வேதங்கள்

வேதங்கள்

வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும்.
வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
சொற்பிறப்பியல்
இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.
வேதங்களின் வகைகள்
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:
ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.
அவையானவை:
சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
பிரமாணம் எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.
வரலாறு
வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராம்மணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.
வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
ரிக் வேதம்
இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது[2]. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.
பிந்தைய வேதம்
பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.
யசுர் வேதம்
இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.
சாம வேதம்
இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.
அதர்வண வேதம்
அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
வேத இலக்கியங்கள்
நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

கேள்வி: நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்? எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா?
பதில்: கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

பதில்: ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.
ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல் நோய் - குஷ்டம், சொறி, சிரங்கு பாதிப்பில் இருந்து நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்.

தோல் நோய்களான குஷ்டம், சொறி, சிரங்கு உள்ளிட்டவற்றால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பில் இருந்து நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்.

பதில்: சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் உண்டு. மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கும். சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.

எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஜாதகம், பரிகாரம், ராசிப்பலன் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும், மனதின் ஒரு ஓரத்தில் இதன் மீது நம்பிக்கை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வதில்லை. எப்படி ராசியைக் கொண்டு, அந்த ராசிக்குரியவரின் குணத்தை சொல்ல முடிகிறதோ, அதேப் போல் எந்த ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வழங்கும் என்பதையும் சொல்ல முடியும்.அந்த நாளில் அந்த ராசிக்காரர்கள் தங்களது முக்கிய பணிகளை மேற்கொண்டால், வெற்றிக் கிட்டும். அது தொழிலாகட்டும் அல்லது சொந்த வாழ்க்கையாகட்டும், அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சரி, இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றிக்கிட்டும். நீங்கள் மற்றவர்களிடம் உங்களது திறமையை வெளிக்காட்ட நினைத்தால், இந்நாளில் மேற்கொள்ளுங்கள், இதனால் வெற்றி உங்களுக்கே.
ரிஷபம்
வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். செவ்வாய் கிழமைகளில் ஊதாரித்தனமான செலவுகளைச் செய்யக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் மேற்கொண்டால் நல்லது நடக்கும். மொத்தத்தில் இந்த கிழமை உங்களுக்கு முன்னேற்றத்தை மட்டுமே தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகள் வெற்றியை வாரி வழங்கும். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. சனிக்கிழமை சாதகமில்லாத நாள். இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் விரதமிருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஞாயிற்று கிழமை சிறந்த நாள். இந்நாளில் உங்களது திறமையை முழுமையாக காணலாம். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றியை மட்டுமே பரிசாகப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழக் கிழமைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும் தினங்கள். ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற தினங்களில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், தாங்க முடியாத அளவில் படுதோல்வியை சந்திக்கக்கூடும்.
துலாம்
இந்த ராசிக்கு வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் உங்களது ராஜதந்திர மனோபாவம், நிறைய மக்களுடன் பழகவும், அதிக புகழையும் வாங்கித் தரும். மொத்தத்தில் இந்நாள் உங்களை உயரச் செய்யும்.
விருச்சிகம்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான தினம். இந்நாளில் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள் சாதகமற்றது. இந்நாளில் எந்த ஒரு முக்கிய விஷயங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமை அதிர்ஷ்டமான தினம். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை உகந்தது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும். இந்நாளில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடும். இதனால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற தினங்கள் அதிர்ஷ்டமான நாட்கள். புதன் மற்றும் சனி அதிர்ஷ்டமற்ற நாட்கள். ஞாயிற்றுக்கிழமை கலவையானது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் உங்களது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது மற்றும் இந்நாளில் நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

திருச்செந்தூரில் துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்

திருச்செந்தூரில் துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்

தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும்.
அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்துள்ள சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன. தற்போது பல தீர்த்த கட்டங்களை குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டன.
திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. முகாரம்ப தீர்த்தம் - இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம் - இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.
7. காயத்ரீ தீர்த்தம் - இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
8. சாவித்ரி தீர்த்தம் - இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
9. சரஸ்வதி தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
11. வயிரவ தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12. துர்க்கை தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
13. ஞானதீர்த்தம் - இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.
16. முனிவர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
18. பாவநாச தீர்த்தம் - இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.
19. கந்தப்புட்கரணி தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம் - இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.
21. சேது தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.
22. கந்தமாதன தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
24. தென் புலத்தார் தீர்த்தம் - இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. சமுத்திரக்கரையோரம் இப்படி இனிய நீராக அமைந்துள்ள கந்தப்பெருமானின் அருளாடலேயாகும். இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது.
இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்.

வீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேபி டால்கம் பவுடர்!

வீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேபி  டால்கம் பவுடர்!

