தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்

தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..?

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

தலையில் நீர்கோர்த்துவிட்டதா?

தலையில் நீர்கோர்த்துவிட்டதா?

வேப்பரம் மரத்தின் இலைகள், காய், வேர் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டது.
மருத்துவ பயன்கள்
1. வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.
2. தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும்.
3.வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
4,தலையில் நீர்கோர்த்துவிட்டால் வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
5.வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும்.
6.வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும்.
7.வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது.
8.வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
9.வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால் கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம், மேலும் பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாவதோடு, ரத்த ஓட்டமும் சீராகும்.
வேப்பம்பூ ரசம்
கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள், தக்காளி ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுக்கவும்.
இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

அடிவயிறு சதை குறைய சூப்பர் டிப்ஸ்

அடிவயிறு சதை குறைய சூப்பர் டிப்ஸ்!

முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன.
இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி – 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி – 100 கிராம்
கோரை கிழங்கு பொடி – 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் – 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும்.
அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

#குளியல் பொடி
இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது.
இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.
சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
சோம்பு – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
வெட்டி வேர் – 200 கிராம்
சந்தனத் தூள் – 300 கிராம்
கார்போக அரிசி – 200 கிராம்
கோரைக்கிழங்கு – 200 கிராம்
ஏலரிசி – 200 கிராம்
பாசிப்பயறு – 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.
இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

#பெண்களின் வயிற்று சதை குறைய
பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

பக்குவமான 10 மருத்துவ குறிப்புகள்

பக்குவமான 10 மருத்துவ குறிப்புகள்!

ஆரோக்கியமான வாழ்விற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவக்குறிப்புகள் இதோ உங்களுக்காக,

1. நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.
2. வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.
3. மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.
4. நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
5. தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம்.
பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.
6. வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
7. மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
8. பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
9. திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
10. குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

வாய் நாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்

வாய் நாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்!

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங்கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.
ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

#ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

#கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

#கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

#புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

– மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

சில முக்கியமான மருத்துவ குறிப்பு

சில முக்கியமான மருத்துவ குறிப்புகளை அறிந்து கொள்வோம்!

* நீங்கள் மாணவரா, ஆசிரியரா, பேச்சாளரா அல்லது அலுவகத் தலைவரா மறுநாள் பேச வேண்டுமா, வகுப்பு எடுக்க வேண்டுமா, இரவு படுக்கும் பொழுது அனைத்து குறிப்புகளையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தூங்கும் பொழுது மூளை அனைத்தையும் தொகுத்து பதிவு செய்யும். மறுநாள் நீங்கள் மிகவும் சிறப்பாக சொற்பொழிவாற்றவோ எழுதவோ முடியும்.
எதுவும் மறக்காது.

முறையாக உட்காராமல் உங்கள் கையை கோணலாக ரொம்ப நேரம் வைத்து கை மரத்து விட்டதா. கொத்து நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவே இவ்வாறு ஏற்படுகின்றது. இதற்கு கழுத்து தசைகள் சற்று இளக வேண்டும். எனவே, தலையை நிதானமாக இடது பக்கமும், வலது பக்கமும் திருப்புங்கள்.
கை சரியாகி விடும்.

கண் பார்வை சீராக இருக்க வேண்டுமா? கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து கண் சோர்வாகி விடுகின்றதா? அடிக்கடி அதாவது சுமார் இரண்டு மணி நேரத்திற்கொரு முறை கண்களை மூடிக்கொள்ளுங்கள். உடலை சற்று இறுக்குங்கள். பின்பு சாதாரணமாக்குங்கள். இவ்வாறு சில முறை செய்ய கண் சோர்வின்றி இருக்கும். பார்வையும் நன்கு இருக்கும்.

