு காற்று பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.

 சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு ‘சைனசிட்டிஸ்‘ என்று பெயர்.

மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் ‘பாலிப்‘ எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்சினை வருகிறது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.

தலையை கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும். மூக்கை தொட்டாலே கடுமையான வலி ஏற்படும். இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மல் வரும். பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும். காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.

இந்த பிரச்சினை உள்ளவர்கள் பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ளவும். தலையணை, படுக்கையறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவும். கைக்குட்டைகளை கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்து பயன்படுத்தவும். கைக்குட்டையை அடிக்கடி மாற்றவும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம்.

அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். மூக்குப்பொடி போடுவதையும், புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.