மார்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர்களால் பெரியவர்களே பாதிக்கப்படும்பொழுது, குழந்தைகளின் மிருதுவான சருமத்தை பாதிப்பிலிருந்து காப்பது மிக அவசியம்.
இதற்கு மாற்றாக வீட்டிலேயே 'இயற்கை முறை டால்கம் பவுடர்' தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி...
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய உலர்ந்த செண்பகப் பூ, மகிழம் பூ, பன்னீர் ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து, சிகப்பு சந்தனம் (Red Sandal) அனைத்தையும், சம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
அதிக அளவு தேவையெனில் மாவு மெஷினிலும், குறைந்த அளவை வீட்டில் மிக்ஸியிலேயே பொடி செய்துகொள்ளலாம்.
தரையில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் மாவு சலிக்கும் சல்லடையில் ஒரு மஸ்லின் துணியை விரித்துக்கொண்டு, அதில் அரைத்து வைத்த பொடியை போட்டு ஒரு கரண்டியால் தட்டி தட்டி சலிக்கவும். கீழே உள்ள நியூஸ் பேப்பரில் விழக்கூடிய மிருதுவான பொடியை காற்றுபுகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
இதுதான் இயற்கை முறை டால்கம் பவுடர். இதை குழந்தையிலிருந்தே உபயோகிக்கும்போது, வளர்ந்த பிறகும் சருமம் மிருதுவாகவும், சரும நோய்கள் வராமலும் இருக்கும்.
வாசனை பவுடர்...
ரோஜா இதழ்கள் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டப்பட்ட தண்ணீரை சிறிதளவு எடுத்து, அரைத்து வைத்துள்ள பவுடரில் தெளித்து நிழலில் உலர்த்தி எடுத்தால் வாசனைமிகுந்த டால்கம் பவுடர் தயார். ரோஜாவிற்கு பதில் மல்லிகை பூக்களையும் உபயோகிக்கலாம்.
இதை பெரியவர்கள் குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் முகத்திற்கு உபயோகிக்கலாம்.
இது முகத்தின் மீது மேக்கப்போட்டது போன்ற தோற்றம் இல்லாமல், சரும நிறத்திலேயே இருக்கும். அதே சமயம் முகத்திற்கு 'பளிச்' பொலிவைத் தரும்.

விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்

விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்

1. லக்னதிக்கு 2 மிடம் ,7, மிடம் ,8 ,மிடம் சுத்தமாக (ஒரு கிரகஹம் இல்லாமல் இருந்தால் ) ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் காலா காலத்தில் நல்ல விதமாக சீக்கிரம் சிக்கல் இல்லாமல் நடக்கும் .
2, களத்திர காரகன் ஆன சுக்கிரன் தனித்து இருக்கும் ஜாதக்தகங்களும்அல்லது சுப கிரக சேர்க்கை, பார்வை , பெற்ற ஜாதகர்களுக்கும் காலாதிருமணம் நடைபெறும்
3 .லக்னத்திற்கு 2 மிடம் , 7 மிடம் சுப கிரகங்கள் இருக்கும் ஆண், பெண் ,இரு பாலரும் விரைவில் ஆகி நல்ல விதமாக வாழ்கின்றனர்
தாமதமான திருமணம் நடக்கும் ஜாதக அமைப்பு
4 . லக்னதிக்கு 2 மிடம் , 7 மிடம் 8 மிடம் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது சூரியன் அல்லது செவ்வாய் ஆகிய கிரகங்களில்ஒன்று அல்லது இரண்டு இருந்தால் திருமணம் தாமதமாவே நடை பெறும்
5, களத்திர காரகன் சுக்ரன் சூரியன் சம்பந்தம் அல்லது அஸ்தங்கம் அடைய திருமண வாழ்க்கை சுகபடுவ்து கிடையாது .
6 சூரியனுடைய பாகைக்கு 42 பாகைககு மேல் சுக்ரன் விலகி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் துன்பம்தான் நடக்கும்
திருமணத்தால் லாபம் உண்டா
7 லக்னத்துக்கு 7 மிடத்தை குரு பார்வை செய்ய அல்லது 7 குடையவனை குரு சேர்க்கை அல்லது பார்வை செயய திருமணத்தால்லாபம் உண்டு .
8 இப்படி கிரக அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஒரு சாதாரண குடும்பத்தில் திருமணம் ஆனாலும் திருமணம் ஆன நாள் முதல் ஜாதகர் நாளுக்கு நாள் விருத்தி அடைந்தவர்கள் நிறைய உள்ளார்கள் .
10 .லக்கினத்திற்கு 7 இக்குடைய கிரகஹம் ஆட்சி , உச்சம் அடைந்தால் ,
மேற்படி 7 ளுக்குடைய கிரகம் 1,5,9,11. இல் அமர அல்லது பார்க்க அல்லது சேர்க்கை பெற திருமணத்தால் லாபம் அல்லது திருமனதிக்குபின் வாழ்க்கை தரம் உயறும்
11 தனுசு லக்கினம் கொண்டவர்கள் திருமணம் ஆன பிறகு யோகம் உண்டு.
தலை முடி
1. தலை முடி மிருதுவாகவும் , சிக்கல் , சுரூட்டைகள் போன்றவைகள் இல்லாவிட்டால் மிருதுவான உடலும் உறுதியான உள்ளமும் உடையவர் என்பதை அறியலாம்
2. அடர்ந்த செம்பட்டை முடி உடையர்கள் உலக விஷயங்களில் அதிக நாட்டம் உள்ளர்வகள் . பொறுமையும் நிதானமாகவும் கொண்டவார்கள்.
3 கறுத்த அடர்ந்த முடி உடைவர்கள் எளிதில் உணர்ச்சி அடைவார்கள் . முடி அடர்த்தி கருமை , தடிப்பு , உடையவர்கள் தோற்றம் கரடு முரடாகவும் , மனத்தில் கோலை பயம் கொண்டவர்கள்
4 சுருள் முடி தோற்றம் உள்ளம் சம்பந்தம் இல்லை . பார்த்தால் சாது பாய்ந்தால் புலி.
கணவன் அல்லது மனைவி அழகாக இருப்பாரா ,
‘ ஸ்ருதி மிச்சதி பிதாரா ,
தன மிச்சதி மாதரா
பாந்தவா குல மிச்சந்தி
கன்னிகா ரூப மிச்சத்தே ‘
பாடல் விளக்கம்;
பையன் குணம் எப்படி என்று தந்தையும் ,பணம் உள்ளவனா என்று தாயும் குலம் எப்படி என்று சொந்தக்காரர்களும் , கவனிக்கும் போது ஆண் பெண் இரு பாலரும் தனக்கு வருபவன் அழகாக இருக்கிறான் என்று மட்டும் பார்ப்பார்கள்
என்று இந்த சுலோகம் சொல்கிறது