சாதாரண தலைவலியா? உங்கள் நாக்கை மடித்து வாயின் மேல் புறத்தை லேசாக அழுத்துக்கள். வாய் மூடி இருக்கட்டும். சாதாரண தலைவலியாயின் தலைவலி நீங்கும்.
* தொண்டை திடீரென ‘கிச்சுகிச்சு’ என்றாகிறதா? காதுகளை உங்கள் விரல்களால் தேய்த்து விட தொண்டை பாதிப்பு குறையும்.
* ஊசி போட்டால் வலிக்கும் என்று பயமா? ஊசி போடும் பொழுது லேசாக இருமுங்கள். இருமலால் நெஞ்சில் ஏற்படும் அழுத்தம் தண்டுவடத்தின் மூலம் வலி உணரச்செய்வதை தடுத்து விடும்.
* அடிக்கடி மூக்கடைப்பா? சைனஸ் தொல்லையா? நாக்கை மடித்து வாயின் மேல் புறம் அழுத்தி ஒரு விரலால் புருவ மத்தியில் லேசாக சில நொடிகள் அழுத்துங்கள். அடைப்பு நீங்கும்.
* இரவில் ‘வாயு’ தொல்லையா? இடது புறம் திரும்பி படுங்க வாயு தொல்லை வெகுவாக குறையும்.
* பல் வலியா? டாக்டரிடம் செல்லும் நேரத்திற்குள் உங்கள் கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடைபட்ட பகுதியில் அழுத்தம் கொடுங்கள். அல்லது ஐஸ் தேயுங்கள் வலி மட்டுப்படும்.

மேற்கூறிய குறிப்புகள் வெளிநாட்டு மருத்துவ பல்கலை கழங்களில் சில ஆய்வுகளின் குறிப்புகளாக கொடுக்கப்பட்டவை. நாமும் முயன்று பார்ப்போமே. ஆனால் இது தீர்வு அல்ல. ஒரு சிறு முதலுதவி அவ்வளவே.

மாமரத்தின் துளிர் முதல் வேர் வரை மருத்துவ பயன்கள்

மாமரத்தின் துளிர் முதல் வேர் வரை மருத்துவ பயன்கள்!!

மாமரத்துப் பகுதிகள் மருந்தாகும் விதம் :
* மாமரத்தின் மலர்களைச் சேகரித்து இளம் வறுப்பாய் வறுத்து சூரணித்து வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர இரண்டொரு நாளில் பேதியையும் கட்டும். சுப பித்தங்களைத் தணிக்கும்.
* மாமரத்தின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து அதற்கு சம அளவு நாவல் மரத்துளிர் இலைகள் சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து ஆறவைத்து சிறிது தேன் சேர்த்து பருக வாந்தியை நிறுத்தும்.
* மாம்பட்டைத் தூளுடன் தேனும் பாலும் கலந்து சாப்பிட ரத்த அதிசாரம் என்கிற ரத்தபேதி, ரத்தக்சிவு குணமாகும்.
* மாம்பழச்சாற்றோடு தேன் கலந்து சில நாட்கள் சாப்பிட்டு வர மண்ணீரல் வீக்கத்தால் தோன்றிய பெரு வயிறு என்னும் மகோதா நோய் குணமாகும். மாமரத்துளிர் இலைகளை பத்து எண்ணிக்கையில் எடுத்து ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் மாந்துளிர்களைப் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் இலைகளைக் கைகளால் நன்கு கசக்கி அதன் சத்துவத்தை ஊறவிட்ட நீரிலேயே பெருகும்படி செய்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ஆரம்ப கால சர்க்கரை நோய் தணியும்.
* மாவிலைகளைப்பறித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு அன்றாடம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் அரைத் தேக்கரண்டி அளவுக்கு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் தணியும்.
* மாங்கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்பினை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரண்டு வேளை ஒன்று முதல் இரண்டு கிராம் அளவுக்கு தேனை அனுபானமாகக் கொண்டு உள்ளுக்கு கொடுத்து வர பேதியை நிறுத்தும். புதிதாக சேகரித்த மாம்பூக்களை இடித்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன் தயிர் கலந்து உள்ளுக்குக் குடிக்க வயிற்றுப் போக்கு வற்றும்.
* மாங்கொட்டைப் பருப்பு பெண்களின் இனஉறுப்புக் கோளாறுகள் பலவற்றிற்கு மருந்தாகிறது. மாம்பருப்பு புதியதாக நன்கு ஈரப்பசையுடைதாக எடுத்து மைய அரைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து இரவு படுக்க போகும் முன் பெண் உறுப்புக்குள்ளாகத் திணித்து வைக்க வெள்ளைப் போக்கு பெண்ணுறுப்பினுள் ஏற்பட்ட வீக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவசத்தால் ஏற்பட்ட யோனி அழற்சி ஆகியன குணமாகும்.
உடலுறவுக்கு முன் அரை மணி நேரத்துக்கு முன்பாக மாங்கொட்டைப் பருப்பை பசையாக அரைத்து உட்சாறாகப் பயன்படுத்த கருத்தடை சாதனமாக அமையும். பச்சை மாம்பட்டையை இடித்து பத்து முதல் இருபது மி.லி வரை உள்ளுக்கு கொடுக்க மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதி ரத்தப் போக்கு குணமாகும். மேலும் வெள்ளைப் போக்கு, மற்றும் சீழ் வெளியாதல், கருப்பை அழற்சி ஆகியன குணமாகும்.
* 10 மி.லி மாம்பட்டை சாற்றோடு 120 மி..லி நீர் சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதாலும் வெள்ளைப்போக்கு, உதிரப்போக்கு பேதி ஆகியன குணமாகும்.
* உலர்ந்த மாம்பருப்பு தூளால் பல் துலக்கி வர ஈறுகள் பலப்படும். பல் உறுதி பெறும். பயோரியா போன்ற நோய்கள் பறந்து போகும்.

