ராகு - கேது பரிகாரத் தலங்கள் ( Rahu-Kethu Parihara Temple)
Rahu Kethu Pariharam Temple
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ராகு கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நாகமுகுந்தன்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம்: காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.
சென்னை - குன்றத்தூர்: பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக நாகேஸ்வரர் அருட்பாலிக்கிறார்.
சென்னை-கெருகம்பாக்கம்: சென்னை போரூர் குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் இத்தலம் உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.
கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருட்பாலிக்கிறார்.
திருக்களாஞ்சேரி: மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் அருட்பரப்புகிறார்.
ஆம்பூர்: வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி சமேத நாகரத்தின ஸ்வாமி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருட்பாலிக்கின்றனர்.
பெத்தநாகபுடி: திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரராக இங்கு எழுந்தருளியிருக்கின்றனர்.
திருக்கண்ணங்குடி: திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்பு லிங்கமாக காளத்தீஸ்வரர் எனும் திருப்பெயரோடு வீற்றிருக்கிறார்.
ஊஞ்சலூர்: ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவராக வீற்றிருக்கிறார்.
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகுகேது பூஜித்த தலமும் ஆகும்.
ஸ்ரீகாளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.
கீழப்பெரும்பள்ளம் : மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது.
திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி வாருங்கள்.
கும்பகோணம் : நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருட்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
பாமணி : மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர்.
திருப்பாம்புரம் : கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.
நாகூர்: நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருட்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.
பேரையூர் : புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.
நயினார்கோவில் : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருட்பாலிக்கிறார்.
Rahu Kethu Pariharam Temple
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555