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

கடவுளை பார்த்தால் தான் நம்புவேன் என்று ஆசைப்படும் அன்பர்கள், இந்த மந்திரங்களை ஜெபித்து , உருவேற்றினால் - கன்னிமார்கள் பிரசன்னம் நிச்சயம் உண்டு.
ஸ்ரீ வராஹி மாலை என்று - தமிழில் 32 பாடல்கள் மட்டுமே கொண்ட சுலோகம் , நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷம் ஒன்று உண்டு. இதை முழு நம்பிக்கையுடன் பாடி , வராஹியை தரிசித்தவர்கள் ஏராளம். ஆனால், இவர்கள் யாரும் இதை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை.. !
வராஹி மாலைக்காக பலப்பல வருடங்களாக தேடிக்கொண்டு இருப்பவர்களும் உள்ளனர். நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது , நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். அபூர்வமான சில விஷயங்கள், எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், ஒன்று முயற்சி செய்யலாம்... நீங்கள் சந்திக்க விரும்பும் தேவதைக்குரிய காயத்ரியை , மனதுக்குள் உங்களால் முடிந்தவரை ஜெபித்துக் கொண்டு இருங்கள்.. ! அதன் பிறகு நீங்களே உணர்வீர்கள்.. !
இந்த கட்டுரை முழுக்க - அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
தியான சுலோகம்
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா
மந்திரம்
ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. ள எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.
மந்திரம்
ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
கௌமாரி
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!
மந்திரம்
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
வைஷ்ணவி
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.
மந்திரம்
ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
வாராஹி
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .
தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
இந்திராணி:
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.
தியான சுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:
மந்திரம்
ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.
சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.
மந்திரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம்

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம்

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம், எப்படி செய்ய வேண்டும்? - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பற்றி பாப்போம்.
தினமும் சஸ்திர பந்த ஸ்லோகத்தை சொல்லி வர வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது சஸ்திர பந்தமாம்.
பக்தியுடன் செய்து பயன் பெருக!
சஸ்திர பந்தம் :
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் பஞ்சபூதங்களில் ஒன்றாம் தண்ணீரில் நனைத்து விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
வேல்வாங்க இயலாதவர்கள் மேற்கண்ட சஸ்திர பந்தம் படத்தை ஸ்டிக்கர் தாளில் அச்சிட்டு தொழில் / வியாபாரம் செய்யும் இடத்தில் ஒட்டிவிடவும். சிறிய அளவில் அச்சிட்டு சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி தொழில், வியாபாரம், பதவி சிறக்கப்பெற்று என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஆசனம் வழிமுறைகள்







விஷ்ணு ஆசனம்

வழிமுறைகள்
வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும். காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும்.

பலன்கள்
இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.

கவனம்
இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உகந்த ஆசனம் அல்ல

ப்ரம்மஹத்தி தோஷம்

ப்ரம்மஹத்தி தோஷம் ", பற்றிய பதிவு இது. [ பாரம்பரிய முறை ].