பெண்களுக்கான சில வித்தியாசமான மருத்துவ குறிப்புகள்

பெண்களுக்கான சில வித்தியாசமான மருத்துவ குறிப்புகள்..!!!

#சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

#இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்

#உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

#நீர்ச்சுருக்கு( நீர்க்கடுப்பு)
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

#தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

#பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

#மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்

#உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா?

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? பீட்ரூட் சாப்பிடுங்கள்

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா பீட்ரூட் சாப்பிடுங்கள்பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
அல்சர்
அல்சர் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.
சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.
மூலநோய்
மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.
கல்லீரல் கோளாறு
கல்லீரல் கோளாறுகளுக்கும்பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
இரத்த சோகை
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.
புற்றுநோய்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொலஸ்ட்ரால்
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
செரிமான பிரச்சனை
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.
சிவப்பணுக்கள் அதிகரிக்கும்
பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
மறதி
பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சரும அரிப்பு
சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.
#தீப்புண்
கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.
#பொடுகு
பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்,

அல்சரை குணமாக்கும் சாமந்தி பூ

அல்சரை குணமாக்கும் சாமந்தி பூ !!!

சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது. சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர, மலச்சிக்கல் குணமாகும்.
முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு உப்புசம் நீங்கும். பூவை கடாயில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடியாக வீக்கம் குறையும். மூலிகைக் கடைகளில் சாமந்திப் பூவில் தயாரித்த ‘மதர் டிஞ்சர்’ விற்கப்படுகிறது. இதை, அடிபட்ட புண்ணில் தடவினால் சீக்கிரம் ஆறி விடும்.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும். ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது. காதடைப்பு இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக சரியாகிவிடும். சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து தண்ணீரில் ஊற வையுங்கள்.
5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருங்கள். பிறகு வடித்து, பூக்களை மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்னைக்கு தன்னிகரில்லா தீர்வு கிடைக்கும்.

பல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக

பல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான கை மருந்து!

இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை ( சீனி )வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்.

இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள். நண்பர்களிடமும் சொல்லி பயன் பெற வையுங்கள்.

சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

உடல் முழுவதும் தேமலா?

உடல் முழுவதும் தேமலா? இதோ டிப்ஸ்!!!

உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்,

வாயுத்தொல்லை
* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.
* இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.
* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம்.
தொடர் விக்கல்
* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
பித்த வெடிப்பு
* கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல்
* வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
* கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
* வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்

தாங்க முடியாத வறட்டு இருமலா?

தாங்க முடியாத வறட்டு இருமலா? இதோ மருத்துவம்!!!

வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மூலம் எளிதாக சில சித்த மருந்துகளை தயாரிக்கலாம்.

1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு இரண்டு லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
2. சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்றாக வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
3. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்றாக சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
4. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
5. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
6. செம்பருத்தி இலைகளை பொடியாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
7. சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவற்றை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
8. கருணைக்கிழங்கை பொடியாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
9. எலுமிச்சம்பழச்சாறை தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

மூன்று வேளை உணவும் பயன்களும்

மூன்று வேளை உணவும் பயன்களும்..!!!


#காலை
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட் டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப் பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலா ம் என்று நினைப்பதுண்டு.
தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

#மதியம்
மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வ தால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும். காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதியஉணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள்,திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

#இரவு
இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக் கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவ தாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது . இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.
மற்றொரு ஆய்வு:
பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance"

ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance"

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.

God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.

பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்

ஆஞ்சநேயர் 108 போற்றி

ஆஞ்சநேயர் 108 போற்றி

                                                                                   
1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

நெருப்பை இந்துக்கள் வணங்க காரணம்

நெருப்பை இந்துக்கள் வணங்க காரணம்


நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.

இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகுக்கிறது.

நெருப்பு மிகச் சுத்தமானது.

மிக உக்கிரமானது.

இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம்.

அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும்.

அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும்.

இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி.

அதுமட்டுமல்ல, நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும்.

உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும்.

நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.

நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும்.

எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன்.

எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும்.

நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.

18 மிகப்பெரிய இந்து கோவில்

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :

எவ்வளவு சந்தோசமான விஷயம்,பார்த்து விட்டு ஷேர் செய்யுங்கள் :
1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா
2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு
3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி
4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.
5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு
6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.
7.பிரஹதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்,தமிழ்நாடு
8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு
9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு
10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு
11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு
12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு
13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு
14.நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,தமிழ்நாடு
15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு
16.வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு
17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா
18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி
மூலம் : விக்கிப்பீடியா இணையதளம்.
Among the World Largest 18 Hindu Temples, 12 Temples are in our Tamilnadu.See all and share it.
1. Angkor Wat Temple ,Angkor, Cambodia
2. Sri Ranganathaswamy Temple, Srirangam,Tirchy,Tamil Nadu.
3. Akshardham Swaminarayan Temple,Akshardham,New Delhi
4. Ramakrishna temple,Belur Math,Belur, West Bengal
5. Thillai Nataraja Temple,Chidambaram ,Tamil Nadu
6. Prambanan,Trimurti temple, Yogyakarta, Indonesia
7. Brihadeeswarar Temple,Thanjavur,Tamil Nadu
8. Annamalaiyar Temple,Tiruvannamalai,Tamil Nadu
9. Rajagopalaswamy temple,Mannargudi, Tamilnadu
10. Ekambareswarar Temple,Kanchipuram, Tamil Nadu
11. Varadharaja Perumal Temple,Kanchipuram,Tamil Nadu
12. Thyagarajaswamy Temple,Tiruvarur, Tamil Nadu
13. Jambukeswarar Temple,Thiruvanaikaval,Trichy, Tamil Nadu,
14. Nellaiappar Temple,Tirunelveli, Tamil Nadu
15. Meenakshi Amman Temple,Madurai,Tamil Nadu
16. Vaitheeswaran Koil,Vaitheeswaran Koil,Tamil Nadu
17. Jagannath Temple,Puri,Odisha.
18. Birla Mandir Laxminarayan Temple,New Delhi
Source : https://en.wikipedia.org

நோய் தீர்க்கும் வேப்பிலை உருண்டைகள்!

