திரிகோணாசனம் - Trikonasana

திரிகோணாசனம் - Trikonasana
Trikonasana-Doing-benefits.
முதுகு இடுப்புக்கு வலிமை தரும் திரிகோணாசனம்

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும்.

செய்முறை: விரிப்பில் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும், பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக நிமிரவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம். கால் மூட்டு வளையவிடக் கூடாது.

பலன்கள்: முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். தோள்பட்டை சீரமைப்பு சரிசெய்யவும், கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும். இரைப்பை அழற்சி, முதுகுவலி, அஜீரணம், வாய்வு மற்றும் அமிலத்தன்மை, முதுகு வலி போன்றவைக்கு நிவாரணம் தரும். இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி
வலுவடைகிறது.