1. ப்ரம்ம ஹத்தி தோஷம்
மிகக்கொடிய தோஷங்களில் ஒன்றாக கருதப்படுவது. திருக்கோவில் ஸ்தலபுராணங்களில் அதிகமாகவும், இதிகாச, புராணங்களில் பரவலாகவும் இதைப்பற்றி எடுத்து சொல்லப்பட்டு, இதன் தாக்கத்தை பற்றி எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நூல்களில் அறம் என்று சொல்லக்கூடிய தருமநெறி தவறி செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை தரக்கூடியது. ' பொய்மை ' என்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று. ' பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்..............', என்ற வகையில் அது மன்னிக்கப்படலாம். என்றாலும் எள்ளளவும், எதற்காகவும், மன்னிக்க இயலாத பாதகச்செயலகளை போன பிறவியில் செய்தோமானால், இப்பிறவியில் உறுதியாக துயரை தந்து வாட்டக்கூடியது.
2. ப்ரம்ம ஹத்தி தோஷ கிரக நிலை
பொதுவாக குரு + சனி சேர்ந்தாலோ, சமசப்தமபாரவை பெற்றாலோ அல்லது சார பரிவர்த்தனை அடைந்தாலோ ' ப்ரம்மஹத்தி தோஷம்', என்ற கணிப்புகள் பரவலாக உள்ளது. இந்த கணிப்பு ஜோதிட சம்பந்த சாஸ்திரப்படி இயற்றப்பட்ட பழம்பாடல் எதுவும் எனக்கு தெரிந்த வரையில் இல்லை. அவ்வாறு ஏதேனும் பாடல் உள்ளதெனில் நமது ஜோதிட நண்பர்கள் தெரிவித்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே என்னைபொறுத்தவரையில் இந்த கணிப்பு பிற்காலத்தில் யாராலோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால் 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு', எனும் திருக்குறளுக்கேற்ப இக்கணிப்பை ஆராய்வதில் தவறில்லை என கருதலாம்.
3. கணிப்பு ஆய்வு;
அ} குரு + சனி சேர்ந்தால் ப்ரம்ம ஹத்தி தோஷம்.
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எவ்வாறெனில், குரு + சனி கூடினால் குருசண்டாள யோகம் [தோஷம்} என கூறப்பட்டுள்ளது. ஆதாரம் லிப்கோ வெளியிட்டுள்ள குடும்பஜாதகம் நூல். இருவகையான தோஷங்களுக்கு ஒரே விதிமுறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மேலும் இன்னொரு வகையில் இக்கணிப்பையும் கவனிக்கலாம். குருவும் சனியும் சேர்ந்து ஒரு ராசியில் அதிக பட்சம் ஓராண்டு வரை இருக்கும். எனவே அந்த ஆண்டு முழுவதிலும் பிறந்த அனைவரும் ப்ரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஆ} குரு + சனி சமசப்தம பார்வை பெறுவது;
ராசிப்படி பார்த்தால் இதுவும் ஒரு வருஷம் நிகழ்க்கூடியது. எனவே நக்ஷத்திர சாரப்படி பார்க்கலாம். ராசிக்கட்டத்தில் சனியை விட குரு வேகமாக நகரக்கூடியவர். 9 பாதங்களை கடக்க 12 மாதங்கள் என்றால் 1 பாதம் கடக்கும் குருவின் காலம் சராசரியாக 1 மாதம் 10 நாட்களாகும். இதில் குருவின் வக்கிர காலங்கள் கணிக்கப்படவில்லை. கணித்தால் நாட்களின் எண்ணிக்கை கூடும். ஆக இந்த 1 மாதம் 10 நாட்களில் பிறக்கும் அனைவருமே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா?
இ} இனி சாரபரிவர்த்தனை கணிப்பு;
குரு ராசிக்கட்டத்தை 12 ஆண்டுகளில் சுற்றி வரும் போது, சனி ஏறக்குறைய 5 ராசிக்கட்டங்களை கடக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் 43 நக்ஷத்திர பாதங்களை கடக்கிறார். இதில் குறைந்த பட்சம் 4 பாதங்களையும், அதிகபட்சம் 9 பாதங்களையும் கடக்கும் போது குருவும் சனியும் சாரபரிவர்த்தனை பெற முடியும். குறைந்தபட்சம் 4 பாதங்களை கடக்கும் காலம் 1 வருஷம் 3 நாட்கள். 9 பாதங்களை கடக்கும் காலம் 2 வருஷம் 6 மாதங்கள். ஆக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்காலகட்டங்களில் பிறப்பவர்கள் அனைவரும் ப்ரம்மஹத்தி தோஷத்துடன் பிறப்பார்கள் என்பது நம்பவியலவில்லை. எனவே ப்ரம்மஹத்திதோஷ ஜாதகங்களை தீர்மானிக்கும் கிரகனிலைகளை இன்னும் நுட்பமாக கணித்துப்பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.
4. சனி மேஷத்தில் நீசம் பெறுவது
27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒரு முறை 2 வருஷம் 6 மாதகாலம். அதாவது சனி கெட்டிருக்க வேண்டும். வேறு எந்த வகையிலும் யோகம் தராத நிலையில் இருக்க வேண்டும். வக்கிரம், அஸ்தங்கதம், பரிவர்த்தனை அடைந்தால் சனியின் நீசத்தன்மை மாறிவிடும். இந்த சனியுடன் குரு மேஷத்தில் இருப்பது ஒரு வருஷ காலம். ஆக இக்கிரகனிலையை ஏற்றுக்கொள்வோமானால் ப்ரம்மஹத்திதோஷத்துடன் பிறப்பவர்கள் 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறை பிறக்கிறார்கள். இதிலும் சில விதி விலக்குகள் இடம் பெறுகின்றன. சந்திரனும், செவ்வாயும் இடமாற்றம் மேற்கொள்ளும்போது சனி நீசபங்கம் அடைந்து நல்ல யோகம் தருவார் என்பதால் அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் இருக்காது. யோகத்தை தரும் நிலையில் இருக்கக்கூடிய ஒரு கிரகம் தோஷத்தை செய்யாது. என்பதே இதற்கு காரணம்.. மேலும் சனியின் வக்கிரகாலம் ஏறத்தாழ 3 மாத காலம். இக்காலகட்டத்தில் நீசசனி கெடுபலனை விலக்கிக்கொள்வார் என்பதாலும் அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது. நீசசனி வக்கிரம் பெற்றால் கெடுபலன் விலகும் என்பது பலரது கருத்தாகவும், என் சொந்த அனுபவமாகவும் உள்ளது. மேலும் சனிக்கு அஸ்தங்கம் ஏற்படுவதுண்டு. இக்காலகட்டத்தில் சூரியனின் ஆளுமையால் சனியின் கெடுபலன் மாற்றப் படலாம்.. இக்காலத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது என்றும் கொள்ளலாம். மேலும் குருவும் சனியும் ஒரே நக்ஷத்திர பாதத்தில் இருக்க வேண்டும். துல்லியமாக சொன்னால், குருவும் சனியும் 3.33 பாகைக்குள் இணைய வேண்டும். ஆக ப்ரம்மஹத்திதோஷம் இவ்வளவு விதிகளையும் கடந்து ஜாதகரை அடைய வேண்டியுள்ளது.
5. தீர்வு.
ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்தி காலமாகவும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். சிலரது வாழ்க்கையில் குருதசை, சனிதசை ஆகியன வராமலே போகலாம். . தோஷம் விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்ன, இப்போதே செய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும். பரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும். இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும். இவைகள் மட்டுமல்லாமல், ஜாதகப்படி தோஷபரிகாரம் செல்லுபடியாகுமா? என்று ஆராய்வதும் முக்கியம்.
7. வேண்டுகோள்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற திருக்குறள் கருத்து எனது இப்பதிவுக்கும் பொருந்தக்கூடியதே. எனவே தயவுசெய்து என் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட இன்னும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுதல் நன்றாகும். தவறு இருப்பின் தள்ளுபடி செய்வதுடன், உங்கள் கருத்தையும் கூறவேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்