நோய் தீர்க்கும் வேப்பிலை உருண்டைகள்!

நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்று நோய் இருந்துகொண்டே இருக்கும்.
 இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை, தெம்பை குறைத்துக்கொண்டே வரும்.

 தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக்கொண்டுவிடுகின்றன.

 விடியற்காலையில் சாப்பிடப்படும் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் இந்த கிருமிகளை அழித்துவிடுகின்றன.

காலை எழுந்தவுடன் வேம்பு!

நமது ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு யோகாசனப் பயிற்சியுடன் அன்பர்கள் தங்கள் நாளைத் தொடங்குகின்றனர்.

யோகப் பயிற்சிக்கு முன்பாக ஒவ்வொருவரும் ஒரு சிறிய உருண்டை அரைத்த வேப்பங்கொழுந்தையும்,
ஒரு சிறிய உருண்டை மஞ்சளையும் சாப்பிடுகின்றனர்.
அதன் பிறகு யோகப் பயிற்சியை இரண்டு மணி நேரம் செய்கின்றனர்.

இந்த உருண்டைகளால் என்ன பயன்?
இவை உணவுக்குழாய் முதல் தொடங்கி வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்தையும் சுத்தம் செய்து, உடலின் வெப்பத்தையும், சக்தியையும் சீராகவைக்கிறது.

மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது.
தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.

 உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
நம் ஒவ்வொருவர் உடலிலும் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய திசுக்கள் இருக்கின்றன.
 அவை சமூகத்தில் உள்ள குற்றவாளிகளைப் போல் உடலில் ஆங்காங்கே அமைதியாக இருக்கின்றன.
அவை ஒன்றிரண்டாக இருக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை.
அவை எண்ணிக்கையில் அதிகரித்து கூட்டமாகச் சேரும்போதுதான் சமூகத்தில் நடக்கும் கலவரம் போல் புற்றுநோயாக உடலில் வெளிப்படுகின்றன.

 நம் உடலில் சாதாரணமாக உள்ள திசு, உயிர் வாழ ஏற்றுக்கொள்ளும் உணவைப் போல் புற்றுநோய் திசுக்கள் நூற்றி ஐம்பது முறை அதிகமாக உணவை ஈர்த்துக்கொள்ளும்.
எத்தனைதான் மருத்துவம் அளித்தாலும் அவை மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்துகொண்டே இருக்கும்.

 அப்போது இவற்றை அழிக்க என்ன வழி?
உண்ணாவிரதம் இருப்பதுதான் நல்ல வழி!

யோகாசன முறைப்படி வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்ல பலனளிக்கும்.
 உணவு கிடைக்காதபோது சாதாரண திசுக்கள் கொஞ்சம்தான் களைப்படையும்.
ஆனால் நெடுநேரம் உணவு கிடைக்காதபோது, அதிக அளவில் உணவு தேவைப்படும் புற்றுநோய் திசுக்கள் மெதுவாக மடிந்துபோகும். இந்த கருத்தைத்தான் இன்று ஜெர்மானியர்கள் கூறுகின்றனர்.

 நம் முன்னோர்கள் யோக சாஸ்திரப்படி கூறியபோது புரியாத விஷயம், இன்று ஜெர்மானியர்கள் கூறும்போது நன்கு புலப்படுகிறது.

 இந்த புற்றுநோய் திசுக்கள் மிகச் சிறிய அளவில் உடலில் இருக்கும்போது அவற்றை அழிக்க விடியற்காலையில் உண்ணப்படும் வேப்ப, மஞ்சள் உருண்டைகள் மிகவும் உதவியாக உள்ளன.
இவை இந்த திசுக்களை வளரவிடாமல் தடுத்து உடலை நல்ல நிலையில் வைக்கின்றன.
ஆனால் புற்றுநோய் ஏற்பட்ட பின் சாப்பிடுவதில் பயன் இல்லை.

 மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.
அதன் பின் ஒரு மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடக் கூடாது.

 வேப்பிலையின் பலன்கள்: சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன.

