முள்ளங்கி கூட்டு - Mullangi(Radish)-kootu
உடல் சூட்டை தணிக்கும் முள்ளங்கி கூட்டு
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
உடம்பிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைப்பதற்கு முள்ளங்கி உதவுகிறது. இன்று முள்ளங்கியை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிகப்பு முள்ளங்கியை விடவும் வெள்ளை முள்ளங்கியில் தான் நிறைய சத்துக்கள் இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் முள்ளங்கியில் உள்ளது. மேலும் முள்ளங்கி கீரையை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடும் போது எண்ணற்ற சத்துக்களை பெற முடியும்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.
இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.
உடல் சூட்டை தணிக்கும் முள்ளங்கி கூட்டு
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555