வேலையை விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற காலம் எப்போது வரும்? தொழிலை எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள் தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும்.
தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக் காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரி.
தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள்.
CATALYST PUBLIC RELATIONS PVT LTD நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ( CEO) திரு.இராம்குமார் சிங்காரம் பல்வேறு தொழில்முனைவர்களையும் பொதுமைப்படுத்தி ,அவர்கள் தொழிலில் நிலைத்து நின்றதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை 20 உத்திகளாக தந்திருக்கிறார் .வேலையை விடுத்து தொழிலில் இறங்க விரும்புகிற அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக இருக்கும்.
இதோ,தனி ஆளாக தொழிலில் வெற்றி பெற அந்த 20 உத்திகள்.
1.வேலையை விடுக்கின்ற போது , உங்களுக்கான மாதந்திர வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுக்கடன் போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.
2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital) உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital) (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery) , கணினி(Computer) போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles) போன்ற பல ).
இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்( Working Capital) (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries), மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges), பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost), பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.
3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேளையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number), VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code), Company Registration போன்ற அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account) தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் , Business Card, Letter Pad, Brochure, Palm let போன்றவற்றை முன்கூட்டியே தயாரித்தல், உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.
4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும் . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான செலவும் தொடங்கிவிடும்.
5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய வாடிக்கையாளர்களைத்தான்( Revenue Customers) .
6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.
7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .
8.உங்கள் தொழிலில் பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources) வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .
9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.
10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative Planning) என்ன என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .
11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.
12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation) பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில் யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .
14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .
15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
16.தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.
17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும் வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.
18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things) . நீங்கள் பணத்தை தேடி ஓடுவதை விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .
20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .

தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு

தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
-
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.
-
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,
-
ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்,
-
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.
-
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
-
எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.
-
பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.
-
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.
-
ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
-
‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’
-(என்கிறது அகஸ்தியர் நாடி)
-
சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.
-
திருஞான சம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞான சம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது "சௌந்தர்யலஹரி" என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.
-
திருநாவுக்கரசரை "அப்பர்" என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.
-
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.
-
தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே.
-
தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
-
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.
-
அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.
-
தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.
-
சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.
-
மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.
-
தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
-
‪#‎பைரவ_காயத்ரி‬
"ஷ்வானத் விஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!"
-
இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்டமி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக!. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்