இவை அனைத்திற்கும் எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும்.
அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும்.

 இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் இல்லாமல் போய்விடும்.
இதை ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்நாள் முழுவதும் செய்யலாம்.

 ஏன் வேப்பங்கொழுந்து?
 கொழுந்து இலைகளில்தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால் தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கிவிடுங்கள்.

இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்துவிடும்!
வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன.
உலகில் எந்த ஒரு தாவரத்துக்கும் இத்தனை மருத்துவ குணங்கள் இல்லை.
வேப்ப இலைகளின் மருத்துவக் குணம் இப்போது உங்களுக்கும் புரிந்துவிட்டது இல்லையா? இனி தயக்கமென்ன? தினமும் காலையில் வேப்பங்கொழுந்தினை அரைத்துச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ்வோம்!

யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டாதீர்கள்

யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டாதீர்கள்

யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டக்கூடாது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்று பாருங்கள்.

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விடசூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார்  திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்.

நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...

நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...

தங்க நகைகள்
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் பதிக்கப் பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகை களை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
கற்கள் பதித்த நகைகள்
* கற்கள் பதித்த நகைகளை தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கு நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின், சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை வெளியேறி விடும்.
முத்து நகைகள்
* காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடை வில் மங்கி விடும். எனவே, ஒப் பனைகள் முடிந்த பின், முத்து நகை களை அணிய வேண்டும்.
வெள்ளி நகைகள்
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்து விட்டதா? கவலை வேண்டாம். கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

உடலின் 72000 நாடிகளையும்
********************************
வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்
**************************************
கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரசவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

ருத்ராட்சம்

ருத்ராட்சம்


ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்" என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை…!!!!!

பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை. ருத்ராட்சத்தின் பலன்கள்: மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.

> யாரெல்லாம் இதை அணியலாம்:

வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.

*  ருத்ராட்சத்தின் வகைகள்

> பஞ்சமுகி:

ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.

> த்விமுகி:

இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.

> ஷண்முகி:

இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.

> கௌரிஷங்கர்:

இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.

> பதப்படுத்துதல்:

புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

 கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது! எங்கே கிடைக்கும்: இந்த ருத்ராட்சங்கள் ஈஷா யோகா மையத்திலும் கிடைக்கின்றன. இமயமலையிலிருந்து வரவழைக்கப்பட்டு தியானலிங்கத்தில் சக்தியூட்டப்பட்ட பின்னரே அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.


Avoid Trading on Borrowed Money - Rupeedesk Consultancy

Avoid Trading on Borrowed Money - Rupeedesk Consultancy


What is borrowed money?

The money took as loan is called as borrowed money which has tobe repaid with interest amount.
Trading on borrowed Money
First up all trading is highly risky and requires all your attention during market hours.
If you borrow money to trade then it is quite possible that trade always try to do trades and earn money so that he can repay the money to lender at the end of the money.
So trader would try to earn daily profits and it is not possible to earn daily profits in share market as markets would move in any direction due to unpredictable nature.
Trader may also do forceful or unwanted trades which would result in losses. Trading has to done on opportunities to earn profits and not on every trade.
Investing borrowed money in Share market
During markets Bull (up) time, when the stock markets move only up, everyone makes a profit of at least 25 per cent. So a trader would make a decent profit even after paying the high interest on the borrowed money.

But it is not always possible to predict the direction of share market as sometimes it is extremely unpredictable. If the market crash suddenly, you will make a loss due to which it becomes difficult to repay the high interest on the borrowed money.

If you are a short-term trader then you should also add the cost of short-term capital gain tax which you will have to pay if you cannot adjust it with the cost of borrowing, that is, your rate of interest.

Contradictory at all if you plan to borrow and invest n share market then it is recommended to stay invested long term without worrying about short term market corrections. This also applies with your own money especially if you are verylow risk taker.