27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்

யோகங்கள் மொத்தம் 27ஆகும். யோகம் என்பது வானத்தில் (ஆகா யத்தில்) ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரமாகும்.
இந்த 27 யோகங்களும்கூட முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்ய கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப் போன் றே பயன்படும் நான்காவது அமைப் பாகும். பஞ்சாங்கம் எனும் பஞ்ச (ஐந்து) அங்கங்களில் நான்காவது அமை ப்பான இதை அநேகர் கண்டு கொள்வதே இல்லை.
ஜாதக குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்து குறிப்பி ட்டாலும், முகூர்த்த அடிப்படை யில் நல்ல நாள் தேர்வு செய்யும்போது நான்காவதான இந்த நித்திய நாம யோகமும் அடங்கும் என்பதை மறந்து விடுகி ன்றார்கள்.
திதி – நட்சத்திரங்களைப் போன்றே நித்திய நாம யோகத்தில் பிறந்த பலரும்கூட மூல நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் பயன் படுத்திக் கொள்வது சிறப்பாகும்.
27 வகையான யோகங்கள்
1. விஷ்கம்பம் (விஷ் யோகம்), 2. ப்ரீதி (ப்ரீ யோகம்), 3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்), 4. செளபாக்யம் (செள யோகம்), 5. சோபனம் (சோ யோகம்), 6. அதிகண்டம் (அதி யோகம்), 7. சுகர்மம் (சுக யோகம்), 8. திருதி (திரு யோகம்), 9. சூலம் (சூல யோகம்), 10. கண்டம் (கண் யோகம்), 11. விருத்தி (விரு யோகம்), 12. துருவம் (துரு யோகம்), 13. வ்யாகதம் (வ்யா யோகம்), 14. ஹர்ஷணம் (ஹர் யோகம்), 15. வஜ்ரம் (வஜ் யோகம்), 16. சித்தி (சித் யோகம்), 17. வியதீபாதம் (விய யோகம்), 18. வரீயான் (வரீ யோகம்), 19. பரிகம் (பரி யோகம்), 20. சிவம் (சிவ யோகம்), 21. சித்தம் (சித் யோகம்), 22. சாத்தியம் (சாத் யோகம்), 23. சுபம் (சுப யோகம்), 24. சுப்பிரம் (சுப் யோகம்), 25. பிராம்மியம் (பிரா யோகம்), 26. ஐந்திரம் (ஐந் யோகம்), 27. வைதிருதி (வை யோகம்)
இந்த 27 வகையான யோகங்களை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. விஷ்கம்பம் (விஷ் யோகம்):-
இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப் பம் உடையவர்களாக வும், எந்த நேரத்தி லும் உடல் உறவு கொள்ள துடிப்பவ ர்களாகவும் இருப்பார் கள். மற்ற வர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவ தை முன் கூட்டி யே உணரும் தீர்க்க தரிசனம் இருக் கும். மாந்திரீக விஷய ங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டு ப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதி ப்பார்கள். எவரிடமும் ஏமாறாத வராக இருப்பார்.
2. ப்ரீதி (ப்ரீ யோகம்):-
இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுப வராகவும், நல்ல செயல்களை யும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோ ர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகி யோர்களை மதிப்பவரா கவும் அவர்களை வணங்குபவராகவு ம் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல் பாட்டுத் திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிக முள்ளவர். அனை வரையும் அரவணைத்துச் செல்பவர் தான். காம இச்சை சற்று அதிகம் இரு க்கும் நற்குணமுடை ய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்):-
இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி – யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற் கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதி யாக வாழ்வார்கள். அனைவ ரையும் மதிப்பவர்கள், பக்திமான் களாக தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால் நடைச் செல்வ ங்கள் உடையவர்க ளாக இருப்பார்கள்.
4. செளபாக்யம் (செள யோகம்):-
பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன் றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்த வர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல் திறன் மிக்கவ ர்களாகவும், நல்ல பக்தி மான் களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்ம வான்களாக இருப்பார்கள். பெரியோர் களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை செய்யும் மனப்பான்மை யும் இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்கள்.
5. சோபனம் (சோ யோகம்):-
சுப யோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திரு மணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவது ண்டு இதில் பிறந் தவர்கள் சுகமான இனிமையான வாழ் க்கையை விரும்பு வதுடன் “சோபனம்” எனும் உடல் உறவுக் கல்வியில் தனி யாத விருப்பத்துடன், நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக் கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். கஷ்டத்தை வெறுப்பவர்கள். சுற்றம் நட்பை அதிகம் விரும்பு வார்கள். செல்வாக்குடை யவர்கள் எனலாம்.
6. அதி கண்டம் (அதி யோகம்):-
பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதி கண் டம். எனவே அடிக்கடி விபத்து கண்ட ங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைக ளையும், துன்பங்களையும் ஏற்படுத்து வார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்க ளாக இருப்பதுண்டு. பேராசையும், முன் கோபமும், முரட்டுத் தனமும், அலட்சியமும், சோம்பலும் இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக் கானவர்களாக இருப்பார்கள்.
7. சுகர்மம் (சுக யோகம்):-
இது நல்லயோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர் கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வ காரிய ங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொ ள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார் கள்.
8. திருதி (திரு யோகம்):-
இது அசுப யோகம் தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில் பிறந்தவ ர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை உடை யவர்கள். எடுத்த காரியத்தை விடாப் பிடியாக முடிக்கும் ஆற்றல் உடைய வர்கள். கொடுத்தவாக்கை காப்பாற் றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் உடையவர்கள். சாஸ்தி ரங்களில் ஈடு பாடு இருப்ப துண்டு.
9. சூலம் (சூல யோகம்):-
இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெரிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட் டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப் பவர்கள். மற்றவர்களுக்கு தொல் லை கொடுப்பதுடன் வீண் வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண் டு. உடல் உறவு சுகத்தில் மிக அதிக மான ஆசை இருக்கும். கண்டபடி அளவற்ற காமசுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப்படுவதுண் டு.
10. கண்டம் (கண் யோகம்):-
இதுவும் அசுபமான யோகம் தான். கண்டம் என்ற பெயரைப் போல இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண் டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்தி க்க வேண்டி வரும். நல்ல எண்ண ங்களும் இருக்காது. செயல்பாடுக ளும் சிறப்பாக இருக்காது. மற்றவ ர்களுக்கு தீமைகள் செய்வார்கள். வஞ்சக எண்ணம் இருக்கும். எவரை யும் மதிக் காமல் தன்னிச்சையாக செயல் படுவார்கள். கர்வம் அலட்சியம் இருக்கும்.
11. விருத்தி (விரு யோகம்):-
செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்ட மும், புலமையும் உடையவர்களாக இருப் பதுடன், தெய்வ பக்தியும், நற் பண்பு களும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடை யவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர் களாக இருப் பார்கள். நல்ல எண்ணம் செயல்பாடு டை யவர்கள் எனலாம். இது சுபமான யோகமாகும்.
12. துருவம் (துரு யோகம்):-
இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாம ரை இலைத் தண்ணீர்போல பட்டும், படா மலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது அசுப மான யோகமாகும். சிலர் இதையும் சுப யோகம் கூறுவதுண்டு. எனினும் சுப காரியங்களுக்கு விலக்க ளிக்க வேண்டிய யோகம் தான்.
13. வ்யாகதம் (வ்யா யோகம்):-
இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும், முரட்டுத் தனமும் உடைய இவர்கள் சமுகத் தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச் சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண் ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்க ளையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்வார்கள்.
14. ஹர்ஷணம் (ஹர் யோகம்):-
இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் – சொல்வாக்கும் உடை யவர்கள். இனிமையான மென்மையா ன சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வரு வதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப் பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தி ல் சற்று கூடுதலான அதிகமான ஈடு பாடுடை யவர்கள். தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்க ளே எனலாம்.
15. வஜ்ரம் (வஜ் யோகம்):-
இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது சுப மான யோகம் தான். இதில் பிறந்தவ ர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவ ர்கள், கொள்கைப் பிடிப் புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனி வும் இருக்கும். உதவும் மனப்பான்மை யும் உண்டு. நல்ல தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள் தான் என்றாலும் தனக் கு தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்து கொள்வார்கள்.
16. சித்தி (சித் யோகம்):-
சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாச னா சக்தியுடையவர்கள். தியானம் – யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடை யவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற் கொள் வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்தி ரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வ மும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையு டைய வர்கள் எனலாம்.
17. வியதீபாதம் (விய யோகம்):-
இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். துன்பங்களை யும், துயரங்களையும், கஷ்டங்களை யும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போ ராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர முடிவால் பிரச்சி னைகள் சந்திப்பார்கள். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதா ல் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடு வார்கள். செயல்பாட்டு உறுதியும், திற னும் இருப்பதில்லை.
18. வரீயான் (வரீ யோகம்):-
இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதி யுடையவர்களாக இருப்பார் கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடைய வர்கள். பிறரு க்கு உதவும் மனப் பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப் பணிகள் செய்வ தில் நாட்டமிருக்கும் புகழ் பெறக் கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல் லெண்ணம் நல் வாக்கு உடையவர்களாக இருப்பார்கள.
19. பரிகம் (பரி யோகம்):-
இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறி னால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும் முயற்சியு டையவர்கள். வெற்றி காணும் வரை ஓயமாட்டார்கள். விளையாட்டு களில், பொழுதுபோக்குகளில் ஆர்வமுள் ளவர் கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.
20. சிவம் (சிவ யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழி படுபவர்களாகவும், தியான ம், யோகம், பக்தி, ஞான மார்க் கத்தில் அதிக ஈடுபாடுடையவர் களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர் களை சந்திப்பதில் அதிக ஆர்வ முடையவர்கள். அவர்க ளின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்க ளுக்கு கிடைக்கும் தெய்வ காரிய ங்கள், திருப் பணிகள், தீர்த்த யாத்திரைகள் போன்றவ ற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும், நல்ல செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.
21. சித்தம் (சித் யோகம்):-
இது சுபமானயோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்கு மே அஞ்சமாட்டார்கள். உறுதியான சித்த முடையவர்கள். எடுக்கும் முடிவுக ளை சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திர புலமை, பரிச்சி யமுடை யவர்கள். நல்ல பக்தியும் இருக்கும். பிறருக்கு உதவும் மனப் பான்மையும் இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல கூடியவர்க ளாக இருப்பார்கள்.
22. சாத்தியம் (சாத் யோகம்):-
இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர் கள் எதையுமே சாத்தியமாக்கி விடு வார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுத லான காம இச்சை உடையவர்கள் என்பதில் காமக்கலையில் வல்லவராக வும் கூட இருப்பதுண்டு. வேடிக் கையாகவும், நகைச்சுவையாக வும் பேசுவதில் கெட்டிகாரர்கள். இந்த பேச்சினாலேயே மற்றவர் களைக் கவர்ந்துவிடுவார்கள். சங்கீத ஞானமும் இருப்பதுண்டு.
23. சுபம் (சுப யோகம்):-
பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர் கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரி யங்கள், திருப்பணிகள், பொது சேவை யிலும் நல்ல நாட்டமிருக்கும். அனை த்து தரப்பினரிடமும், சுமுகமான உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.
24. சுப்பிரம் (சுப் யோகம்):-
இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக் கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்து க்குமே இவர்களுக்கு கடவுள் தான். தான் எந்த சாதனை செய்தாலும் தன்னைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித் துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கே சமர்ப் பணம் செய்வார்கள். மன உறுதி யும், வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கு ம். நல்ல தோற்றம். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.
25. பிராம்மியம் (பிரா யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான். தியானம், யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர் கள். பிரம்ம ஞானம் அறியும் முயற் சியுடையவர்கள். ஞானிகள், யோகி கள், மகான்களின் தொடர் புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார் கள். விவேகத்துடன் செயல்படுவ துடன் தியாக உணர்வும், தரும சிந்தனை யும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வது முண்டு. உடல் ஷேமத்தை விரும்புபவர் களாக இருப்பதால் ஹோமம், யாகம், சமாராதனை, அன்னதானம் போன்ற வைகளை செய்யக் கூடியவர்கள் எனலாம்.
26. ஐந்திரம் (ஐந் யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத் தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர் கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய் பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வரு வதுண்டு. நல்ல நுணுக்க மான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவா ர்கள். முன்கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டி தர்களையும், வேதஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வ பக்தி யுடையவர் கள். தெய்வ காரியங்களை செய்வார்கள்.
27. வைதிருதி (வை யோகம்):-
இது அசுபமான யோகமாகும்.இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். தற்பெருமை யும் உடையவர்கள். கலகப் பிரியர் கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கொடுப்பவர்கள். நல்லவர் கள் போல் நடித்து ஆதாயம் பெறு வார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாத வர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார் கள். நேர்மை இருக் காது. கடவுள் பக்தியைக்கூட வியாபார மாக்கி காசு பண்ணி விடுவார்கள். ஆதாயம் இல்லாம ல் எதையுமே செய்யமாட்டார்கள். கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள், தீய பழக்கங்கள் இருக்கும்.
குறிப்பு:
27 யோகங்களின் பொதுவான பலன் தான் ஜாதக அமைப்புப்படி கிரகங்களின் நிலைகளின்படி குணாதி சியங்கள் மாறக்கூடும் என்ற போதிலு ம் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண்டு அவர்களிடம் இருக்கவே செய்யும். நட்சத்திரங்களின், திதிகளின், குணாதிச யங்களோடு, யோகங்களில் பிறந்த பலனும் இணைந்து காணக் கூடும்.

மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?

பாலியல் சம்மந்தமான இயற்கை வைத்தியம்.
மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?

1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.
2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா?
ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும்.
கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க :
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும்.
பிரசவ வேதனை குறைய வேண்டுமா?
மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும்.
முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா?
பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். இதை எடுத்து முகத்தின் மீது தடவி வரலாம். இவ்விதம் சில நாட்கள் தடவி ஊற வைத்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
ஆண்மை பலகீனமா?
திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும்.
வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க :
ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.
மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா?
வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும்.
விதை வீக்கம் தணிய :
1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.
2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும்.
அரைக்கரப்பான் வந்துவிட்டால் :
தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய்ப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வந்தால் சீக்கிரத்தில் புண் ஆறிவிடும்.
மறைவான ரணங்கள் ஆற :
ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந்தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற்பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.
உடல் அழகு பெற சிம்பிள் மெத்தோட் :
1. இரவில் படுக்கப்போகும் முன் பசும்பாலில் தேனும், மஞ்சள் பெடியும், குங்குமப்பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் மினுமினுப்பு தோன்றும்.
2. பொன்னாங்கண்ணி கீரையை அவ்வப்பொழுது தனியாகவோ அல்லது பருப்புடனோ கலந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் உடல் இரும்பாகும்.
கருச்சிiவு அடிக்கடி ஏற்படுகிறதா?
மாதுளை வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு எடுத்து உளர்த்தி தூள் செய்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வந்தால் போதும். அதன்பிறகு கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பம் தங்கும்.
மசக்கை காலத்தில் வயிற்று வலியா?
மசக்கை காலத்தில் சிலருக்கு இலேசான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி, சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடவும்.
மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா?
பயணங்களிலோ அல்லது விசேஷ காலங்களிலோ மாதவிலக்கு தள்ளி வரவேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதூன் கெடுதல்.
மாதவிலக்கு நின்ற சிரமப்பட்டால் :
நாட்டு வைத்தியக் கடையில் அன்னபேதி, கரியபோளம் இலை கிடைக்கும். 20 கிராம் அன்னபெதி, 10 கிராம் கரியபோளம், லவங்கப்பட்டைத் தூள் 10 கிராம் சேர்த்து இடித்து, தேன் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி, வேளைக்கு இரண்டாக நிலவேம்பு கஷாயத்துடன் சாப்பிட்டு வந்தால் அந்த சிரமம் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால் கருவுற்ற பெண்கள் இதைச் சாப்பிடக்கூடாது.
உற்ற வயதில் பருவமடையாவிட்டால் :
செம்பரத்தைக்கு ருது உண்டாகக்கூடிய குணம் உண்டு. அதனால் செம்பருத்திப் பூவை எந்த வகையினாலாவது உள்ளுக்குச் சாப்பிட கொடுத்து வரவும். சில நாட்களில் அந்தப்பெண் ருதுவாகிவிடுவாள்.
ஹிஸ்டீரியா நோய் குணமாக :
இது, நரம்பு பலவீனமான பெண்களுக்குத்தான் ஏற்படும். இதை ‘பேய் பிடித்து’ ஆடுவதாகக் கூறுவார்கள். பொன்னாவரை இலை, வேர், பூ இவைகளை வகைக்கு 40 கிராம் கொண்டு வந்து இலேசாகத்தட்டி ஒரு லிட்டர் நீரில் இட்டு, அரை லிட்டராக காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.
மார்பகங்கள் தேர்ச்சி பெற :
மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.
பால் பெருக இலகு வைத்தியம் :
சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.
இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.
தேன் நிலவுக் காலங்களில் :
குஷாலாக தேன் நிலவுக்குச் சென்று உயர்ந்த ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கியிருப்பவர்கள் இரவுக்காலங்களில் உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.
இரத்தத்தின் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் :
ஒரு பிடி கொத்துக் கடலையை முந்தின இரவே ஊற வைத்து விடுங்கள். சீமை அத்திப்பழம் இரண்டையும் அதில் கிளரிப்போட்டு ஊற வையுங்கள். காலையில் அப்படியே வேக வைத்து வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும். இந்த அத்திப்பழச் சுவைநீர் இரத்தத்தை தூய்மைப்படுத்துவதுடன் உடம்பிற்கு சுறுசுறுப்பையும் கொடுக்கும்.
துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா?
சிலருக்கு சீக்கிரத்தில் விந்து வெளியேறிவிடும். இதைத் தடுத்து நிறுத்த தாழம் பூவின் உள்ளே இருக்கும் பட்டு போன்ற பொடியை எடுத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து இழைத்து ஆண்குறியின் மீது பூசிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைவில் வெளியேறாது.
விந்து கெட்டிப்பட வேண்டுமா?
பொரித்து எடுத்த படிகாரத்தை பொடியாக்கி 15 கிராம் எடுத்து அதில் கற்கண்டுத் தூள் 50 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு, பத்து சம பாகமாகப் பொட்டலம் கட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு பொட்டலம் வீதம் பத்து நாட்கள் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட்டு வரவும். நீற்றுப்போன விந்து கெட்டியாகிவிடும்.
விந்து பெருக வேண்டுமா?
ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை - மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும்.
நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா?
1. நரம்புத்தளர்ச்சியை நீடிக்கவிடக் கூடாது. ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். அந்த நீரில் 1 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
2. கருவேலன் பிசினை எடுத்து காய வைத்து அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவு பாலில் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகிவிடும்.
கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?
ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.
ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா?
தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:
வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.
ஆண்குறி பருக்க வேண்டுமா?
சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.
தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக :
1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.
2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.
3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.
4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.
இச்சையைத் தூண்ட :
ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.
இல்லற இன்பம் பெற :
பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.
அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள :
கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.
(இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கலாம்.)

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்
பின்பற்றுங்கள்…வெற்றிபெறுங்கள்…