Investing borrowed money in Debt instruments  
  
Investments in debt products like fixed deposit, debt funds and fixed maturity plans would not give you enough returns to help you in meeting your cost of borrowing.
Even if they did, the added cost of capital gains tax in case of long term as well as short term investments would be a not satisfactory.
Also in case of debt products, the interest rate earned is also taxable. So in such cases there may raise a situation that you would be paying money out of your own pocket along with interest on your borrowings.

Investing borrowed money in Gold  

This is one commodity which is considered the most appropriate investment avenue during any financial disorder. The stock markets and gold prices are inversely related. If stock markets crash gold prices zoom (go up).
But then borrowing money to invest in gold is the last thing you should do because it does not give any dividend or interest. The gain is through increase in the value of gold which is called as a capital gain.
So unless you sell your gold and you are making decent profits on it, there is no way you can repay your borrowings.

Investing borrowed money in Real estate    

   This is one investment for which many individuals would borrow as the investment amount and basically it is a quite big amount. If it is your first house then no questions asked: borrow and invest.
Of course you cannot go overboard even while borrowing for your first house. The question arises as to when you are borrowing money to buy a particular property and whether it is for your own use or for investment purpose.

Here is where you have to analyze the situation:a) what would happen if you leased it out what kind of rental income you can earn out of it
b) tax factors and liquidity issues (whether you could easily sell the property and get cash in return).
There is no question that the value of your property is going to increase over a period of time. But again it depends on when you buy a property -- at peak.
Does this mean that person cannot borrow money?
The answer is not always - NO.

Because it is also true that most of the today's successful businesses have borrowed money in there times and now they are well established businesses.
The best way to judge whether it makes sense to borrow money to invest is by asking yourself the following questions:
- How will your financial life be affected after borrowing?
- Could you bear the cost of borrowing (the interest rate you will have to pay to your lender)?
- If the investment does not perform as per your expectations then how will you repay the borrowed money?
- Do the benefits of borrowing outweigh the risks involved?
Judge these questions carefully and only then make a decision.

Important Note
DO NOT use credit cards to borrow money for investing. The rate of interest charged by credit card companies is 3% per month which comes to 36 per cent per year in addition to the late payment fees if any.

Please note -
Trading and or investing in share market are not getting quick rich schemes. It requires dedication, study and knowledge to make money in share market.

உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து

 உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...


செவிலியின் வலிகள்(Nurses)

செவிலியின் வலிகள்(Nurses)
.
செவிலி என்றால் உங்கள் அதிகம் பேருக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் இருக்கும்
.
நர்ஸ் அம்மா வை தான் செவிலி என்று தமிழ் மொழியில்  அழைக்கிறோம்
.
நர்சிஸ் என்றாலே அவர்களை கேவலமாக பார்க்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
.
ஆனால் அவர்களை நினைத்து பார்ப்பது இல்லை
.
நீங்கள் ரோட்டில் அடிப்பட்டு கிடக்கும் போது 108 க்கு  போன் செய்வீர்கள் அந்த ஊர்தியில் தெய்வம் போல் வந்து உங்களுக்கு உதவுவது செவிலி தான்
.
ஆனால் நம் நாட்டு செவிலி க்கு சம்பளம் குறைவாக தான் இருக்கிறது
.
மருத்துவமனையில் நீங்கள் நோயுற்று நடக்க கூட முடியாமல் நோயால் அவதி பட்டு கொண்டு இருப்பீர்கள்
.
உங்களின மலம் ஜலம் கழிக்க கைதாங்கலாக கூட்டி கொண்டு போவாள் செவிலி
.
நீங்கள் ஜ சி யு இருக்கும் போது ஒரு குழந்தையை போன்று உங்களுக்கு உணவு அழித்து உங்களுக்கு முடி வெட்டி உங்களின் கழிவுகளை அகற்றி நீங்கள் வலியால் கதறும் போது உங்கள் கைகளை பற்றி கொண்டு உங்களுக்கு சேவை செய்தாள் செவிலி
.
ஆனால் அவளின் சொந்த வாழ்க்கை கான ஒரு துணையை தேடும் போது அவளை இந்த சமுதாயம் ஒரு கேவலமான பார்வை பார்க்கும்
.
நான் உங்களை தான் சொல்கிறேன்
.
நமக்கேல்லாம் பகல் பகலாககவும் இரவு இருளாகவும் இருக்கும்
.
பல செவிலி களுக்கு பகல் இரவாகவும் இரவு பகலாகவும் இருக்கும்
.
தனக்கு சாப்பிட நேரம் இல்லாமல் நோயாளிக்கு சாப்பிட கொடுக்கும் செவிலிகளும் உண்டு
.
உன் உடல் உறுப்புகளை ஒரு வயதிற்க்கு பிறகு உன் தாயையோ உன் காதலியை கூட தீண்ட விட மாட்டாய் ஆனால் உன்னை குணபடுத்த செவிலி தீண்ட வேண்டும்
.
நீ அவர்களிடம் சிரித்து பேசாவிட்டாலும் பறவா இல்லை கேவலமாக எண்ணாதே
.
அதிகம் இரவு வேலை செய்வதால் அதவாத உறங்காமல் இருப்பதால் அவர்களின் உடல் மெலிந்து தான் காணப்படும்
.
இனிமேலாவது நீங்கள் மருத்துவமனைக்கு போகும் போது அவர்களை உங்கள் சகோதரியாகவும் உங்கள் பிள்ளைகள் போன்றும் நினையுங்கள் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்
.
மருத்துவரால் என்னேரமும் நெருக்கடி வந்து கொண்டு இருக்கும் போது நீங்களும் அவர்களை நெருக்கடி செய்யாதீர்கள்
.
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கலாம் ஆனால் சேவை செய்ய ஒரு சில நல்ல மனமே உள்ளன
.

.
நல்ல குணம்
.
நல்ல பொறுமை
.
சேவை மனப்பான்மை
.
அடுத்தவரின் வலியை புரிந்து கொள்ளும்
.
இப்படி பட்ட அன்னை தெராசாக்கள் எல்லா மருத்துவமனையிலும் பணி செய்கிறார்கள்
.
இனிமேலாவது அதை புரிந்து கொண்டு அவர்களை உற்சாக படுத்துங்கள்
.

பழைய சோறு !!!

பழைய சோறு..... !

மறுநாள் சாப்பிடும் பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது அமெரிக்க மருத்துவம். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ஷட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

♣ கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவம் :

♣ காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

♣ இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

♣ மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

♣ அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

♣ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

♣ அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

♣ அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

♣ எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

♣ பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரௌன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

♣ ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.

♣ மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் க��

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.

ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும்.

தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும், உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். சுவையின்மை நீங்கும்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.

பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்

பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்!!!

பூக்கள்வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.

வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும். வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும்.

உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது.
வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் சௌசௌ காய்

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் சௌசௌ காய் !

நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் பயன்படுத்துவோம்.
அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றுதான் சௌசௌ.
100 கிராம் சௌசௌவில் காணப்படும் சத்துக்கள்
விட்டமின்கள் – A B1 C K
கார்போஹைட்ரேட் – 17.8 %
ஸ்டார்ச் – 10.7 %
போலேட் சத்து – 10.5 %
புரதச்சத்து – 5.4 %
சுண்ணாம்புச்சத்து – 6.7 %
பாஸ்பரஸ் – 4.8 %
மாங்கனீஸ் – 9 %

#நன்மைகள்

1. நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
2. வயிறு சம்பந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
3. உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும்.
4. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
5. பெருங்குடல், சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கி குடல் பாதைகளை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
6. கர்ப்பிணிகளுக்கு கை கால்களில் வீக்கம் ஏற்படுவதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
7. முகச்சுறுக்கம் நீங்கும்.
8. சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு போன்ற சத்துக்கள் தைராய்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.

#குறிப்பு
வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் உண்ணும் உணவில் சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பிலிட்டோ அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ குடிக்கலாம்.
இதனால் பல்வேறு வியாதிகளும் குணமடையும்.